மேற்படி போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் உணவு மற்றும் தங்கும் வசதிகள் இல்லை. மேலும் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரி மற்றும் நந்தனத்தில் உள்ள அரசினர் ஆடவர் கலைக் கல்லூரி ஆகிய இடங்களில் முறையே 500 மற்றும் 300 தேர்வர்கள் பயிற்சிக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.
Search
இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில் தமிழக அரசின் சார்பில் கட்டணமில்லாப் போட்டித் தேர்வு பயிற்சி
Thursday, 19 May 2022
மேற்படி போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் உணவு மற்றும் தங்கும் வசதிகள் இல்லை. மேலும் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரி மற்றும் நந்தனத்தில் உள்ள அரசினர் ஆடவர் கலைக் கல்லூரி ஆகிய இடங்களில் முறையே 500 மற்றும் 300 தேர்வர்கள் பயிற்சிக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.
10,402 பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அனுமதி
Monday, 16 May 2022
பல்வேறு துறைகளில் காலியாக உள்ள, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான, 10 ஆயிரத்து 402 பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு துறைகளில் காணப்படும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான, பின்னடைவுப் பணியிடங்கள், சிறப்பு ஆட் சேர்ப்பு முகாம் வழியே நிரப்பப்படும் என, கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்டது.அதை செயல்படுத்த, தலைமைச் செயலகத் துறைகளிடம் இருந்து, தொகுதி வாரியாக உறுதி செய்யப்பட்டு பெறப்பட்ட எண்ணிக்கை அடிப்படையில், ஆதிதிராவிடருக்கு 8,173 இடங்கள், பழங்குடியினருக்கு 2,229 இடங்கள் என, மொத்தம் 10 ஆயிரத்து 402 இடங்கள் கண்டறியப்பட்டன.
இவற்றை உரிய வழிமுறைகளைப் பின்பற்றி நிரப்ப, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதைத் தொடர்ந்து, இந்த இடங்களை நிரப்புவதற்கான வழிமுறைகளை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர் மணிவாசன் வெளியிட்டுள்ளார்.
ஆசிரியர் பணி: ஜூலையில் ரிசல்ட்
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, ஜூலையில் முடிவு வெளியிடப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா வெளியிட்ட செய்திக்குறிப்பு:அரசு பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் நிலை -- 1 மற்றும் கணினி பயிற்றுனர் நிலை- - 1 பதவிகளுக்கு, இந்த ஆண்டு பிப்ரவரியில் கணினி வழி தேர்வு நடந்தது. பள்ளி மாணவர்களுக்கு பொது தேர்வுகள் நடப்பதால், விடைக்குறிப்பை மறு ஆய்வு செய்யும் பணிகள் முடிய, ஒரு மாதம் தேவை. அதன்பின், இறுதி விடைக்குறிப்பு வெளியாகும். பின், சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின் ஜூலை இறுதியில் முடிவு வெளியாகும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
PGTRB - தெரிவுப் பட்டியல் எப்போது வெளியிடப்படும் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.
முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்கான தெரிவுப் பட்டியல் ஜூலை 2022 இறுதியில் வெளியிட முடிவு - ஆசிரியர் தேர்வு வாரியம் செய்தி வெளியீடு!
2020 - 2021 ஆம் ஆண்டு முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை -1 கணினி பயிற்றுதர் நிலை | நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை ( Notificatien ) No. 01 / 2021 , நாள் 09.09.2421 ன்படி 12. 02 , 2022 முதல் 20. 02. 2022 வரை நடைபெற்ற கணினி வழித் தேர்வுகளுக்கு 09.04.2022 அன்று உத்தேச விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டன. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட உத்தேச விடைக்குறிப்பின் மீது தேர்வர்களின் ஆட்சேபனைகள் 09.04.2022 மாலை 06.00 மணி முதல் 13.04.2022 மாலை 05.30 மணி வரை 29148 ஆட்சேபனைகள் பெறப்பட்டுள்ளது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் செயல்முறைத் தேர்வு மற்றும் பருவத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் பகுதியாக ( Phared & amer ) பாடவாரியாக மட்டுமே பாடவல்லுநர்கள் அழைக்கப்பட்டு , விடைக்குறிப்பினை மறுஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி முடிவடைய குறைந்தபட்சம் ஒரு மாத கால அவகாசம் தேவைப்படும் இப்பணி முடிவுற்றதும் இறுதி விடைக்குறிப்பு வெளியிடப்படும்.
அதன் பின் விடைத்தாட்கள் கணினிவழி திருத்தம் மேற்கொள்ளப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இதற்கு குறைந்தபட்சம் 45 நாட்கள் தேவைப்படும் அதன்பிறகு சான்றிதழ் சரிபார்ப்பிற்கு குறைந்தபட்சம் ஒருமாத கால அவகாசம் தேவை. தெரிவுப்பட்டியல் ஜீலை 2022 இறுதியில் வெளியிட அனைத்து பணிகளும் நடைபெற்று வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC - மைனஸ் மதிப்பெண் முறை குரூப் - 2 தேர்வில் உண்டு.
Thursday, 12 May 2022
குரூப் - 2' தேர்வில், 'மைனஸ்' மதிப்பெண் முறை உண்டு என அறிவிக்கப்பட்டு உள்ளது.அரசு துறைகளில், குரூப் - 2, 2ஏ பணிகளில், 5,529 இடங்களை நிரப்ப, அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், வரும் 21ல் முதல் நிலை தகுதி தேர்வு நடத்தப்படுகிறது.
இது தொடர்பாக, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள அறிவிப்பு:
* தேர்வர்கள் தங்களது விபரங்கள் அடங்கிய, பிரத்யேக விடைத்தாளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். எனவே, விடைத்தாள் பெற்றதும், அதில் உள்ள தங்களின் விபரங்களை சரிபார்த்த பின்னரே பயன்படுத்த வேண்டும். தவறாக இருந்தால், பயன்படுத்தும் முன் மாற்றிக் கொள்ள வேண்டும்.
* தேர்வர்கள் அவர்களுக்கான விடைத்தாளுக்கு பதிலாக, வேறு விடைத்தாள் பெற்று, அதில் தங்களின் பதிவு எண்ணை தவறாக எழுதியிருந்தால், தேர்வரின் மொத்த மதிப்பெண்ணில், 2 மதிப்பெண் கழிக்கப் படும்.
* மொத்த கேள்விகளுக்குமான விடைக்குறிப்பை, 'ஷேடிங்' செய்வதில் சரியான முறையை பின்பற்றாவிட்டால், 2 மதிப்பெண் கழிக்கப்படும்.
* வினா தொகுப்பு புத்தகத்தின் எண்ணை சரியாக குறிப்பிடாமலும், விடைத்தாளில் அதற்கான இடத்தில் சரியாக எழுதாமலும் இருந்தால், 5 மதிப்பெண் கழிக்கப்படும்.
* ரேகை வைக்க முடியாத மாற்றுத் திறனாளிகள் தவிர, மற்றவர்கள் தேவைப்படும் இடத்தில், விரல் ரேகை வைக்க வேண்டும். ரேகை வைக்காவிட்டால், 2 மதிப்பெண் கழிக்கப்படும்.
* எந்த கேள்விக்காவது விடைக் குறிப்பை தேர்வு செய்யாமல் காலியாக விட்டால், 2 மதிப்பெண் கழிக்கப்படும். எனவே, தேர்வர்கள் மிகவும் கவனமாக விடைத்தாளை கையாள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.