Search

DAILY HISTORY HISTORY OF THE DAY 10.09.2018 | TNPSC | HISTORY STUDY MATERIALS FREE DOWNLOAD

Tuesday 11 September 2018



  • 1759 – பாண்டிச்சேரியில் பிரெஞ்சுக் கடற்படைகளுக்கும் ஜோர்ஜ் போக்கொக் தலைமையிலான பிரித்தானியக் கடற்படைக்கும் இடையில் போர் வெடித்தது. பிரெஞ்சுக் கப்பல் பலத்த சேதத்துடன் பின்வாங்கியது.
  • 1823 – சிமோன் பொலிவார் பெருவின் சனாதிபதியாக அறிவிக்கப்பட்டார்.
  • 1840 – ஓட்டோமான், மற்றும் பிரித்தானியப் படைகள் பெய்ரூட் நகர் மீது தாக்குதலைத் தொடுத்தனர்.
  • 1846 – எலியாஸ் ஹோவ் தையல் இயந்திரத்துக்கான காப்புரிமம் பெற்றார்.
  • 1858 – 55 பண்டோரா என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது.
  • 1898 – ஆஸ்திரியாவின் அரசி எலிசபெத் கொலை செய்யப்பட்டார்.
  • 1931 – பெலீசில் இடம்பெற்ற மிகப் பெரும் சூறாவளியினால் 1,500 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1939 – இரண்டாம் உலகப் போர்: கனடா ஜேர்மனி மீது போரை அறிவித்தது.
  • 1943 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மானியப் படையினர் ரோம் நகரினுள் நுழைந்தனர்.




  • 1951 – ஐக்கிய இராச்சியம் ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை அறிவித்தது.
  • 1967 – கிப்ரல்டார் மக்கள் பிரித்தானியாவின் கீழ் தொடர்ந்திருக்க வாக்களித்தனர்.
  • 1974 – கினி பிசாவு போர்த்துக்கல்லிடம் இருந்து விடுதலை பெற்றது.
  • 1976 – பிரித்தானிய விமானம் ஒன்று யூகொஸ்லாவியாவின் சாக்ரெப் நகரில் வேறொரு விமானத்துடன் மோதியதில் 176 பேர் கொல்லப்பட்டனர்.
  • 2000 – மட்டக்களப்பு நகர முன்னாள் நகரத் தந்தை செழியன் பேரின்பநாயகம் படுகொலை செய்யப்பட்டார்.
  • 2002 – சுவிட்சர்லாந்து, ஐநாவில் இணைந்தது.
  • 2006 – ஈழப்போர்: முகமாலை முன்னரங்கப் பகுதியில் இலங்கை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே இடம்பெற்ற மோதலில் 28 இராணுவத்தினர் கொல்லப்பட்டு 119 பேர் படுகாயம் அடைந்தனர்.




No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One