Search

4500 Most Important Common - English Sight Words for Primary Students

Wednesday 29 January 2020

Read More »

500 - Simple English Sentences For Teachers & Students To Use In Classroom

Read More »

4th Std - Term 3 - All Subject Mind Maps Download

4th Std - Term 3 - Tamil All Lesson Mind Map - Mr Gopinath - Download here

4th Std - Term 3 - English All Lesson Mind Map - Mr Gopinath - Download here

4th Std - Term 3 - Science All Lesson Mind Map - Mr Gopinath - Download here

4th Std - Term 3 - Social Science All Lesson Mind Map - Mr Selvakumar - Mr Gopinath - Download here
Read More »

5th Std - Term 3 - All Subject Lesson Mind Maps Download

5th Std - Term 3 - Tamil All Lesson Mind Map - Mr Selvakumar - Download here

5th Std - Term 3 - English All Lesson Mind Map - Mr Selvakumar - Download here

5th Std - Term 3 - Science All Lesson Mind Map - Mr Selvakumar - Download here

5th Std - Term 3 - Social Science All Lesson Mind Map - Mr Selvakumar - Download here
Read More »

4th& 5th Lesson plan January 4th week All subjects - PDF

Read More »

5th Std BOOK BACK ANSWER ALL SUBJECTS & ALL LESSONS - PDF

5th Std  BOOK  BACK  ANSWER  ALL  SUBJECTS  &  ALL   LESSONS  -  PDF - Click   Here  To  Download
Read More »

மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான தமிழ் வாசிப்புப் பயிற்சி புத்தகம் !!

Read More »

School Morning Prayer Activities - 30.01.2020


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 30.01.20

திருக்குறள்

திருக்குறள் : 367

அதிகாரம் : அவாஅறுத்தல்

அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்.

பொருள்:

ஒருவன் ஆசையை முழுதும் ஒழித்தால், அவன் கெடாமல் வாழ்வதற்கு உரிய நல்ல செயல் அவன் விரும்புமாறு வாய்க்கும்.

பழமொழி

Little strokes fell great oaks.

அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.

இரண்டொழுக்க பண்புகள்

1. நல்ல நண்பர்களோடு மட்டுமே சேர்வேன்.

2. எனது நண்பர்களுக்கு என்னால் முடிந்த அளவு எல்லா வகையிலும் உதவி செய்வேன்.

பொன்மொழி

ஒருவரது வாழ்வியல் இன்பங்கள் அவரது சுய நடவெடிக்கைகள் மூலம் கிடைக்கிறது....

------விவேகானந்தர்.

பொது அறிவு

ஜனவரி 30- இன்று தியாகிகள் தினம்

1. தியாகிகள் தினம் யார் நினைவாக கொண்டாடப்படுகிறது?

மகாத்மா காந்தி மறைந்த தினம் .

2. தியாகிகளின் இளவரசன் என்று போற்றப்படுபவர் யார்?

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.

English words & meanings

Desmology – study of ligaments. தசை நார் குறித்த படிப்பு மற்றும் அறிவியல்.

 Dauntless - shows fearlessness. எதற்கும் அஞ்சாத.

ஆரோக்ய வாழ்வு

சிறுதானியங்களில் பசையம் (குளுட்டன்) எனப்படும் ஒட்டும் தன்மை கொண்ட பசை போன்ற பொருள் காணப்படாத காரணத்தினால் செரிமானத் தன்மையை அதிகரிக்கிறது.

Some important  abbreviations for students

CASE - Commission for Alternative Sources of Energy

CCS - Cabinet Committee on Security

நீதிக்கதை

குரங்கை நம்பிய தோட்டக்காரன்

குறள் :
காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாம் தரும்.

விளக்கம் :
அறிவில்லாதவனை அவனிடத்துள்ள அன்பு காரணமாகத் தேர்ந்தெடுத்தது பதவியில் அமர்த்துவது, அரசனுக்கு அறியாமை பலவற்றையும் தரும்.

கதை :
ஒரு தோட்டத்தில் நிறைய குரங்குகள் இருந்தன. பல வருடங்கள் அங்கேயே இருந்ததால் தோட்டக்காரனுக்கும் நண்பர்களாயிருந்தன. தோட்டக்காரன் செய்யும் காரியங்களைப் பார்த்துப் பார்த்து குரங்குகளும் அவற்றைச் செய்து விளையாடும்.

ஒருமுறை தோட்டக்காரன் பக்கத்து ஊருக்குப் போக வேண்டியிருந்தது. குரங்குகளை அழைத்து விஷயத்தைச் சொன்னான்.

குரங்குகளுக்கு சந்தோஷம். ஆனால், அவற்றுக்கு ஒரு பிரச்சனை. எந்தச் செடிக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்றுவது என்று தெரியவில்லை.

