ஜனவரி 2020 மாத சம்பளம் எப்போது கிடைக்கும்? - நீங்களே அறிந்துகொள்ளலாம் - Direct Link
Thursday, 30 January 2020
TNPSC - குரூப் 4ஐ தொடர்ந்து குரூப் 2 தேர்வில் மெகா மோசடி!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ தேர்வில் ராமேஸ்வரம் தேர்வு மையத்தில் சென்னையில் ஆயுதப்படையில் உதவி ஆய்வாளராக உள்ள சித்தாண்டி மனைவி, இரண்டு சகோதரர்கள் உட்பட 4 பேர் முறைகேடாக முதல் 10 இடங்கள் பிடித்து வெற்றி வெற்றது விசாரணையில் அம்பலமாகி உள்ளது. இதையடுத்து மோசடிக்கு மூளையாக செயல்பட்ட உதவி ஆய்வாளரின் சகோதரரான காரைக்குடி சார் பதிவாளரின் நேர்முக உதவியாளர் வேல்முருகனை சிபிசிஐடி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பணம் கொடுத்து மோசடியாக வெற்றி பெற்ற 200 பேர் பட்டியலும் எடுக்கப்பட்டு வருகிறது. டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரம் நாளுக்கு நாள் முற்றி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிஎன்பிஎஸ்சி கடந்த ஆண்டு நடத்திய குரூப் 4 தேர்வில் மோசடி நடந்தது தெரியவந்தது. இதில் முறைகேடாக தேர்வு எழுதிய 99 தேர்வர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் டிஎன்பிஎஸ்சி கடைநிலை ஊழியர் முதல் உயர் அதிகாரிகள் வரை ஈடுபட்டுள்ளது உறுதியாகி உள்ளது.
இந்த மோசடி வழக்கு விசாரணையை, தமிழக அரசு சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தது. அவர்கள் நடத்திய விசாரணையில், இந்த முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்ட சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த பள்ளிக்கல்வித் துறை அலுவலக உதவியாளர் ரமேஷ் (39), எரிசக்தி துறை அலுவலக உதவியாளர் மாமல்லபுரம் திருக்குமரன் (35), தேர்வில் மோசடியாக வெற்றி பெற்ற திருவல்லிக்கேணி நிதீஷ்குமார் (21), ஆவடி வெங்கட்ரமணன் (38), திருவாடனை கோடனூர் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் (31), பண்டிருட்டி சிறு கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் (26), ஆவடி கவுரிபேட்டை காலேஷா (29), டிஎன்பிஎஸ்சி ரெக்கார்டு கிளார்க் பழைய வண்ணாரப்பேட்டை ஓம் காந்தன் (45), தேனி சீலையம்பட்டி பாலசுந்தர்ராஜ் (45), ராணிபேட்டை மாவட்டம் நெமிலி அருகே உள்ள வேடந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த கார்த்தி(30), திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே உள்ள ஏகாம்பர சத்திரத்தை சேர்ந்த வினோத்குமார்(34), கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சிறு கிராமம் பகுதியை சேர்ந்த சீனுவாசன்(33),கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகே உள்ள சேந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த விக்கி(எ)த.விக்னேஷ்(25), கடலூர் மாவட்டம் பண்ரூட்டி தாலுகா தனலட்சுமி நகரை சேர்ந்த சிவராஜ்(31) ஆகியோரை என 14 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
மோசடிக்கு மூளையாக செயல்பட்ட முகப்பேரை சேர்ந்த முக்கிய குற்றவாளி ஜெயகுமாரை சிபிசிஐடி போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் கொடுத்த தகவலின்படி இடைத்தரகர்கள் மூலம் ரூ.7.50 லட்சம் பணம் கொடுத்து தேர்வு எழுதிய ஒருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். அவர் குறித்த விபரங்களை சிபிசிஐடி போலீசார் தெரிவிக்க மறுத்துவிட்டனர். குரூப் 4 தேர்வு முறைகேடு விசாரணை நடந்து வரும் நிலையில், கடந்த 2017ம் ஆண்டு நடந்த குரூப் 2ஏ தேர்வில் மெகா மோசடி நடந்து இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. குருப் 4 தேர்வில் முதல் 100 இடங்களை பிடித்து மோசடியில் சிக்கியுள்ள ராமேஸ்வரம் தேர்வு மையம் குரூப் 2ஏ தேர்வின் போது முதல் 100 இடங்களில் 37 இடங்களை அந்த மையத்தில் தேர்வு எழுதியவர்கள் தான் வெற்றி பெற்றுள்ளனர்.
