தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் காலியாகவுள்ள ஐந்து (5) அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு நேரடி நியமனம் மூலம் நியமிக்கும் பொருட்டு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற கீழ்க்காணும் பிரிவுகளை சார்ந்த 18 வயது பூர்த்தியடைந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Search
தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் அலுவலக உதவியாளர் வேலை ... ரூ.58,000/- வரை சம்பளம் - எப்படி விண்ணப்பிப்பது ?
Friday 19 August 2022
டிகிரி படித்து முடித்தவர்களுக்கு... மாதம் ரூ. 20,000 சம்பளத்தில்... தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் வேலை..!!!!
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் TTDC-யில் மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
நிறுவனத்தின் பெயர்: Tamilnadu Tourism Development Corporation
பணியின் பெயர்: Manager and Associate
கல்வித் தகுதி: Degree or Diploma in Hotel Management; Hospitality and Hotel Administration; Hotel Management and Catering Technology; Hospitality, Travel & Tourism.
சம்பளம்: 20000 - 100000/-
கடைசி தேதி: 26.08.2022
கூடுதல் விவரங்களுக்கு:
Official Website: www.ttdc.co.in
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு
முதுகலைப் பட்டதாரி ஆசிரியருக்கான கல்வித் தகுதிகளை தமிழ்வழியில் பயின்று உள்ளதாக தெரிவித்துள்ள விண்ணப்பபதாரர்கள் அதற்குரிய ஆவணங்களை முறையாக சமர்ப்பிக்கவில்லை என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது . இருந்தாலும், கடைசி வாய்ப்பாக ஆகஸ்ட் 25ம் தேதிக்குள் தமிழ்வழியில் பயின்றதற்கான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிப்புக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து, வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- கடந்தண்டு செப்டம்பர் மாதம், 2020-21 ஆம் ஆண்டு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்/ உடற்கல்வி இயக்குநர் நிலை 1/ கணினி பயிற்றுநர் நிலை -1 நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இந்தாண்டு பிப்ரவரி மாதம் 12ம் தேதி முதல் 20ம் தேதி வரை கணினி வழித்தேர்வுகள் (Computer Based Examination) நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் 04.07.2022 அன்று வெளியிடப்பட்டன.
தற்போது விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. அறிவிக்கையின் போது முதுகலைப் பட்டதாரி ஆசிரியருக்கான கல்வித் தகுதிகளை தமிழ் வழியில் பயின்று உள்ளதாக சில விண்ணப்பதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், அதற்குரிய ஆவணங்களை விண்ணப்பிக்கும் போது முறையாக பதிவேற்றம் செய்யவில்லை. எனவே முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள், 1ம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு 11-12ம் வகுப்பு, டிப்ளமோ படிப்பு, இளங்கலைப் பட்டம் (UG Degree), முதுகலைப் பட்டம் (PG Degree) கல்வியியல் இளங்கலைப் பட்டம் (B.Ed. Degree) மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணியிடத்திற்கு விண்ணப்பித்தவர்கள் இளங்கலைப் பட்டம் மற்றும் முதுகலை (B.Ed. Degree மற்றும் MPEd. Degree) என தாங்கள் தமிழ்வழியில் பயின்றதற்கான அனைத்து ஆவணங்களையும் உரிய அலுவலரின் ஒப்புதல் பெற்று அறிவிக்கையில் தெரிவித்துள்ளவாறு உரிய படிவத்தில் பெற்று சமரிப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
1 முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் படிவம்
இதர வெவ்வேறு படிப்புகளை தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் படிவம்
விண்ணப்பத்தில் ஏற்கனவே, தமிழ்வழி ஒதுக்கீட்டுக்கான கோரிக்கை 'ஆம்' என பதிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே இவ்வாய்ப்பு வழங்கப்படும். எனவே, மனுதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தில் உள்ள இவ்விவரத்தினை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.இணையதளத்தில் உரிய மாதிரிப் படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட ஆகஸ்ட் 22 முதல் ஆகஸ்ட் 25ம் தேதி பிற்பகல் 5 மணி வரை வாய்ப்பு அளிக்கப்படும்.
இவ்வாறு, அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுளளது.
Click here to join WhatsApp group for Daily employment news
இதுகுறித்து, வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- கடந்தண்டு செப்டம்பர் மாதம், 2020-21 ஆம் ஆண்டு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்/ உடற்கல்வி இயக்குநர் நிலை 1/ கணினி பயிற்றுநர் நிலை -1 நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இந்தாண்டு பிப்ரவரி மாதம் 12ம் தேதி முதல் 20ம் தேதி வரை கணினி வழித்தேர்வுகள் (Computer Based Examination) நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் 04.07.2022 அன்று வெளியிடப்பட்டன.
