Pages

முதல் வகுப்பு மாணவர்களுக்கு எழுத்துக்கள் அறிமுகம் , பயிற்சி,மதிப்பீட்டிற்கான சிறந்த செயலி: ஆசிரியர் திரு. செல்வக்குமார்

Wednesday, 24 June 2020


முதல்வகுப்பு மாணவர்களுக்கு எழுத்துக்கள் அறிமுகம்,பயிற்சி,மதிப்பீட்டுக்கான செயலி

முதல் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மற்றும்

ஆங்கில எழுத்துக்களை

1 . எளிதாக அறிமுகப்படுத்துதல்,
2 . மீண்டும் மீண்டும் பயிற்சி அளித்தல்,
3 . அடையாளம் காணச்செய்து மதிப்பிடுதல்,

ஆகியவற்றுக்கான பயிற்சி அட்டைகள்

இச்செயலியில் உள்ளன.

வரிசையாகச் சொல்லும் போது

எழுத்துக்களைச் சரியாக கூறும்

குழந்தைகள், தனியாக ஒரு எழுத்தை

அடையாளம் காண்பதில்

சிரமப்படுகின்றனர். இச்செயலியில், எழுத்து

அட்டைகளைப் பயன்படுத்தி வரிசைமுறை

அல்லாது மாற்றிமாற்றி எழுத்துக்களை

அடையாளம் கண்டு உச்சரிக்க

வாய்ப்பளிக்கப் படுகிறது. அதனால் எழுத்து வடிவங்கள் குழந்தைகளின் மனதில்

நிலைநிறுத்தப்படுவது எளிமை

ஆக்கப்படுகிறது.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சிறுசிறு

சொற்களை தாமாகவே

படித்துப்பார்ப்பதற்கு வாய்ப்பளிக்கும்

வகையிலான அட்டைகள் இச்செயலியில்

உள்ளன.

கணக்கில் எண்களை

1 . எளிதாக அறிமுகப்படுத்துதல்,
2 . மீண்டும் மீண்டும் பயிற்சி அளித்தல்,
3 . அடையாளம் காணச்செய்து மதிப்பிடுதல்,

ஆகியவற்றுக்கான அட்டைகள்

இச்செயலியில் உள்ளன.

மேலும் அடிப்படை செயல்பாடுகளான ஓர்

இலக்க கூட்டல், கழித்தலுக்கான பயிற்சி

அட்டைகளும் மற்றும் பெருக்கல்

வாய்ப்பாட்டிற்கான பயிற்சி அட்டைகளும்

உள்ளன.

முதல் வகுப்பு  ஆசிரியர்களுக்கு

எழுத்துக்களையும் எண்களையும் கற்பிக்க

இந்த  செயலி மிகவும் பயனுள்ளதாக
இருக்கின்றது.

நமது நண்பர் திருப்பனந்தாள் ஒன்றியம், மேலவெளி ஊ.ஒ.தொ.பள்ளி ஆசிரியர், திரு. செல்வக்குமார் அவர்களின் அயராத உழைப்பில் உருவான App. கொரானா விடுமுறையை பயனுள்ள முறையில் கழிக்க மாணவர்களின் பெற்றோர்களுக்கு அனுப்பலாம். ஆசிரியர்கள் பள்ளியில் பயன்படுத்த சிறந்த App.
நம் தொடக்கப்பள்ளி ஆசிரியரின் உழைப்பை மதித்து பாராட்டுவோம் பகிர்வோம்.

