Search

5 மற்றும் 8 வகுப்பு ஆண்டு இறுதித் தேர்வு 60 மதிப்பெண்களுக்கே நடைபெறும் - பள்ளிக்கல்வி ஆணையர் அறிக்கை முழு விவரம்.

Monday 3 February 2020

தமிழ்நாட்டில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை ( Continuous and comprehensive Evaluation ) 2012 - 2013 ஆம் கல்வியாண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது . இம்முறையில் வளரறி ( Formative Assessment ) மதிப்பீட்டிற்கு 40 மதிப்பெண்களும் தொகுத்தறி பதிப்பீட்டிற்கு ( Summative Assessment ) 60 மதிப்பெண்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .

வளரறி மதிப்பீடு FA ( a ) + FA ( b ) என இரண்டு வகைகளில் மதிப்பீடு செய்யப்படுகின்றன . இதில் FA ( a ) - ல் ப்ராஜெக்ட் , மாதிரி வடிவமைத்தல் மற்றும் செயல்பாடுகள் ஆகியவை சம்மந்தப்பட்ட பள்ளிப் பாட ஆசிரியர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு 20 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன . இதேபோல் FA ( b ) - ல் ஒவ்வொரு பாட அலகிலும் சிறு சிறு தேர்வுகள் நடத்தி மதிப்பீடு செய்து அவைகளுக்கு 20 மதிப்பெண்கள் சம்பந்தப்பட்ட பள்ளிப் பாட ஆசிரியர்களால் வழங்கப்படுகின்றன . மேலும் தொகுத்தறி மதிப்பீட்டில் ( Summative Assessment ) பாடப்பகுதியில் உள்ள பாடக்கருத்துக்களில் மாணவர்களின் கற்றல் விளைவுகள் ( Learning outcome ) மதிப்பீடு செய்ய வினாத்தாள் பள்ளி அளவிலோ , வட்டார அளவிலோ மற்றும் மாவட்ட அளவிலோ தயாரித்து 60 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடத்தி மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன .

 தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 5 மற்றும் 8 வகுப்பு ஆண்டு இறுதித் தேர்விற்கு வளரறி மதிப்பீட்டின் FA ( a ) மற்றும் FA ( b ) 40 மதிப்பெண்களுக்கு ஏற்கனவே 22.10.2019ல் தொடக்கல்லி இயக்குநரின் செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி சம்மந்தப்பட்ட பள்ளி பாட ஆசிரியர்களால் மதிப்பீடு செய்து வழங்கப்பட்டுள்ள மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் . மேலும் தொகுத்தறி மதிப்பீட்டில் சீரான முறையில் வினாத்தாள் அமைக்க வேண்டி உள்ளதாலும் வினாத்தாட்களின் தரத்தை மேம்படுத்த வேண்டியுள்ளதாலும் மாணவர்களை மதிப்பீடு செய்வதில் சீரான முறை மற்றும் நியாயமான மதிப்பீடு முறை ( Fair Assessment ) நடைமுறைப்படுத்தப்பட வேண்டியுள்ளதாலும் தொகுத்தறி மதிப்பீட்டின் 60 மதிப்பெண்களுக்குரிய பகுதிகளுக்கு வினாத்தாட்கள் அரசுத் தேர்வுத் துறையால் தயாரிக்கப்பட்டு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் வாயிலாக மந்தன முறையில் பள்ளிகளுக்கு வழங்கி தேர்வுகள் நடத்தப்படும் .

விடைத்தாள்கள் அந்த அந்த CRC மைய அளவில் உள்ள பிற பள்ளிகளுக்கு மாற்றி கொடுத்து திருத்தம் செய்து மதிப்பெண் பட்டியல்கள் சம்மந்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்கப்படும் . இந்நடைமுறையால் மாணவர்கள் மாநிலம் முழுவதும் பாடக்கருத்து மற்றும் கற்றல் விளைவுகளில் பெற்றுள்ள கற்றல் அடைவுகளை ஒரே மாதிரியாக சோதித்தறியவும் , நியாயமான மதிப்பீடு ( Fair Assessment ) செய்யவும் , மாணவர்களின் திறமையை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு தேவையான கூடுதல் பயிற்சி அளிக்க ஏதுவாக அமையும் . மேலும் , 5 மற்றும் 8 ஆம் வகுப்பிற்கான தேர்வில் அரசாணை ( நிலை ) எண் . 164 நாள் 13.09.2019 - ன்படி ஆண்டு இறுதித் தேர்வு அடிப்படையில் முதல் மூன்று ஆண்டுகளுக்கு மாணவர்களின் தேர்ச்சியை நிறுத்தி வைக்க வேண்டாம் எனவும் அரசு ஆணையிட்டுள்ளது . எனவே , 5 மற்றும் 8 வகுப்பு ஆண்டு இறுதித் தேர்வு குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அச்சப்படத் தேவையில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன், 

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One