Search

TNPSC | TRB | TET STUDY MATERIALS | GEOGRAPHY FREE DOWNLOAD | 9 ஆம் வகுப்பு புவியியல் புதிய பதிப்பு - PART-1

Monday 5 November 2018

 TNPSC | TRB | TET STUDY MATERIALS | 9 ஆம் வகுப்பு புதிய பதிப்பு -புவியியல் |PART-1
1) புவியின் மேற்பரப்பின் மொத்த பரப்பளவு – 510 மில்லியன் சதுர கிலோ மீட்டர்

2) புவியில் உள்ள கோளங்கள் மொத்தம் – நான்கு

3) புவியின் நான்கு கோளங்கள் – பாறை, நீர், வளி, உயிர்

4) பாறைக்கோளத்தின் ஒரு பகுதி – மண் கோளம்

5) பாறைக்கோளம், நீர்க்கோளம், வளிக்கோளம் மற்றும் உயிர்க்கோளம் சந்திக்கும் இடம் – மண்கோளம்

6) புவியின் திடமான மேற்பரப்பு – பாறைக்கோளம

7) நீர்க்கோளத்தில் காணப்படுபவை – பெருங்கடல்கள், ஆறுகள், ஏரிகள் மற்றும் நீராவி

8) புவியின் உள்ளமைப்பில் காணப்படுபவை – மோலோடு, கவசம், கருவம்

9) புவியில் நாம் வாழும் பகுதி – புவிமேலடுக்கு

10) புவிமேலோடு பரவியுள்ள தூரம் – 5 முதல் 30 கி.மீ

11) புவிமேலோட்டின் பிரிவுகள் – கண்ட மோலோடு மற்றும் கடலடி மோலோடு

12) புவிமோலோட்டில் அதிகம் காணப்படுபவை – சிலிகா (Si) மற்றும் அலுமினியம் (Al)

13) சியால் அடுக்கு (SIAL) என அழைக்கப்படுவது – புவிமோலோடு

14) புவிமேலோட்டிற்கு கீழே காணப்படும் பகுதி – கவசம்

15) கவசத்தின் தடிமன் – 2900 கொலோ மீட்டர்

16) கவசத்தில் அதிகம் காணப்படுபவை – சிலிகா (Si) மற்றும் மக்னீசியம் (Mg)

17) சிமா (SIMA) அடுக்கு என அழைக்கப்படுவது – கவசம் (MANTLE)

18) புவியின் உட்புறத்தில் உருகிய நிலையில் உள்ள பாறைக்குழம்பு – மாக்மா

19) புவியின் கவசத்திற்கு கீழே காணப்படும் பகுதி – கருவம்

20) புவியின் மையத்தில் அமைந்துள்ள அடுக்கு – கருவம்

21) புவியின் வெப்பமான அடுக்கு – கருவம்

22) கருவத்தில் அதிகம் காணப்படுபவை – நிக்கல் (Ni) மற்றும் இரும்பு (Fe)

23) நைஃப் (NIFE) என அழைக்க்பப்படும் புவியடுக்கு – கருவம்

24) கருவத்தில் காணப்படும் அடுக்குகள் – உட்கருவம், வெளிகருவம்

25) திடநிலையில் காணப்படும் கருவம் – உட்கருவம்

26) திரவ நிலையில் காணப்படும் கருவம் – வெளிக்கருவம்

27) புவியீர்ப்பு விசைக்கு காரணம் – புவியின் கருவத்தில் அதிகமான இரும்பு உள்ளதால்

28) பாறைகளின் உறைவிடம் – புவியின் மேலோடு

29) தாதுக்களின் கலவை – பாறைகள்

30) பாறைகளின் பிரிவுகள் – தீப்பாறை, படிவுப் பாறை, உருமாறிய பாறை

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One