Search
வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு: வங்கி பணியாளர்கள் தேர்வு நிறுவனம் (IBPS) அறிவிப்பு
வங்கியில் அதிகாரிகள் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி 2020 தேர்வு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வங்கி ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கும் தேர்ந்தெடுப்பதற்கும் ஒரு தன்னாட்சி அமைப்பான இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் செலக்சன் (ஐபிபிஎஸ்), பிராந்திய கிராமப்புற வங்கிகளுக்கான அதிகாரிகள், (ஆர்ஆர்பி) அலுவலர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விவரங்களை வெளியிட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் நாளை தொடங்கி ஜூலை 21 வரை ஆன்லைன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.ஐபிபிஎஸ் அதிகாரிகள் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் பல்வேறு நிலை தேர்வுகள் மூலம் தேர்வு செய்கிறது.இது பல்வேறு இடஒதுக்கீட்டுக்கான பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு முன் தேர்வுப் பயிற்சியையும் நடத்துகிறது. ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி ஆட்சேர்ப்புக்கான முன் தேர்வு பயிற்சி ஆகஸ்ட் 24 முதல் ஆகஸ்ட் 29 வரை நடைபெறும். இருப்பினும், இது தேர்வுக்கு முந்தைய பயிற்சியை ரத்து செய்யலாம் என்று அறிவித்துள்ளது. COVID-19 தொற்றுநோய் காரணமாக, தேர்வர்களின் பாதுகாப்பிற்காக, இந்த காலகட்டத்தில் பயிற்சி நடத்தப்படாமல் போகலாம் என்று ஐபிபிஎஸ் தெரிவித்துள்ளது.முதல்நிலை தேர்வானது செப்டம்பர் / அக்டோபரில் நடைபெறும். ஆனால் தேர்வு தேதிகளை ஐ.பி.பி.எஸ் முடிவு செய்யவில்லை. தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும். இந்த ஆட்சேர்ப்பில் 43 பிராந்திய கிராமப்புற வங்கிகள் பங்கேற்கின்றன.
Read More »
விண்ணப்பதாரர்கள் நாளை தொடங்கி ஜூலை 21 வரை ஆன்லைன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.ஐபிபிஎஸ் அதிகாரிகள் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் பல்வேறு நிலை தேர்வுகள் மூலம் தேர்வு செய்கிறது.இது பல்வேறு இடஒதுக்கீட்டுக்கான பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு முன் தேர்வுப் பயிற்சியையும் நடத்துகிறது. ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி ஆட்சேர்ப்புக்கான முன் தேர்வு பயிற்சி ஆகஸ்ட் 24 முதல் ஆகஸ்ட் 29 வரை நடைபெறும். இருப்பினும், இது தேர்வுக்கு முந்தைய பயிற்சியை ரத்து செய்யலாம் என்று அறிவித்துள்ளது. COVID-19 தொற்றுநோய் காரணமாக, தேர்வர்களின் பாதுகாப்பிற்காக, இந்த காலகட்டத்தில் பயிற்சி நடத்தப்படாமல் போகலாம் என்று ஐபிபிஎஸ் தெரிவித்துள்ளது.முதல்நிலை தேர்வானது செப்டம்பர் / அக்டோபரில் நடைபெறும். ஆனால் தேர்வு தேதிகளை ஐ.பி.பி.எஸ் முடிவு செய்யவில்லை. தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும். இந்த ஆட்சேர்ப்பில் 43 பிராந்திய கிராமப்புற வங்கிகள் பங்கேற்கின்றன.
Tags:
Job vacancy
CPS - புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது அந்தந்த மாநில அரசுகளின் விருப்பம் - RTI Reply!
புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது அந்தந்த மாநில அரசுகளின் விருப்பம் என தகவல் உரிமை சட்டத்தில் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் பதில ளித்துள்ளது.புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இது வரை 26 மாநிலங்களைச் சேர்ந்த 33.33 லட்சம் ஊழியர்கள் , 17.89 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் சேர்ந்துள்ளனர்.
அவர்களிடம் பிடித்த சந்தா மற்றும் அரசு பங்கு தொகையை சேர்த்து 1.51 லட்சம் கோடி ரூபாய் ஆணையத்திடம் உள்ளது. இந்த திட்டத்தில் மேற்குவங்கம் , திரிபுரா மாநிலங்கள் இணையவில்லை . தமிழகம் ஏப் . , 1 ல் செயல்படுத்தினாலும் , இதுவரை அரசு ஊழியர்களிடம் பிடித்த சந்தா மற்றும் அரசு பங்குத் தொகை ஆயிரம் கோடி ரூபாயை ஆணையத்திடம் செலுத்தவில்லை.
இதனால் ஓய்வூதிய பணப்பலன்களை பெற முடியாமல் ஓய்வூதியர்கள் மற்றும் இறந்தோரின் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். இதுவரை 4,152 பேர் விண்ணப்பித்ததில் 1,752 பேருக்கு மட்டுமே பணப்பலன் கிடைத்துள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் ஆசிரியர் பிரடரிக் ஏங்கல்ஸ் , ஓய்வூதிய நிதி ஒழுங் காற்று மற்றும் மேம்பாட்டு ஆணை யத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சில கேள்விகளை கேட்டிருந்தார். அதற்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேருவது குறித்து இதுவரை எந்த ஒப்பந்தமும் தமிழக அரசு செய்யவில்லை மேலும் அந்த திட்டத்தில் இணைவது அந்தந்த மாநில அரசுகளின் விருப்பம்தான் , ' ' என ஆணையம் பதில் ளித்துள்ளது. இதனால் ஏற்கனவே இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்து வதில் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை இதனை செயல்படுத்த வேண்டு மென , அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்
உபரி ஆசிரியர் விபரம் தாக்கல் செய்ய பள்ளிகளுக்கு கெடு!
பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை விகிதத்துக்கு அதிகமாக உள்ள ஆசிரியர்களின் பட்டியலை, வரும், 5ம் தேதிக்குள் தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில், ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்ட விதிகளின் படி, 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்றும், ஒரு பாடத்துக்கு ஒரு ஆசிரியர்என்றும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இதில், மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளில் பணியாற்றும் கூடுதல் ஆசிரியர்களை, மாணவர்கள் அதிகம் உள்ள பள்ளிகளுக்கு மாற்ற, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.இந்த நடவடிக்கையை மேற்கொள்ள, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள், மாணவர் விகிதத்தை கணக்கிட்டு, பட்டியல் சேகரிக்கப்படுகிறது.இதில், அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் மட்டும், கூடுதலாக உள்ள ஆசிரியர் பணியிடங்களின் பட்டியலை, பள்ளிகள் தாக்கல் செய்யவில்லை.
எனவே, வரும், 5ம் தேதிக்குள் உபரி ஆசிரியர் பணியிடங்களை தாக்கல் செய்யாவிட்டால், சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்களுக்கு,சம்பளம் வழங்கப்படாது என, மாவட்ட கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்
Read More »
தமிழகத்தில் உள்ள, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில், ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்ட விதிகளின் படி, 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்றும், ஒரு பாடத்துக்கு ஒரு ஆசிரியர்என்றும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இதில், மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளில் பணியாற்றும் கூடுதல் ஆசிரியர்களை, மாணவர்கள் அதிகம் உள்ள பள்ளிகளுக்கு மாற்ற, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.இந்த நடவடிக்கையை மேற்கொள்ள, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள், மாணவர் விகிதத்தை கணக்கிட்டு, பட்டியல் சேகரிக்கப்படுகிறது.இதில், அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் மட்டும், கூடுதலாக உள்ள ஆசிரியர் பணியிடங்களின் பட்டியலை, பள்ளிகள் தாக்கல் செய்யவில்லை.
எனவே, வரும், 5ம் தேதிக்குள் உபரி ஆசிரியர் பணியிடங்களை தாக்கல் செய்யாவிட்டால், சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்களுக்கு,சம்பளம் வழங்கப்படாது என, மாவட்ட கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்
அனைவருக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் ஊதியம் தான் கண்ணை உறுத்துகிறதா?
Monday 29 June 2020
சில ஆண்டுகளாக அரசுப் பள்ளி ஆசிரியர்களின் ஊதியம் ஆசிரியர்கள் அல்லாதவர்கள் மத்தியில் பேசும்பொருளாக மாறி இருக்கிறது. அதுவும் குறிப்பாக இந்த ஊரடங்கு காலத்தில் அதிகமாக பேசப்படுகிறது. இந்த நிலைமைக்கு யார் காரணம்?
எழுபது எண்பதுகள் வரை அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வேட்டியும் தையல் சாயம்போன சட்டையும் அணிந்து மளிகை கடையில் கணக்கு வைத்து அதை அடைக்க முடியாமல் பள்ளிக்கு செல்ல வேறு வழியில் ஒளிந்து சென்ற காலங்களை மறக்க முடியுமா?
வீட்டு உரிமையாளருக்கு வாடகை கொடுக்க முடியாமல் தீபாவளிக்கு கோ-ஆப்டெக்ஸ் மற்றும் துணிகளை நம்பி வாழ்ந்த காலங்களை மறக்க முடியுமா! அப்போது அரசு பள்ளி ஆசிரியர்கள் வாங்கிய ஊதியம் பற்றி இந்த சமூகம் கண்டு கொண்டதில்லை.
எண்ணற்ற சிறை நிரப்பும் போராட்டங்களை நடத்தி ஓரளவுக்கு ஊதியம் பெறுவதற்கு ஆசிரியை இயக்கங்கள் செய்த தியாகங்கள் எத்தனை? நாம் போராடியதால் நம்முடன் சேர்ந்து அரசு ஊழியர்களும் காவல்துறையும் ஊதிய உயர்வு பெற்றது தான் வரலாறு.
சற்று சிந்தித்துப் பார்ப்போம். நாம் அரசுப் பள்ளி ஆசிரியராக இல்லாமல் நடுநிலையோடு அகத்தாய்வு செய்து பார்ப்போம்.
ஒரு அரசியல்வாதி பெரிய வீடு கட்டினாலும் காரில் பவனி வந்தாலும் பளபளவென்று நகை போட்டிருந்தாலும் அவர் அதிகம் சம்பாதிக்கிறார் என்று கூறுவதற்கு பொது சமூகத்திற்கு துணிச்சல் கிடையாது.
அரசியல்வாதிகள் ஒருபுறம் இருக்கட்டும் மற்ற அரசுத்துறை ஊழியர்கள் வீடு கட்டினாலும் வசதியாக இருந்தாலும் யாரும் அவர்களை பார்த்து எரிச்சலுடன் பேசுவது கிடையாது.
அரசு பள்ளி ஆசிரியர்கள் மட்டும் குறிவைத்து தாக்கப்படுவது ஏன் என்று சிந்திப்போம்? தவறு யார் மீது?
தவளை தன்வாயால் கெடுகிறது இது தெரிந்த பழமொழி
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது வெற்று ஆடம்பரத்தால் கெடுகிறார்கள். இதுதான் புதுமொழி.
அனைவரும் சொல்வது போல் ஆசிரியர்களுக்கு அளவுக்கு மீறிய கொடுக்கப்படுகிறதா? இதை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் வெளிப்படையாக அவர்கள் ஊதியம் பெறும் வங்கிக்கணக்கில் சிபில் ஸ்கோரை பார்த்தால் போதும். வீட்டுக்கடன் பிடித்தம் வங்கி கடன் பிடித்தம் தனிநபர் கடன் பிடித்தமென்று சிபில் ஸ்கோர் மிகக் கேவலமான நிலையில் உள்ளது. ஆனாலும் வெளியில் பெத்த பேராக உள்ளது. ஏன்?
கூட்டுறவு கடன் சங்கங்கள், நல நிதி சந்தா கடன் இவ்வளவு கடன்களையும் மீறி கந்து வட்டிக்காரர்களிடம் கடன் வாங்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை கணிசமாக உள்ளது. உண்மை நிலை இப்படியிருக்க ஆசியர்களுக்கு அரசாங்கம் அள்ளிக் கொடுக்கிறது என்று சமூகம் சொல்கிறது.
மற்ற அரசு பணியில் உள்ள மகளிர் தங்களிடம் நல்ல ஆடைகள் இருந்தாலும் பணிக்கு செல்லும்போது தங்களிடம் இருப்பதிலேயே சுமாரான ஆடையை அணிந்து செல்கின்றனர். திருமணங்கள் மற்றும் நிகழ்வுகளுக்கு செல்லும் பொழுதே தங்க நகைகளை அதிகம் அணிகின்றனர். ஆனால் நம் ஆசிரியைகள் தினமும் பள்ளிக்கு வரும் காட்சியே திருவிழா கோலம் தான். சில விதிவிலக்குகள் தவிர மற்றவர்கள் இதை மறுக்க முடியுமா?
ஆண் ஆசிரியர்கள் கடனுக்காகவாவது கார் வாங்கி மறக்காமல் அதை முகநூலில் பதிவிட்டு தாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்று பறைசாற்றிக் கொள்கின்றனர்.
