Search

கொரோனா வைரஸ் - விழிப்புணர்வு செய்தி - மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு

Wednesday 4 March 2020


கொரோனா வைரஸ் ( nCov - 2019 )

கொரோனா வைரஸ் என்பது மனிதர்களுக்கு சளி , இருமல் , காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவற்றை ஏற்படுத்தக் கூடிய ஒருவகை வைரஸ் கிருமியாகும் . சீனாவின் வூகான் நகரத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது . இது விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது .

நோயின் அறிகுறிகள் :

- காய்ச்சல் , இருமல் மற்றும் சளி - உடல் சோர்வு - ஒரு சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்படும் .

கொரோனாவைரஸ் நோய் பரவும் விதம் :

நோய் அறிகுறிகள் கண்ட நபர் இருமும் போதும் , தும்மும் போதும் , வெளிப்படும் நீர்த் திவலைகள் மூலம் நேரடியாக பரவுகிறது . மேலும் இருமல் மற்றும் தும்பல் மூலம் வெளிப்படும் கிருமிகளை உடைய நீர்த் திவலைகள் படிந்துள்ள பொருட்களை தொடும்பொழுது கைகள் மூலமாகவும் பரவுகிறது .

நோய் தடுப்பு நடவடிக்கைகள் :

தினமும் 10 முதல் 15 முறை சோப்பு போட்டு , நன்கு தேய்த்து கழுவ வேண்டும் . இருமும் போதும் தும்மும் போதும் வாய் மற்றும் மூக்கை கை குட்டை கொண்டு மூடி கொள்ள வேண்டும் . சிகிச்சை தரும் அனைத்து மருத்துவமனைகளிலும் கிருமி நாசினி கொண்டு சுத்தமாக துடைத்து பராமரித்தல் வேண்டும் .

சிகிச்சைகள்

 சளி , இருமல் மற்றும் காய்ச்சல் , போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே அருகில் உள்ள மருத்துவரை அனுகவும் .  இளநீர் , ஓ . ஆர் . எஸ் , கஞ்சி போன்ற நீர்ச்சத்து மிகுந்த ஆகாரங்களை பருகுதல் வேண்டும்
Read More »

தனி மாதியம் RS.2000 / - ஈட்டிய விடுப்பு சரண் செய்யும்பொழுது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமா? CM CELL Reply!

தொடக்கக்கல்வி துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தனி மாதியம் RS.2000 / - ஈட்டிய விடுப்பு சரண் செய்யும்பொழுது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமா ? சில மாவட்டங்களில் ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் பொழுது தனி ஊதியம் சேர்த்து வழங்கப்படுகிறது . சில மாவட்டங்களில் மறுக்கப்படுகிறது . எனவே , தெளிவுரை வழங்கவும்.
Read More »

ஆதார் கார்டுடன் பான்கார்டு இணைக்கப்பட்ட நிலை குறித்து வலைத்தள லிங்க்!!

ஆதார் கார்டுடன் பான்கார்டு இணைக்கப்பட்ட நிலை குறித்து வலைத்தள லிங்க்!!

Read More »

பான் - ஆதார் இணைத்து விட்டீர்களா? தெரிந்து கொள்ள இதைச் செய்யுங்க! இணைக்கா விட்டால். கார்டு காலாவதிதான்!



ஆதார் எண் - பான் எண்னை இணைப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இணைய பக்கம்
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இணைக்காவிட்டால் 3 நாட்களுக்குப் பிறகு, பான் எண் காலாவதியாகிவிடும் என்று கூறப்படுகிறது.


