Search

TNPSC | TRB | TET | STUDY MATERIALS | TAMIL FREE DOWNLOAD | 10 ஆம் வகுப்பு பொதுத்தமிழ் | PART -8

Sunday, 4 November 2018

TNPSC | TRB | TET STUDY MATERIALS|பத்தாம் வகுப்பு - பொதுத்தமிழ்| PART-8
===========================
700) ஏராளமான முதுமக்கள்தாழிகள் கண்டறியப்பட்ட இடம்?
ஆதிச்சநல்லூர் – திருநெல்வேலி மாவட்டம்
701) ஆதிச்சநல்லூரில் முதுமக்கள்தாழிகள் கண்டறியப்பட்ட ஆண்டு?
1879 & 2003
702) ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சில் கண்டறியப்பட்ட முதுமக்கள்தாழிகள் எந்த காலத்தை சேர்ந்தது?
கி.மு.300 முதல் கி,பி.300 வரையிலானவை
703) வின்சென்ட் வான்கோக் என்பவர்?
கேட்புத்திறனற்ற மாற்றுத்திறனாளி, ஓவியம் வரைபவர்
704) முதுமக்கள்தாழிகளில் கண்டறியப்பட்டவை?
1) இறந்தோரின் எலும்புகள்
2) தங்கத்திலான நெற்றிப்பட்டம்
3) செம்பினாலான ஆண், பெண் தெய்வ உருவங்கள்
4) இரும்பினாலான கத்திகள்
5) விளக்குத் தாங்கிகள்
705) இருசொற்கள் சேரும்போது தோன்றல், கெடுதல், திரிதல் ஆகிய மாற்றங்கள் ஏற்படுமாயின் அவற்றை எவ்வாறு அழைப்பர்?
விகாரப்புணர்ச்சி
706) அருஞ்சாதனை புரிந்த மாற்றுத்திறனாளிகள் எவர்?
1) தாமசு ஆல்வா எடிசன்
2) கெலன் கெல்லர்
3) பீத்தோவன்
4) மைக்கேல் பாரடே,
5) சான்சன்
707) ஓவியர் பிகாசோவின் ஓவியம் பெரும்புகழ் பெற்றதுபோல் எவரது ஓவியங்கள் சிறப்பாக பேசப்படுகின்றன?
வின்சென்ட் வான்கோக்
708) பொய்யா விளக்கு என்பதன் பொருள்?
அணையா விளக்கு
709) கீழ்க்காணும் சொற்களுக்கு பொருள் கூறுக.
1) எண்பொருள் – இயல்பாய்க் கிடைக்கும்பொருள்
2) ஒண்பொருள் – சிறந்தபொருள்
3) உறுபொருள் – அரசுரிமையால் வரும்பொருள்
4) உல்குபொருள் – வரியாக வரும்பொருள்
710) திருக்குறள் ஒரு வகுப்பார்க்கோ ஒரு மதத்தார்க்கோ ஒரு நிறத்தார்க்கோ ஒரு மொழியார்க்கோ ஒரு நாட்டார்க்கோ உரியதன்று. அது மன்பதைக்கு உலகுக்குப் பொது – என்று கூறியவர்?
திரு.வி.கலியாணசுந்தரம்
711) திருவள்ளுவர் தோன்றியிராவிட்டால், தமிழன் என்னும் ஓர் இனம் இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது – என்று கூறியவர்?
கி.ஆ.பெ.விசுவநாதம்
712) திருக்குறள் என்னும் ஒரு நூல் தோன்றியிராவிட்டால், தமிழ்மொழி என்னும் ஒரு மொழி இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது – என்று கூறியவர்?
கி.ஆ.பெ.விசுவநாதம்
713) நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம், நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம் – என்று பாடியவர்?
அப்பர் என்கிற திருநாவுக்கரசர்
714) அப்பர் என்கிற திருநாவுக்கரசர் பிறந்த ஊர்?