தொழில் அதிபர்கள் மருத்துவர்கள் வியாபாரிகள் வழக்கறிஞர்கள் இவர்கள்தான் தமிழகத்திலுள்ள சேவை சங்கங்களில் ஒரு காலத்தில் பொறுப்பில் இருந்தார்கள். ஆனால் தமிழகம் முழுவதும் தற்போது உள்ள சேவை சங்கங்களில் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் பெரும்பாலும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தான். இவர்கள் ஊரில் உள்ள வியாபார பெரும் புள்ளிகளுடன் போட்டி போட்டு இந்த பொறுப்புக்கு வருகின்றனர்.சேவை நோக்கத்துடன் ஆசிரியர்கள் இந்த பொறுப்புக்கு வந்தாலும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கோட்டு சூட்டு போட்டு செயல்படுவது வெகு ஜனத்தின் கண்களை உறுத்துகிறது.
பொதுக் காரியங்களுக்கு பேரிடர்களுக்கு நன்கொடை வசூலிப்பவர்கள் முன்பெல்லாம் கடைத் தெருவுக்கும் அரசியல்வாதியை வீடுகளுக்கும் செல்வார்கள். ஆனால் அரசு பள்ளி ஆசிரியர்கள் தற்போது பெரும் நன்கொடையாளர்கள் ஆக உருவெடுத்திருப்பது அனைவராலும் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.
ஊரடங்கு அரசால் விதிக்கப்பட்டது. மாணவர்கள் உயிர் பாதுகாப்பு க்கருதி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. ஆனால் தனியார் பள்ளிகள் சங்கம் ஏதோ ஆசிரியர்கள் இஷ்டப்பட்டு வீட்டில் இருப்பது போலவும் அவர்களுக்கு ஊதியம் "சும்மா"அளிக்கப்படுகிறது என்றும் அறிக்கை விடுவது வருத்தத்தை அளிக்கிறது.
அரசு பள்ளி ஆசிரியர்களின் ஊதியத்தை கேரளா மாநிலம் போல பிடித்தம் செய்ய வேண்டும் என்று கேட்பது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை?இசைக்கலைஞர்கள் சமையல் கலைஞர்கள் கேட்பது போல் எங்களுக்கு வருமானம் இல்லை அதனால் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு அரசு நிவாரணம் அளிக்க வேண்டும் என்று கேட்பது நியாயம்? அரசு பள்ளி ஆசிரியர்களுடன் ஒப்பிடுவது எந்த விதத்திலும் நியாயம் கிடையாது.
மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கிறோம் என்ற பெயரில் அரசுக்கு போட்டியாக சில அரசு பள்ளி ஆசிரியர்கள் நிவாரணப் பொருட்கள் வழங்குவது குடை வழங்குவது சீருடை வழங்குவது ஊக்கத்தொகை வழங்குவது வெகுஜன மக்களுக்கு குறிப்பாக தனியார் பள்ளிகளுக்கு வியப்பை ஏற்படுத்துகிறது.
நன்கொடை அளிப்பது பண்பு தான். ஆனாலும் அதை நான்கு பேர்களுக்கு தெரிவது போல் செய்தால் அதை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை பொறாமைப்பட்டு ஆசிரியர்கள் அதிக ஊதியம் வாங்குகிறார்கள் அதனால்தான் செலவழிக்கிறார்கள் என்ற பெயரை பெற்று தந்திருக்கிறது.
இனிவரும் காலங்களிலாவது அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியைகள் தங்களது நடவடிக்கைகளை மாற்றி அமைத்துக் கொள்ளாவிட்டால் எதிர்காலம் மிகச் சிரமமாக இருக்கும். புதிய கோரிக்கைகளை வெல்வது என்பது ஒருபுறம் இருக்கட்டும், இழந்த பணப் பயன்களை பெறுவது மறு புறம் இருக்கட்டும் , முதலுக்கே மோசம் போல் ஆசிரியர்களின் ஊதியத்தை குறைக்க வேண்டும் என்று மற்றவர்கள் போராடும் நிலைமையை உருவாக்க நாமே காரணமாக இருக்க வேண்டாம்.
என்னுடைய பதிவு யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும். ஆசிரியரின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டியவை. அதற்காகத்தான் இந்தப் பதிவு. தவறுகள் இருந்தால் வெளிப்படையாக சுட்டிக்காட்டவும். நன்றி.
நாகை பாலா
27.6.20
Tags:
educationalnews,
கல்விச்செய்தி
கொரோனா காரணமாக மாணவர்கள் படிப்பில் பின்னடைவு : அறிக்கை வெளியிட்ட யுனெஸ்கோ
புதுடெல்லி,
உலகஅளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த வைரஸ் பாதிப்பு காரணமாக, உலக அளவில் கல்வித்துறையில் ஏற்படும் பாதிப்பு குறித்து ஐ.நா. சபையின் கல்வி அமைப்பான 'யுனெஸ்கோ' ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் உலகின் பல நாடுகளில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் 154 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளிகள் மூடி இருப்பதால், கல்வி ஆண்டு, ஆசிரியர்கள் கற்பித்தல் திறன், பள்ளி உரிமம், தேர்வு என அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.பள்ளிகளை திறந்தாலும், ஆசிரியர்கள், தொற்று அபாயம் குறித்து கவலைப்படுவார்கள்.
மிகக்குறைவான பள்ளிகளில்தான் சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற முடியும். மொத்தத்தில், மாணவர்களின் படிப்புக்கு பெரும் பின்னடைவு ஏற்படும். எந்த அளவுக்கு பாதிப்பு இருக்கும் என்பதை இப்போது கணிக்க முடியாது.
ஆன்லைன் வகுப்பு மூலம் கற்பிக்கும் பணி நடந்து வருகிறது. ஆனால், பொருளாதாரத்தில் நலிந்த மாணவர்களுக்கு அந்த வசதி கிடைக்காது. இதனால், ஆன்லைன் வகுப்பு நடத்துவது, சமூக-பொருளாதார இடைவெளியை அதிகரித்து விடும். ஆகவே, அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கக்கூடிய சிறப்பான கல்வி முறையை உருவாக்குவதில் அரசாங்கங்கள் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.
Tags:
educationalnews,
KALVISEITHI,
கல்விச்செய்தி
List of 59 apps banned by Government of India "which are prejudicial to sovereignty and integrity of India, defence of ..
List of 59 apps banned by Government of India "which are prejudicial to sovereignty and integrity of India, defence of India, security of state and public order (ANI NEWS)
Tags:
GENERAL NEWS
கல்வி கற்பிப்பதில் பள்ளிக்கு பள்ளி வேறுபாடு; பாடாய்படுத்தும் ஆன்லைன் வகுப்புகள்!!
- தமிழகத்தில் ஒருமாத காலமாக ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் நிலையில் பள்ளிக்கு பள்ளி, ஆசியருக்கு ஆசிரியர் இதில் வேறுபாடு இருப்பதால், இதனை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக 24.70 கோடி இந்திய மாணவ மாணவியரின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி கோடை விடுமுறைக்கு பின்னர் திறக்கப்பட வேண்டிய பள்ளிகள் கொரோனா தொற்று காரணமாக திறக்கப்படவில்லை. அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு தேவையான பாட புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு தயார் நிலையில் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் மீண்டும் திறக்கும் நாளில் இவை மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் தங்களது மாணவர் சேர்க்கை பணிகளையும் நிறைவு செய்துள்ளன.
மேலும் பல்வேறு அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. சில பள்ளிகளில் மாணவர்களை பள்ளிகளுக்கு வரவழைத்தும் வகுப்புகள் நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆன்லைன் வகுப்புகளுக்கு வீடுகளில் இணையவசதியுடன் கூடிய மொபைல் போன் அல்லது லேப்டாப், கம்ப்யூட்டர் போன்றவற்றின் தேவையுள்ளது. இந்த ஆன்லைன் வகுப்புகளை எதிர்கொள்ளும் மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் பல்வேறு இன்னல்களை தற்போது சந்திக்க தொடங்கியுள்ளனர். ஒரு நாளைக்கு மணிக்கணக்கில் செல்போன்களுடன் அமர்ந்திருக்கும் 1 முதல் 5ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களின் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை போன்று எல்கேஜி, யுகேஜி மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனை பெற்றோர் அமர்ந்து கற்றறிந்து தங்கள் குழந்தைகளுக்கு போதிக்க வேண்டியுள்ளது.
ஆன்லைன் வகுப்பு நடத்தும் ஆசிரியர்கள், குறிப்பிட்ட பாட பகுதிகள் சார்ந்த வீடியோக்களின் யு-டியூப் லிங்குகளை அனுப்பி வைக்கின்றனர். அந்த லிங்குகள் வழியாக நுழைகின்றவர்களுக்கு யு-டியூபில் உள்ள வேறு படகாட்சிகள், விளம்பரங்கள் போன்றவை காட்சிகளாக வந்து விழுகின்றன. ஆபாசம் கலந்த காட்சிகளும் வந்து விழுகின்றன. இதனால் மாணவர்கள் பாடங்களை கவனிப்பதற்கு பதில் அந்த படக்காட்சிகளை காண்பதில் அதிக ஆர்வம் காட்ட தொடங்கி வருகின்றனர். வகுப்புகள் நடைபெறாத வேளையில் இவற்றை தேடத்தொடங்குகின்றனர். சில பள்ளிகளில் வகுப்பறைகளில் நடைபெறுவது போன்று ஆன்லைனில் நேரடியாக வகுப்புகள் நடத்தப்படுகிறது. கரும்பலகையில் எழுதி விளக்குவதை மாணவர்கள் அப்படியே ஆன்லைனில் கவனிக்கின்றனர். ஒரு சில பள்ளிகளில் பெற்றோரின் செல்போன் எண்களுடன் வாட்ஸ் ஆப் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு பாடங்களை குறிப்புகளாக எழுதி போட்டோ எடுத்து வழங்குகின்றனர்.
அதனை பதிவிறக்கம் செய்து மாணவர்கள் எழுதி தாங்களாகவே கற்றுக்கொள்கின்றனர். அந்த பாடங்கள் தொடர்பாக எழும் சந்தேகங்களை மாணவர்கள் கேட்டு தெரிந்து கொள்ள இயலாத வகையில் வாட்ஸ் ஆப் குழுக்கள் லாக் செய்யப்பட்டு பாடம் நடத்தப்படுகிறது. இதில் மாணவர்களுக்கு உள்ள சந்தேகங்களை கேட்க முடியாமலும், ஆசிரியர்களுடன் கலந்துரையாட இயலாமலும் உள்ளதால் அவர்களுக்கு மன அழுத்தமும் ஏற்பட தொடங்கியுள்ளது. பெரும்பாலான பள்ளிகளில் மே மாதமே வகுப்புகள் தொடங்கப்பட்டுவிட்டன. பள்ளிகளுக்கு வருகின்ற மாணவ மாணவியருக்கு செல்போன் வழங்க கூடாது என்று ஆசிரியர்களும், பள்ளி நிர்வாகங்களும் கூறி வந்த நிலையில் அதே செல்போன்களை மாணவர்களுக்கு பெற்றோரே கையில் முழுமையாக திணிக்க வேண்டிய நிலைக்கு சூழல் மாறியுள்ளது. இது மிகப்பெரும் ஆபத்தையும் ஏற்படுத்த தொடங்கியுள்ளது. இவை ஒருபுறம் இருக்க ஆன்லைன் வகுப்பில் செல்போன் இல்லாததால் மாணவர் தற்கொலை, ஆன்லைன் வகுப்புக்கு கொடுத்த செல்போனை பயன்படுத்தி ஆபாச படம் பார்த்து சிறுமியை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கிய மாணவர்கள் என்பது போன்ற செய்திகளும் வரத்தொடங்கியுள்ளன.
மாணவர்களும் செல்போனும் இணைந்துவிட்டால் அதில் இருந்து அவர்களை உளவியல் ரீதியாக திரும்ப பெறுவது பெற்றோருக்கு பெரும் சவாலாக மாறிவிடும். அது அவர்களின் எதிர்கால கல்வியையும் பாதிக்கும் ஆபத்து அதிகம் உள்ளது. இதனால் கர்நாடகா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்கள் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்த தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் எடுப்பதை தடுக்க முடியாது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். எனினும் ஆன்லைன் பாட திட்டங்களை முறைப்படுத்த வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. எனவே தமிழகத்தில் ஆன்லைன் பாட திட்டம் தொடர்பாக உரிய வழிகாட்டி நெறிமுறைகளை அரசு பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
அரசு இணையதளத்தில் பாடங்கள்
மாணவர்கள் நலன்கருதி வீட்டில் இருந்தே பாடங்களை கற்கும் வகையில் தமிழக அரசால் புதிய இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ், ஆங்கில வழியில் பாடங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. e-learn.tnschools.gov.in என்ற இணையதளத்தில் வீடியோ மூலம் பாடங்களை கற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
பாட திட்டம் குறைப்பு?
பள்ளிகள் திறப்பதற்கு தாமதம் ஆகி வருகின்ற நிலையில் பாட திட்டத்தை குறைப்பதற்கு 18 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் என 14 அரசு அலுவலர்கள், 4 கல்வியாளர்கள் என்று மொத்தம் 18 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு எப்போது அறிக்கை அளிக்கும் என்ற விபரம் இதுவரை வெளியாகவில்லை. அதே வேளையில் பல பள்ளிகளில் அதற்குள் இரண்டு, மூன்று பாடங்கள் வரை மாணவர்களுக்கு நடத்தி முடித்துள்ளன.
