Search

Breaking News : தமிழகத்தில் இன்று ( ஜூலை 31 ) மேலும் 5,881 பேருக்கு கொரோனா தொற்று

Friday 31 July 2020

தமிழகத்தில் ( 31.07.2020 ) இன்று 5,881 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  2,45,859 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,013   பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள் :

விருதுநகர் - 357

செங்கல்பட்டு - 334

திருவள்ளூர் - 373

மாவட்ட வாரியான பாதிப்பு.( 31.07.2020 )

மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் :5,778

இன்றைய உயிரிழப்பு : 97
Read More »

+1 Result - பள்ளிகள் வகைப்பாடு வாரியான தேர்ச்சி விகிதம்

Read More »

அனைத்து வகைப் பள்ளிகளிலும் சுதந்திர தினத்தன்று தேசிய கொடியினை ஏற்றி விழாவினை எளிமையாக கொண்டாடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளிக்கல்வித்துறை வெளியீடு.

பள்ளிக் கல்வி - 74வது சுதந்திர தின விழா கொண்டாடுவது சார்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

வழிகாட்டு நெறிமுறைகள் :

1. அனைத்து முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்கள் / மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள் அனைத்து கல்வி அலுவலகங்களிலும் சுதந்திர தின விழாவினை , சமூக இடைவெளியியைப் பின்பற்றி எளிமையான முறையில் கொண்டாடுதல் வேண்டும்.

 2. அனைத்து வகைப் பள்ளிகளிலும் தேசிய கொடியினை ஏற்றி விழாவினை எளிமையாக கொண்டாடுதல் வேண்டும்.

3. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையின் முன் களப் பணியாளர்களாக செயல்படும் மருத்துவர்கள் , சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களின் சேவையினைப் பாராட்டும் பொருட்டு அவர்களை மேற்படி விழாவிற்கு அழைத்து சிறப்பிக்க வேண்டும்.

4. கொரோனா தொற்று ஏற்பட்டு தற்போது பூரண குணமடைந்த நபர்களையும் மேற்படி விழாவிற்கு அழைக்கலாம்.

குறிப்பு :

* சுதந்திர தின விழாவின் போது , கொரோனா தொற்று பாதுகாப்பு / தடுப்பு நடவடிக்கைகளான சமூக இடைவெளியை பின்பற்றுதல் , முகக்கவசம் அணிதல் மற்றும் கூட்டங்களைத் தவிர்த்தல் வேண்டும்.

* கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வசதி ஏற்படுத்துதல் மற்றும் கோவிட் -19 சார்பான சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளைப் கண்டிப்பாக பின்பற்றுதல் வேன்டும்.

மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி சுதந்திர தின விழாவினை எளிமையாக கொண்டாடி அதன் விவரத்தினை இவ்வியக்ககத்திற்கு அனுப்பி வைக்கும் படி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Read More »
 

Most Reading

Tags

Sidebar One