அது ஒண்ணும் பெரிய பிரச்சனையில்லை. வேர் பெருசா இருந்தா நிறைய தண்ணீர் ஊத்துங்க. சின்ன வேரா இருந்துச்சுனா கொஞ்சமா, ஊத்துங்க என்று யோசனை சொன்னான்.

வெளியூர் போய் திரும்பி வந்து தோட்டத்தப் பார்த்த தோட்டக்காரனுக்கு அதிர்ச்சி. அத்தனை செடிகளும் பிடுங்கப்பட்டு காய்ந்து கிடந்தன. என்னாச்சு? என்றான் தோட்டக்காரன்.

வேர் பெருசா இருக்கா, சின்னதா இருக்கானு பார்பதற்காக செடியெல்லாம் பிடுங்கினோம் என்றன குரங்குகள்.

புத்தியில்லாதவர்களிடம் பொறுப்பை கொடுப்பது, புத்தியில்லாத செயல்.

நீதி :
அறிவில்லாதவனிடம் ஒரு செயலை ஒப்படைக்கக் கூடாது.

இன்றைய செய்திகள்

30.01.20

* மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மற்றும் நேரு யுவகேந்திரா சங்கதன் சார்பில் 12-வது பழங்குடி இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சி சென்னையில் வரும் பிப்ரவரி 1-ம் தேதி தொடங்குகிறது.

* வெளிமாநிலத்தவர்களுக்கு உரிய ஆவணங்கள் இன்றி சிம்கார்டு விற்கும், விற்பனையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று ஈரோடு மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.

* கொரோனா வைரஸ் பாதிப்பினால்  சீனாவுக்கு விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

* ஆஸ்திரேலிய ஓபன் ஆடவர் பிரிவில்நோவக் ஜோகோவிச், ரோஜர்பெடரரும், மகளிர் பிரிவில்ஆஷ்லே பார்டி, சோபியாகெனினும் அரைஇறுதிக்கு முன்னேறினர்.

*  நியூசிலாந்துக்கு எதிராக பரப்பரப்பாக நடைபெற்ற 3- வது டி20 போட்டியில் சூப்பர் ஓவரில் இரு சிக்ஸர்கள் அடித்து வெற்றி பெற வைத்தார் ரோஹித் சர்மா. இதன் மூலம்  டி20 தொடரை வென்றது இந்தியா அணி.

Today's Headlines

🌸Central Ministry of Internal Affairs, Central Ministry of Youth Affairs, Ministry of Games and Nehru Yuvakendra Sankethan organises 12th Tribal Junior Exchange Programme to be commenced in Chennai on February 1st.

🌸Erode police department has warned that case will be filed against those who buy and sell sim cards  without proper records.

🌸Flights to China have been stopped due to the corona virus being spread.

🌸In Australian Open tennis, Novak djokovic and Roger Federer from the men's side and Ashleigh barty and Sofia kenin from the women's side progressed to semi-finals.

🌸Rohith Sharma has hit two sixes in super over of the third T-20 match against Newzealand and made India win the T-20 series.

Prepared by
Covai women ICT_போதிமரம்
Read More »

Flash News : 5,8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தடை கோரி மனு!

5,8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பான அரசாணைக்கு தடை கோரி மனு தாக்கல்.

வழக்கறிஞர் லூயிஸ் தாக்கல் செய்த மனு விரைவில் உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வருகிறது.

5,8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அரசாணையை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் எனவும் , தரமான கல்விமுறை அமலில் இருக்கும் நாடுகளில் கூட 5,8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இல்லை எனவும் , 5,8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அரசாணையை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வருகிறது
Read More »

இன்று காலை 11.00 மணிக்கு அனைத்து பள்ளிகளிலும் எடுக்க வேண்டிய தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி !

நாளை காலை 11.00 மணிக்கு அனைத்து பள்ளிகளிலும் எடுக்க வேண்டிய தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி !!
உறுதிமொழி 

இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத , உளமார்ந்த பற்றுள்ள இந்தியக் குடிமகன் / குடிமகள் ஆகிய நான் , நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிவேன் . தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு , எவர்மீதும் தெரிந்தோ , தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம் , வாக்கு , செயல் என்ற எந்த வகையிலும் கடைப்பிடிக்கமாட்டேன் என்று இதனால் உளமார உறுதியளிக்கிறேன் . அரசியலமைப்பின் அடிப்படைக் கருத்திற்கிணங்க , சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும் , உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதையும் உணர்வேன் . இந்திய அரசியலமைப்பின்பால் - எனக்குள்ள முழுப்பற்றிற்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்குமென்றும் இதனால் உளமார உறுதியளிக்கிறேன் .