கல்வி தொலைக்காட்சி
கேரளாவில் தொலைக்காட்சி வாயிலாக மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் போதிக்கின்றனர். அனைத்து வகுப்புகளுக்கும் இது நடைபெறுகிறது. இந்தநிலையில் தமிழகத்தில் பொதிகை மற்றும் கல்வி தொலைக்காட்சி வாயிலாக மாணவர்களுக்கு பாடம் நடத்த திட்டமிட்டிருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். ஆன்லைன் வழி கல்விக்காக 12 புதிய கல்வி தொலைக்காட்சி சேனல்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். பள்ளிகள் திறக்க முடியாத சூழலில் ஆன்லைன் கல்விக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளன என்றும் கூறியிருந்தார். தமிழகத்தில் கல்வி தொலைக்காட்சி வாயிலாக மாணவர்களுக்கு வீடியோக்கள் ஒளிப்பதிவு செய்யப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த கற்பித்தல் பணிகள் நடைபெறுகிறது.
கல்வி கட்டணம் வசூல்
மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தினால் மட்டுமே கல்வி கட்டணத்தை பெற்றோரிடம் இருந்து வசூல் செய்ய முடியும் என்ற ஒரே காரணத்திற்காக மாணவர்களுக்கு பெயரளவிற்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்தும் பள்ளிகளும் உள்ளன. இதனால் குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ள மாணவர்கள் மட்டுமே முழுமையாக கற்று தேற இயலும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகங்கள் கட்டாயப்படுத்தி முதல் பருவத்திற்கான கல்வி கட்டணத்தையும் வசூலிக்க தொடங்கியுள்ளன.
ஸ்மார்ட்போன் இல்லாத பெற்றோர்
தமிழகத்தில் இணைய வசதியுடன் கூடிய ஸ்மார்ட் போன் இல்லாத பெற்றோர் 50 சதவீதம் வரை இருப்பதாக கூறப்படுகிறது. வீட்டில் ஒரு ஸ்மார்ட் போன் மட்டும் இருக்கும்போது அதனை பெற்றோர் கைவசம் வைத்திருக்கின்றனர். அவர்கள் பணிக்கு சென்று திரும்பி அதன் பிறகு அதில் உள்ள பாடங்களை இரவு நேரங்களில் மாணவர்களுக்கு விளக்குவது என்பதும் இயலாத ஒன்றாக மாறியுள்ளது. மேலும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படாமலும் கூடவே பெற்றோரும் அமர்ந்து முழுமையாக ஆன்லைன் வகுப்பில் ஈடுபட வேண்டிய நிலையும் உள்ளது. இதுபோன்ற பிரச்னைகள் பல குடும்பங்களில் இருந்து வருகிறது.
Tags:
Online classes
உபரி ஆசிரியர்களின் ஊதியத்தை நிறுத்த முடிவு: ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் உபரி ஆசிரியர்களுக்கு ஜூன்-2020 முதல் ஊதியத்தை நிறுத்தப்போவதாக மாவட்டக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
இது ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் ச.மயில் கூறும்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 2019-20-ம் ஆண்டு பணியாளர் நிர்ணயத்தின்படி உபரியாகக் கண்டறியப்பட்ட ஆசிரியர்களை பணி நிரவல் மூலம் மாறுதல் செய்யவில்லை என்றால் உபரியாகப் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஜூன்-2020 முதல் ஊதியம் நிறுத்தப்படும் என தூத்துக்குடி மாவட்டக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
அரசாணை எண். 525 பள்ளிக்கல்வித்துறை 29.12.1997 ன் படி தமிழ்நாட்டில் ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரம் 1:20 லிருந்து 1:40 ஆக உயர்த்தப்பட்டது. அரசாணை எண். 231 பள்ளிக்கல்வித்துறை 11.08.2010ல் கல்வி உரிமைச்சட்டம் 2009-ன் படி ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரம் 1 முதல் 5 வகுப்புகளுக்கு 1:30 எனவும், 6 முதல் 8 வகுப்புகளுக்கு 1:35 எனவும், 9, 10 வகுப்புகளுக்கு 1:40 எனவும் மாற்றியமைக்கப்பட்டது.
ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம் உயர்வு மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளின் பெருக்கம், ஆங்கில வழிக் கல்வி மோகம் ஆகியவை காரணமாக தமிழ்நாடு முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளாக உபரிப் பணியிடங்கள் ஏற்பட்டுள்ளன. உபரியாகப் பணியாற்றும் ஆசிரியர்கள் நிரந்தரப் பணியிடத்தில் பணியாற்றுபவர்கள். 25 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டவர்கள். தொடர்ந்து ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள். உபரியாக உள்ள ஆசிரியர்களுக்குத் தகுதியான பணியிடத்தில் பணிமாறுதல் வழங்குவது என்பது அந்தந்தப் பள்ளி நிர்வாகம் மற்றும் கல்வித்துறையின் பணியாகும்.
உபரி ஆசிரியர்கள் தங்களுக்குரிய தகுதியான பணியிடத்தைத் தாங்களே தேடிக்கொள்வது என்பது இயலாத ஒன்று. உபரி ஆசிரியர்களின் ஊதியத்தை நிறுத்துவது என்பது எவ்விதத்திலும் நியாயமான செயல் அல்ல. மேலும், தமிழகம் முழுவதும் இப்பிரச்சினை உள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டக்கல்வித்துறை மட்டும் கரோனா பேரிடரால் 3 மாதங்களுக்கும் மேலாகப் பள்ளிகள் மூடப்பட்டுள்ள இக்கட்டான சூழலில் ஊதியத்தை நிறுத்தும் செயல் மனிதாபிமானமற்ற நடவடிக்கையாகும்.
அரசாணை எண்: 525 ல் பள்ளி நிர்வாகமோ அல்லது கல்வித்துறையோ உபரி ஆசிரியர்களுக்குப் பணி மாறுதல் வழங்க இயலாத நிலையில் ஓய்வு பெறும் வரை பணியாற்றும் பள்ளியிலேயே அவர்கள் தொடர வேண்டும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், உபரி ஆசிரியர்களின் பணி நிரவல் தொடர்பான எந்தவொரு அரசாணையிலோ, சட்ட விதிகளிலோ அல்லது நீதிமன்றத் தீர்ப்பாணைகளிலோ உபரி ஆசிரியர்களின் ஊதியத்தை நிறுத்த வேண்டும் என்று எந்த இடத்திலும் கூறப்படவில்லை. மேலும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரப்படி உபரி ஆசிரியர்களாகக் கணக்கிடப்பட்டாலும், அவர்கள் நிரந்தரப் பணியிடத்தில் பணியாற்றும் நிரந்தரப் பணியாளர்கள். சட்டப்படி அவர்களுக்குப் பணிப்பாதுகாப்பு உள்ளது. நிரந்தரப் பணியிடத்தில் பணியாற்றும் எந்தவொரு ஆசிரியருக்கும் பணி வழங்காமல் இருப்பதோ அல்லது ஊதியம் வழங்காமல் இருப்பதோ சட்டப்படி தவறாகும். அவர்களுக்குப் பணி பாதுகாப்பும், ஊதியப் பாதுகாப்பும் அளிக்க வேண்டியது கல்வித்துறையின் கடமையாகும்.
அசாதாரண சூழலில் தூத்துக்குடி மாவட்டக் கல்வித்துறை ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையிலும், ஆசிரியர்களை அச்சுறுத்தும் வகையிலும் மேற்கொண்டுள்ள உபரி ஆசிரியர்களின் ஊதியத்தை நிறுத்தும் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தவும், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை, பணிப்பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் வேண்டும், என்றார் அவர்.
நிரந்தரப்பணி - ஆசிரியர்கள், ஆய்வக உதவியாளர் தேவை!
கீழ்கண்ட நிரந்தர முதுகலை பாடங்களுக்கு பணியிடத்திற்கு ஆசிரியர்கள் தேவை.
M.Sc Physics B.Ed.பொதுப்பிரிவினர்
M.A History B.Ed. பொதுப்பிரிவினர்
கல்வி , அனுபவ சான்றிதழ் நகங்கள் மற்றும் விண்ணப்பங்களை பின்வரும் அஞ்சல் முகவரி அல்லது மின்னஞ்சலுக்கு அனுப்பவும் .
செயலர்
சங்கர் மேல்நிலைப்பள்ளி
சங்ககிரி மேற்கு -637 303
நிரந்தர ஆய்வக உதவியாளர்
பணியிடத்திற்கு 10 - ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பொதுப்பிரிவினர் விண்ணப்பிக்கலாம் . 05.07.2020 க்குள் கல்வி , அனுபவ சான்றிதழ் நகல்கள் மற்றும் விண்ணப்பங்களை பின்வரும் அஞ்சல் முகவரி அல்லது மின்னஞ்சலுக்கு அனுப்பவும் .
செயலர் சங்கர் மேல்நிலைப்பள்ளி சங்ககிரி மேற்கு.
ஆய்வக உதவியாளர் பணியில் முன் அனுபவம் விரும்பத்தக்கது.
M.Sc Physics B.Ed.பொதுப்பிரிவினர்
M.A History B.Ed. பொதுப்பிரிவினர்
கல்வி , அனுபவ சான்றிதழ் நகங்கள் மற்றும் விண்ணப்பங்களை பின்வரும் அஞ்சல் முகவரி அல்லது மின்னஞ்சலுக்கு அனுப்பவும் .
செயலர்
சங்கர் மேல்நிலைப்பள்ளி
சங்ககிரி மேற்கு -637 303
நிரந்தர ஆய்வக உதவியாளர்
பணியிடத்திற்கு 10 - ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பொதுப்பிரிவினர் விண்ணப்பிக்கலாம் . 05.07.2020 க்குள் கல்வி , அனுபவ சான்றிதழ் நகல்கள் மற்றும் விண்ணப்பங்களை பின்வரும் அஞ்சல் முகவரி அல்லது மின்னஞ்சலுக்கு அனுப்பவும் .
செயலர் சங்கர் மேல்நிலைப்பள்ளி சங்ககிரி மேற்கு.
ஆய்வக உதவியாளர் பணியில் முன் அனுபவம் விரும்பத்தக்கது.
Tags:
Teachers job
10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பாடப் பகுதிகள் குறைப்பு - பள்ளிக் கல்வித்துறை முடிவு
பத்து, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாடப் பகுதிகளை குறைக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
10 ஆம் வகுப்பில், இரண்டு பாட புத்தகங்கள் கொண்ட சமூக அறிவியல், ஒரே புத்தகமாக மாற்றப்பட்டுள்ளது.
அதேபோன்று 11 மற்றும் 12-ம் வகுப்பில் இரண்டு பாடப்புத்தங்கள் கொண்ட வணிக கணிதம் ஒரு பாடப்புத்தமாக மாற்றப்பட்டுள்ளது
அதே சமயம் 2 பாடப்புத்தகங்கள் கொண்ட கணிதம் இயற்பியல் , வேதியியல் ஆகிய பாடப் புத்தகங்களைத் தவிர்த்து.. 2 பாட புத்தகங்கள் கொண்ட பாடங்களுக்கான புத்தகங்கள் ஒரு புத்தகமாக மாற்றப்பட உள்ளது.
முதற்கட்டமாக பாடப்பகுதிகள் குறைக்கப்பட்ட காரணம் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பாடப் புத்தகங்களில் இடம்பெற்ற பாடப்பகுதிகள் மாணவர்களுக்கு கூடுதல் சுமை அளிப்பதாக பள்ளிக்கல்வித்துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனையடுத்தே முதற்கட்டமாக தற்போது பாடப்பகுதிகள் குறைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக பாடப் பகுதிகளை பாதியாக குறைக்க பள்ளிக்கல்வித்துறை 18 பேர் கொண்ட குழுவை அமைத்தது. முதற்கட்டமாக இந்த குழு அளிக்கும் பரீசிலனையின் அடிப்படையில் தற்போது பாடப்பகுதிகள் குறைக்கப்பட்டாலும், கொரோனா நோய் பரவல் காரணமாக பள்ளிகள் திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் மேலும் பாடப்பகுதிகள் குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
10 ஆம் வகுப்பில், இரண்டு பாட புத்தகங்கள் கொண்ட சமூக அறிவியல், ஒரே புத்தகமாக மாற்றப்பட்டுள்ளது.
அதேபோன்று 11 மற்றும் 12-ம் வகுப்பில் இரண்டு பாடப்புத்தங்கள் கொண்ட வணிக கணிதம் ஒரு பாடப்புத்தமாக மாற்றப்பட்டுள்ளது
அதே சமயம் 2 பாடப்புத்தகங்கள் கொண்ட கணிதம் இயற்பியல் , வேதியியல் ஆகிய பாடப் புத்தகங்களைத் தவிர்த்து.. 2 பாட புத்தகங்கள் கொண்ட பாடங்களுக்கான புத்தகங்கள் ஒரு புத்தகமாக மாற்றப்பட உள்ளது.