திருவாமூர் (கடலூர் மாவட்டம் – பண்ணுருட்டியை அடுத்துள்ள ஊர்)
715) திருநாவுக்கரசரின் பெற்றோர்?
புகழனார், மாதினியார்
716) திருநாவுக்கரசரின் தமக்கை (அக்கா) யார்?
திலகவதியார்
717) திருநாவுக்கரசருக்கு பெற்றோர் இட்டபெயர்?
மருணீக்கியார்
718) திருநாவுக்கரசரின் வேறுபெயர்?
தருமசேனர், அப்பர், வாகீசர்
719) திருநாவுக்கரசர் பின்பற்றிய நெறி?
தொண்டுநெறி
720) சைவ அடியார்களை எவ்வாறு வழங்குவர்?
நாயன்மார்கள்
721) சைவ சமயக் குரவர் நால்வர்?
சம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர், சுந்தரர்
722) திருநாவுக்கரசர் பாடிய பாடல்கள் எவ்வாறு போற்றப்படுகிறது?
தேவாரம்
723) தாண்டகம் பாடுவதில் வல்லவர் யார் & தாண்டகவேந்தர் யார்?
திருநாவுக்கரசர்
724) திருநாவுக்கரசர் வாழ்ந்த காலம்?
கி.பி.ஏழாம் நூற்ற்றாண்டு
725) தெய்வத்தன்மையை உடைய இசைப்பாடல்கள் என்றும் கூறப்படுவது?
தேவாரம் (தே + வாரம் = தெய்வத்தன்மையை உடைய இசைப்பாடல்)
726) தெய்வத்திற்குச் சூட்டப்பெற்ற பாமாலை என்றும் கூறப்படுவது?
தேவாரம் (தே + ஆரம் = தெய்வத்திற்குச் சூட்டப்பெற்ற பாமாலை)
727) சைவத் திருமுறைகள் பன்னிரண்டனுள் முதல் ஏழு திருமுறைகள்?
மூவர் தேவாரம்
728) திருநாவுக்கரசர் பாடி அருளிய பாடல்கள் எத்தனையாவது திருமுறை?
நான்கு, ஐந்து, ஆறாம் திருமுறைகள்
729) நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் – இப்பாடல் அமைந்துள்ள திருமுறை?
ஆறாந்திருமுறை
730) தமிழகத்தில் விடுதலை வேட்கைக் கனலைத் தம் வீறுகொண்ட பாக்களால் மக்களைத் தட்டியெழுப்பியவர்?
மகாகவி பாரதியார்
731) மகாகவி பாரதியாரின் “அச்சமில்லை அச்சமில்லை” என்ற பாடலின் முன்னோடியாக அமைந்த பாடல்?
நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் – அப்பர்
732) தமிழர்தம் வாழ்வினை எதிரொலிப்பவை?
தமிழ் இலக்கியங்கள்
733) அறிவு அற்றம் காககும் கருவி – என்று கூறும் நூல்/
திருக்குறள்
734) சிந்தனைக் கருவூலமாகத் திகழ்வது?
தமிழ்மொழி
735) உலகம் உருண்டை - என்பதனை மேலை நாட்டினர் உறுதிசெய்த நூற்றாண்டு?
பதினாறாம் நூற்றாண்டு
736) ஆன்மஇயல் மற்றும் விண்ணியல் கூறும் நூல்?
திருவாசகம்
737) அண்டப் பகுதியில் உண்டைப் பிறக்கம் – இப்பாடல் இடம்பெறும் நூல்?
திருவாசகம்
738) தெளிந்த வானியல் அறிவை வெளிப்படுத்தும் நூல்?
திருவாசகம்
739) பெருவெடிப்புக் கொள்கையின்படி இப்பேரண்டம் விரிவடைந்து நிற்பதை ஆழமாக விளக்கம் கூறும் நூல்?