Read More »

இன்று 30.01.2020 அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் 2 நிமிடம் அமைதி காத்தல்" வேண்டும் - Proceedings

அனைத்து பள்ளிகலும் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு 30.01.2020 அன்று காலை 11.00 மணியளவில் இரண்டு நிமிடம் மௌனம் செலுத்துதல் மற்றும் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி எடுக்க வேண்டும்! 

 

IMG_20200129_190401

சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு 30.01.2020 அன்று காலை 11.00 மணியளவில் இரண்டு நிமிடம் மௌனம் செலுத்துதல் மற்றும் உறுதி மொழி எடுக்கவும் அனைத்து பள்ளிகளுக்கும் தெரிவிக்கப்படுகிறது - CEO,  வேலூர்.
Read More »

8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பா? - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.

IMG_20200129_161857

8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு - செங்கோட்டையன் மறுப்பு

பள்ளி முடிந்த பிறகு, பொதுத்தேர்வுக்காக  8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 1 மணி நேரம் சிறப்பு வகுப்பு நடத்தப்படும் என்று கல்வித்துறை உத்தரவு பிறப்பித்ததாக வரும்  தகவல் வதந்தியே- அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் ஆர்வத்தின்படியே அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது; மாணவர்கள் விரும்பினால் பள்ளி நடைபெறும் நேரத்திலேயே சிறப்பு வகுப்பில் பயிற்சி பெறலாம்- என்று அமைச்சர் செங்கோட்டையன் புதிய  விளக்கம்
Read More »

தவறான தகவல் - 2,000 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவில்லை!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தாமதமாக பள்ளிக்கு வந்ததால் 2,000 ஆசிரயர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதாக நேற்று செய்தி வெளியானது. ஆனால் அது தவறான தகவல் என்று சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரி மறுப்பு தெரிவித்துள்ளார்.

முதல் நாள் அறிவிப்பு வருவதும் மறுநாள் அதனை மறுத்து ஒரு அறிக்கை வருவதும் பள்ளிக்கல்வித் துறையில் குழப்பம் நிலவுவதையே காட்டுகிறது.

Read More »

ஆசிரியர்களில் 94 சதவிகிதம் பேர் அதிக அளவு மன அழுத்தத்தில் இருக்கின்றனர் - ஆராய்ச்சியாளர்கள் அறிவிப்பு!!

மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் பெற்றோர்களுக்கு அடுத்தபடியாக நமக்கு கற்பித்த/கற்பிக்கும் ஆசிரியரை வைத்து போற்றி வருகிறோம். குழந்தைகளுக்கு கல்வி மட்டுமின்றி ஒழுக்கம் உள்ளிட்ட வாழ்வியல் முறைகளையும் ஆசிரியர்கள் கற்றுத் தருகின்றனர்.

இந்நிலையில், ஆசிரியர்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களில் 94 சதவிகிதம் பேர் அதிக அளவு மன அழுத்தத்தை அனுபவிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மேலும், ஆசிரியர்களின் மன அழுத்தம் மாணவர்களிடையே பல எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு கற்பித்தல் திறமையை பல ஆசிரியர்கள் மிகவும் எளிதாக புகுத்தி விடுகின்றனர். ஆனால், தற்போதைய காலகட்டத்தில் மற்ற பணிகளைப் போன்று ஆசிரியப் பணியிலும் வேலைப்பளு காரணமாகவும் மற்றும் பல்வேறு காரணங்களாலும் மன அழுத்தம் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் மிசவுரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் ஆசிரியர்களிடம் மன அழுத்தம் அதிகரிப்பதும், அது மாணவர்களிடையே எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் தங்களது பணிகளில் பல்வேறு இடையூறுகளை சந்திக்கின்றனர். அதனை அவர்கள் சமாளிக்க முடியாததால் மன அழுத்தமாக மாறி சில நேரங்களில் அவற்றை மாணவர்களிடையே வெளிப்படுத்துகின்றனர். சில நேரங்களில் நேர்மறையான மன அழுத்தமாகவும் இருப்பதாக கூறுகின்றன. எடுத்துக்காட்டாக, மாணவர்களின் தேர்வு வெற்றி குறித்து ஆசிரியர்கள் சிந்திப்பது உள்ளிட்டவை இதில் அடங்கும்.