முதற்கட்டமாக பாடப்பகுதிகள் குறைக்கப்பட்ட காரணம் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பாடப் புத்தகங்களில் இடம்பெற்ற பாடப்பகுதிகள் மாணவர்களுக்கு கூடுதல் சுமை அளிப்பதாக பள்ளிக்கல்வித்துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனையடுத்தே முதற்கட்டமாக தற்போது பாடப்பகுதிகள் குறைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக பாடப் பகுதிகளை பாதியாக குறைக்க பள்ளிக்கல்வித்துறை 18 பேர் கொண்ட குழுவை அமைத்தது. முதற்கட்டமாக இந்த குழு அளிக்கும் பரீசிலனையின் அடிப்படையில் தற்போது பாடப்பகுதிகள் குறைக்கப்பட்டாலும், கொரோனா நோய் பரவல் காரணமாக பள்ளிகள் திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் மேலும் பாடப்பகுதிகள் குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags:
educationalnews,
KALVISEITHI,
கல்விச்செய்தி
Flash News : தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு - தமிழக அரசு
தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஏற்க்கனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அறிக்கையில் கூறியதாவது; அரசு, கொரோனா நோய்த் தொற்றிலிருந்து பொது மக்களை பாதுகாத்து, அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை உடனுக்குடன் வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதனால் தான் தமிழ்நாட்டில் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்புவோர் சதவீதம் நாட்டிலேயே அதிகமாகவும், நோய்த் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு மிகக்குறைவாகவும் இருந்து வருகிறது. அதே நேரத்தில், மாண்புமிகு அம்மாவின் அரசு மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்து பொருளாதாரத்தை மேம்படுத்த அவ்வப்போது பல்வேறு தளர்வுகளை வழங்கி வருவதுடன், சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு புதிய முதலீடுகளை ஈர்த்தும், ஊரகத்தொழில்களை மீட்டெடுத்தும் தொழில் வளத்தைப் பெருக்க புதிய திட்டங்களை செயல்படுத்தியும் வருகின்றது.
இந்தியா முழுவதும், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மத்திய அரசு தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியது. இதைத் தொடர்ந்து, கொரோனா தொற்றின் நிலைமையை கருத்தில் கொண்டும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், சில தளர்வுகளுடன் 30.6.2020 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதே சமயம், ஏழை மக்கள் ஊரடங்கால் எதிர்கொண்டுள்ள சிரமங்களைக் களைய, ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான ரேசன் பொருட்கள் அனைத்தும், 2.01 கோடி குடும்பங்களுக்கும் விலையில்லாமல் வழங்க உத்தரவிட்டுள்ளதுடன், கட்டடத் தொழிலாளர்கள், அமைப்புசாரா ஓட்டுநர்கள் ஆகியோருக்கு அரிசி போன்ற பொருட்களை கூடுதலாக வழங்கியும், அனைத்து 17 அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்கள் மற்றும் பல்வேறு துறையில் உள்ள பிற நல வாரிய தொழிலாளர்களை சேர்த்து 35.65 லட்சம் தொழிலாளர்களுக்கு ஏற்கனவே தலா 1,000 ரூபாய் வழங்கியதைப் போல், மீண்டும் தலா 1,000 ரூபாய் வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டிருந்தார்கள்.
29.6.2020 அன்று மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன் மாண்புமிகு முதலமைச்சர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், தற்போது எடுக்கப்பட்டு வரும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக இருப்பதால் தான், கொரோனா நோய்த்தொற்று ஓரளவு கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது எனவும், நோய் தடுப்பு கட்டுப்பாட்டு பகுதிகளில் நோய் தடுப்பு பணிகளும் கட்டுப்பாடுகளும் தீவிரப்படுத்த வேண்டும் என கருத்துகளை தெரிவித்தார்கள். பல்வேறு தினங்களில் மாண்புமிகு முதலமைச்சர் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையில், குறிப்பாக 22.6.2020 அன்று நடத்தப்பட்ட காணொலிக் காட்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், ஊரடங்கை தளர்த்துவதற்காக நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையிலும், 29.6.2020 அன்று பொது சுகாதார வல்லுநர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்து, கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் தற்போது 30.6.2020 முடிவடைய உள்ள ஊரடங்கு உத்தரவு, 31.7.2020 நள்ளிரவு 12 மணி வரை தமிழ்நாடு முழுவதும் மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.
எனினும் முழு ஊரடங்கு உத்தரவு தற்போது அமலில் உள்ள பகுதிகளான பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், திருவள்ளூர் மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிபூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் மற்றும் பூவிருந்தவல்லி, ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் நகராட்சிகளிலும், நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியிலும் மற்றும் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நோய்த்தொற்று அதிகம் உள்ளதை கருத்தில் கொண்டு, நோய்ப்பரவலை தடுக்க நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ள.
பேரிடர் மேலாண்மை சட்டம், 2005ன் கீழ் 19.6.2020 அதிகாலை 00 மணி முதல் 30.6.2020 இரவு 12 மணி வரை 12 நாட்களுக்கு அமல்படுத்திய முழு ஊரடங்கு உத்தரவு மற்றும் மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 24.6.2020 அதிகாலை 00 மணி முதல் 30.6.2020 இரவு 12 மணி வரை 7 நாட்களுக்கு அமல்படுத்திய முழு ஊரடங்கு, கொரோனா நோய்த்தொற்றை ஒரு கட்டுக்குள் கொண்டு வருவதற்கு உதவியதால், இந்த முழு ஊரடங்கு மேற்கண்ட பகுதிகளில் மட்டும் 5.7.2020 வரை தொடரும். 19.6.2020க்கு முன்னர் சென்னை மற்றும் அதை ஒட்டியுள்ள மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் இருந்த ஊரடங்கின் நிலையே 6.7.2020 அதிகாலை 00 மணி முதல் 31.7.2020 நள்ளிரவு 12.00 மணிவரை தொடரும். அதேபோல் மதுரை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் 24.6.2020க்கு முன்னர் இப்பகுதிகளில் இருந்த ஊரடங்கின் நிலையே 6.7.2020 அதிகாலை 00 மணி முதல் 31.7.2020 நள்ளிரவு 12.00 மணிவரை தொடரும்.
ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட காய்கறி/பழக்கடைகளைப் போன்று, பெருநகர சென்னை மாநகராட்சி, மாநகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளிடம் இருந்து முறையான வியாபார அனுமதி பெற்ற மீன் கடைகள், கோழி இறைச்சி கடைகள் மற்றும் முட்டை விற்பனை கடைகள் சமூக இடைவெளி நடைமுறைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்படுகிறது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்:
· நகர்ப்புர வழிபாட்டுத்தலங்களிலும், பெரிய வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு.
· அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள்.
· நீலகிரி மாவட்டத்திற்கும், கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலாத் தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.
· தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், பிற விருந்தோம்பல் சேவைகள். எனினும், மருத்துவத் துறை, காவல் துறை, அரசு அலுவலர்கள், உள்ளிட்ட வெளி மாநிலத்தவர் மற்றும் தனிமைப்படுத்தப்படும் பணிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.
· வணிக வளாகங்கள்.
· பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள். எனினும், இந்நிறுவனங்கள் இணைய வழிக் கல்வி கற்றல் தொடர்வதுடன், அதனை ஊக்கப்படுத்தலாம்.
· மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணிகளைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்.
· மெட்ரோ ரயில் / மின்சார ரயில்.
· திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கைக்கூடங்கள், மதுக்கூடங்கள் (க்ஷயச), பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள்.
· அனைத்து வகையான சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், சமய, கல்வி, விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்.
· மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து.
மேற்கண்ட கட்டுப்பாடுகள் தொற்றின் தன்மைக்கேற்றவாறு, படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்படும்.
முழு ஊரடங்கு:
5.7.2020, 12.7.2020, 19.7.2020 மற்றும் 26.7.2020 ஞாயிற்றுக் கிழமைகளில் எந்தவிதமான தளர்வுகளும் இன்றி தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.
திருமண நிகழ்ச்சிகள் மற்றும் இறுதி ஊர்வலங்களுக்கான கட்டுப்பாடுகள்:
· திருமண நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.
· இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.
பொது பேருந்து போக்குவரத்து:
மாநிலத்தில் மாவட்டங்களுக்குள் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மற்றும் அரசு பொது பேருந்து போக்குவரத்து 1.7.2020 முதல் 15.7.2020 வரை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.
இ-பாஸ் முறை:
· அந்தந்த மாவட்டத்திற்குள் இ-பாஸ் இல்லாமல் செல்ல அனுமதி அளிக்கப்படும்.
· வெளி மாநிலங்களுக்கு சென்று வரவும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்குள் வரவும், மாவட்டங்களுக்கிடையே சென்று வரவும், இ-பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.
· முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும் இடங்களில் 30.6.2020 வரை வழங்கப்பட்ட இ-பாஸ் 5.7.2020 வரை செல்லும். இதற்கு மீண்டும் புதிய இ-பாஸ் பெறத்தேவை இல்லை.
· ஒரு மாவட்டத்திலிருந்து வேறொரு மாவட்டத்திற்கு அரசுப்பணிகளுக்கான ஒப்பந்தங்களில் பங்கேற்க விரும்பும் ஒப்பந்ததாரர்களுக்கும், அப்பணியை மேற்பார்வை செய்யும் ஒப்பந்ததாரர்களுக்கும் மற்றும் இப்பணிகள் சம்பந்தமாக அரசு அதிகாரிகளை சந்திக்க விரும்பும் ஒப்பந்ததாரர்களுக்கும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர்களால் இ-பாஸ் வழங்கப்படும்.
1.பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் மற்றும் முழு ஊரடங்கு அமலில் உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பகுதிகளிலும், நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் கீழ்கண்ட பணிகளுக்கு மட்டும் 6.7.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது:
i. தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களில், அந்நிர்வாகமே ஏற்பாடு செய்யும் வாகனங்களில் 50 சதவீத பணியாளர்கள் அதிகபட்சம் 80 நபர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.
ii. அனைத்து தனியார் நிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களும் 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. எனினும், இயன்ற வரை பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும்.
iii. வணிக வளாகங்கள் (அயடடள) தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி போன்றவை) 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்படலாம். மேலும், ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்குள் வருவதை உறுதி செய்து, தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், அனுமதிக்கப்பட வேண்டும். கடைகளில், குளிர் சாதன வசதி இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது.
iv. உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுவதோடு, உணவகங்களில், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கத்துடன், உணவகங்களில் உள்ள மொத்த இருக்கைகளில், 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது. எனினும், உணவகங்களில் குளிர் சாதன வசதி இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது.
v. தேநீர் கடைகள், உணவு விடுதிகள் மற்றும் காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது.
vi. தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கையில் 50 விழுக்காடு அளவு மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.
vii. வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களை, ஓட்டுநர் தவிர்த்து, மூன்று பயணிகளை மட்டுமே கொண்டு, பயன்படுத்தலாம்.
viii. ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர்த்து, இரண்டு பயணிகள் மட்டுமேபயணிக்கலாம். சைக்கிள் ரிக்ஷா அனுமதிக்கப்படுகிறது.
ix. முடிதிருத்தும் மற்றும் அழகு நிலையங்கள் குளிர் சாதன வசதியைப் பயன்படுத்தாமல், அரசு தனியாக வழங்கிய நிலையான செயல்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது.
x. மீன் கடைகள், கோழி இறைச்சி கடைகள், மற்ற இறைச்சி கடைகள் மற்றும் முட்டை விற்பனை கடைகள், சமூக இடைவெளி நடைமுறைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்படுகிறது.
2) பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதி தவிர, தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் (நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் - 1.7.2020 முதலும், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ள பகுதிகள் மற்றும் மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 6.7.2020 முதலும் கீழ்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது:
i. கிராமப்புரங்களில் உள்ள சிறிய திருக்கோயில்கள், அதாவது 10,000 ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள திருக்கோயில்களிலும், சிறிய மசூதிகளிலும், தர்காக்களிலும், தேவாலயங்களிலும் மட்டும் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படும். இத்தகு வழிபாட்டுத்தலங்களில் சமூக இடைவெளி மற்றும் பிற நோய் தடுப்பு நடவடிக்கைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும், கிராமப்பகுதிகளில் உள்ள பெரிய வழிபாட்டுத் தலங்களுக்கும் தற்போதுள்ள நடைமுறைப்படி பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்பட மாட்டாது.
ii. தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் 100 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.
iii. தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 100 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், 20 விழுக்காடு பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை ஊக்குவிக்க வேண்டும்.
iv. அனைத்து தனியார் நிறுவனங்களும் 100 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. எனினும், இயன்ற வரை பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும்.
V .தேநீர் கடைகள், உணவு விடுதிகள் மற்றும் காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது.
vi. தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கையில் 50 விழுக்காடு அளவு மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.
vii. வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களை, ஓட்டுநர் தவிர்த்து, மூன்று பயணிகளை மட்டுமே கொண்டு, பயன்படுத்தலாம்.
viii. ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர்த்து, இரண்டு பயணிகள் மட்டுமேபயணிக்கலாம். சைக்கிள் ரிக்ஷா அனுமதிக்கப்படுகிறது.
ix. முடிதிருத்தும் மற்றும் அழகு நிலையங்கள் குளிர் சாதன வசதியைப் பயன்படுத்தாமல், அரசு தனியாக வழங்கிய நிலையான செயல்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது.
x. மீன் கடைகள், கோழி இறைச்சி கடைகள், மற்ற இறைச்சி கடைகள் மற்றும் முட்டை விற்பனை கடைகள், சமூக இடைவெளி நடைமுறைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்படுகிறது.
2) பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதி தவிர, தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் (நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் - 1.7.2020 முதலும், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ள பகுதிகள் மற்றும் மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 6.7.2020 முதலும் கீழ்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது:
i. கிராமப்புரங்களில் உள்ள சிறிய திருக்கோயில்கள், அதாவது 10,000 ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள திருக்கோயில்களிலும், சிறிய மசூதிகளிலும், தர்காக்களிலும், தேவாலயங்களிலும் மட்டும் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படும். இத்தகு வழிபாட்டுத்தலங்களில் சமூக இடைவெளி மற்றும் பிற நோய் தடுப்பு நடவடிக்கைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும், கிராமப்பகுதிகளில் உள்ள பெரிய வழிபாட்டுத் தலங்களுக்கும் தற்போதுள்ள நடைமுறைப்படி பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்பட மாட்டாது.
ii. தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் 100 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.
iii. தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 100 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், 20 விழுக்காடு பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை ஊக்குவிக்க வேண்டும்.
iv. அனைத்து தனியார் நிறுவனங்களும் 100 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. எனினும், இயன்ற வரை பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும்.
v. வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி போன்றவை) 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்படலாம். மேலும், ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்குள் இருக்கும் பொருட்டு தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அனுமதிக்கப்பட வேண்டும். இதுவன்றி, கடைகளில், குளிர் சாதன வசதி இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது.
vi. தேநீர் கடைகள், உணவு விடுதிகள் மற்றும் காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது. டாஸ்மாக் உள்ளிட்ட இதர கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கலாம்.
vii. உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுவதோடு, உணவகங்களில், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கத்துடன், உணவகங்களில் உள்ள மொத்த இருக்கைகளில், 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது. எனினும், உணவகங்களில் குளிர் சாதன வசதி இருப்பினும், அவை இயக்கப்படக் கூடாது.
viii. தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கையில் 50 விழுக்காடு அளவு மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.
ix. அத்தியாவசியமற்ற பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களையும், மின் வணிக நிறுவனங்கள் வழங்க அனுமதிக்கப்படுகிறது.
x. வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்கள் ஓட்டுநர் தவிர்த்து மூன்று பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.
xi. ஆட்டோக்கள் இரண்டு பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. சைக்கிள் ரிக்ஷாவும் அனுமதிக்கப்படுகிறது.
xii. மீன் கடைகள், கோழி இறைச்சி கடைகள், மற்ற இறைச்சி கடைகள் மற்றும் முட்டை விற்பனை கடைகள் சமூக இடைவெளி நடைமுறைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்படுகிறது.
4) பொது
· குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144ன் கீழ் பொது இடங்களில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடக் கூடாது என்ற நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும்.
குறிப்பாக, சென்னையில் 15 மண்டலங்களிலும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் தலைமையில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, நோய்த் தொற்று உள்ளவர்களுடன் தொடர்புள்ளவர்களைக் கண்டறியும் பணி மண்டல அளவில் மேற்கொள்ளப்படுவதுடன், நோய்த் தடுப்பு பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, அப்பகுதியில் உள்ள ஏழைகளுக்கு முகக்கவசம், வைட்டமின் மாத்திரைகள், கபசுர குடிநீர், சத்தான உணவு போன்றவை வழங்கப்படுகிறது. அவர்களின் வாழ்விடம் நெருக்கமாக இருந்தால், அவர்கள் தனிமை முகாம்களில் தங்க வைக்கப்படுகின்றனர். நோய்த் தொற்று ஏற்பட்டவர்கள் விபரம் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு, தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இது தவிர, சென்னையில் உள்ள 149 நகர ஆரம்ப சுகாதார மையங்களிலும், 19 மருத்துவமனைகளிலும் காய்ச்சல் சோதனை மையம் செயல்படுவதுடன், 4,925 காய்ச்சல் சோதனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, நோய் அறிகுறி உள்ளவர்கள் தீவிரமாக கண்டறியப்பட்டு, சோதனை செய்யப்படுகின்றனர்.
இதனால் 19.6.2020 முதல் 3,36,836 நபர்கள் காய்ச்சல் சோதனையில் பங்குகொண்டு அவர்களில் 15,119 நபர்களுக்கு கொரோனா தொற்று சோதனை செய்யப்பட்டது. இவர்களில் 3,189 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் நோய்த் தொற்று முன்கூட்டியே கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதால், உயிரிழப்பு தவிர்க்கப்படுகின்றது. இதே போன்ற நடவடிக்கைகள் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் மதுரை மாவட்டங்களிலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில், நோய்த் தொற்று தீவிரமாக உள்ள பகுதிகளில் உள்ள ஏழைகள், முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கும், கொரோனா நோய்த் தொற்றுடன் ரத்தக்கொதிப்பு, இதய நோய், சிறுநீரக செயலிழப்பு, புற்று நோய் போன்ற நோய் உள்ளவர்கள் இந்நோய்த் தொற்றினால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்புள்ளது.
இப்பகுதியில் வாழும் ஏழைகளின் வாழ்விடங்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத நிலையில் அமைந்துள்ளன. எனவே, ஒரு முக்கிய நோய் பரவல் தடுப்புப் பணியாக சென்னை மாநகராட்சியில், குறிப்பாக நெரிசலான குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களை முன்னெச்சரிக்கையாக வீடுகள் தோறும் தீவிர ஆய்வு செய்து கண்டறிந்து, பரிசோதனைக்கு உட்படுத்தி அவர்களை தனிமைப்படுத்தும் முகாம்களில் குறைந்தபட்சம் 7 நாட்களாவது தங்க வைத்து, அவர்களை நோய்த் தொற்றிலிருந்து காப்பாற்ற ஒரு முக்கிய நடவடிக்கையை மாண்புமிகு அம்மாவின் அரசு எடுத்து வருகிறது. இவ்வாறு முன்னெச்சரிக்கையாக 8,072 நபர்கள் தனிமை முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதனால், சென்னை மாநகராட்சி பகுதிகளில் அவர்களது வாழ்விடத்தில் நோய்ப் பரவல் தடுக்கப்பட்டுள்ளது.
மதுரை பெருநகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள சில பகுதிகளிலும் காய்ச்சல் முகாம்கள் தீவிரப்படுத்தப்பட்டு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இதுவரை 931 முகாம்கள் நடத்தப்பட்டு 75,252 நபர்கள் காய்ச்சல் சோதனையில் பங்குகொண்டு 8,720 நபர்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் 1,389 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு ஊரடங்கை அமல்படுத்தினாலும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், மக்களின் ஒத்துழைப்பு இல்லையென்றால், இந்த நோய் பரவலை தடுக்க இயலாது. பொது மக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பொது மக்கள்வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவுவதையும், வெளியிடங்களில் முகக் கவசத்தை அணிந்து செல்வதையும், சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடித்து அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்து, அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால் தான், இந்த நோய்த் தொற்றை கட்டுப்படுத்த முடியும். மாண்புமிகு அம்மாவின் அரசு அமல் படுத்திவரும் ஊரடங்கு மற்றும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளின் தீவிர பரிசோதனை மூலம் நோய்த்தொற்று அதிகரிக்கும் வேகம் குறைந்திருந்தாலும், நோய்த்தொற்று அதிகரிப்பதால் மக்களைக் காக்க தற்போதுள்ள ஊரடங்கு நடைமுறையை மேலும் தொடர வேண்டிய நிலையில் அரசு உள்ளது. தனால் நோய்ப்பரவலை கட்டுப்படுத்த வாய்ப்புகள் ஏற்படும். எனவே, பொது மக்கள் அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு நல்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Tags:
Corano lockdown
8 மாவட்டங்களுக்கு இன்று கன மழை வாய்ப்பு !!
- திருவண்ணாமலை,
- சேலம்,
- தர்மபுரி,
- கிருஷ்ணகிரி,
- வேலுார்,
- நீலகிரி,
- கோவை,
- தேனி
மாவட்டங்களில் இன்று(ஜூன் 29) ஓரிரு இடங்களில் இடியுடன் கனமழை பெய்யும்.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாமக்கல், விழுப்புரம், நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களிலும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும். ஜூலை 2 வரை, மீனவர்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம், என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tags:
GENERAL NEWS
பகுதி நேரஆசிரியா்களை நிா்வாகப் பணிகளில் ஈடுபடுத்த அறிவுறுத்தல்
பொது முடக்கம் அமலில் உள்ள சூழலில் பகுதி நேர ஆசிரியா்களை பள்ளிகள் திறக்கப்படும் வரை நிா்வாகப் பணிகளில் ஈடுபடுத்திக் கொள்ள தலைமையாசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசுப் பள்ளிகளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பகுதி நேர ஆசிரியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். மாணவா்களுக்கு ஓவியம், கலை, தையல் உள்பட சிறப்புப் பாடங்களை கற்றுத் தருகின்றனா். மேலும், அலுவலகப் பணிகளிலும் ஈடுபடுத்தப்படுவா்.இதற்கிடையே பொது முடக்கம் காரணமாக பள்ளிகள் தொடா்ந்து மூடப்பட்டுள்ளன. அதனால், பகுதி நேர ஆசிரியா்களுக்கு கற்பித்தல் பணியில்லாத சூழல் நிலவுகிறது. எனினும், வாழ்வாதாரம் கருதி ஆசிரியா்களுக்கான ஊதியம் பிடித்தமின்றி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது பள்ளிகள் திறக்கப்படும் வரை பகுதிநேர ஆசிரியா்களை நிா்வாகப் பணிகளில் பயன்படுத்திக் கொள்ள தலைமையாசிரியா்களுக்கு மாவட்ட கல்வி அதிகாரிகள் சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது
Read More »
Tags:
Part time teachers
ஆன்லைன் கல்விக்கான PRAGYATA திட்டம்: நீடித்த பயனைப் பெற நெறிமுறைகளை வகுத்தது மத்திய அரசு...
கொரோனோ ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன இதன் காரணமாக மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகளை பள்ளிகள் நடத்தி வருகின்றன இந்த நிலையில் ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் இந்த நெறிமுறைகளை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வடிவமைத்துள்ளது
இதில் ஆன்லைன் கல்விக்கான அறிமுகம் மற்றும் ஆன்லைன் முறை கல்வி என்றால் என்ன? மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்களுக்கான ஆன்லைன் கல்வி குறித்த விளக்கங்கள் ஆன்லைன் கல்வி முறையை பின்பற்றும் மாணவர்கள் உடல் நலனை எவ்வாறு பேண வேண்டும்? என்கிற வழிமுறைகள்
ஆன்லைன் கல்வி முறையை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்தான வழிமுறைகள் ஆகியவை இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தெரிவிக்கப்பட்டுள்ள ஆன்லைன் கல்விக்கான வழிமுறைகளை கொண்டு அந்தந்த மாநிலங்கள் தங்களின் வசதிகளுக்கேற்ப வழிமுறைகளை வகுத்து கொள்ளவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
PRAGYATA
மேலும் மாநில மற்றும் தேசிய அளவில் கொரோனா ஊரடங்கிற்கு பின்பும் ஆன்லைன் கல்வி முறையை நீடித்த ஒரு திட்டமாக கொண்டு செல்வதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகளின் கல்வி அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் மத்திய அரசின் இந்த வழிகாட்டு நெறிமுறையில் வலியுறுத்தப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
Tags:
Online classes
பிளஸ் 1, பத்தாம் வகுப்பு வருகைப்பதிவு: புகாருக்கு இடமின்றி பதிவேற்ற உத்தரவு
பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவா்களின் வருகைப் பதிவை எந்தவித புகாருக்கும் இடமின்றி இணையதளத்தில் கவனமாக பதிவேற்ற வேண்டும் என பள்ளிகளுக்கு அரசுத் தோவுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக அரசு தோவுகள் இயக்குநா் மு.பழனிச்சாமி அனைத்து முதன்மை கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மாவட்ட கல்வி அலுவலகங்கள் அரசு தோவுத்துறையின் இணையதளத்தில் இருந்து பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 வகுப்பு மாணவா்களுடைய முகப்பு தாளை திங்கள்கிழமை பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும். ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள மாணவா்களுடைய வருகைப் பதிவேட்டை சரிபாா்த்து பள்ளி நாள்கள் எத்தனை? மாணவா்கள் வருகை தந்த நாள்கள் எத்தனை? என்பதை அதில் குறிப்பிட வேண்டும்.
அதன்பின்னா் செவ்வாய்க்கிழமை முதல் அரசு தோவுத்துறையின் இணையதளத்தில் வருகைப் பதிவேடு விவரங்களைப் பதிவேற்றம் செய்யவேண்டும். வருகைப்பதிவு அடிப்படையில் 20 சதவீதம் மதிப்பெண், காலாண்டு மற்றும் அரையாண்டு மதிப்பெண் அடிப்படையில் 80 சதவீதம் என மொத்தம் 100 சதவீதத்துக்கு மதிப்பெண்கள் கணக்கிடப்படும்.
