Search

TNPSC & TRB - பொதுத்தமிழ் – ஒருமை, பன்மை பிழை நீங்கிய தொடர்

Wednesday 27 April 2022

ஒருமை, பன்மை பிழை நீங்கிய தொடர்

இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஒருமை, பன்மை பிழை நீங்கிய தொடர் முக்கியமான பொது தமிழ் குறிப்புகளாகும்.  இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.

ஒரு பொருளை மட்டும் குறிப்பது ஒருமை, ஒன்றுக்கு மேற்பட்ட பொருட்களைக் குறிப்பது பன்மை.

ஒருமை – பன்மை
புத்தகம்  – புத்தகங்கள்
கால்       – கால்கள்
மனிதர்   –  மனிதர்கள்

ஒருமை, பன்மை கொண்ட பெயர்ச்சொற்களை எழுதும்போது அவ்வவற்றிற்குத் தகுந்தாற்போல் வினைச்சொற்களைக் கொண்டு முடிக்க வேண்டும்.

(எ.கா) ‘மாடு மேய்கின்றன’ என்ற சொற்றொடரில் மாடு ஒருமை. ஒருமைப் பெயரைக் குறிக்கும்போது ‘மேய்கின்றன’ என்ற பன்மைப் பெயரைக் குறிக்கும். வினைச் சொல்லைப் பயன்படுத்துவது தவறு. ‘மேய்கிறது’ என்ற ஒருமைப் பெயரைக் குறிக்ககூடிய வினைச்சொல்லைப் பயன்படுத்த வேண்டும். ஆகவே

  • மாடு மேய்கின்றன – தவறு
  • மாடுகள் மேய்கின்றன – சரி
  • மாடு மேய்கிறது – சரி

வாக்கியங்களைப் பிழையின்றி எழுத சில இலக்கண நெறிகளைக் கையாள வேண்டும்.

1. உயர்திணை எழுவாய் உயர்திணைப் பயனிலையை பெற்று வரும். அதே போன்று அஃறிணை எழுவாய்க்குப் பின் அஃறிணை வினைமுற்றே (து.று) வரவேண்டும்
(எ.கா)

  • அவன் மிகவும் சிறந்தவன்
  • சுப்பன் மிக நல்லவன்
  • வண்டி வந்தது, கோழி கூவிற்று

2. எழுவாய் ஐம்பால்களுள் எதில் உள்ளதோ அதற்கேற்ற வினைமுற்றையே பயன்படுத்த வேண்டும்.
(எ.கா)

  • கோதை படித்தது –  தவறு
  • கோதை படித்தாள் – சரி

3. ‘கள்’ விகுதி பெற்ற எழுவாய்,வினைமுற்றிலும் ‘கள்’ விகுதி பெறும். அதே போன்று எழுவாய் ‘அர்’ விகுதி பெற்றிருந்தால் மரியாதைப் பன்மை வினைமுற்றில் ‘ஆர்’ விகுதி வருதலும், பலர்பால் வினைமுற்றில் ‘அர்’ விகுதி வருதலும் தெரிந்து கொள்ளலாம்.
(எ.கா)

  • மாணவர்கள் தேர்வு எழுதினார் – தவறு
  • மாணவர்கள் தேர்வு எழுதினார்கள் – சரி

4. எழுவாய் ஒருமையாயின் வினைமுற்றும் ஒருமையாகவே இருக்க வேண்டும்
(எ.கா)

  • என் எழுதுகோல் இதுவல்ல – தவறு
  • என் எழுதுகோல் இது வன்று – சரி

5. தொடரில் காலத்தை உணர்த்தும் குறிப்புச் சொற்கள் இருப்பின் அதற்கேற்ற காலத்திலமைந்த வினைமுற்றையே எழுத வேண்டும்.(எ.கா)

  • தலைவர் நாளை வந்தார் – தவறு
  • தலைவர் நாளை வருவார் – சரி

6. கூறியது கூறல் ஒரே தொடரில் இடம்பெறக் கூடாது.

7. வாக்கியத்தில் உயர்திணை அஃறிணைப் பெயர்கள் கலந்து வந்தால், சிறப்புக் கருதின் உயர்திணைப் பயனிலை கொண்டும் இழிவு கருதின் அஃறிணைப் பயனிலை கொண்டும், வாக்கியத்தை முடிக்க வேண்டும்.
(எ.கா)

  • மூடனும் மாடும் குளத்தில் குளித்தனர் – தவறு
  • மூடனும் மாடும் குளத்தில் குளித்தன – சரி

8.உயர்திணை, அஃறிணைப் பெயர்கள் விரவி வந்தால், மிகுதி பற்றி ஒரு துணைவினை கொண்டு முடித்தல் வேண்டும்.(எ.கா)

  • ஆற்று வெள்ளத்தில் மக்களும் மரங்களும் குடிசைகளும் ஆடுமாடுகளும் மிதந்து சென்றனர் – தவறு
  • ஆற்று வெள்ளத்தில் மக்களும் மரங்களும் குடிசைகளும் ஆடுமாடுகளும் மிதந்து சென்றனர் – சரி

9. ‘ஒவ்வொரு’ என்னும் தொடர் ஒருமையையும் ஒவ்வொருவர் என்னும் தொடர் பன்மையையும் வினைமுற்றாகக் கொள்ளும்.
எ.கா

  • ஒவ்வொரு நிகழ்ச்சியும் சிறப்பாக அமைந்தது
  • ஒவ்வொன்றும் நாள்தோறும் வெடிக்கிறது

ஓவ்வொருவர்: ஒவ்வொருவர் எனும் தொடர் பன்மை வினைமுற்றை கொள்ளும்

  • ஒவ்வொருவரும் குறள் படிக்கின்றனர்
  • செல்வி, லதா, கீதாஞ்சலி ஒவ்வொருவரும் நன்கு  படிக்கின்றனர்
  • ஒவ்வொரு நாலும் ஒவ்வொரு உண்மையை விளக்குகின்றது
  • ஒவ்வொரு – உயிர்மெய் முன் வரும்
  • ஒவ்வோர் – உயிர் முன் வரும்

10. ஐயம் காட்டும் ஓகாரம் வரும்போது பிரிப்புக்காக வரும் ‘ஆவது’ என்னும் சொல்லின் பின்னும் ‘அல்லது’ எனும் சொல் வருதல் கூடாது. வினைமுற்று ஒருமையாகவே முடியும்.

  • ஒன்றோ அல்லது இரண்டோ தருக (தவறு)
  • ஒன்றோ இரண்டோ தருக (சரி)
  • நாயாவது நரியாவது தின்றிருக்கும் (தவறு)
  • நாய் அல்லது நரி தின்றிருக்கும் (சரி)  என்று தான் வர வேண்டும்

Read More »
 

Most Reading

Tags

Sidebar One