இவர்கள் கடந்த ஓராண்டாக அரசின் பல்வேறு துறைகளில் அதிகாரியாக நல்ல ஊதியத்தில் பணியில் உள்ளனர். குரூப் 4 முறைகேடு போன்று கடந்த 2017ம் ஆண்டு நடந்த குரூப் 2ஏ தேர்வு எழுதிய நபர்களிடம் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வசூலித்து மோசடியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கு முறைகேட்டிலும் டிஎன்பிஎஸ்சி ரெக்கார்டு கிளார்க் ஓம்காந்தன் உதவியுடன் ஜெயகுமார் ஆகியோர் தான் ஈடுபட்டது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இடைத்தரகராக செல்பட்ட சிவகங்கை மாவட்டம் பெரியகண்ணணூர் கிராமத்தை சேர்ந்த சித்தாண்டி என்பவர், சென்னை ஆயுதப்படை போலீஸ் பிரிவில் எஸ்.ஐ.யாக பணியாற்றி வருகிறார். இவர் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் உதவியுடன் கடந்த 3 ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்டோருக்கு இடைத்தரகராக செயல்பட்டு முறைகேடாக தேர்வில் வெற்றி பெற செய்துள்ளார்.
மேலும், அவரிடம் பணம் கொடுத்த அனைவரும் ராமநாதபுரம் மையத்தில் தான் தேர்வு எழுதிய உள்ளனர். உதவி ஆய்வாளர் சித்தாண்டியிடம் குரூப் 2 தேர்வுக்கு ரூ.15 லட்சமும், குரூப் 4 தேர்வுக்கு ரூ.9 லட்சமும் 200 பேர் நேரடியாக பணம் கொடுத்து தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் இந்த மோசடி பின்னணியில் டிஎன்பிஎஸ்சி உயர் அதிகாரிகள் மற்றும் ஆளுங்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் நேரடியாக ஈடுபட்டு உள்ளதும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அதோடு இல்லாமல், கடந்த 2017ம் ஆண்டு நடந்த குரூப் 2 தேர்வில் உதவி ஆய்வாளர் சித்தாண்டியின் மனைவி பிரியா தமிழகத்தில் 5வது இடமும், அவரது சகோதரன் வேல்முருகன் இருந்து தொடங்கி உள்ளது. இந்த மெகா மோசடியில் டிஎன்பிஎஸ்சி உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இல்லாமல் கீழ் நிலையில் உள்ள ஊழியர்கள் மற்றும் இடைத்தரர்கள் மட்டும் செய்து இருக்க முடியாது. எனவே இதன் பின்னணியில் உள்ள உயர் அதிகாரிகள் குறித்து சிபிசிஐடி போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி - அமைச்சர் செங்கோட்டையன்
இந்தாண்டு பொதுத் தேர்வுக்கு 52 இடங்களில் தேர்வு மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 20 கி.மீ. தொலைவில் சென்று தேர்வு எழுதி வந்த நிலையை மாற்றி தற்போது 10 கி.மீ. தொலைவில் பள்ளிகளிலேயே தேர்வு நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தேர்வு மையங்கள் அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. 8 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க நிதி இல்லாததால், ஒரு வகுப்பில் 4 மாணவருக்கு ஒரு டேப் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறைத்தேர்வு, மதிப்பெண் பதிவிறக்கம் சார்நது அறிவுரைகள்!!
பொருள் : பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2020 - பள்ளி மாணாக்கர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் ( சிறப்பு அனுமதி திட்டத்தில் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் உட்பட ) அறிவியல் பாட செய்முறைத் தேர்வு நடத்துதல் , மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் ( Download ) செய்தல் மற்றும் சில அறிவுரைகள் வழங்குதல் – சார்ந்து .
ஆணை : நடைபெறவிருக்கும் மார்ச் 2020 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதவுள்ள மாணாக்கர்களுக்கு ( பள்ளி மற்றும் தனித்தேர்வர்கள் , சிறப்பு அனுமதி திட்டத்தில் விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்கள் உட்பட ) அறிவியல் செய்முறைத் தேர்வுகளை 21 . 02 . 2020 முதல் 28 . 022020 வரை நடத்திட , அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள் முதல்வர்களுக்கு கீழ்க்கண்டவாறு அறிவுரை வழங்கப்படுகிறது .
