Search

நடப்பு நிகழ்வுகள் அறிவோம் [ DAILY CURRENT AFFAIRS] 04.09.2018

Tuesday 4 September 2018

இந்திய நிகழ்வுகள்



மத்திய பிரதேச மாநில அரசானது பெரும் எண்ணிக்கையிலான கற்பிக்கும் திட்டமான ‘மில் பன்ச்சே மத்திய பிரதேசம்’ (குழுவாக படித்தல், மத்தியப் பிரதேசம்) என்னும் திட்டத்தை நடத்தியது.

கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்


கடலோரக் காவல் ரோந்துக் கப்பலான ICGS விஜயா (OPV – 2) 2018 ஆகஸ்டு மாதம் 30ம் தேதி இந்தியக் கடற்படையிடம் வழங்கப்பட்டது.

ஏழு கடலோரக் காவல் ரோந்துக் கப்பல்களின் வரிசையில், இந்தக் கப்பல் இரண்டாவதாகும்.

6வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடு மற்றும் 15வது ஆசியான் பொருளாதார மந்திரிகள் கூட்டம் சிங்கப்பூரில் நடைபெற்றுள்ளது. இதில் வணிக மற்றும் தொழிற்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கலந்து கொண்டுள்ளார்

தூய்மையான மற்றும் எளிதில் அணுகிடும் வகையான போக்குவரத்து முறைகளை ஊக்குவிப்பதற்காக மூவ் சைக்களத்தான் என்ற மிதிவண்டிப் பேரணியை நிதி ஆயோக் துவக்கி வைத்துள்ளது.

‘போக்குவரத்து வாரத்தின்’ ஒரு பகுதியாக ஒருங்கிணைக்கப்படும் இந்நிகழ்ச்சி ஆகஸ்டு 31 முதல் செப்டம்பர் 6 வரையிலான 7 நாட்களில் 17 வகையான நிகழ்வுகளை கொண்டுள்ளது.

உலக நிகழ்வுகள்

கங்கை நதியை தூய்மைப்படுத்தும் முயற்சியில் (கங்கை மிஷன் திட்டம்) இந்தியா உத்தரகண்ட் மாநிலத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக இந்தியாவுக்கு 120 மில்லியன் யூரோ கடனை ஜெர்மனி வழங்கியுள்ளது.



விளையாட்டு நிகழ்வுகள்

2018ம் ஆண்டின் ஆசிய விளையாட்டில் மதிப்பு மிக்க வீரர் விருதை ஜப்பான் நீச்சல் வீராங்கனை இகீ ரிகாகோ (18) வென்றுள்ளார்.

1998ம் ஆண்டில் இருந்து இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விருதை முதல் வீராங்கனை இகீ ரிகாகோ ஆவார்.

இகீ ரிகாகோ-வுக்கு விருதுடன் ரூ.35லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படுகிறது.

தென்கொரியாவில் நடைபெறும் 52வது ISSF உலக துப்பாக்கி சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் ஜூனியர் பிரிவில் இந்தியா 2 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.

அர்ஜீன் சிங், சீமா ஆகியோர் தங்கப்பதக்கம் மற்றும் கௌரவ் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர்

19வது ஆசிய விளையாட்டு 2022ம் ஆண்டு செப்டம்பர் 10-25 வரை சீனாவின் ஹாங்ஜோவ் நகரில் நடக்க உள்ளது.


வர்த்தக நிகழ்வுகள்



2017-18 ஆம் நிதியாண்டில் இந்தியாவில் நேரடி அன்னிய முதலீடு செய்துள்ள நாடுகளின் வரிசையில் மொரீஷியஸ் முதலாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 2017-18ம் நிதியாண்டில் ரூ.2.65 லட்சம் கோடி (37.36 பில்லியன் டாலர்) முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மொரீஷியஸ் – ரூ.95,217 கோடி (13.41 பில்லியன் டாலர்)

சிங்கப்பூர் – ரூ.65,821 கோடி (9.27 பில்லியன் டாலர்)

நெதர்லாந்து – ரூ.18,958 கோடியாக (2.67 பில்லியன் டாலர்)



இன்டர்நெட் சொசைட்டி (ISOC) இன்டர்நெட் சேவை வழங்குநர்கள் சங்கம் (ISPAI) இணைந்து பாதுகாப்பு உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை (MANRS) மேம்படுத்துவதற்கான பரஸ்பர ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது

ISOC பற்றி :

உறுப்பினர் : 100,000

நிறுவப்பட்ட ஆண்டு : டிசம்பர் 1992

தலைமையகம் : வர்ஜீனியா, அமெரிக்கா

ISPAI பற்றி :

தலைமையகம் : புது தில்லி

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One