Search

TNPSC | TRB | TET | POLITICAL SCIENCE STUDY MATERIALS | 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல்

Friday 9 November 2018

பன்னிரெண்டாம் வகுப்பு – அரசியல் அறிவியல் தொடர்பான குறிப்புகள்
======================================
1) மனித சமுதாயத்தின் வாழ்விற்கும் வசதிக்கும் ஏற்படுத்தப்பட்ட இன்றியமையாத அமைப்பு – அரசு
2) இயற்கையாக தோற்றுவிக்கப்பட்ட இன்றியமையாத அமைப்பு – அரசு
3) பல்வேறு அரசியல் அறிஞர்கள் ஆமோதித்துள்ள கூற்று – அரசு ஒரு தேவையான துன்பம்
4) அரசு என்பது “சமூகம் என்ற தோரண வாயிலின் முக்கிய கல்” – என்று கூறியவர் – வாஸ்கி
5) அரசு இல்லையெனில் உலகில் சச்சரவும் குழப்பங்களுமே மிஞ்சும் என கூறியவர் – பைனர்
6) அரசின் வகைகள் யாவை?
1) நகர அரசு,
2) நிலப்பிரபுத்துவ அரசு,
3) தேசிய அரசு
4) சம உடைமை அரசு
5) மக்கள் நல அரசு
7) நகர அரசு முதன்முதலில் தோன்றிய நாடு எது – கிரேக்கம் (கி.மு. 1000)
8) அரசியல் என்பதை வெறும் தர்க்க, தத்துவார்த்த நிலைகளிலேயே வைக்காமல், வாழ்க்கையோடு இணைத்து அதையே அரசாங்கமாகவும் ஏற்படுத்திய பெருமை பெற்றவர்கள் – கிரேக்கர்கள்
9) கிரேக்க நகர அரசின் அம்சங்கள் :-
1) ஒவ்வொரு நகர அரசும் சுதந்திர அமைப்பாக செயல்பட்டது
2) அளவில் சிறியதாகவும், மக்கள் தொகையில் குறைவான எண்ணிகையில் இருந்தன
10) நகர அரசில் மட்டுமே சமூக, பொருளாதார அறிவியல் சார்ந்த வாழ்க்கை அமைய முடியம் என்ற கருத்தை வலியிறித்தியவர் – அரிஸ்டாட்டில்
11) வரி செலுத்துதல், தேர்தலில் வாக்களிப்பது மட்டுமே குடிமகனின் கடமை என்பது வன்மையாக மறுக்கப்பட்ட அரசு – நகர அரசு
12) திருச்சபை, பள்ளி என்கிற அமைப்புகளின் ஒட்டுமொத்த அமைப்பாக இருந்த மனித வாழ்க்கையை முழுவதுமாக ஆக்கிரமித்த அரசு – கிரேக்க நகர அரசு
13) சமூகத்தினின்றும் அரசை பிரித்தறிய தவறியதால் அத்தீனிய சுதந்திரம் அடையாளம் காணமுடியாத உடைபட்ட சின்னமாகிவிட்டது என்று கூறிய அறிஞர் – மாக்ஐவர்
14) இந்தியாவில் நிலவிய நிலஉடைமை அமைப்பு – ஜமீந்தாரி முறை
15) நில வருவாய்க்கான வரி வசூலில் விளைச்சலில் ஒரு பகுதியை எடுத்துக்கொண்டவர்கள் – ஜமீந்தார்கள்
16) வட இந்தியாவில் ஜமீந்தாரி முறையை மாற்றியமைக்கப்படு அறிமுகம் செய்யப்பட்ட வரி வசூல் முறை – மகல்வாரி முறை
17) பன்னாட்டு சட்டம் தோன்றுவதற்கு துணை நின்ற அரசு – இன அரசு
18) குடியாட்சி முறை வற்புறுத்தும் மூன்று முக்கிய கோட்பாடுகள் – சமத்துவம், மக்கள் இறைமை, தேசியம்
19) கி.பி. 1789 – ஆம் ஆண்டு வெளிவந்த “மனித உரிமைகள் பிரகடனத்தில் வற்புறுத்தப்பட்ட கோட்பாடு – சமத்துவம்
20) சமுதாயததில் உள்ள குறைகள் மற்றும் கெடுதல்கள் குறைத்து தீவிர மாற்றங்களை சமதர்ம அரசு ஏற்படுத்தும் என்று கூறியவர் – J.W.கார்னர்

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One