Search

கல்விச் சூழலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள்: ஆசிரியா் அமைப்புகள் அளித்துள்ள பரிந்துரை - முழு விவரம்

Thursday 28 May 2020

தமிழகத்தில் தொடா் விடுமுறையால் பள்ளிக் கல்விச் சூழலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சரி செய்யும் வகையில் பல்வேறு ஆசிரியா் அமைப்புகள் சாா்பில் தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு சில பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.



இது தொடா்பாக, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பின் பொதுச் செயலாளா் பேட்ரிக் ரெய்மாண்ட், தமிழ்நாடு அரசு ஊழியா்கள் ஆசிரியா்கள் நல கூட்டமைப்பின் நிறுவனா் சா.அருணன் உள்ளிட்டோா் பள்ளிக் கல்வித்துறைக்கு வழங்கிய பரிந்துரைகளின் விவரம்:



பள்ளிகள் திறப்பதற்கு முன் பள்ளி வளாகத்தைத் தூய்மைப்படுத்தி, கிருமிநாசினி தெளிக்க வேண்டும். ஒரு பள்ளியில் இரண்டு நுழைவாயில்கள் இருப்பதை உறுதி செய்யலாம். கூடுதல் வகுப்பறைகள் தேவைப்படும் நிலையில், சில வகுப்புகளை நண்பகல் 12 மணி வரையிலும், சில வகுப்புகளை 4.30 மணி வரையிலும் இரண்டாகப் பிரிக்கலாம்.


ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, நிகழாண்டு மட்டும் இரு பருவ முறையாக மாற்றியமைத்து பாடங்களையும் அதற்கேற்ற முறையில் குறைக்கலாம். இணையதள வாய்ப்பு அனைத்து மாணவா்களுக்கும் சமமான வாய்ப்பைத் தருவது இல்லை. மாணவா்களுக்கும் ஆசிரியா்களுக்கும் விலையின்றி முகக் கவசத்தை அரசே வழங்க வேண்டும்.


காலை வழிபாட்டு நிகழ்வை வகுப்பறையிலேயே நடத்த வேண்டும். குழு விளையாட்டுகளைத் தவிா்க்க வேண்டும். சிக்கன நடவடிக்கையாக, இட ஒதுக்கீட்டுக்காக தனியாா் பள்ளிகளுக்கு அரசு செலுத்தும் தொகையை ரத்து செய்து, அந்தத் தொகையை அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பயன்படுத்தலாம் என அதில் தெரிவித்துள்ளனா்.
Read More »

பழமொழிகளும் அதன் உண்மை விளக்கமும் அறிவோம் - மாமியார் உடைத்தால் மண் குடம்; மருமகள் உடைத்தால் பொன் குடம்.

மாமியார் உடைத்தால் மண் குடம்; மருமகள் உடைத்தால் பொன் குடம்.
பொருள்:
ஒரே தவறை மாமியார் செய்யும் போது அது பெரிதாகக் கருதப்படுவதில்லை. ஆனால், வீட்டுக்கு வந்த மருமகள் அதே தவறைச் செய்துவிட்டால், அதை மாமியார் பெரிதுபடுத்திவிடுகிறார் எஎன்று பொருள் வருகிறது,
உண்மையான பொருள்:
மாமியார் உழைத்தால் மண்ணுக்கு உரம்-மருமகளும் உழைத்தால் பொன்னுக்கு உரம் என்பது தான் உண்மையான பழமொழி. விவசாயி வீட்டில் மாமியாரும் மருமகளும் சேர்ந்து நிலத்தில் உழைத்தால் பொன்னும், பொருளும் சேரும் என்பது அர்த்தம்.
Read More »

Group A,B,C,D அலுவலர்கள் யார் என்பதைக்கூறும் அரசாணை-அறிவோம்!




Read More »

அடிப்படை விதிகள் அறிவோம் - ஒரு பள்ளியில் ஒரே நேரத்தில் CL, ML, RL, EL எத்தனை ஆசிரியர்களுக்கு வழங்கலாம்?