இந்தப் பணிகள் யாவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணிகள் என்பதால், ரகசியம் காத்து செயல்பட வேண்டும். இந்தப் பணிகளில் எவ்வித புகாருக்கும் இடம் கொடுக்காமல் கவனமாக செயல்படவேண்டும். மாவட்ட கல்வி அலுவலா்கள் தலைமையில் நடைபெறும் இந்த முகாமை, முதன்மை கல்வி அலுவலா்கள் தவறாது பாா்வையிட்டு, அரசு தோவுகள் இயக்குநருக்கு அறிக்கை அனுப்பவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:
11 th public
புதிய வரி நடைமுறையில் ஊழியர்களின்பயணப் படிக்கு வரிவிலக்கு சலுகை அறிவிப்பு.
பட்ஜெட்டில் புதிய வரி நடை முறையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகப்படுத்தினார். இந்தப் புதிய வரி நடைமுறை யானது குறைந்த வரி விதிப்பு நடைமுறையாக அறிமுகப்படுத் தப்பட்டது. ஆனால், இந்தப் புதிய வரி நடைமுறையில் முன்பு வழங் கப்பட்டு வந்த பல வரி விலக்கு சலுகைகள் நீக்கப்பட்டன.தற்போது பயணப்படிக்கான வரி சலுகை அனுமதிக்கப்பட்டுள் ளது. அதன்படி ஊழியர்களுக்கு வழங்கப்படும் பயணச் செலவு களுக்கான படி, சுற்றுலா பயணத் துக்கான செலவுகள், பணியிட மாறுதலுக்கான பயண செலவுகள், வேலை நிமித்தமான பயணச் செலவுகள் போன்றவற்றுக்கு வரி விலக்கு கோரலாம் எனத் தெரிவிக் கப்பட்டுள்ளது.
மேலும் பயணங் களின் போது ஆகும் இதர செலவு களும் நிறுவனம் வழங்கும்பட்சத் தில் அதற்கும் வரிவிலக்கு கோர லாம்.ஆனால், அலுவலகத்தில் இல வச உணவு, தேநீர் போன்ற பானங் களுக்கான செலவுகள் இதில் சேர்க் கப்பட மாட்டாது எனவும்அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்வையற்றோர், காது கேளாதோர் மற்றும் பிற மாற்றுத் திறனாளி ஊழியர்கள் கூடுதலாக மாதம் ரூ.3,200 வரை வரி விலக்குப் பெற முடியும்.
Read More »
மேலும் பயணங் களின் போது ஆகும் இதர செலவு களும் நிறுவனம் வழங்கும்பட்சத் தில் அதற்கும் வரிவிலக்கு கோர லாம்.ஆனால், அலுவலகத்தில் இல வச உணவு, தேநீர் போன்ற பானங் களுக்கான செலவுகள் இதில் சேர்க் கப்பட மாட்டாது எனவும்அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்வையற்றோர், காது கேளாதோர் மற்றும் பிற மாற்றுத் திறனாளி ஊழியர்கள் கூடுதலாக மாதம் ரூ.3,200 வரை வரி விலக்குப் பெற முடியும்.
Tags:
INCOME TAX
மாணவர்கள் வங்கி கணக்கில் சத்துணவு திட்டத்திற்கான பணம்: அரசு முடிவு
பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் வங்கி கணக்கில் பணம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான விபரங்களை அனுப்பும்படி முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அரசு, உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்படுகிறது.ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் உணவுக்கு வழியின்றி சிரமப்படுகிறார்கள்.
சத்துணவுக்கான பணத்தை மாணவர்களின் வங்கி கணக்கில் செலுத்தினால் மாணவர்களும்,அவர்களது குடும்பங்களும் பயன் பெறும். இதனை கருத்தில் கொண்டு சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் வங்கி கணக்கு விபரங்களை சேகரித்து உடனடியாக அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
Read More »
இதற்கான விபரங்களை அனுப்பும்படி முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அரசு, உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்படுகிறது.ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் உணவுக்கு வழியின்றி சிரமப்படுகிறார்கள்.
சத்துணவுக்கான பணத்தை மாணவர்களின் வங்கி கணக்கில் செலுத்தினால் மாணவர்களும்,அவர்களது குடும்பங்களும் பயன் பெறும். இதனை கருத்தில் கொண்டு சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் வங்கி கணக்கு விபரங்களை சேகரித்து உடனடியாக அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்!
10ஆம் வகுப்பு சமூக அறிவியல் புதிய பாடப்புத்தகம்
1.இரண்டு தொகுதியாக இருந்த பாடப்புத்தகம் ஒரே தொகுதியாக மாற்றப்பட்டுள்ளது.
2.வரலாறு பாடப்பகுதியில் இருந்த அனைத்து தலைப்பின்கீழ் வினாக்களும் நீக்கப்பட்டுள்ளன.
3. 53 சரியான விடை நீக்கப்பட்டுள்ளது.
வரலாறு 17 , புவியியல் 12 , குடிமையியல் 11 , பொருளியல்13.
4 . 37 கோடிட்ட இடங்கள் நீக்கப்பட்டுள்ளது.
வரலாறு 17, புவியியல் 2, குடிமையியல் 3, பொருளியல்15.
5. 47 இரண்டு மதிப்பெண் வினாக்கள் நீக்கப்பட்டுள்ளது.
வரலாறு 22, புவியியல் 7, குடிமையியல் 4, பொருளியல் 14.
6. 23 ஐந்து மதிப்பெண் வினாக்கள் நீக்கப்பட்டுள்ளது.
வரலாறு 4, புவியியல் 7, குடிமையியல் 3, பொருளியல் 9.
7.சரியானகூற்று 17 நீக்கப்பட்டுள்ளது.
8.பொருத்துக 5 நீக்கப்பட்டுள்ளது
புவியியல் 4 ஆம் பாடத்தில்
9. வேறுபடுத்துக 4 நீக்கப்பட்டுள்ளது.
10.காரணம் கூறுக 2 நீக்கப்பட்டுள்ளது.
11.காவிரி - தாமிரபரணி வேறுபடுத்துக புதியதாக சேர்க்கப்பட்டுள்ளது.
Tags:
10th public
RTI - அரசுப் பணியில் சேருவதற்கு முன்பு உயர்கல்வி பயின்று தோல்வியுற்ற நிலையில் அரசுப் பணியில் சேர்ந்த பிறகு அதனை எழுதி தேர்ச்சி பெற தடையின்மை சான்று வாங்க வேண்டுமா ?
ஒரு ஆசிரியர் அரசுப் பணியில் சேருவதற்கு முன்பு உயர்கல்வி பயின்று தோல்வியுற்ற நிலையில் அரசுப் பணியில் சேர்ந்த பிறகு அதனை எழுதி தேர்ச்சி பெற தடையின்மை சான்று வாங்க வேண்டியது இல்லை தேர்வுகள் எழுத சிறு விடுப்புக்கு விண்ணப்பித்து விட்டு எழுதலாம். பொது தகவல் அலுவலர், இணை இயக்குனர் அலுவலகம், பள்ளிக்கல்வித்துறை, சென்னை
Read More »
வகுப்பு வாரியாக மாணவர்களுக்கு Whatsapp குழுக்களை அமைத்திட ஆசிரியர்களுக்கு உத்தரவு - CEO Proceedings
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களின் நலன் கருதி 1 முதல் 10 ஆம் வகுப்புகளுக்குரிய பாடங்களை வீட்டிலிருந்து வீடியோ மூலம் கற்க e-learn.tnschools.gov.in என்ற இணையத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இவ்விணையத்தை மாணவர்கள் பயன்படுத்திட எதுவாக பள்ளிகள் மூலம் தகவல் தெரிவித்திடல் வேண்டும். இது சார்ந்து உரிய வழிகாட்டுதலை மாணவர்களுக்கு வழங்கிட ஏதுவாக வகுப்பு வாரியாக மாணவர்களின் அலைபேசி எண்களைக் கொண்டு Whatsapp குழுக்களை அமைத்திடவும் , அதன் வாயிலாக மாணவர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கி தொடர்நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களையும் அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- CEO, ஈரோடு
Read More »
இவ்விணையத்தை மாணவர்கள் பயன்படுத்திட எதுவாக பள்ளிகள் மூலம் தகவல் தெரிவித்திடல் வேண்டும். இது சார்ந்து உரிய வழிகாட்டுதலை மாணவர்களுக்கு வழங்கிட ஏதுவாக வகுப்பு வாரியாக மாணவர்களின் அலைபேசி எண்களைக் கொண்டு Whatsapp குழுக்களை அமைத்திடவும் , அதன் வாயிலாக மாணவர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கி தொடர்நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களையும் அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- CEO, ஈரோடு
Tags:
CEO PROCEEDINGS
Breaking News : தமிழகத்தில் இன்று ( ஜூன் 28 ) மேலும் 3,940 பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் ( 28.06.2020 ) இன்று 3,940 பேருக்கு கொரோனா பாதிப்பு.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 82,275 ஆக அதிகரிப்பு.
சென்னையில் இன்று ஒரே நாளில் 1,992 பேருக்கு கொரோனா தொற்று.
மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:
மதுரை - 284
வேலூர் - 84
செங்கல்பட்டு - 183
திருவள்ளூர் - 100
மாவட்ட வாரியான பாதிப்பு.( 28.06.2020 )
மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள : 1,443 ( 45,537 )
இன்றைய உயிரிழப்பு : 54 ( 1,079 )
10, 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
Saturday 27 June 2020
தர்மபுரி மாவட்ட நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 10, 12-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : நியாய விலைக் கடை
மேலாண்மை : தமிழக அரசு
பணியிடம் : தர்மபுரி
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :
விற்பனையாளர்
Packer
கல்வித் தகுதி : விற்பனையாளர் பணியிடத்திற்கு 12-வது தேர்ச்சி பெற்றவர்களும், Packer பணிக்கு 10-வது தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
மொழித் திறன் : விண்ணப்பதாரர் தமிழ் மொழியில் எழுத, படிக்க போதுமான திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர் குறைந்தது 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.
எஸ்சி, எஸ்டி பிரிவு விண்ணப்பதாரர், பிற்படுத்தப்பட்ட பிரிவு விண்ணப்பதாரருக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை.
பொது மற்றும் ஓபிசி உள்ளிட்ட இதர வகுப்பு விண்ணப்பதாரர்கள் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் விண்ணப்பத்தைப் பெற்று அதனை பூர்த்தி செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 18.07.2020 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 18.07.2020 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
மண்டல இணை பதிவாளர்/தலைவர், மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தருமபுரி - 636705.
தேர்வு முறை : குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு விளம்பரத்தைக் காணவும்
Tags:
Employment news
தமிழ் வழியில் பயின்றவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக ஆசிரியர் பணிக்கு காத்திருப்போர் குமுறல்.
ஐயா
வணக்கம்.
மாண்புமிகு இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களால் சிறப்பாசிரியர்களுக்கு( ஓவியம், உடற்கல்வி , தையல், இசை) ஆகிய நான்குதுறையினருக்கு கடந்த 23.09.2017 ல் ஆசிரியர் தேர்வுவாரியம் போட்டி தேர்வை நடத்தியது இதில் ஓவிய துறையில் 327 இடங்களில் 80சதவீதம் 240 தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டு 6 மாதம் ஆகி இருக்கிறது மீதம் உள்ள 20சதவீதம் உள்ள *தமிழ்வழி இட ஓதுகீடு மற்றும் சமுக நல துறை,* *மாநகராட்சிகளில்** தேர்ச்சி பெற்ற எங்களுக்கு வழக்கு காரணமாக தாமதமகிகொண்டு இருந்தது இருந்தாலும் அரசு தரப்பு (trb)
மேல் முறையீடு செய்து வழக்கு வெற்றி பெற்றபிறகு
சட்ட சபையில் தமிழ் வழி இட ஓதுகீடுக்கு தனிமசோதா (Go)கொண்டு வந்தற்கும் *தமிழக முதல்மைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் தங்களுக்கும் மிக்க நன்றி* யை தெரிவித்துகொள்கிறோம்
வழக்கு முடிந்த சில நாட்களில் பணிஆணை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்த போது கொரனாவால் மேலும் தாமதமாக ஆகிகொண்டு இருக்கிறது ஐயா
தேர்வு எழுதி 3ஆண்டுகளை நெருங்கிய நிலையில் மிகுந்த மனஉளைச்சலுடனும் குடும்பத்தை நடத்த முடியாமல் தவித்து வருகிறோம்.
மாண்புமிகு இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களால் சிறப்பாசிரியர்களுக்கு( ஓவியம், உடற்கல்வி , தையல், இசை) ஆகிய நான்குதுறையினருக்கு கடந்த 23.09.2017 ல் ஆசிரியர் தேர்வுவாரியம் போட்டி தேர்வை நடத்தியது இதில் ஓவிய துறையில் 327 இடங்களில் 80சதவீதம் 240 தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டு 6 மாதம் ஆகி இருக்கிறது மீதம் உள்ள 20சதவீதம் உள்ள *தமிழ்வழி இட ஓதுகீடு மற்றும் சமுக நல துறை,* *மாநகராட்சிகளில்** தேர்ச்சி பெற்ற எங்களுக்கு வழக்கு காரணமாக தாமதமகிகொண்டு இருந்தது இருந்தாலும் அரசு தரப்பு (trb)
மேல் முறையீடு செய்து வழக்கு வெற்றி பெற்றபிறகு
சட்ட சபையில் தமிழ் வழி இட ஓதுகீடுக்கு தனிமசோதா (Go)கொண்டு வந்தற்கும் *தமிழக முதல்மைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் தங்களுக்கும் மிக்க நன்றி* யை தெரிவித்துகொள்கிறோம்
வழக்கு முடிந்த சில நாட்களில் பணிஆணை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்த போது கொரனாவால் மேலும் தாமதமாக ஆகிகொண்டு இருக்கிறது ஐயா
தேர்வு எழுதி 3ஆண்டுகளை நெருங்கிய நிலையில் மிகுந்த மனஉளைச்சலுடனும் குடும்பத்தை நடத்த முடியாமல் தவித்து வருகிறோம்.
