Search

ஆதிதிராவிடர் மாணவியர்களுக்கும் வங்கிக் கணக்கு எண் துவக்க நடவடிக்கை மேற்கொள்வது பள்ளிகளுக்கு சுற்றறிக்கை!

Thursday 9 July 2020

2020-2021 ஆம் கல்வியாண்டிற்கு பெண்கல்வி ஊக்குவிப்புத் தொகை வழங்க தகுதியுள்ள அனைத்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவியர்களுக்கும் வங்கி கணக்கு எண் துவக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே , அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களும் , வட்டார கல்வி அலுவலர்களும் தங்களது ஆளுகைக்குட்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு இச்சுற்றறிக்கையை அனுப்பவும். வங்கி கணக்கு எண் துவக்கப்பட்டுள்ளதா என்பதை அவ்வப்போது தொடர்ந்து கண்காணித்து அறிக்கை அனுப்பிடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் , 2020-2021 ஆம் கல்வியாண்டிற்கு பெண்கல்வி ஊக்குவிப்புத் தொகை வழங்க தகுதியுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவியர்கள் விவரங்கள் இணைப்பில் காணும் படிவத்தை பூர்த்தி செய்து இவ்வலுவலகத்திற்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Read More »

பேராசிரியர்கள் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது



புதுவை பல்கலைக்கழகத் தில் 178 பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பேராசிரியர் பணியிடம் புதுச்சேரி மத்திய பல்க லைக்கழகத்தில் உள்ள 48 துறைகளில் பேராசிரியர் பணியில் 44 காலியிடங்களும் , இணை பேராசிரியர் பணியில் 68 , உதவி பேராசிரியர் பணியில் 66 என மொத்தம் 178 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.இந்த பணி யிடங்களை நிரப்ப பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான விண்ணப்பங்களை pondiuni.edu.in என்ற இணையதளம் வழியாக வருகிற 24 - ந்தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.

கட்டண விவரம்:

பொது பிரிவினர் , பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர் , இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் விண்ணப்ப கட்டணமாக ரூ .1,000 செலுத்த வேண்டும். பொது பிரிவினர் , பொருளா தாரத்தில் பின்தங்கிய முன் னேறிய வகுப்பினர் , இதர பிற் படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெண்கள் விண்ணப் பம் கட்டணமாக ரூ .500 செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர் , முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசு , மாற்றுத்திறனாளிகள் ஆகி யோருக்கு விண்ணப்ப கட்ட ணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 - ம் ஆண்டு பேராசிரியர் பணியிடத்திற்காக பல்க லைக்கழக நிர்வாகம் விண்ணப்பம் கோரிய போது விண்ணப்பித்தவர்கள் தங்களுடைய தகவல்களை தற்போது புதுப்பித்துக்கொள்ளலாம்.

மேலும் தகவல்களுக்கு recruitment.pondiuni.edu.in. என்ற புதுவை பல்கலைக்க ழக இணையதள முகவரியை காணவும் என பல்கலைக்கழக நிர்வாகம் தங்களது இணைய தளம் வழியாக தெரிவித்துள் ளது.
Read More »
 

Most Reading

Tags

Sidebar One