Read More »

இனி உடனுக்குடன் PAN எண் ஒதுக்கீடு - புதிய சேவை அறிமுகம்



உடனுக்குடன் PAN எண் ஒதுக்கீடு செய்யும் சேவையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தொடங்கி வைத்தார்


கீழுள்ள இணைப்பில் உடனடி PAN எண் ஜெனரேட் செய்து PDF-ஆக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்...


https://www.incometaxindiaefiling.gov.in/e-PAN/index.html?lang=eng
Read More »

ஓய்வூதிய அரசாணை வழக்கு - ஆசிரியர்களை பணியில் இருந்து விடுவிக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவு!

சிவகங்கை மாவட்டம் அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளிபட்டதாரி ஆசிரியர் டி.ஜெயமங்கலம் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு : நான் 30.4.2020 - ல் ஓய்வுபெற வேண்டும் . எனக்கு 31.5.2020 வரை பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது . இந்நிலையில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58 - ல் இருந்து 59 வரை உயர்த்தி தமிழக அரசு 7.5.2020 - ல் அரசாணை பிறப்பித்தது .


இதனால் 31.5.2020 - ல் ஓய்வுபெறும் ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் பயன் பெறுவர் . என்னைப்போல் ஏப்ரல் 30 - ல் ஓய்வுபெற்று பணி நீட்டிப்புப் பெற்றவர்களுக்குப் பலனில்லை.


இந்த அரசாணை ஆசிரியர்கள் மத்தியில் பாரபட்சம் காட்டுவதாக உள்ளது . எனவே 31.5.2020 - ல் ஓய்வு  பெறும் ஆசிரியர்கள் , அரசு ஊழியர்களுக்கு மட்டும் ஓய்வு பெறும் வயதை 59 ஆக உயர்த்தும் அரசாணையை ரத்து செய்து 30.4.2020 - ல் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வு வயது நீட்டிப்புச் சலுகை வழங்க உத்தர விடவேண்டும் . அதுவரை என்னை மே 31 - ல் பணியில் இருந்து விடுவிக்கத் தடை விதிக்க வேண்டும் . இவ்வாறு மனுவில் கூறப்பட்டி ருந்தது .



இதேபோல் விருதுநகர் மாவட்டம் வன்னியம்பட்டி உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஜவஹர் , விருதுநகர் முத்துராமலிங்கபுரம் சிவசங்கர் , செம்பட்டி பார்வதி , திருப்பத்தூர் கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் மனு தாக்கல் செய்திருந்தனர் .


இந்த மனுக்களை நீதிபதி ஜெ.நிஷாபானு நேற்று விசாரித்தார் . மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் , ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய் வூதிய விவரங்கள் இதுவரை அனுப்பப்படவில்லை . மனுதாரர்களின் ஓய்வு வரம்பு மார்ச் , ஏப்ரல் மாதங்களாக இருப்பினும் , தற்போது வரை பணியில் உள்ளனர் . அப்படியிருக்கும்போது ஓய்வு வயது அதிகரிப்பு அரசாணை மனுதாரர்களுக்குப் பொருந்தாது என்பது ஏற்க முடியாது என்றார்.


அரசுத் தரப்பில் , பதில் அளிக்க  அவகாசம் கோரப்பட்டது . அப்போது குறுக்கிட்ட  அஜ்மல்கான் , ஜூன் மாதம் தொடங்க 2 நாள் மட்டுமே உள்ளது . இதனால் அதற்கு முன்பு மனுதாரர்களைப் பணியில் இருந்து விடுவிக்க அதிக வாய்ப்புள்ளது .

எனவே மனுதாரர்கள் 5 பேரையும் பணியில் இருந்து விடுவிக்கத் தடை விதிக்க வேண்டும் என்றார் . இதையேற்று மனுதாரர்கள் 5 பேரையும் பணியில் இருந்து விடுவிக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார் , அரசுத் தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 3 - ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
Read More »

உடற்பயிற்சியை தேர்வு செய்வது எப்படி?

  • எந்த உடற்பயிற்சி உங்களுக்கு ஏற்றதாக இருக்குமோ அதை தேர்ந்தெடுத்து அதை மட்டும் பயன்படுத்தினால் போதுமானது.28 வயது முதல் 68 வரையிலான வயதுடையவர்களுக்கான உடற்பயிற்சி வகைகளும், கால அவகாசமும் பார்க்கலாம்.