கீழ்க்குறிப்பிட்டுள்ள கால அட்டவணை மற்றும் அறிவுரைகளைப் பின்பற்றி செய்முறைத் தேர்வுக்கான அனைத்துப் பணிகளையும் முடித்திட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது .
Click here to view pdf
Click here to view instructions pdf

போலிச் சான்றிதழ்கள் மூலம் வேலை பெற்ற ஆசிரியர்கள் மீது 48 வழக்குகள் பதிவு!!
உத்தரப் பிரதேசத்தில் போலிச் சான்றிதழ்களை சமர்ப்பித்து ஆசிரியர்கள் வேலைக்கு சேர்ந்துள்ளது தொடர்பாக 48 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஷாஜஹான்பூர் மற்றும் பரேலி மாவட்டங்களில் போலி பட்டப்படிப்பு சான்றிதழ்களுடன் ஆசிரியர்கள் வேலை பெற்றுள்ளது குறித்து பல்வேறு புகார்கள் குவிந்துள்ளன.
மாவட்ட கல்வித்துறை அளித்த புகாரின் அடிப்படையில் மேற்குறிப்பிட்ட இரு மாவட்டங்களில் உள்ள பல்வேறு காவல்நிலையங்களில் மொத்தம் 48 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக, புகாரின் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் இந்த ஆசிரியர்கள் போலி ஆவணங்களை சமர்ப்பித்தது உறுதியானது. எனவே இவர்கள் பணியில் இருந்து கடந்த 2016ல் வெளியேற்றப்பட்டனர். இருப்பினும், இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
பரேலி மாவட்ட அதிகாரி தனுஜா திரிபாதி இதுகுறித்து, 'போலி சான்றிதழ்கள் அளித்த ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்தார்.
இரண்டு மாவட்டங்களில் மொத்தம் 48 ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், மற்ற மாவட்டங்களிலும் இதுபோன்று ஆசிரியர்கள் ஏதேனும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

5&8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தடைகோரிய வழக்கில் மத்திய,மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்!!

மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
*விடைத்தாள்களை அந்தந்த பள்ளிகளில் திருத்துவதா வேறு பள்ளிகளில் திருத்துவதா என இன்னும் முடிவாகவில்லை. அரசு தரப்பு.
*மறுதேர்வில் பெயிலானால் அக்குழந்தையின் நிலை என்ன?
நீதிமன்றம் கேள்வி.
வழக்கு பிப்.19 தேதிக்கு ஒத்திவைப்பு.
தொடக்கக் கல்வி இயக்குநர் தலைமையில் நாளை ( 31.01.2020) ஆய்வுக் கூட்டம்.
தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளில் வட்டாரக் கல்வி அவைவர்கள் ஒரு மாதத்திற்கு குறைந்தது 20 தொடக்க மற்றும் நடுதலைப் பள்ளிகளைப் பார்வையிடவும் 5 பள்ளிகளை ஆண்டாய்வு மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .
மேலும் வட்டாரக் கல்வி அலுவலகங்களை மாவட்ட கல்வி அவரவர்கள் முன்னறிவிப்பின்றி பார்வையிடவும் ஆண்டாய்வு மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .
மேலும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் முதன்மைக் கல்வி அலுவலர்களால் தவறாமல் நடத்தப்பட வேண்டும் எனவும் , அறிவுறுத்தப்பட்டுள்ளது .
2 வட்டாரக் கல்வி அலுவலர்கள் , மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநரால் வேலுார் , கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களுக்கு வேலூர் மண்டல அளவில் ஆய்வுக் கூட்டம் 31 .01.2020 அன்று காலை 10 . 00 மணிக்கு வேலூர் மாவட்டம் , சத்துவாச்சாரி ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது . கூட்டத்தில் பார்வையில் கண்ட செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்ட பொருண்மைகள் சார்ந்தும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள் சார்ந்தும் ஆய்வு செய்யப்படவுள்ளது . எனவே கூட்டப் பொருள் சார்பான படிவங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களுடன் கூட்டத்தில் கலந்து கொள்ள முதன்மைக் கல்வி அலுவலர்கள் , மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . -

தொடக்கக்கல்வி இயக்குநர் தலைமையில் நடைபெற்ற BEOs/DEOs ஆய்வுக்கூட்டத்தில் பள்ளிகளில் ஆய்வின்போது மேற்கொள்ள வேண்டிய படிவம் தொடர்பான அறிக்கை வெளியீடு!
