Search

குரூப்-2 தேர்விற்காக தமிழில் சில புணர்ச்சி விதிகள்

Thursday 6 September 2018



புணர்ச்சி : உயிரீறு, உடும்படுமெய், மெய்யீறு

உயிரீற்றுப் புணர்ச்சி :

பல, பலா, கனி, தீ இச்சொற்களைப் ஒலித்துப் பாருங்கள்.இச்சொற்களில் கடைசி எழுத்து உயிர்மெய் எனினும் உயிர் ஈறாகக்
கொள்ளுதல் வேண்டும்.‘பல’ இச்சொல்லில் (ல் + அ = ல) ‘அ’ உயிர் ஈறு.உயிர் ஈற்றுச் சொல்முன் வல்லின எழுத்துக்கள் வந்தால், அதன்
மெய்யெழுத்து மிகும்.

(எ.கா.)

பலா + சுளை = பலாச்சுளைபனி + போர் = பனிப்போர்தினை + துணை = தினைத்துணை

உடம்படுமெய் :  (உயிர் முன் உயிர்)

அணில், ஏணி, ஏற்றம். ஐவர், ஒளவை, இரும்பு, உண்டு, உயிர்,
ஊர்வலம், ஓடு.‘மணி’ + அடி . இங்கு மணி என்பது நிலைமொழி .இதன் ஈறு (ண் + இ) உயிர். அடி என்பது வருமொழி. அதன் முதல்
எழுத்து அ – உயிர். இவ்விரண்டும் ஒன்றாகச் சேரும்போது                  மணி + அடி = மணி + ய் + அடி = மணியடி இடையில் ‘ய்’ என்னும் மெய் தோன்றி, மணியடி என்னும் சொல்லாகிறது.பூவழகு என்னும் சொல்லை எவ்வாறு பிரிக்கலாம்?பூ + அழகு – ‘பூவழகு’ என வரும்.ஆனால், பூவழகு என்னும் சொல், பூ + அழகு = பூ + வ் + அழகு =
பூவழகு. இடையில் இங்கு ‘வ்’ என்னும் மெய் எழுத்துத் தோன்றுகிறது.சேவடி என்பது எவ்வாறு பிரியும்?சே + வ் + அடி – ‘சேவடி’ என வரும். இங்கே ‘வ்’ என்னும் மெய்
வந்துள்ளது.சே + அடி = சே + வ் + அடி = சேவடி, மேலும், சே + ய் + அடி =
சேயடி எனவும் வரும்.

இ, ஈ, ஐ ஆகியனமுன் உயிர்வரின் ‘ய்’ தோன்றும் :

கிளி + அலகு = கிளி + ய் + அலகு = கிளியலகு.தீ + எரிகிறது = தீ + ய் + எரிகிறது = தீயெறிகிறது.பனை + ஓலை = பனை + ய் + ஓலை = பனையோலை

அ, ஆ, உ, ஊ, ஓ முன் ‘வ்’ தோன்றும் :

குண + அழகி = குண + வ் + அழகி = குணவழகிபலா + இலை = பலா + வ் + இலை + பலாவிலைதிரு + ஆரூர் = திரு + வ் + ஆரூர் = திருவாரூர்பூ + அழகி = பூ + வ் + அழகி = பூவழகிகோ + இல் = கோ + வ் + இல் = கோவில்

ஏ முன் உயிர்வரின் ‘வ்’, ‘ய்’ இரண்டும் வரும் :

தே + ஆரம் = தே + வ் + ஆரம் = தேவாரம்அவனே + அரசன் = அவனே + ய் + அரசன் = அவனேயரசன்ய், வ், வருவதற்குப் புணர்ச்சியில் ஏதேனும் பெயர் உண்டா?
நிலைமொழி ஈற்று உயிரும், வருமொழிமுதல் உயிரும்
இணையும்போது வ் அல்லது ய் இடையில் தோன்றும். இதற்கு
உடம்படுமெய் என்பது பெயர்.

இ ஈ ஐ வழி யவ்வும் ஏனை
உயிர்வழி வவ்வும் ஏமுன்இவ் விருமையும்
உயிர்வரின் உடம்படு மெய்யென் றாகும்

– நன்னூல், 162

மெய்யீற்றுப் புணர்ச்சி :

‘நூல் + ஆடை’ என்பதனில் நூல் என்பது நிலைமொழி. ஆடை
என்பது, வருமொழி. நூல் என்னும் நிலைமொழியின் ஈறு என்ன? மெய் எழுத்து உள்ளது. அதனால் மெய்யீறு..மெய்யீற்று நிலைமொழிமுன், உயிர்முதல் வருமொழிச் சொற்கள்
வந்தால், எவ்வாறு புணரும் என்பதனைப் பாருங்கள்.அணில், ஆடை, இலை… என வரும் சொற்கள்தாமே உயிர்முதல்
மொழிகள்.பால் + ஆடை என்பதனில், பால் மெய்யீற்று நிலைமொழி முன்
ஆடை உயிர்முதல் வருமொழி சேரும்போது, மெய் (ல்) உயிரோடு
(ஆ) சேர்ந்து பாலாடை என்றாகிறது. ஏனெனில், மெய் தனித்து
இயங்காது, உயிருடன் சேர்ந்துதான் இயங்கும், இதுவே இயல்பு.

உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே – நன்னூல், 204

(உடல் – மெய்) இங்கு உடல் என்பது மெய்யெழுத்தைக் குறித்தது.
இதுபோல் சிலவற்றைக் கூறுங்கள்.மலர் + அடி = மலரடி. கனல் + எரி = கனலெரி. கடல் + ஓரம் =
கடலோரம்.கண், கல், பொன், மண், என்பனவும் மெய்யீற்று நிலைமொழிகளே.முன்பு சொன்ன மெய்யீறுகள் நெடிலெடுத்தும், இரண்டு முதலாகப் பல எழுத்துக்கள் சார்ந்தும் வந்தவை. குறிலடுத்து வந்த மெய்யீறுகள், இவற்றின்முன் உயிர்முதல் வருமொழி வந்தால்கண் + அழகு = கண் + ண் + அழகு = கண்ணழகு என்னுமாறு
இணையும்.

தனிக்குறில் முன்னொற் றுயிர்வரி விரட்டும் – நன்னூல், 205

கல் + அணை = கல்லணை. கண் + ஆடி = கண்ணாடி.பல் + அழகு = பல்லழகு. விண் + அரசு = விண்ணரசு.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One