 1. 35 முதல் 45 நிமிட நடைப்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சியின் இறுதியில் ஐந்து நிமிட மூச்சுபயிற்சி. 



 2. 30 நிமிட நடைப்பயிற்சியின் முடிவில் 5 நிமிட புல் அப்ஸ். 

3. 30 நிமிட நடைப்பயிற்சியின் முடிவுல் 15 நிமிட யோகா.(தேர்ந்தெடுத்த ஆசனங்கள் மட்டும்)
4. ஏரோபிக் உடற்பயிற்சி எனில் 35 நிமிடங்கள், 5 நிமிட அமைதியான இருத்தல் 


5. அவுட்டோர் சைக்கிளிங் என்றால் 30 நிமிடம் 

 6. உடற்பயிற்சி எந்திரங்களில் ஏரோபிக் பயிற்சி என்றால் 30 நிமிடம் 


 7. டிரெட் மில் எனில் 15 +15 நிமிடங்கள் இரண்டு நிமிட இடைவேளி எடுத்துக்கொண்டு.
 8. நீச்சல் பயிற்சி - வார்ம் வாட்டர் பூல் எனில் 30 நிமிடங்கள், நார்மல் வாட்டர் எனில் 45 நிமிடங்கள் 

 9. படிக்கட்டுகளில் ஏறி இறங்குவது( 50 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும், மூட்டுவலி பிரச்சனை இல்லாதவர்கள் செய்யலாம். 


அடுக்கங்களில் 150 படிக்கட்டுகள் ஏறி இறங்கலாம். 30 நிமிடங்கள்) 

 10. பாட்மிட்டன், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், வாலிபால், ஃபுட்பால், ஸ்குவாஸ் போன்ற விளையாட்டுகள் எனில் குறைந்தது 1 மணிநேரம்.
Read More »

எஸ்.பி.ஐ.-யில் 'செக்' பயன்படுத்துகிறீர்களா? அவசியம் இதை தெரிஞ்சுகோங்க!

  • எஸ்.பி.ஐ.-யில் 'செக்' பயன்படுத்துகிறீர்களா? அவசியம் இதை தெரிஞ்சுகோங்க! 




நீங்கள் ஒரு காசோலையில் கையெழுத்திட்டுள்ளீர்களா, அதை அவசரமாக நிறுத்த விரும்புகிறீர்களா? 


வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கு உள்ள வங்கி கிளைக்கு செல்லாமலேயே அதை நிறுத்தும் வசதியை பாரத ஸ்டேட் வங்கி வழங்குகிறது. உங்கள் வீட்டில் வசதியாக இருந்துக் கொண்டு ஒரு காசோலை செயலாக்கப்படுவதை நீங்கள் நிறுத்தலாம். எஸ்பிஐ யின் YONO Lite ஆப்பை பயன்படுத்தி இதை நீங்கள் செய்யலாம். 


YONO Lite எஸ்பிஐ ஆப்பை பயன்படுத்தி ஒரு காசோலையை எவ்வாறு நிறுத்துவது.Yono Lite SBI ஆப்பில் லாகின் செய்து கொள்ளவும். 'Requests' >> 'Cheque Book' >> 'Stop/Revoke Cheque' என்பதை சொடுக்கவும். 


 'Stop Cheque' எனற பொத்தானை அழுத்தவும். வங்கி கணக்கு எண்ணை தேர்ந்தெடுக்கவும் காசோலையின் தொடக்க எண் (start cheque numbe) (கண்டிப்பாக) மற்றும் முடியும் எண் (end cheque number) ஆகியவற்றை வழங்கவும். 


கருவி வகையைத் தேர்ந்தெடுக்கவும். காசோலையை நிறுத்துவதற்கான காரணத்தை வழங்கவும். இது கட்டாயத் தேவை நீங்கள் காசோலையை நிறுத்துவதற்கான காரணத்தை கண்டிப்பாக கொடுக்க வேண்டும். நிபந்தனைகள் மற்றும் வழிமுறைகளை ஏற்றுக் கொள்ளவும். சமர்ப்பி என்பதை சொடுக்கவும். கைபேசியில் கிடைக்கப்பெற்ற OTP எண்ணை வழங்கவும். 