பெர்மெனண்ட் அக்கவுண்ட் நம்பர் எனப்படும், நிரந்தரக் கணக்கு எண் ஒருவரது அனைத்து விதமான நிதிப் பரிமாற்றங்களையும் பதிவு செய்யும் விதத்தில் அமைக்கப் பட்டுள்ளது. ஆனால் சிலர் வணிக ரீதியாக வரிகளில் இருந்து தப்பிக்கும் பொருட்டும், சிலர் அது ஏதோ கிரெடிட் கார்டு போலானது என்ற அறியாமையிலும் இரண்டு மூன்று கார்டுகளுக்கு மேல் பெற்று, ஏமாற்றியும் வருகின்றனர். இந்நிலையில், ஒரு பான் கார்டுடன் ஒருவரது ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.


இதன் மூலம், ஒருவர், ஒரு கணக்கு, ஒரு பான் கார்டு, ஒரு ஆதார் எனக் கொண்டுவந்தால், முறைகேடுகள் தடுக்கப் படும் என்று கூறுகிறது.

எனவே இந்த இரண்டு கார்டுகளையும் மத்திய நேரடி வரிகள் விதிப்பின் வருமான வரி இணையத்தில் அனைவரும் இணைக்க வேண்டும் என்று கெடு கொடுத்து வந்தது. இந்தக் கெடு சில முறை நீட்டிக்கப் பட்டும் வந்தது.

இந்நிலையில் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் பான் கார்டுடன் ஆதார் எண் இணைக்கப்படாவிட்டால், அக்டோபர் 1ஆம் தேதி முதல் பான் கார்டு செல்லுபடி ஆகாது என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் எச்சரித்துள்ளது. அதன் பிறகு பழைய கார்டு காலாவதியாகி, புதிதாக ஒரே ஒரு பான் கார்டுதான் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள முடியும்.

வங்கியில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பண பரிவர்த்தனை மேற்கொள்ள பான் கார்டு அவசியம். பணப் பரிவர்த்தனை செயல்பாட்டை மேலும் ஒருங்கிணைத்து, ஒன்றுபட்ட கணக்காகக் கொண்டு வர, பான் கார்டுடன் ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. இதுகுறித்து மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால் பெரும்பாலானோர் ஆதார் எண்ணை இணைக்கத் தவறினர். கால அவகாசம் நீட்டிக்கப் படும் பலர் அதில் ஆர்வம் இல்லாமல் இருந்தனர். இருப்பினும், இதற்கு மேலும் கால அவகாசம் நீட்டிக்கப் பட வாய்ப்பில்லை என்பதால், வரும் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் ஆதார் எண் இணைக்கப்படாத பான் கார்டு காலாவதியாகிவிடும் என்று எச்சரிக்கப் பட்டுள்ளது.

இது கடந்த இரு வருடங்களுக்கும் மேலாக சொல்லப் பட்டு வருவதால், சிலர் தங்கள் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைத்திருப்பார்கள். அவர்கள் தற்போது தங்கள் பான் எண், ஆதாருடன் இணைக்கப் பட்டு விட்டதா என்பதை எப்படி தெரிந்து கொள்வது..?


பான் கார்டுடன் ஆதாரை இணைப்பது எப்படி?

https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/LinkAadhaarHome.html?lang=eng - என்ற வருமானவரித்துறையின் இணையப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள்.

இதில் பான், ஆதார் எண், ஆதாரில் உங்களின் பெயர், கேப்ட்சா ஆகியவற்றைப் பூர்த்தி செய்யுங்கள்.

தொடர்ந்து, Link Aadhaar என்னும் பட்டனை க்ளிக் செய்யுங்கள்.

இதை அடுத்து உங்கள் ஆதார் எண், பான் கார்டுடன் இணைக்கப்பட்டுவிடும். அதற்கான செய்தியும் அதில் வந்துவிடும்.

நீங்கள் ஏற்கெனவே இரண்டையும் இணைத்திருந்தால், இந்தப் பக்கத்திலேயே மேல் புறத்தில் அதற்கான செய்தி வரும். அதன்மூலம் நீங்கள் ஆதார் - பான் கார்டை இணைத்துவிட்டதை அறிந்துகொள்ளலாம்.
Read More »

பள்ளிக்கு கொடுக்கப்பட்ட Laptap இல் தேவையின்றி Data வீணாவதை தடுக்க வழிகள்

அன்பான ஆசிரியப் பெருமக்களுக்கு வணக்கம்.