திருவாசகம்
740) உலகம் என்னும் தமிழ்ச்சொல் எந்த சொல்லின் அடியாகப் பிறந்தது?
உலவு
741) உலவு என்பதன் பொருள்?
சுற்றுதல்
742) ஞாலம் என்னும் தமிழ்ச் சொல் எந்த சொல்லடியாகத் தோன்றியது?
ஞால்
743) ஞால் என்பதன் பொருள்?
தொங்குதல்
744) எவ்விதப் பற்றுக்கோடுமின்றி அண்ட வெளியில் உலகம் தொங்கிக் கொண்டிருப்பதை உணர்த்தும் சொல்?
ஞால்
745) வானத்தில் காற்றில்லாப் பகுதியும் உண்டு என்பதை உணர்த்தும் புறநானூற்று வரி?
வறிது நிலைஇய காயமும் – புறநானூறு – 30வது பாடல்
746) தற்போதைய செயற்கைக் கோளைப் போன்றதாக கருதப்படும் சங்ககாலத்தவை?
வலவன் ஏவா வானூர்தி
747) வலவன் ஏவா வானூர்தி – இவ்வரிகள் இடம்பெறும் நுஉல்?
புறநானூறு – 27வது பாடல்
748) வலவன் என்பதன் பொருள்?
வானூர்தி செலுத்துபவன்
749) தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த – இவ்வரிகள் இடம்பெறும் நூல்?
பதிற்றுப்பத்து
750) பன்டைய காலத்தில் கரும்பை பிழிவதற்கு எந்திரங்கள் இருந்ததைக் கூறும் நூல்?
பதிற்றுப்பத்து
751) நிலத்திலிருந்து நீரை உறிஞ்சி இறைக்கும் ஆழ்துளைக் கிணறு, அக்காலத்தில் இருந்திருக்கலாம் என்பதை குறிப்பிடும் நூல்?
பெருங்கதை
752) அந்தக் கேணியும் எந்திரக் கிணறும் – இவ்வரிகள் இடம்பெறும் நூல்?
பெருங்கதை
753) கிரேக்கத் தொன்மத்தில் குறிப்பிடப்படும் போர்?
டிராய் போர்
754) டிராய் போருடன் இணைத்துப் பேசப்படும் எந்திரக்குதிரையுடன் ஒத்தது?
எந்திரயானை
755) எந்திரயானை பற்றி குறிப்பிட்டும் நூல்?
பெருங்கதை
756) பல்வகை மணிகளையும், அதன் தன்மைகளையும் விளக்கும் நூல்?
சிலப்பதிகாரம் – ஊர்காண் காதை
757) ஒருமைத் தோற்றத்து ஐவேறு வனப்பின்
 இலங்குகதிர் விடூஉம் நலங்கெழும் மணிகளும் – இவ்வரிகள் இடம்பெரும் நூல்?
சிலப்பதிகாரம்
758) தற்போதய வேதியியல் கூறுகளை ஒப்புநோக்கத்தக்க சிலப்பதிகார வரிகள்?
ஒருமைத் தோற்றத்து ஐவேறு வனப்பின் இலங்குகதிர் விடூஉம் நலங்கெழும் மணிகளும்
759) தமிழர்கள் நிலத்தின் வகைகளை எவ்வாறு வகைப்படுத்தினர்?
1) நிறத்தின் அடிப்படையில் – செம்மன் நிலம்
2) சுவையின் அடிப்படையில் – உவர்நிலம்
3) தன்மையின் அடிப்படையில் – களர் நிலம்
760) செம்மண் நிலத்தின் பயன்கருதி அதனை உணர்த்தும் வரிகள்?
செம்புலப் பெயல் நீர்போல – குறுந்தொகை
761) உவர்நிலத்தில் மிகுந்த நீரை பெற்றிருந்தும் பயன் இல்லை – என்பதனை உணர்ந்த்தும் வரிகள்?
