Search

TNPSC | TRB | TET | TAMIL STUDY MATERIALS FREE DOWNLOAD| அகநானூறு , புறநானூறு பற்றிய முக்கிய குறிப்புகள்

Friday 9 November 2018

#அகநானூறு_பற்றிய_முக்கிய_தகவல்கள்
* அகம்+நான்கு+நூறு = அகநானூறு
* அகத்திணை பற்றிய நானூறு பாடல்கள் கொண்டுள்ளதால் அகநானூறு எனப் பெயர் பெற்றது. * இதனை நெடுந்தொகை எனவும் கூறுவார்.
திணை = அகத்திணை
பாவகை = ஆசிரியப்பா
பாடல்கள் = 400
பாடியோர் = 145
அடி எல்லை = 13-31
1-கலிற்றுயானை நிறை(1-120 பாடல்கள்)
2-மணிமிடைப்பவளம்(121-300 பாடல்கள்)
3-நித்திலக்கோவை(301-400 பாடல்கள்)
* இந்நூலில் குடவோலை தேர்தல் பற்றி கூறப்பட்டுள்ளது
* நூலிற்கு முதலில் உரை எழுதியவர் = நா.மு.வேங்கடசாமி நாட்டார்
* நூலை முதலில் பதிப்பித்தவர் = வே. இராசகோபால் ஐயர்

#புறநானூறு
* எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
* இந்நூலிலுள்ள பாடல்கள் பல்வேறு புலவர்களால் பாடப்பெற்றவை.
* புறநானூற்றில் 11 திணைகளும், 65 துறைகளும் கூறப்பட்டுள்ளன.
* புறநானூற்றில் கூறப்படாத திணை = உழிஞைத் திணை.
* இப்பாடல்கள் பண்டைத் தமிழ் மன்னர்களின் ஆட்சிச், சிற்பம், கொடை, கல்வி முதலியவற்றை விளக்குகிறது.
* இந்நூலின் சில பாடல்களை ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
* புறநானூற்றில் மிக அதிக பாடலை பாடியவர் : ஔவையார்
* முதல் 266 பாடல்களுக்கு பழைய உரை உள்ளது.
* 267-400 பாடல்களுக்கு உ.வே.சா உரை உள்ளது.
* நூலினை முதலில் பதிப்பித்தவர் = உ.வே.சா
* வேறுபெயர் : புறம்,புறப்பாட்டு,தமிழ்க்கரூவூலம்,தமிழர் வரலாற்றுக்களஞ்சியம்.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One