ஜர்னல் ஆஃப் ஸ்கூல் சைக்காலஜியில் வெளியிடப்பட்ட ஆய்வில் மிட்வெஸ்டில் உள்ள ஒன்பது நடுநிலைப் பள்ளிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளை வைத்து ஆராய்ச்சிக்குழு முடிவு செய்துள்ளது. ஆசிரியர் மன அழுத்தம் மற்றும் சமாளித்தல், மாணவர்களின் கவனச் சிதறல், சமூக சிக்கல்கள், மாணவர்களின் விஷயத்தில் பெற்றோர்களின் ஈடுபாடு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

பல்வேறு விதமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மன அழுத்தம் மிக முக்கியமானதாக தெரிவிக்கப்படுகிறது. அதே நேரத்தில் ஆசிரியர்கள் மன அழுத்தத்தை சமாளிக்கும் வழிகளில் மட்டும் வேறுபடுகின்றனர்.

ஆய்வில் பங்கேற்றவர்களில் 66 சதவிகிதம் பேர், அதிக மன அழுத்ததையும், அதிக சமாளிப்பையும், அதேபோன்று 28 சதவிகிதம் பேர் அதிக மன அழுத்தத்தையும், குறைந்த சமாளிப்பையும் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களில் ஆறு சதவிகிதம் பேர் மட்டுமே குறைந்த அளவு மன அழுத்தத்தை கொண்டுள்ளனர்.

எனவே, அந்தந்த மாவட்ட அளவிலான கல்வி அதிகாரிகள், பள்ளி நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் ஆசிரியர்களின் இந்த நிலைமை குறித்து ஆராய்ந்து தீர்வு காண வேண்டும். உடனடியாக ஆராய்ந்து அதனை சரி செய்யும் பட்சத்தில் ஆசிரியர்கள் மட்டுமின்றி, மாணவர்கள் பாதிக்கப்படுவதையும் தவிர்க்கலாம்.
Read More »

RTI - தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்கள் எத்தனை பதிவேடுகள் பராமரிக்க வேண்டும்?

 தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்கள் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் சார்பாக RTI தகவல்..

# தொடக்கக் கல்வித்துறையில் 1,2,3 ஆம் வகுப்பு ஆசிரியர்கள் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்
IMG-20200129-WA0007
Read More »

இனி ஆசிரியர்கள் அவரவர் சொந்த மாவட்டங்களில் பணி செய்யலாம்!

இசை, கலாச்சாரம் மற்றும் கற்றல் ஆகியவற்றின் இந்துக் கடவுளாகக் விளங்கும் சரஸ்வதி பூஜை இன்று (புதன்கிழமை) மேற்கு வங்காளம் முழுவதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது.இந்தப் பண்டிகையின் பெயர் பசந்த் பஞ்சமி, அதாவது வசந்த காலத்தின் வருகையை அறிவித்தல் என்பதாகும். புதன்கிழமை முதல் வியாழக்கிழமை காலை வரை இது நீடிக்கும் என பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல வீடுகளில் வியாழக்கிழமை அன்று வழிபாடு தொடங்கும்.

இதில் கலந்த கொண்ட
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி "அனைத்து ஆசிரியர்களையும் அவரவர் சொந்த மாவட்டங்களில் பணியமர்த்தும்" கொள்கை முடிவை அறிவித்துள்ளார். ஆசிரியர்களுக்கு சரஸ்வதி பூஜை பரிசாக இது அமைந்தது.
சரஸ்வதி பூஜை காரணமாக மாநில அரசு புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மூன்று நாள் விடுமுறை அறிவித்துள்ளது.
சனி மற்றும் ஞாயிறு வார விடுமுறை நாட்களாக இருப்பதால், மாநில அரசு ஊழியர்களுக்கு ஐந்து நாள் விடுமுறை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More »

3 மாவட்ட தொடக்க/நடுநிலைப் பள்ளிகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க BEO,DEO,CEOகளுக்கு உத்தரவு - Director Proceedings.

தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் , சென்னை - 600 006 .

நக . என் 11007 / அ / NOR , நான் 12000 பொரும் : தொடக்கக் கல்வி - கற்றல் கற்பித்தல் பணி - வட்டாக் கல்வி அலுவார்கள் , மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அதுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் - பள்ளிகள் பார்வை , ஆண்டாய்வு மற்றும் கல்விசார் பணிகள் குறித்த ஆய்வு சார்பு.

IMG_20200129_102315
Read More »

8ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகள் கிடையாது இயக்குநர் தகவல்தமிழகத்தில் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை வேளைகளில் 1 மணி நேரம் சிறப்பு வகுப்பு இல்லை

ஈரோடு மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலரின் சுற்றறிக்கை பற்றி தொடக்கக் கல்வி இயக்குனரகம் விளக்கம்.

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சிறப்பு வகுப்பு எதுவும் நடத்தப்படாது என தொடக்கக் கல்வி இயக்குநரகம் தெளிவுபடுத்தியுள்ளது

2019 செப்டம்பர் 22ல் வெளியான சுற்றறிக்கை அடிப்படையில் கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார் எனவும் அறிவிப்பு.
Read More »
 

Most Reading

Tags

Sidebar One