தற்போது விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. அறிவிக்கையின் போது முதுகலைப் பட்டதாரி ஆசிரியருக்கான கல்வித் தகுதிகளை தமிழ் வழியில் பயின்று உள்ளதாக சில விண்ணப்பதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், அதற்குரிய ஆவணங்களை விண்ணப்பிக்கும் போது முறையாக பதிவேற்றம் செய்யவில்லை. எனவே முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள், 1ம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு 11-12ம் வகுப்பு, டிப்ளமோ படிப்பு, இளங்கலைப் பட்டம் (UG Degree), முதுகலைப் பட்டம் (PG Degree) கல்வியியல் இளங்கலைப் பட்டம் (B.Ed. Degree) மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணியிடத்திற்கு விண்ணப்பித்தவர்கள் இளங்கலைப் பட்டம் மற்றும் முதுகலை (B.Ed. Degree மற்றும் MPEd. Degree) என தாங்கள் தமிழ்வழியில் பயின்றதற்கான அனைத்து ஆவணங்களையும் உரிய அலுவலரின் ஒப்புதல் பெற்று அறிவிக்கையில் தெரிவித்துள்ளவாறு உரிய படிவத்தில் பெற்று சமரிப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
1 முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் படிவம்
இதர வெவ்வேறு படிப்புகளை தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் படிவம்
விண்ணப்பத்தில் ஏற்கனவே, தமிழ்வழி ஒதுக்கீட்டுக்கான கோரிக்கை 'ஆம்' என பதிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே இவ்வாய்ப்பு வழங்கப்படும். எனவே, மனுதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தில் உள்ள இவ்விவரத்தினை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு, அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுளளது.
Click here to join WhatsApp group for Daily employment news
SSC; மத்திய அரசில் ஜூனியர் என்ஜினியர் வேலை; டிப்ளமோ, பி.இ படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!
SSC recruitment 2022 for Junior Engineer jobs apply soon:
மத்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் (ஜூனியர் என்ஜினியர்) பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (SSC) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. என்ஜினியரிங் படித்தவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எஸ்.எஸ்.சி தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை நியமித்து வருகிறது. அந்த வகையில் மத்திய பொதுப்பணித்துறை, மத்திய நீர் ஆணையம், எல்லை சாலைகள் ஆணையம், தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி கழகம் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 02.09.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
ஜூனியர் என்ஜினியர் (JUNIOR ENGINEER)
நிரப்பப்படும் பிரிவுகள்-CIVIL, MECHANICAL, ELECTRICAL AND QUANTITY SURVEYING & CONTRACTS
கல்வித் தகுதி : CIVIL, MECHANICAL, ELECTRICAL ஆகிய பிரிவுகளில், ஏதேனும் ஒன்றில் டிகிரி அல்லது டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 01.01.2022 அன்று 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும், SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.
சம்பளம் : ரூ. 35,400-1,12,400
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு கணினி வழி தேர்வு (Computer Based Examination) மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கணினி வழி தேர்வு 200 மதிப்பெண்களுக்கு 2 மணி நேர கால அளவில் நடைபெறும். இந்த தேர்வில் பொது அறிவு (General Awareness), திறனறிதல் (General Intelligence & Reasoning) ஆகிய பகுதிகளில் இருந்து தலா 50 கேள்விகளும், சம்பந்தப்பட்ட பொறியியல் பாடப்பிரிவில் இருந்து 100 கேள்விகளும் என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும்.
எழுத்துத் தேர்வானது, 300 மதிப்பெண்களுக்கு 2 மணி நேர கால அளவில் நடைபெறும். இதில் சம்பந்தப்பட்ட பொறியியல் பாடப்பிரிவில் இருந்து விரிவான விடையளிக்கும் வகையில் வினாக்கள் இடம்பெறும்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://ssc.nic.in/ என்ற இணையதள பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 100, இருப்பினும் SC/ST பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 02.09.2022
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_eng_je_12082022.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
TNPSC குரூப் 1 தேர்வுக்கு தயார் ஆவது எப்படி?… 23 வயதில் டி.எஸ்.பி ஆன பவானியாவின் சக்ஸஸ் சீக்ரெட்ஸ்
TNPSC Group 1 Exam 2022 preparation tips from DSP Bavaniya: குரூப் 1 தேர்வில் முதல் முயற்சியிலே தேர்ச்சி பெற்று 23 வயதில் டி.எஸ்.பி ஆன பவானியா, தேர்வுக்கு எவ்வாறு தயாராவது என்ற சக்ஸஸ் சீக்ரெட்டை பகிர்கிறார். வாருங்கள் தெரிந்துக் கொள்வோம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளிலே, உயர் பதவிகளுக்கு நடத்தப்படும் தேர்வு குரூப் 1. இந்த தேர்வில் வெற்றி பெற்றால், துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி இயக்குனர், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் போன்ற உயர் பதவிகளில் அமரலாம்.