நீங்கள் கோரிய காசோலை(கள்) நிறுத்தப்படும். காசோலையை நிறுத்த இது ஒரு சுலபமான வழியாகும். வங்கி இந்த சேவையை தனது வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்குகிறது. ஒரே நேரத்தில் பல காசோலைகளை நிறுத்த நீட்டிக்கப்பட்ட வசதி பயன்படுத்தப்படலாம் 


 இது மட்டுமல்ல நீங்கள் காசோலையை நிறுத்தியதையும் ரத்து செய்யலாம் (cancel the Cheque stop). இது எப்படி என்பதை பார்ப்போம். Yono Lite SBI க்குள் லாகின் செய்துக் கொள்ளவும். 'Requests' >> 'Cheque Book' >> 'Stop/Revoke Cheque' என்பதை சொடுக்கவும். 'Revoke Cheque' என்ற பொத்தானை அழுத்தவும். 


உங்கள் வங்கி கணக்கு எண்ணை தேர்வு செய்யவும். நீங்கள் திரும்ப பெற வேண்டிய (revoke) காசோலையின் தொடக்க எண் (start cheque numbe) (கட்டாயம்) மற்றும் முடியும் எண்ணை (end cheque number) வழங்கவும். கருவி வகையைத் தேர்ந்தெடுக்கவும். வழிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளவும். 


சமர்பி என்பதை தேர்வு செய்யவும். கைபேசியில் கிடைக்கப்பெற்ற OTP எண்ணை உள்ளீடு செய்யவும். நீங்கள் கோரிய காசோலை (கள்) ரத்து செய்யப்படும்
Read More »

Flash News : பள்ளிக்கல்வித்துறையில் அதிகாரிகள் இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு செய்து அரசாணை வெளியீடு(CEO, DEO Transfer & Promotion Order - Proceedings)


அரசாணையில் , முதன்மை கல்வி அலுவலர் நிலையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு நிர்வாக மாறுதல் வழங்கப்பட்டும் , மாவட்டக் கல்வி அலுவலர் நிலையில் பணிபுரியும் அலுவலருக்கு முதன்மைக் கல்வி அலுவலராக பதவி உயர்வு அளித்தும் ஆணை வழங்கப்பட்டுள்ளது.


CEO Transfer And DEO Pro GO - Download here



மேற்காணும் அரசாணையில் , மாறுதல் அளிக்கப்பட்டுள்ள முதன்மைக் கல்வி அலுவலர்கள் , தனது பணியிட பொறுப்புகளை மாவட்டத்தில் உள்ள மூத்த மாவட்டக் கல்வி அலுவலரிடம் ஒப்படைத்துவிட்டு உடன் புதிய பணியிடத்தில் சேருமாறும் , பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ள மாவட்டக் கல்வி அலுவலர்கள் முதன்மைக் கல்வி அலுவலரால் நியமனம் செய்யப்படும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியரிடம் பொறுப்பினை ஒப்படைத்துவிட்டு உடன் புதிய பணியிடத்தில் பணியில் சேருமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள் . மாவட்டக் கல்வி அலுவலர் பொறுப்பு நியமனத்திற்கான பின்னேற்பு ஆணை கோரி , தனியே கருத்துரு அனுப்புமாறு சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் .


மேற்கண்டவாறு முழு கூடுதல் பொறுப்பேற்கும் அலுவலர் / தலைமை ஆசிரியர்கள் புதிய அலுவலர் பணியேற்கும் வரை உண்டியல்கள் ஏற்பளிப்பது உள்ளிட்ட நிதி அதிகாரத்துடன் கூடிய முழு கூடுதல் பொறுப்பில் செயல்படவும் அனுமதித்து ஆணையிடப்படுகிறது.


பணிவிடுவிக்கப்படும் அலுவலர்கள் தங்கள் கீழ் பணிபுரிந்த அலுவலர்கள் சார்பாக மந்தண அறிக்கைகள் எழுத வேண்டியிருப்பின் , அதனை முடித்துவிட்டு புதிய பணியிடத்தில் சேருமாறும் , பணிவிடுவிப்பு மற்றும் பணியேற்பு அறிக்கையினை உடன் இவ்வியக்ககம் அனுப்பி வைக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள் .
Read More »

மாணவர்களுக்கு நிவாரணம் வழங்கி அசத்திய அரசுப்பள்ளி ஆசிரியர்கள்!