 அனைத்து பள்ளிகளுக்குமே Laptop வழங்கப்பட்டுள்ளது. தற்போது நமக்கு வழங்கப்பட்டுள்ள Laptop-ல் Windows 10 இயங்குதளம் நிறுவப்பட்டுள்ளது. இந்த இயங்குதளம் மற்ற இயங்குதளங்களை விட அதிக வசதிகள் கொண்டது.

ஆனால் இதில் இருக்கும் ஒரு மிகப்பெரிய பின்னடைவு எதுவென்றால் இந்த இயங்குதளம் அதிகப்படியான டேட்டாவை எடுத்துக் கொள்ளும் என்பது தான். நாம் பெரும்பாலும் தினமும்1.5 GB என்ற அளவிலேயே டேட்டாவை பயன்படுத்தி வருகிறோம்.

ஆனால் இந்த இயங்குதளமானது 15 நிமிடங்களிலேயை 1.5GB டேட்டாவைத் தீர்த்து விடும். நாம் internet connection கொடுத்துவிட்டாலே போதும் நாம் பயன்படுத்தாமல் இருந்தாலும் நமது டேட்டா தீர்ந்து விடும்.

இதற்கு காரணம் இந்த விண்டோஸ்10 தானாகவே அப்டேட் செய்து கொள்ளும் தன்மை கொண்டது. இவ்வாறு நமது டேட்டா வீணாவதை பின்வரும் வழிமுறைகளைக் கையாண்டு தவிர்த்து கொள்ளலாம்.

உங்கள் லேப்டாப்பில் Windows+R பட்டனைக் கிளிக் செய்யவும்.

கீழே தோன்றுகின்ற Search box ல் services.msc என்று டைப் செய்து enter செய்யவும்.
   
தற்போது திரையில் தோன்றும்dialog box ல் windows update என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்து double click செய்வும்.

தற்போது திரையில் தோன்றும் புதிய box ல் start up type என்ற ஆப்ஷனுக்கு எதிரில் இருக்கும் கட்டத்தில் automatic அல்லது manual என்று இருக்கும். 

அதை கிளிக் செய்தால்
Automatic (start delay)
Automatic
Manual
Disabled
என்று 4 ஆப்ஷன்கள் தோன்றும்.
   

 அதில் disabled என்பதனைத் தேர்வு செய்து அதன் கீழிருக்கும் கட்டத்தில் stop என்பதனைத் தேர்வு செய்து OK கொடுக்கவும்.

பின்னர் மீண்டும் windows update ல் Double click செய்து service status stopped என உள்ளதா என்று உறுதி செய்து கொள்ளவும்.

இவ்வாறு செய்யும் பட்சத்தில் நமது டேட்டா தேவையின்றி வீணாவதை தடுக்கலாம்.
Read More »

பகுதிநேர சிறப்பாசியர்களை ஆசிரியர் தேர்வு வாரித்தின் மூலம் தேர்வு நடத்தி பணி நிரந்தரம் செய்ய வேண்டுகோள்!