இந்த குரூப் 1 தேர்வு எளிதானது அல்ல. இதில் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று தேர்வு முறைகள் உள்ளன. முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெறுவதற்கான தேர்வாக முதல்நிலைத் தேர்வு இருந்தாலும், குரூப் 1 தேர்வுக்கு என்று படித்து வரும் பெரும்பாலானவர்கள் முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறவே சிரமப்படுவர். முதன்மைத் தேர்வோ மூன்று விரிவான விடையளிக்கும் தாள்களைக் கொண்டது. மூன்று தாள்களில் வெவ்வேறு மூன்று பாடங்கள் என, முதல்நிலைத் தேர்வுக்கு படித்ததை விட மூன்று மடங்கு அதிகம் படிக்க வேண்டியிருக்கும். இதைத் தாண்டினால், நேர்முகத் தேர்வு என்ற பெரிய மலை இருக்கும். நிறைய பேர் தேர்வுக்கு கஷ்டப்பட்டு படித்து, தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று விடுவார்கள். ஆனால் நேர்முகத் தேர்வு என்றதும், ஒரு பீதி வந்து கோட்டை விட்டுவிடுவார்கள்.
இத்தகைய கடினமான தேர்வுச் செயல் முறைக் கொண்ட குரூப் 1 தேர்வில், தனது முதல் முயற்சியிலே வெற்றி பெற்று, டி.எஸ்.பி ஆகி சாதித்து இருக்கிறார் 23 வயது பவானியா. அதுவும் தமிழ் வழியில் படித்தவர்களும் குரூப் 1 தேர்வில் சாதிக்கலாம் என பலருக்கு முன்மாதிரியாக மாறி இருக்கிறார் பவானியா.
புதுக்கோட்டை மாவட்டம் கிழக்கு செட்டியாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பவானியா. 2 சகோதரிகளுடன் ஏழைக் குடும்பத்தில் பிறந்த இவர், 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்தவர். கல்லூரி படிப்பை பொறுத்தவரை, புதுக்கோட்டை பெண்கள் அரசுக் கல்லூரியில் இளங்கலை கணிதத்தை தமிழ் வழியில் படித்தவர். அவர் 2019ல் டிகிரி முடித்த நிலையில், குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு வந்தது. உடனே குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பித்து, தேர்வுக்கு தயாராக ஆரம்பித்து விட்டார். ஆரம்பத்தில் தேர்வுக்கான புத்தகங்கள் இல்லாமல் தடுமாறிய பவானியா, பின்னர் பள்ளி மாணவர்களிடம் பழைய புத்தங்களை வாங்கி படித்து இன்று டி.எஸ்.பி ஆக மாறியுள்ளார்.
தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த முறை 92 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த நிலையில், குரூப் 1 தேர்வின் முதல்நிலை தேர்வுக்கு எவ்வாறு தயாராவது என டிப்ஸ் தருகிறார் வெற்றியாளர் பவானியா.
டி.என்.பி.எஸ்.சியின் மற்ற குரூப் தேர்வுகளைப் போலவே, குரூப் 1 தேர்வுக்கும் பள்ளி பாடப்புத்தகங்களைப் படிப்பது முக்கியம். அதிலும் முதல் நிலைத் தேர்வைப் பொறுத்தவரை 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிப் பாடப்புத்தகங்களை நன்றாக படித்துக் கொள்ள வேண்டும். அவற்றில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடப்புத்தகங்களை முழுமையாக படித்துக் கொள்ள வேண்டும். தமிழ் பாடப்புத்தகத்தையும் படிக்க வேண்டும். ஏனெனில் திருக்குறள் உள்ளிட்ட பகுதிகளை கொண்ட யூனிட் 8 க்கு தமிழ் பாடப்பகுதியை படிப்பது அவசியம்.
10 ஆம் வரையிலான பாடப்புத்தகங்களைப் படித்த பின்னர், 11 மற்றும் 12 வகுப்புகளில் உள்ள வரலாறு, அரசியலமைப்பு, பொருளாதாரம், அறவியல், புவியியல் ஆகிய பாடங்களை படிக்க வேண்டும். குரூப் 1 தேர்வுக்கான சிலபஸில் உள்ள தலைப்புகளில் பெரும்பாலான பகுதிகள் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடப்புத்தகங்களில் இருந்தாலும், 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான புத்தகங்களை படித்து முடித்த பின்னர் படித்தால் எளிதாக இருக்கும்.
