பொறியாளர்கள் இந்தியா லிமிடெட்டில் மேனேஜ்மென்ட் டிரெய்னி வேலை

மத்திய அரசில் பொறியாளர்கள் இந்தியா லிமிடெட்டில் Engineers India Limited (EIL) காலியாக உள்ள மேனேஜ்மென்ட் டிரெய்னி (Management Trainee) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

மேனேஜ்மென்ட் டிரெய்னி (Management Trainee) பிரிவில் 79 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

B.E மற்றும் B.Tech துறையில் படித்து முடித்து பட்டம் பெற்றிருக்க வேண்டும்.வயது வரம்பு:

30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

Graduate Aptitude Test மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.engineersindia.com என்ற இணையதளத்தின் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய http://recruitment.eil.co.in/hrdnew/mt/GATE_Detailed_Advertisement_Final_1920_06.pdf என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.விண்ணப்பிக்க கடைசி தேதி : 20-06-2019