வேண்டுகோள்
04.03.2020
~~~~~~~
பகுதிநேர சிறப்பாசியர்களை ஆசிரியர் தேர்வு வாரித்தின் மூலம் தேர்வு நடத்தி பணி நிரந்தரம் செய்ய மண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்
============

2011ம் ஆண்டு அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் பகுதிநேர சிறப்பாசிரியர்களாக உடற்கல்வி ஆசிரியர்கள், ஓவிய ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள் மற்றும் தையல் ஆசிரியர்கள் என 16000 சிறப.பாசிரியர்களை மாதம் ரூ, 5000/- க்கு வாரம் மூன்று அரை  நாட்கள் பணி செய்ய நேரடியாக நியமனம் செய்தது தமிழக அரசு

ஊதிய உயர்வு வழங்க கோரி கோரிக்கை வைத்ததை ஏற்று  நான்காண்டுகள் கழித்து 2015ம் ஆண்டு ரூ.2000/-  உயர்த்தி ரூ.7000/-மாத ஊதியமாக வழங்கியது, அதன் பின் 2017ம் ஆண்டு மீண்டும் ரூ.700 உயரத்தி மாதம் ரூ.7700/- ஊதியமாக இதுநாள் வரை வழங்கப்பட்டு வருகிறது

பகுதிநேர சிறப்பாசியர்கள் வேலை நாட்கள் வாரத்திற்கு மூன்று அரை நாட்களாகும் இந்த சூழ்நிலையில் எப்படி மற்ற நாட்களில் வேறு இடத்தில் பணி செய்ய அனுமதிப்பார்கள் என்பதை உணரவேண்டும்,
1978ம் ஆண்டு பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்காக தொழிற்கல்வி தொடங்கப்பட்டு தொகுப்பூதியத்தில் ஆசிரியர்களை நியமித்தது அப்போதய அரசு,
1978ம் ஆண்டு ஒப்பந்த  அடிப்படையில் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர்களை காலமுறை ஊதியத்தில் கொண்டுவந்து நிரந்தரம் செய்து ஆணையிட்டது

2003ம் ஆண்டு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய கோரி காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுப்பட்ட சுமார் 100000 அரசு ஊழியர்கள் அசிரியர்கள் பணிநீக்கம் செய்த போது அலுவலக பணிகள் பாதிக்க கூடாது என்பதற்காக 15000 இளநிலை உதவியாளர்களை மாதம் ரூ 4000/-க்கு அப்போதய அரசு வேலைவாய்ப்பு மூலமாக பதிவுமூப்பு அடிப்படையில் நியமிக்கப்பட்டார்கள்,

அலுவலக இளநிலை உதவியாளர்களை தமிழ்நாடு அரசு தேர்வு வாரியத்தின் மூலமாக தான் பணி நியமணம் செய்ய வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் பின்பு வந்த அரசு அவர்களுக்கு என்று சிறப்பு தேர்வு நடத்தி அனைவரையும் நிரந்தரம் செய்தது.

2004 - 2006 ம் ஆண்டுகளில் நிதிநிலை சரியில்லை என்ற காரணத்தை சுட்டிக்காட்டி 55 ஆயிரம் அனைத்து வகை ஆசிரியர்களையும் அதாவது இடைநிலை ஆசிரியர்களை ரூ 3000/- மாதம் ஊதியமாகவும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.4000/- மாதம் ஊதியமாகவும் முதுகலை ஆசிரியர்களுக்கு ரூ.4500/- மாதம் ஊதியமாக ஐந்து ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்தது பின்பு வந்த அரசு 2004 -2006ல் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட அனைத்து ஆசிரியர்களையும் காலமுறை ஊதியத்திற்கு கொண்டுவந்து பணி நிரந்தரப் பின்பு வந்த அரசு. 

அதே போன்று 2003ம் ஆண்டு எல்கார்ட் மூலமாக 1800 கணினி ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம. செய்தார்கள் அவர்கள் அணைவரையும் 2006ம் வந்த அரசு அவர்களுக்கென்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தனித் தேர்வு நடத்தி பணி நிரந்தரம் செய்தது அரசு

