Search

பொதுத்துறை வங்கிகளில் சிறப்பு அதிகாரி பணிகள் - விண்ணப்பிக்க தயாரா?

Tuesday 12 November 2019

பொதுத்துறை வங்கிகளில், ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர்ஸ் என்ற பிரிவின் கீழ் பல்வேறு பணிகளுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பை ஐ.பி.பி.எஸ் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிகள் & காலிப்பணியிடங்கள்:
ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர்ஸ்


1. ஐ.டி ஆபீசர் - IT Officer
2. அக்ரிகல்சர் ஃபீல்டு ஆபீசர் - Agricultural Field Officer
3. ராஜ்பாஷா அதிகாரி - Rajbhasha Adikari
4. சட்ட அதிகாரி - Law Officer
5. ஹெச்.ஆர் / பெர்சனல் ஆபீசர் - HR / Personnel Officer
6. மார்க்கெடிங் ஆபீசர் - Marketing Officer

மொத்தம் = 1,163 காலிப்பணியிடங்கள்



முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பம் தொடங்கும் தேதி: 06.11.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.11.2019
ஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி தேதி: 26.11.2019
முதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதி: 28.12.2019 & 29.12.2019
முதன்மைத் தேர்வு நடைபெறும் தேதி: 25.01.2020

வயது வரம்பு:
01.11.2019 அன்றுக்குள், குறைந்தபட்சமாக 20 முதல் அதிகபட்சமாக 30 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.

குறிப்பு:
பணிகளை பொருத்து வயது வரம்பில் மாற்றங்கள் உண்டு.



தேர்வுக்கட்டணம்:
1. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் / முன்னாள் ராணுவத்தினர் - ரூ.100
2. பொது / EWS / OBC பிரிவினர் - ரூ.700

குறிப்பு:
1. செலுத்திய தேர்வுக்கட்டணத்தை எக்காரணம் கொண்டும் திரும்ப பெற இயலாது.
2. ஆன்லைனில் மட்டுமே தேர்வுக்கட்டணத்தை செலுத்த முடியும்.

கல்வித்தகுதி: (26.11.2019 அன்றுக்குள்)
1. ஐ.டி ஆபீசர் - குறைந்தபட்சமாக, 4 வருட இளங்கலை பட்டப்படிப்பான பி.இ / பி.டெக் ( கம்யூட்டர் சயின்ஸ், ஐ.டி, எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் & டெலிகம்யூனிகேஷன்ஸ், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் & இன்ஸ்ட்ரூமெண்டேசன்) போன்ற ஏதேனும் ஒரு பிரிவில் பயின்று தேர்ச்சி (அல்லது) அதிகப்பட்சமாக, முதுகலைப் பட்டப்படிப்பில் ( கம்யூட்டர் சயின்ஸ், ஐ.டி, எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் & டெலிகம்யூனிகேஷன்ஸ், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் & இன்ஸ்ட்ரூமெண்டேசன்) போன்ற ஏதேனும் ஒரு பிரிவில் பயின்று தேர்ச்சி அவசியம்.

2. அக்ரிகல்சர் ஃபீல்டு ஆபீசர் - 4 வருட வேளாண் துறை சார்ந்த இளங்கலை பட்டப்படிப்புகளில் ஏதேனும் ஒரு துறையில் பயின்று தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம்.



3. ராஜ்பாஷா அதிகாரி - முதுகலைப் பட்டப்படிப்பில் இந்தியுடன் ஆங்கிலத்தை ஒரு பாடமாகவோ அல்லது சமஸ்கிருதத்துடன் ஆங்கிலம் மற்றும் இந்தியை பாடங்களாகவோ பயின்றிருத்தல் வேண்டும்.

4. சட்ட அதிகாரி - இளங்கலைப் பட்டப்படிப்பில் சட்டம் (Law - LLB) பயின்று அத்துடன் பார் கவுன்சிலில் பதிவு பெற்றிருத்தல் வேண்டும்.

5. ஹெச்.ஆர் / பெர்சனல் ஆபீசர் - ஏதேனும் ஒரு இளங்கலை பட்டத்தில் தேர்ச்சி அத்துடன் 2 வருட (Full time) முதுகலை படிப்பில் தேர்ச்சி அவசியம்.

6. மார்க்கெடிங் ஆபீசர் - ஏதேனும் ஒரு இளங்கலை பட்டத்தில் தேர்ச்சி. அத்துடன் 2 வருட (Full time) MMS (Marketing) அல்லது MBA (Marketing) தேர்ச்சி.

தேர்வு செய்யும் முறை:
1. முதல்நிலைத் தேர்வு
2. முதன்மைத் தேர்வு
3. நேர்முகத்தேர்வு





விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் மட்டுமே இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.
ஆன்லைனில், https://www.ibps.in/common-written-exam-cwe/ - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.

மேலும், இது குறித்த முழு தகவல்களைப் பெற, https://www.ibps.in/wp-content/uploads/CRP_SPL_IX_ADVT.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One