குரூப் 1 தேர்வுகளுக்கு பள்ளி பாடபுத்தகங்களில் இருந்தே பெரும்பாலும் வினாக்கள் கேட்கப்பட்டாலும், பாடப்புத்தகங்களைத் தாண்டியும் வினாக்கள் கண்டிப்பாக வரும். குரூப் 1 தேர்வைப் பொறுத்தவரை 50% முதல் 60% வரையிலான வினாக்கள் பள்ளி பாடப்புத்தகங்களில் வினாக்கள் கேட்கப்படும். எனவே, சிலபஸை நன்றாக படித்து, அதில் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகள் எல்லாவற்றையும் படித்துக் கொள்ள வேண்டும். இந்த தலைப்புகள் பள்ளி பாடப்புத்தகங்களில் இல்லாவிட்டாலும், வெளியில் கிடைக்கும் பிற புத்தகங்களை வாங்கி படித்துக் கொள்ள வேண்டும்.
வரலாறை பொறுத்தவரை, தமிழக வரலாறுக்கு முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டும். நடப்பு நிகழ்வுகளுக்கு, ஓர் ஆண்டு நடப்பு நிகழ்வுகளை படிக்க வேண்டும். நடப்பு நிகழ்வுகளை தனியாக நோட்டில், குறிப்புகளாக எழுதி படித்துக் கொள்வது நல்லது. அனைத்து பாடங்களுக்குமே நோட்ஸ் எடுத்து படிப்பது சிறந்தது.
சமீபத்தில் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் சேர்க்கப்பட்ட யூனிட் 8 மற்றும் யூனிட் 9 ஆகிய பாடங்களில் இருந்து அதிகப்படியான வினாக்கள் கேட்கப்படுகின்றன. ஆனால், இந்த யூனிட் 8 (தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக- அரசியல் இயக்கங்கள்) மற்றும் யூனிட் 9 (தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்) ஆகிய பாடங்களுக்கு பள்ளிப் புத்தகங்களைப் படித்தாலே போதுமானது. ஆனால் இந்தப் பகுதிகளில் உள்ள தலைப்புகளை பள்ளி புத்தகங்களில் தேடி படிக்க வேண்டும், அவ்வாறு படிக்கும்போது, நோட்ஸ் எடுத்து படித்தால், திருப்புதல் செய்ய எளிதாக இருக்கும். உங்களுக்கு தேடி படிக்க சிரமம் இருந்தால், பிற வெளியீடுகளை படித்துக் கொள்ளலாம்.
தேர்வில் விடையளிக்கும் முறையை பொறுத்தவரை, கேள்வி மற்றும் பதில் இரண்டையும் முழுமையாக படித்த பின் விடையளிக்க வேண்டும். விடை தெரியாத கேள்விகளுக்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ள வேண்டாம். அடுத்த கேள்விக்கு விடையளிக்க செல்வது சிறந்தது. இது உங்களுக்கான நேரத்தை மிச்சப்படுத்தும். சில நேரங்களில் வேறு கேள்விக்கு விடையளித்துக் கொண்டிருக்கும்போது, முந்தைய தெரியாத வினாவுக்கான பதில் திடீரென நினைவுக்கு வரும். எனவே ஒரே கேள்வியில் அதிக நேரத்தைச் செலவிட வேண்டாம். தேர்வில் மைனஸ் மதிப்பெண்கள் இல்லை என்பதால், முற்றிலும் விடை தெரியாத கேள்விகளுக்கு, உடனடியாக உங்கள் மனதில் தோன்றும் விடையை அளிப்பது உங்களுக்கு நேரத்தை மிச்சப்படுத்த உதவும்.
அடுத்ததாக தேர்வர்களுக்கு இருக்கும் பெரிய கேள்வி, கட் ஆஃப் எவ்வளவு என்பது தான். ஆனால் கட் ஆஃப் மதிப்பெண்களைப் பற்றி கவலைப்படாமல், முடிந்தவரை அதிக வினாக்களுக்கு விடையளிக்க முயற்சிப்பதே சிறந்தது. குரூப் 1 தேர்வுகளைப் பொறுத்தவரை, கட் ஆஃப் மதிப்பெண்கள் காலியிடங்களின் எண்ணிக்கை, கேள்வித் தாளின் கடினத் தன்மை போன்றவற்றின் மூலம் நிர்ணயிக்கப்படுகிறது. எனவே, கட் ஆஃப் மதிப்பெண்ணைக் கருத்தில் கொள்ளமால், அதுவும் தேர்வுக்கு தயாராகி வரும் இந்த நேரத்தில் முழுமையாக, படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது, உங்களை வெற்றியாளராக்கும்.