அதே போன்று  பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சுமார் 16000  பேரை இப்போதுள்ள சட்டத்தின்படி அதாவது கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் அவர்களுக்கு என்று சிறப்பு தேர்வை நடத்தி காலமுறை ஊதியத்திற்கு கொண்டு வந்து அவர்களில் வாழ்வில் விளக்கேற்றி வைக்க வருகின்ற சட்டப்பேரவை கூட்டத்தொடர் கல்வி மானிய கோரிக்கையில் அறிவிக்க மாண்புமிகு தமிழக  அவர்களையும் மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்களையும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்

சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு
9445454044
Read More »

10ஆம் வகுப்பு கணித வினாத்தாள் எப்படி இருக்கும்? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான கணித வினாத்தாள், புதிய பாடத்திட்டத்தின் மாதிரி வினாத்தாள் போல் இல்லாமல் அரையாண்டு வினாத்தாள் வடிவில் இருக்கும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. நடப்பு கல்வியாண்டில் 10ஆம் வகுப்பிற்கான பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டதுடன், அதற்கான மாதிரி வினாத்தாள்களை பாடவாரியாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டது. அதில் கணித வினாத்தாளில் வடிவியல் பகுதியில் இரண்டு கேள்விகளுக்கு பதிலாக ஒரு கேள்வியும், 

அதேபோன்று கிராஃப்(Graph) பகுதியில் இரண்டு கேள்விகளுக்கு பதிலாக ஒரு கேள்வியும் மட்டுமே இடம்பெற்றது. இதனால் மாணவர்கள் மற்றும் ஆசியர்கள் குழம்பிய நிலையில் மதிப்பெண் பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்று புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அரையாண்டு வினாத்தாளை போன்று வடிவியல் மற்றும் கிராஃப் பகுதிகளில் தலா இரண்டு கேள்விகள் அடங்கிய வினாத்தாள் தான் பொதுத்தேர்வில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது
Read More »

ஆசிரியர்கள் 1200 பேர் கேரளா களப்பயணம் -கல்வித்துறை ஏற்பாடு

ஒருங்கிணைந்த பள்ளி கல்விதிட்டத்தின்கீழ்தமிழக ஆசிரியர்கள் 1200பேர்திருவ னந்தபுரத்திற்குகளப்பயண மாக அழைத்து செல்லப்பட இருக்கின்றனர் . ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் கீழ் 2019 - 20ம் கல்வியாண்டில் ' குவாலிட்டி கம்போனென்ட்ஸ் - - செகண்டரி அன்ட் சீனியர் செகண்டரி ' என்ற தலைப்பில் அரசு பள்ளிகளில் இடைநிலை , மேல்நிலை பயிற்றுவிக்கும் அறிவியல் மற்றும் கணித பட்டதாரி , முதுகலை பட்டதாரி ஆசிரி யர்கள் களப்பயணம் மேற்கொள்ளும் வகையில் ' டீச்சர் எக்சேஞ்ச் புரோகிராம் ' என்ற செயல்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது .



இதற்காக ஒரு கல்வி மாவட்டத்திற்கு 10 ஆசிரி யர்கள் வீதம் 120 மாவட் டங்களில் இருந்தும் மொத்தம் 1200 ஆசிரியர்க ளுக்கு மொத்தம் ரூ . 24 லட்சம் நிதி அனுமதிக்கப் பட்டு மாவட்டங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது . இதற்காக ஒரு கல்வி மாவட்டத்திற்கு 6 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 4 முதுகலை பட்டதாரி ஆசிரியர் கள் என்று 101 ஆசிரியர்கள் வீதம் 120 கல்வி மாவட்டங்களுக்கு மொத்தம் ஆயிரத்து 200 ஆசிரியர்கள் தெரிவு செய் யப்பட்டுள்ளனர் .



இவ்வாசிரியர்கள் நேரடி களப்பயணம் மேற் கொள்ளத்தக்க தேசிய விண்வெளி ஆய்வு மையம் , அருங்காட்சியகங் கள் மற்றும் பயிற்சி அரங் கம் போன்ற அனைத்து வசதிகளும் உள்ளடங்கிய கேரள மாநிலம் , திருவ னந்தபுரம் அழைத்து செல் லப்பட உள்ளனர் . இந்த களப்பயணத்தின்போது விண்வெளி ஆராய்ச்சி சார்ந்த சிறப்பு வகுப்புக ளும் வல்லுநர்களால் நடத் தப்பட உள்ளது . இந்த செயல்பாடு மத்திய அரசு நிறுவனமான ஐஆர்சிடிசி உடன் இணைந்து மேற்கொள்ளப்படுகிறது .இது தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குநர் அனைத்து மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார் .