அகல்வயல் பொழிந்தும் உறுமிடத் துதவா உவர்நிலம் – புறநானூறு
762) எதற்கும் பயன்பட்டாத நிலம்?
களர்நிலம்
763) எதற்கும் பயன்பட்டாத நிலத்தினை திருவள்ளுவர் எவ்வாறு குறிப்பிட்டுகிறார்?
பயவாக் களர் அனையர் கல்லாதவர்
764) அணுவியல் அறிவைப் பற்றி ஒளவையார் கூறுவது?
அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி
765) அணுவியல் அறிவைப் பற்றி கம்பர் கூறுவது?
ஓர் அணுவினைச் சதகூறிட்ட கோணினும்ம் உளன்
766) மழையை அமிழ்தம் என்றவர்?
திருவள்ளுவர்
767) உடம்பார் அழியின் உய்யிரார் அழிவர் – இவ்வரிகளை பாடியவர்?
திருமூலர்
768) உடல் உறுதியாய் இருப்பதற்கு காரணமாக அமைவது?
வாதம், பித்தம், சீதம் இம்மூன்றின் சமநிலை
769) மருந்தாகித் தப்பா மரத்தற்றால் – இவ்வரிகளை பாடியவர்?
திருவள்ளுவர்
770) சித்தர்கள் மொத்தம் எத்தனை பேர்?
பதினெண் சித்தர்கள் – 18
771) பதினெண் சித்தர்கள் வளர்த்த மருத்துவம்?
சித்த மருத்துவம்
772) தமிழ் சித்தர்களில் சிலர்?
அகத்தியர், தேரையர், போகர், புலிப்பாணி
773) உலகில் பின்விளைவுகளற்ற மருத்துவங்களுள் ஒன்று/
சித்த மருத்துவம்
774) சித்த மருத்துவத்தின்ன் வேறுபெயர்?
மருந்தில்லா மருத்துவம், இயற்கை மருத்துவம்
775) உடம்பிடை தோன்றிற் றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி – இவ்வரிகளைப் பாடியவர்?
கம்பர்
776) மணிமேகலையின் தோழி?
சுதமதி
777) சரிந்த குடலை சரிசெய்த செய்தியை கூறும் நூல்?
மணிமேகலை - சுதமதியின் தந்தையை மாடு முட்டியதால்
778) பல்வேறு அறிவியல் செய்திகள், உயிரியல் செய்திகள், மருத்துவச் செய்திகள் விரவிக்கிடக்க்கின்ற நூல்?
திருவாசகம்
779) பல்வகை உயிர்களின் பரிணாம வளர்ச்சியை விரிவாகக் கூறும் நூல்?
திருவாசகம்
780) திருவாசகத்தில் பல்வகை உயிர்களின் பரிணாம வளர்ச்சியை விரிவாகக் கூறும் வரிகள்?
புல்லாகிப் பூடாய் எனத்தொடங்கும் வரி
781) கருவியல் அறிவை நன்கு தெரிவிக்கும் திருவாசக வரிகள்?
மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து கிருமி செருவினில் பிழைத்தும்
782) குறட்டை ஒலி – என்ற சிறுகதையின் ஆசிரியர்?
மு.வரதராசனார்
783) அகத்திணைகள் எத்தனை வகைப்படும்?
ஏழு வகைப்படும்
784) அகத்திணையில் முதல் ஐந்து திணைகள்?
அன்பின் ஐந்திணை
785) அகப்பொருளுக்குரிய பொருள்கள் எவை?
முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள்
786) அன்புடைய தலைவன் தலைவி பற்றிய ஒழுக்கத்தினைக் கூறுவது?
அகத்திணை
787) பொருளிலக்கணம் எத்தனை வகைப்படும்?
இரண்டு வகைப்படு, அவை:-
1) அகப்பொருள்
2) புறப்பொருள்
788) அகவொழுக்கம் நிகழ்வதற்கு காரணமான முதற்பொருள்?