*ஓவிய ஆசிரியர்கள் தையல் ஆசிரியர்கள் ( சமுக நல துறை, மாநகராட்சி) மற்றும் தமிழ்வழி இட ஒதுக்கீடு, ஓவிய ஆசிரியர்கள் தையல் ஆசிரியர்கள் ஆகியோர் காத்துகொண்டு இருக்கிறோம்*
எனவே ஐயா தாங்கள் எங்களுக்கு விரைவில் பணி ஆனை வழங்கி எங்கள் குடும்பங்களை காப்பாற்ற வேண்டுகிறோம்.
எங்களை போலவே *உடற்கல்வி ஆசிரியர்களும்* பணிஆணை பெற காத்து கொண்டு இருக்கிறார்கள்.
எனவே பணிஆனைக்காக 3ஆண்டுகளாக காத்திருக்கும் சிறப்பாசிரியர்களுக்கு நல்லது செய்ய வேண்டுகிறோம் அய்யா. நன்றி ஐயா
எங்களை போலவே *உடற்கல்வி ஆசிரியர்களும்* பணிஆணை பெற காத்து கொண்டு இருக்கிறார்கள்.
எனவே பணிஆனைக்காக 3ஆண்டுகளாக காத்திருக்கும் சிறப்பாசிரியர்களுக்கு நல்லது செய்ய வேண்டுகிறோம் அய்யா. நன்றி ஐயா
Tags:
educationalnews
10ம் வகுப்பு, பிளஸ் 1 தனித்தேர்வர்கள் கல்வித்துறையின் மவுனத்தால் கவலை
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத்தேர்வுக்கு பதிவு செய்த தனித் தேர்வர்களுக்கு, தேர்ச்சி அளிப்பது குறித்து, கல்வித்துறை எந்த அறிவிப்பும் வெளியிடப்படாததால், அவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
கொரோனா தொற்று பரவல் பிரச்னையால், தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் நடக்கவிருந்த, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 1 வகுப்புக்கு, ஒரு பாடத்துக்கான தேர்வும் ரத்தாகி உள்ளது. தேர்வுக்கு பதிவு செய்த மாணவர்களுக்கு, காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், 80 சதவீத மதிப்பெண்ணும், வருகை பதிவின்படி, 20 சதவீத மதிப்பெண்ணும் வழங்கப்பட உள்ளது.இதற்கான பணிகளை, அரசு தேர்வுத்துறை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்களுக்கு, தேர்ச்சி அளிப்பது குறித்து, எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.அதனால், தனி தேர்வர்கள் கவலை அடைந்துஉள்ளனர்.
பத்தாம் வகுப்பு தனி தேர்வர்களை பொறுத்தவரை, பல வகையாக உள்ளனர். பிற மாநிலங்களில் வசித்தாலும், தங்களின் தாய் மொழி மீதான பற்றுதலால், தமிழ் வழியில் பலர் படிக்கின்றனர்.இவர்கள் படிக்கும் பள்ளிகள், தமிழக பாட திட்டத்தை பின்பற்றுகின்றன. இந்த பள்ளி மாணவர்கள், தனி தேர்வர்களாக கருதப்படுகின்றனர்.மேலும், பள்ளிகளுக்கு சென்று படிக்க வசதி இல்லாதவர்களும். பொருளாதார பிரச்னையால் நலிவடைந்த பலரும், வெளியே வேலை பார்த்தபடி,10ம் வகுப்பு தேர்வை தனி தேர்வாக எழுதுவர். எனவே, அவர்களின் வாழ்வை முன்னேற்றும் வகையில், அனைவருக்கும் தேர்ச்சி என, பள்ளி கல்வித்துறை அறிவிக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.
அதேபோல, பிளஸ் 1 தனி தேர்வர்களை பொறுத்தவரை, பிளஸ் 1ல் ஏற்கனவே சில பாடங்களில் தேர்ச்சி மதிப்பெண் பெற முடியாமல், 'அரியர்' வைத்திருப்பவர்களே, தனி தேர்வர்களாகபங்கேற்கின்றனர்.முதல் முயற்சியில், சில பாடங்களில் தோல்வி அடைந்தாலும், மீண்டும் படிக்க வேண்டுமென்ற ஆர்வத்தில் தேர்வு எழுத விண்ணப்பித்த அவர்களுக்கும், உரிய வழிகாட்டுதல்களை, அரசு அறிவிக்க வேண்டும் என, பெற்றோரும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:
10 th public
அரசு பள்ளி மாணவர், 'வாட்ஸ் ஆப்' குழு
'ஆன்லைனில்' பாடம் நடத்தும் வகையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'வாட்ஸ் ஆப்' குழுக்கள் துவங்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பிரச்னையால், பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வீட்டில் இருந்தே மாணவர்கள் கற்கும் வகையில், 'ஆன்லைன்' வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தனியார் பள்ளிகளில், இந்த வகுப்புகள் நடத்தப்படுகின்றன.இந்நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கும், ஆன்லைன் வகுப்புகள் நடத்தும் வகையில், இணையதளத்தில், 'வீடியோ' பாடங்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
மேலும், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளில், வகுப்பு வாரியாக மாணவர்களின் மொபைல் போன் எண்கள் பெறப்பட்டு, வாட்ஸ் ஆப் குழுக்கள் துவக்கப்பட உள்ளன.
அதன் வாயிலாக, தினமும் பாடக்குறிப்புகளை அனுப்ப வேண்டும் என, முதன்மை கல்வி அலுவலர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.
Tags:
Online classes
இணையவழிக் கல்வி குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவு அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
இணையவழிக் கல்வி தொடர்பாக முதல்வருடன் ஆலோசித்து அறிவிக்கப்படும், என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டம் குமார பாளையத்தில் தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
தற்போதைய சூழலில் பள்ளிகள் திறப்பது சாத்தியமாக இருக்காது. அதேநேரத்தில் சூழல் மாறும்போது எப்போது பள்ளி களை திறக்கலாம் என்பதை கல்வி யாளர்கள், பெற்றோர்கள், மாண வர்கள் மற்றும் அமைச்சர்களுடன் கலந்து பேசி அதற்கு பிறகு முதல்வர் நடவடிக்கை எடுப்பார்.இணையவழிக் கல்வி (ஆன்லைன்) தொடர்பாக இருதினங்களுக்குப்பின்னர் முதல்வருடன் ஆலோசித்து ஒப்புதல் பெற்றபிறகு அறிவிக்கப்படும், என்றார்
Tags:
Online classes
அரசு மேல்நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியர் பணியிடத்திற்கு முதுகலை ஆசிரியர்களில் யாருக்கு முன்னுரிமை? CM CELL Reply!
அரசு மேல்நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியர் பணியிடத்திற்கு முதுகலை ஆசிரியர்களின் STATION SENIORITY முன்னுரிமை யாக எடுத்uதுக் கொள்ளப்படுமா.. அல்லது Appointment Seniority எடுத்துக் கொள்ளப்படுமா.. CM CELL பதில் மனு..
Read More »
Tags:
CM CELL REPLY
10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணாவர்களின் வருகைப்பதிவை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய தேர்வுத்துறை உத்தரவு.
10 மற்றும் 11ஆம் பொதுத்தேர்வு இரத்து செய்யப்பட்டது - மாணவர்கள் வருகை புரிந்த நாட்கள் விபரங்களை பதிவேற்றம் செய்தல் சார்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் செயல்முறைகள். நாள்: 27.06.2020.
Attendance Entry - DGE Proceedings - Download here...
வருகைப் பதிவேடுகளில் உள்ளவாறான விவரங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன:
1 29.06.2020 முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் , மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் வழங்கப்பட்டுள்ள User ID மற்றும் Password- ஐ பயன்படுத்தி , தங்கள் கல்வி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிக்குமான பத்தாம் வகுப்பு / பதினோராம் வகுப்பு | +1 Arrear மாணவர்களது வருகைப் பதிவேடு விவரங்களை பூர்த்தி செய்வதற்கான மாணவர்களது முகப்புத்தாட்களை ( Top Sheet ) பள்ளி வாரியாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
2 பத்தாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்பு மாணவர்களது வருகைப் பதிவேடுகளில் உள்ள விவரங்களை அரசுத் தேர்வுத் துறையால் அளிக்கப்படும் முகப்புத்தாளில் ( Top Sheet ) Par -A பகுதியினை பூர்த்தி செய்வதற்கு அட்டவணையாளர் ( Tabulator ) ஒருவரும் , மற்றும் Part - B பகுதியினை பூர்த்தி செய்வதற்கு சரிபார்ப்பு அலுவலர் ( MVO ) ஒருவரும் , கூர்ந்தாய்வு அலுவலர் ( SO -தலைமையாசிரியர் நிலை ) ஒருவரும் கொண்ட ஐந்து குழுக்களை , ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் நியமனம் செய்தல் வேண்டும் . பத்தாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்பிற்கு என தனித்தனி குழுக்கள் அமைக்கப்படுதல் வேண்டும் . மேலும் , மாணவர்களது வருகைப் பதிவேடு தொடர்பான விவரங்களை அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றும் பணிக்கென நியமனம் செய்யப்பட்டுள்ள கணினி இயக்குபவர்களை இப்பணிக்கு கூடுதலாக நியமனம் செய்து கொள்ள மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது . மதிப்பெண் பதிவேற்றம் செய்யும் பணிக்கு பயன்படுத்துவது போல இரண்டு குழுக்கள் A - Team மற்றும் B - Team என அமைத்து வருகைப் பதிவேடுகளின் பதிவுகளைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
Attendance Entry - Top Sheet Model
Attendance Entry - DGE Proceedings - Download here...
வருகைப் பதிவேடுகளில் உள்ளவாறான விவரங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன:
1 29.06.2020 முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் , மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் வழங்கப்பட்டுள்ள User ID மற்றும் Password- ஐ பயன்படுத்தி , தங்கள் கல்வி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிக்குமான பத்தாம் வகுப்பு / பதினோராம் வகுப்பு | +1 Arrear மாணவர்களது வருகைப் பதிவேடு விவரங்களை பூர்த்தி செய்வதற்கான மாணவர்களது முகப்புத்தாட்களை ( Top Sheet ) பள்ளி வாரியாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
2 பத்தாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்பு மாணவர்களது வருகைப் பதிவேடுகளில் உள்ள விவரங்களை அரசுத் தேர்வுத் துறையால் அளிக்கப்படும் முகப்புத்தாளில் ( Top Sheet ) Par -A பகுதியினை பூர்த்தி செய்வதற்கு அட்டவணையாளர் ( Tabulator ) ஒருவரும் , மற்றும் Part - B பகுதியினை பூர்த்தி செய்வதற்கு சரிபார்ப்பு அலுவலர் ( MVO ) ஒருவரும் , கூர்ந்தாய்வு அலுவலர் ( SO -தலைமையாசிரியர் நிலை ) ஒருவரும் கொண்ட ஐந்து குழுக்களை , ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் நியமனம் செய்தல் வேண்டும் . பத்தாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்பிற்கு என தனித்தனி குழுக்கள் அமைக்கப்படுதல் வேண்டும் . மேலும் , மாணவர்களது வருகைப் பதிவேடு தொடர்பான விவரங்களை அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றும் பணிக்கென நியமனம் செய்யப்பட்டுள்ள கணினி இயக்குபவர்களை இப்பணிக்கு கூடுதலாக நியமனம் செய்து கொள்ள மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது . மதிப்பெண் பதிவேற்றம் செய்யும் பணிக்கு பயன்படுத்துவது போல இரண்டு குழுக்கள் A - Team மற்றும் B - Team என அமைத்து வருகைப் பதிவேடுகளின் பதிவுகளைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
Attendance Entry - Top Sheet Model
Tags:
DIRECTOR PROCEEDINGS
ஆன்லைன் வகுப்புகள் குறித்து 2 நாள்களில் முடிவு: அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகளை நடத்துவது குறித்து முதல்வருடன் கலந்தாலோசனை நடத்தி இன்னும் இரண்டு நாள்களில் முடிவு அறிவிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பள்ளிக் கூடங்களை தற்போது திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.கரோனா பரவல் சூழ்நிலை மாறிய பிறகே பள்ளிக்கூடங்களை திறப்பது குறித்து முடிவெடுக்க முடியும்.
