Search

நடப்பு நிகழ்வுகள் அறிவோம் [ DAILY CURRENT AFFAIRS] 03.09.2018

Monday 3 September 2018

தமிழக நிகழ்வுகள்




2018 செப்டம்பர் 01 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின் படி, தமிழ்நாட்டில் 5 கோடியே 82 லட்சத்து 379 வாக்காளர்கள் உள்ளனர்.
 தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி “சத்யவிரதசாக்” இந்த வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
குறிப்பு:
அதிக அளவு வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்றத் தொகுதி-சோழிங்கநல்லூர், காஞ்சிபுரம் (6.07 லட்சம் வாக்காளர்கள்)
குறைந்த அளவு வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்றத் தொகுதி-துறைமுகம், சென்னை (1.64 லட்சம் வாக்களார்கள்)
தமிழகத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் – “மாலிக் ஃபெரோஷ் கான்”


இந்திய நிகழ்வுகள்


புதுடெல்லியில் உள்ள தல்கட்டோரா அரங்கில் இந்திய அஞ்சல் செலுத்துவகை வங்கி (IPPB – India Post Payment Bank) செப்டம்பர் 01 அன்று இந்திய பிரதமரால் தொடங்கப்பட்டுள்ளது.
இந்திய முழுவதும் 650 கிளைகள் மற்றும் 3250 சேவை மையங்களும் தொடங்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் உள்ள அனைத்து 1.55 லட்சம் அஞ்சலகங்களும், 2018 ஆண்டு டிசம்பர் 31-க்கள், இந்திய அஞ்சல் செலுத்துகை வங்கி (IPPB) உடன் இணைக்கப்பட்டவுள்ளது.


வனஅழிவு, வனத் தரக்குறைவு ஆகியவற்றால் ஏற்படும் கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியீட்டை குறைப்பதற்கான நடவடிக்கைகள் என பொருள்படும் “ரெட் பிளஸ் தேசிய அணுகுமுறை திட்டத்தை (National REDD + Strategy) புதுடெல்லியில் மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் வெளியிட்டுள்ளார்
பாரீஸ் உடன்படிக்கை 2015-ஐ இந்தியா உறுதியுடன் அமல்படுத்துவதற்கு இந்திய தேசிய ரெட் பிளஸ் அணுகுமுறை திட்டம் ஒரு கருவியாக இருக்கும் என்று தெரிவித்தார்.



உலக நிகழ்வுகள்


பீகார் மாநிலம், இரக்சௌல் நகரிலிருந்து நேபாளத்தின் காத்மண்டு நகருக்கு ரயில் பாதை அமைக்கும் திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி ஆகியோர் இடையே கையெழுத்தாகி உள்ளது.


விளையாட்டு நிகழ்வுகள்


இந்தோனிஷியாவின் ஜகர்த்தா, பாலேம்பங் ஆகிய நகரங்களில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டி 2018-ல் இந்திய அணி 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலம் உட்பட 69 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 8-வது இடத்தைப் பிடித்துள்ளது.
பதக்கப் பட்டியலில் சீனா 132 தங்கம், 92 வெள்ளி, 65 வெண்கலம் உட்பட 289 பதக்கங்களுடன் முதலிடத்தையும், ஜப்பான் 75 தங்கம் உட்பட 205 பதக்கங்களுடன் 2-ம் இடத்தையும் பிடித்துள்ளது.
போட்டியை நடத்திய இந்தோனேஷியா 31 தங்கம் உட்பட 98 பதக்கங்களைப் பெற்ற    4-வது இடத்தைப் பிடித்துள்ளது.



விருதுகள்


இந்திய மருத்துவத்துறையில் வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான டாக்டர் பி.சி. ராய் தேசிய விருதுக்கு(2018) ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் டாக்டர். பசந்த் குமார் மிஷ்ரா (Dr. Basant Kumar Mishra) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
குறிப்பு
இந்திய மருத்துவக் கழகத்தின் கீழ் இந்திய அரசால் 1976-ஆம் ஆண்டிலிருந்து இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.


நியமனங்கள் 


உத்தரகாண்ட், டெல்லி, சண்டிகர் மற்றும் இமாச்சல பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களின் போதைப் பொருள் ஒழிப்பு தூதுவராக பாலிவுட் நடிகர் “சஞ்சய் தத்” நியமிக்கப்பட்டுள்ளார்.



வர்த்தக நிகழ்வுகள்


2017-18 முழு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.7 சதவீதமாக குறைந்துள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
முந்தைய 2016-17 ஆம் ஆண்டில் 7.1 சதவீத வளர்ச்சி இருந்தது.
குறிப்பு:
தற்போது முக்கிய குறியீடுகளை கணக்கிடுவதற்கான அடிப்படை ஆண்டு 2011-2012 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


2017 – 2018 ஆம் நிதியாண்டில் இந்தியாவில் நேரடி அன்னிய முதலீடு செய்துள்ள நாடுகளின் வரிசையில் மொரிசியஸ் (95,217 கோடி) நாடு முதலிடம் பிடித்துள்ளது.
இந்தப் பட்டியலில் சிங்கப்பூர் (65,821 கோடி முதலீடு செய்து) இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One