Read More »

மூன்றாம் பருவத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு

மூன்றாம் பருவத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு









Read More »

NTSE 2019 - 10th Std National Talent Search Exam - Result Published Now


மாநில அளவிலான தேசிய திறனாய்வுத் தேர்வு ( NTSE ) , நவம்பர் 2019 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் " Result ” என்ற பக்கத்தில் அறிந்து கொள்ளலாம் . NCERT ஒப்புதல் பெறப்பட்டவுடன் ( 2 வாரங்களில் ) தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது .



National Talent Search Exam ( X - STD ) (Nov - 2019) - Result Direct Link...
Read More »

NMMS - தேசிய வருவாய் வழி திறன் தேர்வில் ( National Means cum - Merit Scholarship Scheme ) தேர்ச்சி பெற்ற இதுநாள்வரையில் கல்வி உதவித்தொகை கிடைக்கப்பெறாத மாணவ / மாணவியர்களின் விவரங்களை உடன் அனுப்ப கல்வித்துறை உத்தரவு

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் கடிதத்திற்கு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் கவனம் உடனடியாக ஈர்க்கப்படுகிறது .


மேற்காண் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் கடிதத்தின்படி கடந்த ஆண்டுகளில் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வில் தேர்ச்சி பெற்று இதுவரை NMMSS கல்வி உதவித்தொகை முழுமையாக கிடைக்கப்பெறாத அல்லது பகுதியாக கிடைக்கப்பெறாத மாணவ / மாணவியர்களின் விவரங்களைப் பெற்று உடன் அனுப்பி வைக்குமாறு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது .


எனவே , அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளில் தேசிய வருவாய் வழி திறன் தேர்வில் ( National Means cum - Merit Scholarship Scheme ) தேர்ச்சி பெற்ற இதுநாள்வரையில் மேற்படி கல்வி உதவித்தொகை கிடைக்கப்பெறாத மாணவ / மாணவியர்களின் விவரங்களை ஒரு மாணவரும் விடுபட்டுப் போகாமல் சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களிடமிருந்து பெற்று இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் தொகுத்து சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலரின் கையொப்பத்துடன் இணை இயக்குநர் ( நாட்டு நலப்பணித் திட்டம் ) அவர்களின் மின்ன ஞ்சல் முகவரிக்கு ( idnsed @ nic . in ) 06.03.2020 அன்று மாலை 5 மணிக்குள் தவறாமல் அனுப்பி வைக்குமாறு மீளவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இதில் எவ்வித சுணக்கமும் இன்றி செயல்பட்டு NMMSS தேர்வில் தேர்ச்சி பெற்று இதுவரை கல்வி உதவித்தொகை கிடைக்கப்பெறாத மாணவர்களின் விவரங்களை தலைமை ஆசிரியர்களிடமிருந்து முழுமையாகப் பெற்று அனுப்பி வைக்குமாறு தெரிவிப்பதுடன் 06.03.2020 அன்று மாலை 6 மணி நிலவரப்படி எவ்வித விவரங்களும் முதன்மைக் கல்வி அலுவலரிடமிருந்து பெறப்படவில்லை எனில் சார்ந்த மாவட்டத்தில் NMMSS தேர்வில் தேர்ச்சி பெற்று இதுவரை கல்வி உதவித்தொகை கிடைக்கப்பெறாத மாணவர்கள் எவரும் இல்லை என " இன்மை அறிக்கை " பெறப்பட்டதாக கருத்தில் கொள்ளப்படும் என்பதையும் திட்டவட்டமாக அறிவிக்கப்படுகிறது.


Read More »
 

Most Reading

Tags

Sidebar One