நிலமும் பொழுதும்
789) அகவொழுக்கம் நிகழ்வதற்கு காரணமான நிலத்தின் வகைகள் யாவை?
1) குறிஞ்சி - மலையும் மலைசார்ந்த இடமும்
2) முல்லை - காடும் காடுசார்ந்த இடமும்
3) மருதம் - வயலும் வயல்சார்ந்த இடமும்
4) நெய்தல் - கடலும் கடல் சார்ந்த இடமும்
5) பாலை - மணலும் மணல்சார்ந்த இடமும்
790) அகவொழுக்கம் நிகழ்வதற்கு காரணமான பொழுதின் வகைகள் யாவை?
பெரும்பொழுது, சிறுபொழுது
791) பெரும்பொழுதில் உள்ள ஆறு கூறுகள்?
1) கார்காலம் - ஆவணி, புரட்டாசி
2) குளிர்காலம் - ஐப்பசி, கார்த்திகை
3) முன்பனிக்காலம் - மார்கழி, தை
4) பின்பனிக்காலம் - மாசி, பங்குனி
5) இளவேனிற்காலம் - சித்திரை, வைகாசி
6) முதுவேனிற்காலம் - ஆனி, ஆடி
792) பெரும்பொழுது என்பது?
ஓராண்டின் ஆறு கூறுகள்
793) சிறுபொழுது என்பது?
ஒருநாளின் ஆறு கூறுகள்
794) சிறுபொழுதில் உள்ள ஆறு கூறுகள்?
1) காலை - காலை 6 மணிமுதல் 10 மணிவரை
2) நண்பகல் - காலை 10 மணிமுதல் 2 மணிவரை
3) எற்பாடு - பிற்பகல் 2 மணிமுதல் 6 மணி வரை
4) மாலை - மாலை 6 மணிமுதல் இரவு 10 மணிவரை
5) யாமம் - இரவு 10 மணிமுதல் இரவு 2 மணிவரை
6) வைகறை - இரவு 2 மணிமுதல் காலை 6 மணிவரை
795) திணையும் பொழுதும் எழுதுக.
வ.எண் திணை பெரும்பொழுது சிறுபொழுது
1. குறிஞ்சி குளிர்காலம், முன்பனிக்காலம் யாமம்
2. முல்லை கார்காலம் மாலை
3. மருதம் ஆறு பெரும்பொழுதும் வைகறை
4. நெய்தல் ஆறு பெரும்பொழுதும் எற்பாடு
5. பாலை இளவேனில், முதுவேனில், பின்பனி நண்பகல்
796) ஐவகை நிலத்திற்குரிய கருப்பொருள்கள் எவை?
தெய்வம், மக்கள், உணவு, விலங்கு
797) ஐவகை நிலத்திற்கு உரிய தெய்வங்கள் எவை?
வ.எண் திணை தெய்வம்
1. குறிஞ்சி முருகன்
2. முல்லை திருமால்
3. மருதம் இந்திரன்
4. நெய்தல் வருணன்
5. பாலை கொற்றவை
798) ஐவகை நிலத்திற்கு உரிய மக்கள் எவர்?
வ.எண் திணை மக்கள்
1. குறிஞ்சி வெற்பன், குறவன், குறத்தி
2. முல்லை தோன்றல், ஆயர், ஆய்ச்சியர்
3. மருதம் ஊரன், உழவர், உழத்தியர்
4. நெய்தல் சேர்ப்பன், பரதன், பரத்தியர்
5. பாலை எயினர், எயிற்றியர்
799) ஐவகை நிலத்திற்கு உரிய உணவு?
வ.எண் திணை உணவு
1. குறிஞ்சி மலைநெல், திணை
2. முல்லை வரகு, சாமை
3. மருதம் செந்நெல், வெண்ணெல்
4. நெய்தல் மீன், உப்புக்கு பெற்ற பொருள்
5. பாலை சூறையாடலால் வரும் பொருள்

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One