கரோனா தொற்று பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்தியுள்ள ஊரடங்கு இன்னும் அமலில் இருப்பதால், தொழில்கள் முடங்கியதுடன் தொழிலாளர்களின் வாழ்க்கையும் முடங்கியுள்ளது. அன்றாடம் உணவுக்கே திண்டாடும் நிலை உருவாகி உள்ளது. இந்த நிலையில் தான் நலிவடைந்த மக்களுக்குத் தன்னார்வலர்கள் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களும் தங்கள் பள்ளியில் பயிலும், நலிவடைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு, கரோனா நிவாரணம் வழங்கியுள்ளனர்.


தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள கொன்றைக்காடு கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 800- க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளி மாணவர்கள் 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொடர்ந்து 13 ஆண்டுகளாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்று தொடர் சாதனையைத் தக்க வைத்துள்ளனர். தொடர் சாதனையைப் பார்த்து அருகில் உள்ள பேராவூரணி நகரில் இருந்தும் பலர் தங்கள் குழந்தைகளை அந்தப் பள்ளியில் சேர்த்துள்ளனர். குறிப்பாக இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் 80% மாணவர்கள் விவசாயிகளின் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் தான் கரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக, இப்பள்ளியில் பயிலும் நலிவடைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் பெற்றோர்கள் சிரமப்பட்டு வருவதை அறிந்த பள்ளி ஆசிரியர்கள் 264 மாணவ, மாணவிகளைத் தேர்வு செய்து, தங்கள் சொந்தப் பணத்தில் தலா ரூபாய் 500 வீதம், ரூபாய் 1 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பில் அரிசி, மளிகைப் பொருட்கள் ஆகியவற்றை வழங்கினர்.
புதன்கிழமை மாலை சமூக இடைவெளியோடு பள்ளியில் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியை கு.மகேஸ்வரி தலைமை வகித்தார்.

பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எஸ்.கே.இராமமூர்த்தி முன்னிலை வகித்தார்.பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர் ஏ.பிரகாஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், கிராமத்தினர் கலந்து கொண்டனர்.
இதேபோல புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டத்தில் பல ஊர்களில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் சொந்த செலவில் மாணவர்களின் குடும்ப நிலை அறிந்து உதவிகள் செய்து வருகின்றனர்.
Read More »

CPS NEWS

Cps ல் பிழைகளை  online ல் பிறந்ததேதி,பெயர் திருத்தம் சரி செய்தல்  சார்பாக சென்னை Data center ஆணையரின்  27.05.2020 ன் கடிதம்

Read More »

வேதியியல் பாடத்தேர்வுக்கு 'போனஸ்' மதிப்பெண் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

பிளஸ் 2 வேதியியல் தேர்வில், ஒரு கேள்வியில் மொழிபெயர்ப்பு பிழை இருந்ததால், 3 மதிப்பெண் போனசாக வழங்க, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம், நேற்று துவங்கியது.


ஒவ்வொரு பாட வாரியாகவும் வழங்கப்பட்ட விடைக்குறிப்புகளை ஆய்வு செய்து, தலைமை மதிப்பீட்டாளர்கள் விடைகளை திருத்தினர். இதில், தவறான விடை குறிப்புகள் மற்றும் பிழையான கேள்விகளை, தேர்வு மைய தலைமை கண்காணிப்பாளர்களிடம் தெரிவித்தனர். 


அதன்படி, வேதியியல் தேர்வில், புரதத்தின் வகைகள் குறித்த கேள்வியில், ஆங்கிலத்தில் சரியாகவும், தமிழில் பிழையும் இருந்தது கண்டறியப்பட்டது. இது குறித்து, பள்ளி கல்வித் துறையின் தேர்வு பிரிவுக்கு தெரிவிக்கப்பட்டது.


