பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 04.02.20
திருக்குறள்
அதிகாரம்:ஊழ்
திருக்குறள்:371
ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி.
விளக்கம்:
பணம் சேர்வதற்கு உரிய விதி நமக்கு இருந்தால், சேர்ப்பதற்கான முயற்சி உண்டாகும். இருப்பதையும் இழப்பதற்கான விதி இருந்தால் சோம்பல் உண்டாகும்.
பழமொழி
A little string will tie a little bird
சிறு துரும்பும் பல் குத்த உதவும்.
இரண்டொழுக்க பண்புகள்
1. தேசத் தந்தை மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர் மற்றும் காமராஜர் போன்ற தன்னலமற்ற பெருந்தலைவர்கள் போல ஆக முயற்சிப்பேன்.
2. அதையே என் வாழ்நாளின் இலட்சியமாக கொள்வேன்.
பொன்மொழி
மனிதனின் இன்பம் அவனது வாழ்க்கையில் நியாயமாக பெற்ற வெற்றி தான் நிர்ணயிக்கிறது.
------- இறையன்பு
பொது அறிவு
பிப்ரவரி 4- இன்று உலக புற்றுநோய் ஒழிப்பு தினம்
1. புற்றுநோயை குணமாக்கப் பயன்படும் மின்காந்த அலைகளின் பெயர் என்ன?
காமா கதிர்கள் (Gamma rays).
2. புற்றுநோயை குணமாக்கும் 'பெரில்லியல் ஆல்கஹால்' என்ற அமிலம் அதிகமாக உள்ள பழ வகை எது?
ஆரஞ்சுப் பழம்.
English words & meanings
Helminthology – study of parasitic worms. ஒட்டுண்ணிகள் குறித்த படிப்பு மற்றும் அறிவியல்.
Heliotrophic - movement of plants towards sun. சூரிய ஒளியை நோக்கி அசைவு
ஆரோக்ய வாழ்வு
ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி யின் அளவை விட கொய்யாப்பழத்தில் 4 மடங்கு அதிகமாக வைட்டமின் சி உள்ளது.
Some important abbreviations for students
econ. - economy.
esp. - especially
நீதிக்கதை
தமிழ் கதைகள் - திருக்குறள் நீதிக்கதைகள்
குருவிற்கு நேர்ந்த சோதனை
குறள் :
தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்.
விளக்கம் :
யாரையும் ஆராயாமல் தெளியக்கூடாது, நன்றாக ஆராய்ந்த பின்னர் அவரிடம் தெளிவாகக் கொள்ளத்தக்க பொருள்களைத் தெளிந்து நம்ப வேண்டும்.
கதை :
ஒரு துறவி அவருக்கு ஐந்து சீடர்கள், ஒரு நாள் அவர் அணிந்து இருந்த காவி உடை கிழிந்து விட்டது, அதனை தைக்க வேண்டி ஐந்து சீடர்களிடமும் காசு கொடுத்து ஊசி வாங்கி வரசொன்னார்.
அந்த ஐந்து சீடர்களும் இதுவரை ஊசியை பார்த்தது இல்லை. கடைக்கு சென்றார்கள் ஊசி கேட்டார்கள், அவர்களும் கொடுத்தார்கள். ஆனால் அது ஊசி தான் என்பதை அவர்கள் நம்பவில்லை, நம்மை ஏமாற்றுகிறார்கள் என்று வேறு கடைக்கு சென்று விட்டார்கள். அங்கும் அதையே கொடுத்தார்கள்.
இறுதியில் நீங்கள் எல்லாம் எங்களை ஏமாத்த நினைகிறீர்கள் என்று கூற, அந்த கடைக்காரன் இவைகள் முட்டாள் என புரிந்து கொண்டு, சீடர்களே உங்களுக்கு என்ன வேண்டும் என கேட்டார்கள், நடந்ததை கூற, சரி அதை எப்படி நீங்கள் ஊசி இல்லை என சொல்கிறீர்கள் என கடைக்காரன் வினவினான்.
ஐவரும் சொன்னார்கள் எங்கள் குரு ஐந்து பேரை அனுப்பி ஒரு ஊசி வாங்கி வர சொன்னார். கண்டிப்பாக அது மிகவும் பெரியதாக தான் இருக்கும் என கூற, அவரும் ஒரு பெரிய பனை மரத்தை காண்பித்து இது தான் ஊசி தூக்கி கொண்டு போங்கள் என் கூறிவிட்டு அதற்குரிய காசுகளை வாங்கிகொண்டார்.
நீதி :
ஒருவரின் வலிமையை அறியாமல் அவரை நம்பி ஒரு செயலை ஒப்படைத்தல் மிகவும் தவறு.
இன்றைய செய்திகள்
04.02.20
◆நீட் போட்டித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு தொடர்ந்து 36 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்று பி.டி.லீ. செங்கல்வராய நாயக்கர் சிறப்புப் பள்ளியின் மதிப்புறு இயக்குநர் எஸ்.எஸ்.ஜவஹர் அழைப்பு விடுத்துள்ளார்.
◆பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு அழுத்தம் தந்து அச்சுறுத்தாமல் பெற்றோர் ஆதரவாக இருக்க வேண்டும் என கல்வியாளர்களும், நிபுணர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
◆கடந்த 2019, செப்டம்பர் 30-ம் தேதி நிலவரப்படி, பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் ரூ.7.27 லட்சம் கோடியாக இருக்கிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
◆சீனாவையும் இதனையடுத்து உலக நாடுகள் பலவற்றையும் அச்சுறுத்தும் கரோனாவைரஸ் பரவி வருவதால் அதற்கு தீர்வுதான் என்ன? என்ற கேள்வி எழுந்து வரும் நிலையில் தாய்லாந்து மருத்துவர்கள் கரோனா சிகிச்சையில் குறிப்பிடத்தகுந்த வெற்றி கண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
◆இந்திய ஒருநாள், டி20 அணியின் துணைக் கேப்டன் ரோஹித் சர்மா நியூஸிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
Today's Headlines
🌸There is going to be a free coaching session for NEET for 36 days. Students can participate in this and get benefited says Respected Director of P. T. Lee Chengalvaraya Naicker Special School Mr. S. S. Jawahar.
🌸 The parents should be supportive to the students who are going to write the Public Examination. Students should not be pressurised advices the educationist and specialists.
🌸 According to the statistics on September 30th, 2019 the amount of unpaid loans in banks are Rs. 7.27 lakhs crore informed Central government.
🌸 As there is a threat of Corona Virus in China and all over the world and every one is searching for the solution the Thailand doctors declared that they found a remarkable success for the virus.
🌸 Indian player Rohit Sharma who is the vice captain for one day T-20 is not able to play in the 3 sets of one day match and two test matches.
Prepared by
Covai women ICT_போதிமரம்