Search

நடப்பு நிகழ்வுகள் அறிவோம் [ DAILY CURRENT AFFAIRS] 09.09.2018

Sunday 9 September 2018

இந்திய நிகழ்வுகள்


இந்தியா, ஜப்பானிடமிருந்;து 7000 கோடி ரூபாய் மதிப்பிலான 18 புல்லட் இரயில்களை வாங்கவிருக்கின்றது. இந்த ஒப்பந்தம் இரயில்களை உள்ளுரில் தயாரிக்க உதவும் தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கான உத்திரவாத்தையும் கொண்டிருக்கும்.
இது 2022ம் ஆண்டிற்குள் நாட்டின் முதல் உயர்வேக இரயில் பாதையை நிறுவிடத் திட்டமிட்டுள்ள அரசாங்கத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.


நபார்டு வங்கியானது ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் (Rural Infrastructure Development Fund – RIDF) கீழ் மேற்கு வங்கத்தின் நீர்பாசனத் திட்டங்களுக்கும், வெள்ளப் பாதுகாப்பு திட்டங்களுக்கும் சுமார் 335 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.


யூத் அபியாஸ் – இந்தியா மற்றும் அமெரிக்க இராணுவங்களுக்கிடையேயான செயல்திறனை வலுப்படுத்த “Yudh Abhyas” என்னும் பெரிலான கூட்டு இராணுவப் பயிற்சி, 2 + 2 பேச்சுவார்த்தைக்குப் பிறகு செப்டம்பர் 16 முதல் 29 வரை, உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள சௌபட்டியா என்னும் இடத்தில் நடைபெற உள்ளது.
குறிப்பு:
இப்பயிற்சியானது இவ்விரு நாடுகளுக்கிடையேயான 14வது பதிப்பு ஆகும். (14th Yudh Abhyas)
இவ்விரு நாடுகளுக்கிடையேயான யூத் அபியாஸ் பயிற்சியானது 2004 முதல் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


ஸ்மார்ட் சிட்டீஸ் இந்தியா என்னும் திட்டத்தால் நடைபெறும் சீர்திருத்தங்கள், மேம்பாடுகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரத்தில் நடைபெறும் வேலைகள் குறித்து விளக்குவதற்காக 4வது “இந்தியாவின் நிலையான ஸ்மார்ட் நகரங்கள் மாநாடு” கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களுரில் ஸ்மார்ட் இந்தியா திட்ட இயக்குநர் A.B. இப்ராஹிம் தலைமையில் நடைபெற்றது.


உலக நிகழ்வுகள்


“உலகளாவிய முதியோர் மற்றும் வயதானவர்களுக்கான மனித உரிமைகள்” என்ற தலைப்பின் கீழ் தென்கொரியாவின் சியோல் நகரத்தில், 3வது ஆசிய ஐரோப்பிய சந்திப்பு மாநாடு (ASEM – Asia Europe Meeting) நடைபெற்றது.
இம்மாநாட்டில் இந்தியா சார்பில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகமானது தலைமை வகித்தது.
மேலும் UNESCAP – (UN Economic and Social Commission for Asia and the Pacific), UNECE – (United Nations Economic Commission for Europe), ஐரோப்பிய ஒன்றியம், ஆசியான், புயுNர்சுஐ GANHRI (Global Alliance for National Human Rights Institution) போன்ற பல்வேறு அமைப்புகள் பங்கு பெற்றன.


அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்


இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட தேஜாஸ் என்ற இலகு ரக போர் விமானத்திற்கு நடுவானில் மறு எரிபொருள் நிரப்பும் பணியானது முதன்முதலாக இந்திய விமானப் படையால் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.
இரஷ்யாவல் கட்டமைக்கப்பட்ட IL – 78 MKI எரிபொருள் நிரப்பு விமானமானது தேஜாஸ் MK – I விமானத்திற்கு எரிபொருளை நிரப்பியது.


கடல்நீரை கண்காணித்து அதனால் பருவநிலை மாற்றத்தில் ஏற்படும் விளைவுகளை கண்டுபிடிப்பதற்காக சீனாவானது “HY-1C” என்னும் கடற்சார் செயற்கைகோளை லாங் மார்ச் 2C என்னும் இராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.


முக்கிய தினங்கள்


செப்டம்பர் 08 – சர்வதேச எழுத்தறிவு தினம்
இனம், மொழி, வயது, சமூக பாகுபாடின்றி அனைவரும் எழுத்தறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு ஐ.நா. சார்பில் 1966 செப்டம்பர் 08 முதல், ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச எழுத்தறிவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான கருத்துரு – “Literacy and skills development” (எழுத்தறிவு மற்றும் திறன்களை மேம்படுத்துதல்)

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One