இதையடுத்து, அந்த கேள்விக்கு, தமிழ் வழி மாணவர்கள் பதில் எழுத முயற்சித்திருந்தால், அவர்களுக்கு, 3 மதிப்பெண் போனசாக வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More »

இபாக்ஸ் மூலமாக இலவச ஆன்லைன் பயிற்சி ஜூன் 15-ல் தொடக்கம். இன்று முதல் பதிவு செய்யலாம்

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்காக ஆன்-லைன் இலவச பயிற்சி வழங்க தமிழக அறிவித்துள்ளது. Ebox. என்ற தனியார் நிறுவனம் மூலம் 4 மணி நேரம் வகுப்பு, 4 மணி நேரம் பயிற்சித் தேர்வு என ஆன்-லைன் வகுப்பு நடைபெற உள்ளது. ஆன்-லைன் நீட் பயிற்சி ஜூன் 15-ல் தொடங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மாணவர்கள் கீழ்கண்ட இணைய லிங்கில் சென்று பதிவு செய்யவும்.

http://app.eboxcolleges.com/neetregister

மேலும் விவரம் அறிய...

Ebox - neet online Class - Download here
Read More »

ஓய்வு வயது உயர்வு சலுகை கோரிய ஆசிரியர்களைப் பணியிலிருந்து விடுவிக்கத் தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு



அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 59 ஆக உயர்த்தி பிறப்பித்த அரசாணையின் பலனை ஏப்ரல் 30-ல் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கும் வழங்கக்கோரி வழக்கு தொடர்ந்த ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவிக்க இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சிவகங்கை அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் டி.ஜெயமங்கலம், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: நான் 30.4.2020-ல் பணியிலிருந்து ஓய்வு பெற வேண்டும். எனக்கு 31.5.2020 வரை பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58-ல் இருந்து 59 வரை உயர்த்தி தமிழக அரசு 7.5.2020-ல் அரசாணை பிறப்பித்தது.


இந்த அரசாணையால் 31.5.2020-ல் வழக்கமாக ஓய்வு பெறும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பயன்பெறுவர். என்னைப்போல் ஏப்ரல் 30-ல் ஓய்வு பெற்று பணி நீட்டிப்பு பெற்றவர்களுக்கு பலனில்லை. இந்த அரசாணை ஆசிரியர்கள் மத்தியில் பாரபட்சம் காட்டுவதாக உள்ளது.


எனவே 31.5.2020-ல் ஓய்வு பெறும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு மட்டும் ஓய்வு பெறும் வயதை 59 ஆக உயர்த்தும் அரசாணையை ரத்து செய்து 30.4.2020-ல் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வு வயது நீட்டிப்பு சலுகை வழங்க உத்தரவிட வேண்டும். அதுவரை என்னை மே 31-ல் பணியிலிருந்து விடுவிக்க தடை விதிக்க வேண்டும்.


இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதேபோல் விருதுநகர் மாவட்டம் வன்னியம்பட்டி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜவஹர், விருதுநகர் முத்துராமலிங்கபுரம் சிவசங்கர், செம்பட்டி பார்வதி, திருப்பத்தூர் கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.


இந்த மனுக்களை நீதிபதி ஜெ.நிஷாபானு இன்று விசாரித்தார். மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான், ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதிய விவரங்கள் இதுவரை அனுப்பப்படவில்லை. மனுதாரர்களின் ஓய்வு வரம்பு மார்ச், ஏப்ரல் மாதங்களாக இருப்பினும், தற்போதுவரை பணியில் உள்ளனர். அப்படியிருக்கும் போது ஓய்வு வயது அதிகரிப்பு அரசாணை மனுதாரர்களுக்கு பொருந்தாது என்பது ஏற்க முடியாதது என்றார்.


அரசுத்தரப்பில், பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட அஜ்மல்கான், ஜூன் மாதம் தொடங்க 2 நாள் மட்டுமே உள்ளது. இதனால் அதற்கு முன்பு மனுதாரர்களை பணியிலிருந்து விடுவிக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே மனுதாரர்கள் 5 பேரையும் பணியிலிருந்து விடுவிக்க தடை விதிக்க வேண்டும் என்றார்.


இதையேற்று மனுதாரர்கள் 5 பேரையும் பணியிலிருந்து விடுவிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

அரசுத் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 3-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
Read More »
 

Most Reading

Tags

Sidebar One