Search

TNPSC|TRB|TET STUDY MATERIALS|TAMIL FREE DOWNLOAD|பொதுத்தமிழில் சில முக்கிய குறிப்புகள்

Friday 2 November 2018

TNPSC|TRB|TET STUDY MATERIALS |பொதுத்தமிழில் சில முக்கிய குறிப்புகள்

1. விப்ரநாராயணர் என்ற இயற்பெயர் உடையவர் தொண்டரடிப்பொடி ஆழ்வார்

2. ஆதி உலா என்று அழைக்கப்படுவது திருக்கைலாய ஞான உலா

3. தமிழ் மூவாயிரம் என்று சொல்லப்படுவது திருமந்திரம்

4. மூவர் பாடிய தேவாரம் இப்படியும் அழைக்கப்படும் அடங்கன்முறை

5. பதினோராந் திருமுறையில் பத்து நூல்களைப் பாடியோர் நக்கீரர்,நம்பியாண்டார் நம்பி

6. மருள்நீக்கியார் என்னும் இயற்பெயர் உடையவர் திருநாவுக்கரசர்

7. திருமாலுக்குத் திருப்பள்ளியழுச்சி பாடியவர் தொண்டரடிப் பொடி ஆழ்வார்

8  திருவாய்மொழியின் ஆசிரியர் நம்மாழ்வார்

9.  நாவுக்கரசரை 'அப்பரே' என்று, முதலில் அழைத்தவ திருஞான சம்பந்தர்

10. வாதவூர் அடிகள் என்றழைக்கப்படுபவர் மாணிக்கவாசகர்

11. "கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ;திருப்பவளச் செவ்வாய் தான் தித்தித்திருக்குமோ" என்று, ஆண்டாள் பாடியது

    எந்த நூலில்?.....நாச்சியார் திருமொழியில்

12. "சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்! கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்" எனச் சொன்னவர் நாவுக்கரசர்

13. "மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து என்னைக் கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி நான்"........பாடியவர் ஆண்டாள்

14. "ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுதொட்டில்;மாணிக்கக் குறளனே தாலேலோ என்று இறைவனுக்குத் தாலாட்டு பாடியவர்

    பெரியாழ்வார்

15. சமணர்கள் நாவுக்கரசருக்குச் சூட்டிய பெயர் தருமசேனர்

16. திருஈங்கோய்மலை எழுபது நூலைத் தந்தவர் நக்கீரதேவ நாயனார்

17. "மாசில் வீணையும் மாலை மதியமும்;வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்" எனும் பாடலைப் பாடியவர் திருநாவுக்கரசர்

18 "ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை.....புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே" என்ற பாடல் எந்த நூலின் கடவுள் வாழ்த்தாக

    அமைந்துள்ளது?................திருமந்திரம்

19. "அன்பே சிவமானது ஆரும் அறிகிலார்"..........இடம் பெறும் நூல் திருமந்திரம்

20. "பாவை பாடிய வாயால் கோவை பாடுக" என்று,சிவபெருமானால் கேட்கப்பட்டவர் மாணிக்கவாசகர்

21. வள்ளலாரின் பாக்களைத் தொகுத்துத் திருமுறைகளாக வகுத்தவர் தொழுவூர் வேலாயுத முதலியார்

22. முருகப்பெருமானை வழிபடுவோர் எச்சமயம்?....... கௌமாரம்

23. தாண்டகப் பாடல்கள் பாடிய ஆழ்வார் திருமங்கையாழ்வார்

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One