TNPSC Group 4 தேர்வு; கட் ஆஃப் குறையும்… காரணம் இதுதான்! ரிசல்ட் எப்போது?
TNPSC Group 4 VAO exam cut off details and result date: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுகளுக்கான ஆன்சர் கீ வெளியிடப்பட்டுள்ள நிலையில், கட் ஆஃப் மதிப்பெண்கள் குறைய வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில், பிரிவு வாரியாக கட் ஆஃப் மதிப்பெண்கள் எவ்வளவு வரும் என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் வி.ஏ.ஓ பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த குரூப் 4 தேர்வு 7301 பணியிடங்களுக்கு நடைபெற்றது.
இந்த குரூப் 4 தேர்வு ஆவரேஜ் என்ற அளவில் இருந்ததாக தேர்வர்களும், நிபுணர்களும் தெரிவித்தனர். இதனால் கட் ஆஃப் மதிப்பெண்கள் கடந்த ஆண்டை விட குறைவாக இருக்கும் என கூறப்பட்டது. அதேநேரம், தமிழில் 87-91 வினாக்களுக்கும், கணிதத்தில் 20-23 வினாக்களுக்கும் 56-61 வினாக்களுக்கும் விடையளித்திருப்பது சிறந்தது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தநிலையில், சில நாட்களுக்கு முன்னர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வுக்கான உத்தேச விடைகளை வெளியிட்டது. இதனையடுத்து, நிபுணர்கள், உத்தேச விடைகள் மற்றும் மாணவர்களின் கருத்துக்கள் அடிப்படையில் கட் ஆஃப் மதிப்பெண்கள் கணக்கிட்டுள்ளனர். அதன்படி, குரூப் 4 தேர்வுக்கான கட் ஆஃப் மேலும் குறையலாம் என தெரிகிறது. மேலும் காலியிடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட உள்ளதால், கட் ஆஃப் இன்னும் குறையாலாம் என கூறப்படுகிறது.
கட் ஆஃப் மதிப்பெண்களைப் பொறுத்தவரை, இந்த ஆண்டு பொது பிரிவினருக்கான கட் ஆஃப் 161 க்கும் மேலும், BC பிரிவினருக்கு 157 க்கும் மேலும், MBC பிரிவினருக்கு 156க்கு மேலும், SC பிரிவினருக்கு 152க்கு மேலும், BCM பிரிவினருக்கு 153க்கு மேலும், SCA பிரிவினருக்கு 149க்கு மேலும், ST பிரிவினருக்கு 137 க்கும் மேலும் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பெண்களுக்கான கட் ஆஃப் மதிப்பெண்களைப் பொறுத்தவரை, இந்த ஆண்டு பொது பிரிவினருக்கான கட் ஆஃப் 158 க்கும் மேலும், BC பிரிவினருக்கு 155 க்கும் மேலும், MBC பிரிவினருக்கு 154க்கு மேலும், SC பிரிவினருக்கு 147க்கு மேலும், BCM பிரிவினருக்கு 146க்கு மேலும், SCA பிரிவினருக்கு 144க்கு மேலும், ST பிரிவினருக்கு 135 க்கும் மேலும் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதில் 3-4 மதிப்பெண்கள் வரை கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மாற்று திறனாளிகளுக்கு 140 – 145 என்ற அளவிலும், முன்னாள் ராணுவத்தினருக்கு 130-140 என்ற அளவிலும் கட் ஆஃப் வரலாம். அதேநேரம், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அனைத்து பிரிவுகளிலும் 5 வினாக்கள் வரை குறைய வாய்ப்பு உள்ளது.
இதேபோல், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கு ஒவ்வொரு பிரிவுக்கும் 5 மதிப்பெண்கள் வரை குறைய வாய்ப்புள்ளது.
இங்கு கட் ஆஃப் மதிப்பெண்கள் என குறிப்பிடப்படுவது, கேள்விகளின் எண்ணிக்கையே, தேர்வுக்கான மதிப்பெண்கள் அளவு அல்ல. மொத்தம் 200 கேள்விகளுக்கு எத்தனை வினாக்கள் சரி என்பதையே, நாம் இங்கு கட் ஆஃப் மதிப்பெண்களாக குறிப்பிட்டு இருக்கிறோம்.
இதனிடையே, குரூப் 4 தேர்வுகளுக்கான முடிவுகள் அக்டோபர் 2 ஆவது வாரத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.