Search

TNPSC| TRB | TET GEOGRAPHY STUDY MATERIALS | FREE DOWNLOAD | 9 ஆம் வகுப்பு புது பதிப்பு - புவியியல் | PART-4

Monday 5 November 2018

TNPSC | TRB | TET STUDY MATERIALS
TNPSC | TRB | TET STUDY MATERIALS| 9 ஆம் வகுப்பு புது பதிப்பு -புவியியல்| PART-4 

91) எரிமலைகளில் காணப்படும் முக்கிய கூறுகள் :-
1) பாறைக்குழம்புத் தேக்கம்
2) துவாரங்கள்
3) எரிமலைக் கூம்புகள்
4) எரிமலை வாய்

92) புவிக்கு அடியில் பெரிய அளவில் காணப்படும் கற்குழம்புக்குளம் - பாறைக்குழம்புத் தேக்கம்

93) எரிமலை வெடிப்பின்போது வாயுக்கள், புகை, நெருப்பு மற்றும் பாறைக்குழம்பு வெளியேறுவதற்கான வழி – துவாரங்கள்

94) எரிமலையில் உள்ள துவாரங்கள் வழியாக வெளியேற்றப்பட்ட பாறைக்குழம்பு ஏற்படுத்தும் நிலத்தோற்றம் - எரிமலைக் கூம்புகள்

95) எரிமலை உச்சியில் காணப்படும் கிண்ணம் போன்ற வடிவமுடைய பள்ளம் - எரிமலை வாய்

96) வல்கனோ என்ற ஆங்கிலச் சொல் இலத்தின் மொழியில் என்ன பெயர் – வல்கேன்

97) ரோமானிய நெருப்புக்கடவுளின் பெயர் – வல்கேன்

98) எரிமலையின் வகைகள் :-
1) செயல்படும் எரிமலை
2) உறங்கும் எரிமலை
3) தணிந்த எரிமலை

99) செயல்படும் எரிமலைக்கு உதாரணம் – செயின்ட் ஹலன் எரிமலை – அமெரிக்கா

100) திடீரென்று வெடிக்கும் தன்மையுடைய எரிமலை - உறங்கும் எரிமலை

101) அதிக உயிர்ச்சேதமும் பொருட் சேதமும் ஏற்படுத்தும் எரிமலை - உறங்கும் எரிமலை

102) உறங்கும் எரிமலைக்கு உதாரணம் – ஃபியூஜி எரிமலை – ஜப்பான்

103) தணிந்த எரிமலைக்கு உதாரணம் – கிளிமஞ்சாரோ எரிமலை – தான்சானியா

104) எந்தவித செயல்பாடுகளும் இன்றி காணப்படும் எரிமலை - தணிந்த எரிமலை

105) நீண்ட காலம் எரிமலை செய்கைகள் ஏதும் இல்லாமல் காணாப்படும் எரிமலை - உறங்கும் எரிமலை

106) தொடர்ந்து எரிமலைக் குழம்புகளையும் துகள்களையும் வாயுக்களையும் வெளியேற்றிக்கொண்டேயிருக்கும் எரிமலை – செயல்படும் எரிமலை

107) எரிமலையின் வடிவம் மற்றும் அதிலுள்ள கலவையின் அடிப்படையில் எத்தனை வகைகளாக பிரிக்கலாம் : - மூன்று வகை - அவை
1) கூட்டு எரிமலை
2) கும்மட்ட எரிமலை
3) கேடய எரிமலை

108) கூட்டு எரிமலையின் வேறுபெயர் – அடுக்கு எரிமலை

109) கூம்பு வடிவில் காணப்படும் எரிமலை - கூட்டு எரிமலை

110) கூட்டு எரிமலைக்கு உதாரணம் - ஃபியூஜி எரிமலை – ஜப்பான்

111) கும்மட்ட எரிமலைக்கு உதாரணம் – பாரிக்கியூட்டின் எரிமலை – மெக்சிகோ

112) சிலிகா அதிகமுள்ள எரிமலைக்குழம்பு அதிக பிசுபிசுப்புடன் வெளியேறுவதால் நீண்ட தூரத்திற்கு பரவமுடியாமல் எரிமலை வாய்க்கு அருகிலேயே வட்ட வடிவத்தில் படிந்து சிறு குன்று போல காணப்படும் எரிமலை - கும்மட்ட எரிமலை

113) அதிக பிசுபிசுப்புடன் கூடிய பாறைக்குழம்பு அனைத்து திசைகளிலும் வழிந்தோசி மென்சரிவுடன் காணப்படும் எரிமலை - கேடய எரிமலை

114) கேடய எரிமலைக்கு உதாரணம் – மெளனலோவா எரிமலை – ஹாவாய் தீவு

115) உலகில் எரிமலை வெடிப்புகளும் புவி அதிர்வுகளும் நிகழும் பகுதி – புவித்தட்டுக்களின் விளிம்பு பகுதி

116) பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் எரிமலை வெடிப்பு அதிகம் நிகழ்வதால் அப்பகுதியை எவ்வாறு அழைக்கப்படுகிறது – நெருப்பு வளையம் (Pacific ring of fire)

117) உலகின் அதிகமான புவி அதிர்வுகளும், எரிமலை வெடிப்புகளும் நிகழும் தீவிர மண்டலமாக அமைந்துள்ள பகுதி – பசிபிக் பெருங்கடல் பகுதி

118) எரிமலையின் நன்மைகள் :-
1) எரிமலையிலிருந்து வெளிப்படும் பொருட்கள் மண்ணை வளமிக்கதாக்குகிறது
2) வேளாண் தொழில் மேம்படுகிறது
3) எரிமலை உள்ள பகுதிகளில் புவி வெப்ப சக்தி பயன்படுத்தப்படுகிறது
4) உறங்கும் எரிமலையும், செயல்படும் எரிமலையும் உலகின் சிறந்த சுற்றுலா தளமாக விளங்குகிறது
5) எரிமலையிலிருந்து வெளிப்படும் பொருட்கள் கட்டிடத் தொழிலுக்கு பயன்படுகிறது

119) எரிமலையின் தீமைகள் :-
1) புவி அதிர்ச்சி, திடீர் வெள்ளம், சேறு வழிதல், பாறை சரிதல் நடைபெறும்
2) அதிக அளவில் வெளிப்படும் தூசு, சாம்பல் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுத்தும்
3) வானிலை மாற்றத்தை ஏற்படுத்தும்
4) விமான போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும்

120) புவியின் உட்புறத்தில் காணப்படும் தனிமத்தை பொறுத்து பிரிக்கப்படும் புவி அடுக்குகள் – சியால், சிமா, நைஃப்

1 comment

 

Most Reading

Tags

Sidebar One