SSC recruitment 2022 for Junior Engineer jobs apply soon:
மத்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் (ஜூனியர் என்ஜினியர்) பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (SSC) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. என்ஜினியரிங் படித்தவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எஸ்.எஸ்.சி தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை நியமித்து வருகிறது. அந்த வகையில் மத்திய பொதுப்பணித்துறை, மத்திய நீர் ஆணையம், எல்லை சாலைகள் ஆணையம், தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி கழகம் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 02.09.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
ஜூனியர் என்ஜினியர் (JUNIOR ENGINEER)
நிரப்பப்படும் பிரிவுகள்-CIVIL, MECHANICAL, ELECTRICAL AND QUANTITY SURVEYING & CONTRACTS
கல்வித் தகுதி : CIVIL, MECHANICAL, ELECTRICAL ஆகிய பிரிவுகளில், ஏதேனும் ஒன்றில் டிகிரி அல்லது டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 01.01.2022 அன்று 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும், SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.
சம்பளம் : ரூ. 35,400-1,12,400
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு கணினி வழி தேர்வு (Computer Based Examination) மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கணினி வழி தேர்வு 200 மதிப்பெண்களுக்கு 2 மணி நேர கால அளவில் நடைபெறும். இந்த தேர்வில் பொது அறிவு (General Awareness), திறனறிதல் (General Intelligence & Reasoning) ஆகிய பகுதிகளில் இருந்து தலா 50 கேள்விகளும், சம்பந்தப்பட்ட பொறியியல் பாடப்பிரிவில் இருந்து 100 கேள்விகளும் என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும்.
எழுத்துத் தேர்வானது, 300 மதிப்பெண்களுக்கு 2 மணி நேர கால அளவில் நடைபெறும். இதில் சம்பந்தப்பட்ட பொறியியல் பாடப்பிரிவில் இருந்து விரிவான விடையளிக்கும் வகையில் வினாக்கள் இடம்பெறும்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://ssc.nic.in/ என்ற இணையதள பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 100, இருப்பினும் SC/ST பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 02.09.2022
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_eng_je_12082022.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
No comments:
Post a Comment