தொடக்கக் கல்வி இயக்ககம் BEOS / DEOS ஆய்வு - கூட்டப்பொருள் விவரம் :
1. வட்டாரக் கல்வி அலுவலர்கள் பள்ளிகளை முன்னறிவிப்பின்றி பார்வையிட்ட விவரங்கள் - School Surprise Visit ( படிவம் - 1 )
2. வட்டாரக் கல்வி அலுவலர்கள் பள்ளிகளை ஆண்டாய்வு ( Annual Inspection சார்பான விவரம் ( படிவம் - 2 )
3.வட்டாரக் கல்வி அலுவலகங்களை DEOS முன்னறிவிப்பின்றி பார்வையிடப்பட்ட விவரம் ( BEOS Office Surprise Inspection ) ( படிவம் - 3 )
4. முதன்மைக் கல்வி அலுவலர்களால் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு மாதாந்த ஆய்வு கூட்டம் ( Monthly Review Meeting ) நடத்தப்பட்ட விவரம் ( படிவம் - 4 )
5. முதன்மைக் கல்வி அலுவலர்களால் மாவட்ட கல்வி அவர்களுக்கு மாதாந்தா கூட்டம் ( Monthly Review Meeting ) நடத்தப்பட்ட விவரம் ( படிவம் - 5 )
6. Spoken English - வாரம் ஒரு பாடவேளை நடைபெறுவதை ஆய்வு செய்த விவரம் ( படிவம் - 1 )
7. கணித உபகரணப் பெட்டிகள் பள்ளிகளில் பயன்படுக்கப்படுவதையும் கணிதப் பாடத்துடன் வாய்ப்பாடு சொல்லிக் கொடுக்கப்படுவதையும் ஆய்வு செய்யப்பட்ட விவரம் ( படிவம் )
8. ஆங்கிலப் பாடத்தில் Dictation நடைமுறையில் உள்ளதையும் , Dictionary பயன்பாடு பற்றிய ஆய்வு செய்த விவரம் ( படிவம் - 8 )
9. மாணவர்களின் கட்டுரை பயிற்சி ஏடு ( Composition Note ) திருத்தம் செய்யப்பட்டதை ஆய்வு செய்த விவரம் ( பாடிவம் - 9 )
10 . மாணவர்களின் கையெழுத்துப் பயிற்சி ஏடுகளான இரண்டு வரி மற்றும் நான்கு வரி ஏடுகள் . ( Two Lines , Four Lines Note book ) திருத்தம் செய்யப்பட்டதை ஆய்வு செய்த விவரம் ( படிவம் 10 )
11. 3 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகளில் விளையாட்டுப் போட்டிக் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டதை ஆய்வு செய்த விவரம் ( படிவம் - 11 )
12 . மாணவர்களுக்கான நலத்திட்டங்கள் ( Welfare Schemes ) பள்ளிகளில் செயல்படுத்தப்படுவது ஆய்வு செய்த விவரம் ( படிவம் - 12 முதல் 20 வரை )
13 . ஊராட்சி ஒன்றிய தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் பயன் பாட்டில் இல்லாத இடிக்கப்பட வேண்டிய கட்டிடங்கள் ( To be demolished buildings ) சார்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் விவரம் ( படிவம் - 21 )
14 . ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளி கட்டடங்களில் சிறப்பு பராமத்து பணி ( Special Repair ) மேற்கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரம் ( படிவம் - 22 )
15 . ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு மின்கட்டணம் ( Electricity ) தொடக்கக் கல்வி இயக்ககத்திலிருந்து பெறப்பட்டு செலவினங்கள் மேற்கொள்ளப்பட்ட பயன்பாட்டு சான்றிதழ் ( Utility Certificate ) அனுப்பிய விவரம் ( படிவம் - 23 )
16 . அரசு உதவிபெறும் தொடக்க நடுநிலைப் பள்ளிகளுக்கு : இயக்ககத்திலிருந்து பெறப்பட்ட பராமரிப்பு மானியம் ( Maintenance Grant ) பள்ளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட விவரம் ( படிவம் - 24 )
17. மாநில கணக்காயரின் தணிக்கைத் தடைகள் மற்றும் அவற்றை நிவர்த்தி செய்த அறிக்கை குறித்த விவரம் ( படிவம் - 25 )
18 . நீதிமன்ற வழக்குகள் சார்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் விவரம் ( படிவம் - 26 முதல் 30 )

Subscribe to:
Posts (Atom)