ஆன்லைன் வகுப்புகளை பொறுத்தவரை இரண்டு நாள்களுக்குள் முதல்வருடன் ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் வகுப்புகள் பள்ளி மாணவர்களுக்கு ஏற்படையதா? அல்லது மன ரீதியாக, உடல் ரீதியாக பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து விவாதங்கள் எழுப்பப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் இவ்வாறு தெரிவித்துள்ளார்
கொரோனா தடுப்பு பணிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பெயர் பட்டியலை அனுப்பஉத்தரவு - CEO Proceedings
ஈரோடு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்
மேலும் இப்பொருள் சார்ந்து ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்து மாவட்ட நிர்வாகத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கிட தலைமையாசிரியர்களுக்கு கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் மேற்காண் பணியிலிருந்து விலக்கு அளிக்கலாம் என உடல் ஊனமுற்றோர்,
Read More »
நாள். .06.2020
பொருள் கொரோனா தொற்று - ஈரோடு மாவட்டம் - கொரோனா நோய் தடுப்பு பணி - ஆசிரியர்கள் பெயர் பட்டியல் அளித்தல் - அறிவுரை வழங்குதல் - சார்பாக.
மாவட்டத்தில் உள்ள தொடக்க/ நடுநிலை/ ஆசிரியர்களின் பெயர் பட்டியலை அவர்களின் முழுமையான வசிப்பிட முகவரி மற்றும் அலைபேசி எண்ணுடன் சார்ந்த மாநகராட்சி / நகராட்சி / உள்ளாட்சி அலுவலகங்களுக்கு வழங்குமாறும், அதன் விவரங்களை இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இப்பொருள் சார்ந்து ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்து மாவட்ட நிர்வாகத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கிட தலைமையாசிரியர்களுக்கு கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் மேற்காண் பணியிலிருந்து விலக்கு அளிக்கலாம் என உடல் ஊனமுற்றோர்,
Tags:
CEO PROCEEDINGS
கல்வி தொலைக்காட்சியில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு நெறிமுறைகள் வெளியீடு
படப்பிடிப்பிற்கு வரும் ஆசிரியர்களுக்கு நெறிமுறைகள்
1. பச்சை வண்ணத்திலுள்ள ஆடைகளைத் தவிர்க்கவும். பிற வண்ண ஆடைகள் அணியும்போது அந்த ஆடைகளில் எந்த பகுதியிலும் பச்சை வண்ணம் இல்லாதவாறு கவனமுடன் அணிந்து வரவும்.
2. ஆண் ஆசிரியர்கள் நெருக்கமான கட்டம் போட்ட சட்டைகள், நெருக்கமான கொடு போட்ட சட்டைகள், மினுமினுக்கும் சட்டைகள், பூப் போட்ட மற்றும் கருப்பு நிற சட்டைகளைத் தவிர்க்கவும், கையோடு இரண்டுசட்டைகளைக் கொண்டு வரவும்.
3. பெண் ஆரியர்கள் சுடிதார், மினுமினுக்கும் புடவைகள் , பட்டு ஜரிகை புடைவைகள், நீளமான காதணிகள் போன்றவற்றை தவிர்க்கவும். கையோடு இரண்டு புடவைகள் கொண்டு வரவும்.
4. ஆண் ஆசிரியர்கள் கண்டிப்பாக Shaving செய்து வரவும்.
5. ஆசிரியர்கள் transparent தரநர ஆக இருக்கும் ஆடைகளைத் தவிர்க்கவும்.
6. ஆரியர்கள் கட்டாயமாக தங்களது பாடப்பகுதியினை பவர் பாயிண்ட் இல் கொண்டு வரவும்.
7. தங்களது பவர் பாயிண்ட் slide size 16:9 wide screen இல் இருக்க வேண்டும்.
8. ஆசிரியர்கள் தங்களது பாடப்பகுதியின் இறுதியில் High order thinking மற்றும் middle order thinking கேள்விகளை சேர்க்கவும்.
9. படப்பிடிப்பிற்கு வரும் ஆசிரியர்கள் ஒப்பனைப் பொருட்களாகிய சீப்பு மற்றும் face powder ஆகியவற்றைக் கொண்டு வரவும்.
Tags:
Eductionalnews,
KALVISEITHI,
கல்விச்செய்தி
Breaking News : தமிழகத்தில் இன்று ( ஜூன் 27 ) மேலும் 3,713 பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் ( 27.06.2020 ) இன்று 3,713 பேருக்கு கொரோனா பாதிப்பு.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 78,335 ஆக அதிகரிப்பு.
சென்னையில் இன்று ஒரே நாளில் 1,929 பேருக்கு கொரோனா தொற்று.
மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:
மதுரை - 218
வேலூர் - 118
செங்கல்பட்டு - 248
திருவள்ளூர் - 146
மாவட்ட வாரியான பாதிப்பு.( 27.06.2020 )
மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள : 2737
இன்றைய உயிரிழப்பு : 68
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 78,335 ஆக அதிகரிப்பு.
சென்னையில் இன்று ஒரே நாளில் 1,929 பேருக்கு கொரோனா தொற்று.
மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:
மதுரை - 218
வேலூர் - 118
செங்கல்பட்டு - 248
திருவள்ளூர் - 146
மாவட்ட வாரியான பாதிப்பு.( 27.06.2020 )
மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள : 2737
இன்றைய உயிரிழப்பு : 68
Tags:
GENERAL NEWS
தமிழகத்தில் பள்ளிக்கூடங்களை தற்போது திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.
தமிழகத்தில் பள்ளிகளை திறப்பதற்கு தற்போதைக்கு சாத்தியம் இல்லை, என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் - குமாரபாளையத்தில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் தலைமையிலான குழு, முடிவு செய்யும் என்றார்.
பள்ளி வேலை நாட்கள் குறைக்கப்படுவதால், பாடங்களை குறைப்பது குறித்து ஆய்வு செய்ய, குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குழு அறிக்கை அளித்த பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும், என்றும் செங்கோட்டையன் கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள், ஜூலை மாதம் வெளியிடப்படும் என்றும் ஆன்லைன் வகுப்பு தொடங்குவது குறித்து முதல்வரிடம் பேசி ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்தார்.
Tags:
educationalnews,
KALVISEITHI
ஆசிரியர்களைக் கொரோனா சம்பந்தப்பட்ட பணிகளில் அமர்த்தத் தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு
தனிமனித விலகல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்காமல், ஆசிரியர்களைக் கரோனா சம்பந்தப்பட்ட பணிகளில் அமர்த்தத் தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
கரோனா தடுப்புப் பணிக்கு அனைத்துத் துறை பணியாளர்களையும் பணியமர்த்த தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, கரோனா பாதித்தவர்கள் குறித்த விவரங்களைச் சேகரிப்பது, கவுன்சிலிங் வழங்குவது போன்ற பணிகளில் சென்னை மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்களைப் பணியமர்த்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இந்தப் பணிகளுக்கு 50 வயதுக்குக் குறைவான ஆசிரியர்களிடம், அவர்களின் விருப்பத்தைப் பெற்று பணியமர்த்த வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால், ஆசிரியர்களின் விருப்பத்தைப் பெறாமல் அவர்களைக் கரோனா பணிகளுக்குப் பயன்படுத்துவதாகக் கூறி, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
அந்த மனுவில், ''சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பணியாற்றும் 1,200 ஆசிரியர்கள் ஷிப்ட் முறையில் கரோனா கட்டுப்பாட்டு மையப் பணிகளுக்குப் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
ஆசிரியர்களின் விருப்பத்தைக் கேட்காமலும், 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களும் இப்பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். கட்டுப்பாட்டு மையப் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு போக்குவரத்து வசதி ஏதும் வழங்கப்படவில்லை.
கட்டுப்பாட்டு மையங்களில் தனிமனித விலகல் பின்பற்றப்படாததால் ஆசிரியர்கள் கரோனா தொற்றுக்கு ஆளாகும் அபாயம் இருப்பதால், வீடுகளில் இருந்து கவுன்சலிங் வழங்கத் தயாராக உள்ளனர்.
தனிமனித விலகல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்காமல், ஆசிரியர்களைக் கரோனா சம்பந்தப்பட்ட பணிகளில் அமர்த்தத் தடை விதிக்க வேண்டும்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரவுள்ளது.
Tags:
educationalnews,
KALVISEITHI,
கல்விச்செய்தி
கொரோனா பணியிலிருந்து ஆசிரியர்களை பணி விடுப்பு செய்ய கோரிக்கை!
தூத்துக்குடி மாவட்ட கொரானோ பணியில் விருப்பம் இல்லாத உடற்கல்வி ஆசிரியர்களை ஈடுபட கட்டாயப்படுத்துவது வருந்தத்தக்க செயலாகும்.தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் செயல் முறைகள் Roc No DMI/2994/2020 Date.06.2020 படி வெளி மாநிலம்,மற்றும் வெளி மாவட்டத்தில இருந்து வரும் மக்களைத் தடுத்து சோதனை செய்வதற்காக Quarantine location Check Post duty பணிக்கு காலை 7மணி முதல் பிற்பகல் 3 மணிவரையிலும்,3 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், இரவு 10 மணி முதல் காலை 7மணி வரையிலும் (7:00 am to 3:00 pm, 3:00pm to 10:00 pm, 10:00 pm to 7:00am ) உடற்கல்வி ஆசிரியர்களை நியமனம் செய்யப்பட்டுள்ளாரகள்.
மேற் கூறிய பணியானது காவல்துறை மற்றும் வருவாய்த்துறை சார்ந்த பணியாகும் அவர்களுக்கு சட்டப்படி அதிகாரமும் பாதுகாப்பும் உள்ளது. ஆனால் பெண் ஆசிரியர்கள் உள்ளிட்ட உடற்கல்வி ஆசிரியர்களுக்கு எந்தப் பாதுகாப்பும் கிடையாது தற்போது சாத்தான்குளம் பிரச்சனையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை உள்ளது இந்நிலையில் எந்தப் பாதுகாப்பும் இல்லாத உடற்கல்வி ஆசிரியர்களை பணியில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்துவது சரியாக இருக்காது.
ஆசிரியர்கள் எப்பொழுதும் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த பணிகளையும் மாணவர் நலன் சார்ந்த பணிகளையும் செய்து வருகிறோம். அதற்கு மாறாக பொது இடங்களில் கட்டாயப்படுத்தி பாதுகாப்பு இல்லாத பணிகளில் பணி நியமனம் செய்வது தவறான முன்னூதாரனத்தை ஏற்படுத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். எனவே மாண்புமிகு முதல்வர் அவர்களும் தலைமைச் செயலர்அவர்களும் மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களும் உடனடியாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களின் செயல்முறை ஆணையினை ரத்து செய்து உடற்கல்வி ஆசிரியர்களை பணிவிடுப்பு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நாள் : 27.06.2020. மாநிலத் தலைவர்-9382860582
+2 பொதுத் தேர்விற்கு வருகை புரியாத மாணவர்கள் - காரணம் என்ன - விளக்கம் தர உத்தரவு
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
Read More »
24/03/2020 அன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாமாண்டு ( வேதியியல், கணக்குப் பதிவியல் மற்றும் புவியியல்) பொதுத் தேர்விற்கு வருகை புரியாத மாணவர்களின் விவரங்கள் கீழ்க்காணும் Link-ஐ பயன்படுத்தி அன்று உள்ளீடு செய்யுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
குறிப்பு
தேர்வு எழுதாததற்கான காரணங்கள் கீழ்க்காணும் காரணங்களாக இருந்தால் அக்காரணங்களைஉள்ளீடுசெய்யவும்
1. மாற்றுச்சான்றிதழ் பெற்றுபள்ளிக்கு வருகைபுரியவில்லை
2. மாற்றுச் சான்றிதழ் பெறப்படாமல் பள்ளிக் தொடர்ந்த வருகை புரியாமை (நீண்ட விடுப்பு)
3. சார்ந்த மாணவனின் இறப்பு
4. கொரான தொற்றுநோய் காரணமாக போக்குவரத்து பயன்படுத்த முடியாமை
Tags:
12 th public
பிளஸ் 2 மாணவருக்கான ஊக்கத்தொகை தாமதம்; வங்கி கணக்கு விபரம் சேகரிப்பில் தொய்வு
வங்கி கணக்கு விபரம் சேகரிப்பு, பதிவேற்றத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் 2019-20 கல்வி ஆண்டு பிளஸ் 2 மாணவர்களுக்கான ஊக்கத்தொகை பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இடைநிற்றலை தவிர்க்க பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி பிளஸ் 2 மாணவர்களுக்கு ரூ.2 ஆயிரம், பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.ஆயிரத்து 500 வீதம் வங்கி கணக்கில் பணம் வழங்கப்படும். 2019-20ல் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு இன்னும் ஊக்கத்தொகை கிடைக்கவில்லை.
ஊரடங்கு காலத்தில் உயர்கல்விக்கான முயற்சிகளை எடுக்க நிதியின்றி மாணவர்கள் தவிக்கின்றனர்.கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 5 லட்சத்து 35 ஆயிரத்து 82 ஆயிரம் மாணவர்கள் ஊக்கத்தொகை பெற தகுதியானவர்கள். இதில் 1 லட்சத்து 69 ஆயிரத்து 108 பேரின் வங்கி கணக்கு மட்டும் 'எமிஸ்'ல் ஏற்றியுள்ளனர். 3 லட்சத்து 65 ஆயிரத்து 974 பேரின் வங்கி கணக்குகள் பதிவேற்றும் பணி நடக்கிறது. 2019-20 ஆண்டுக்கான ஊக்கத்தொகை விரைவில் வழங்கப்படும்' என்றார்.
Tags:
educationalnews,
கல்விச்செய்தி
Subscribe to:
Posts (Atom)