Click here to download App

ஆரோக்கியமாக வாழ 5 அடிப்படை விஷயங்களை கடைபிடிப்பது அவசியம் ஆயுர்வேத மருத்துவர்

ஆரோக்கியமாக வாழ 5 அடிப்படை விஷயங்களை கடைபிடிப்பது அவசியம் ஆயுர்வேத மருத்துவர் 
 ஆரோக்கியமாக வாழ 5 அடிப்படை விஷயங்களை கடைபிடிப்பது அவசியம் ‘இந்து தமிழ் திசை’ வழங்கிய ‘நலமாய் வாழ’ 4-ம் நாள் நிகழ்வில் ஆயுர்வேத மருத்துவர் கவுதமன் தகவல் உணவு, உடற்பயிற்சி, உடற்கழிவு வெளியேற்றம், காயகல்ப சிகிச்சை, ஆரோக்கியத்தை பரிசோதித்துக் கொள்வது ஆகிய 5 அடிப்படை விஷயங்களை ஒழுங்காக கடை பிடித்தால் முழு ஆரோக்கியம், நீண்ட ஆயுளோடு வாழலாம் என்று ஆயுர்வேத மருத்துவர் கவுதமன் தெரிவித்தார். 
 நமது பாரம்பரிய மருத்துவ முறைகளான யோகா, சித்தா, ஆயுர் வேதா, மர்மா தெரபி ஆகியவற்றின் பயன்களை அறிந்து, அதன் வழி யாக நமது உடல் மற்றும் மன நலனைப் பெறும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘நலமாய் வாழ’ எனும் இணைய வழி ஆலோசனை நிகழ்ச்சியை கடந்த 4 நாட்கள் நடத்தியது. சாய்ராம் கல்வி நிறுவனங்களு டன் இணைந்து இந்த நிகழ்வை ‘இந்து தமிழ் திசை’ வழங்கியது. இந்த நிகழ்வின் நிறைவு நாளான நேற்று, ஆயுர்வேத மருத்துவம் பற் றிய ஆலோசனை வழங்கப்பட்டது. 
இதில், ஆயுர்வேத மருத்துவர் கவுதமன் பேசியதாவது: உலக மருத்துவ முறைகளி லேயே தொன்மையான மருத்துவ முறை என்ற சிறப்புக்கு உரியது ஆயுர்வேத மருத்துவம். 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆயுர் வேத மருத்துவம் மனித வாழ் வியலோடு இணைந்திருந்ததை ஆய்வுகள் மூலம் கண்டறிந்துள் ளனர். நோயுற்றவர்களை குணப் படுத்துவது என்பதை விடவும், நோய் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதையே ஆயுர் வேதம் வலியுறுத்துகிறது. 
உணவு, தூக்கம், ஓய்வு இவை மூன்றையும் முறைப்படுத்தி வாழ்ந்தாலே பல நோய்களில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும். அடிப்படையான 5 விஷயங் களை நாம் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. நமது உணவுமுறை, தியானம் - உடற்பயிற்சி, உடற்கழிவு களை தினமும் காலையில் வெளி யேற்றுதல், காயகல்ப சிகிச்சை, 3 மாதத்துக்கு ஒருமுறை மருத்து வரை சந்தித்து ஆரோக்கியத்தைப் பரிசோதித்தல் என்கிற இந்த 5 நடை முறைகளையும் நாம் ஒழுங்காக கடைபிடித்தால் முழு ஆரோக்கி யம், நீண்ட ஆயுளோடு வாழலாம். 
 தினமும் காலையில் 30 நிமிடங் கள் உடற்பயிற்சி செய்வதும், இரவு 20 நிமிடங்கள் தியானம் செய்வதும் அவசியம். உணவில் காய்கறி, கீரை, பழங்கள், பயறு வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண் டும். பசித்த பிறகே சாப்பிட வேண் டும். நோயுற்று இருப்பவர்கள் மருந்து, மாத்திரைகளை மட்டுமே நம்பி இருக்காமல், அவர்களுக்கு நம் பாரம்பரிய வாழ்வியல் முறை களை சொல்லித்தந்து, அதன் வழியே ஆரோக்கியம் அடையச் செய்வதே ஆயுர்வேத மருத்துவம். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்வில் ஏராளமானோர் பங்கேற்றனர். அவர்களது பல்வேறு கேள்விகள், சந்தேகங்களுக்கும் அவர் பதில் அளித்தார். கடந்த 4 நாட்களாக நடந்த ‘நலமாய் வாழ’ நிகழ்வு நேற்று நிறைவடைந்தது.

18 பேர் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மாணவ- மாணவிகளுக்கான பாடங்களை குறைக்க நடவடிக்கை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

18 பேர் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மாணவ- மாணவிகளுக்கான பாடங்களை குறைக்க நடவடிக்கை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இந்த மாத இறுதிக்குள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. பாடப்புத்தகங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி தொடங்கி வைக்க உள்ளார்.

இதைத்தொடர்ந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூட மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. கொரோனா பாதிப்பால், பள்ளி செயல்படும் நாட்கள் குறைவாக இருப்பதால், முக்கிய பாட பகுதிகளை மட்டும் மாணவ, மாணவிகள் படிப்பதற்கு சில பக்கங்களை குறைக்க 18 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் பாடங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

வருமானவரி தாக்கல் செய்ய மற்றும் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் நீட்டிப்பு - மத்திய அரசு அறிவிப்பு


2019-20ம் ஆண்டுக்கான வருமானவரி தாக்கல் செய்ய நவம்பர் 30ம் தேதி வரை அவகாசம் நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. 2018-19ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட வருமானவரி கணக்குகள் தாக்கல் செய்ய வருகின்ற ஜூலை 31ம் தேதி வரை அவகாசம் நீட்டித்து நேரடி வரிவிதிப்பு ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் ஆதார் கார்டுடன் பான் எண்ணை இணைக்க 2021ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் அதிதீவிரமாக பரவி வந்த கொரோனா வைரஸின் தாக்கமானது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


 உலக நாடுகளே கொரோனாவிற்க்கான தடுப்பூசி கண்டறியும் பணியை மேற்கொண்டு வருகிறது. தினமும் மக்கள் பரிதாபமாக உயிரிழந்து வரும் நிலையில், சமுக இடைவெளி மற்றும் சானிடைசரால் கைகளை சுத்தம் செய்தல், முகக்கவசம் அணிதல், தனிமைப்படுத்தல் போன்றவற்றை முக்கியமானதாக அறிவித்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸின் தாக்கமானது நாடுளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் ஜூன் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் 2019-20ம் ஆண்டுக்கான வருமானவரி தாக்கல் செய்ய நவம்பர் 30ம் தேதி வரை அவகாசம் நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்து இருப்பதாவது:2018-19 ம் ஆண்டிற்கான வருமானவரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகசாம் வரும் ஜூலை 31 ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டு உள்ளது. 2019-20 ம் ஆண்டிற்கான வருமானவரி கணக்கை தாக்கல் செய்வதற்கா கால அவகாசம் நவ.,30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31 ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நடைமுறை வாழ்வில் கணிதத்தை எவ்வாறு பயன்படுத்துவது? ஆசிரியா்களுக்கு இணையவழியில் பயிற்சி

கணிதத்தை நடைமுறை வாழ்வில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை கற்றுக் கொடுக்க பள்ளிக் கல்வித்துறையின் இணையவழிப் பயிற்சி வழிகாட்டுவதாக அரசுப் பள்ளி முதுநிலை ஆசிரியா்கள் தெரிவித்தனா்.

அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சோந்த முதுநிலை கணித ஆசிரியா்களுக்கு 'பல்வேறு துறைகளில் கணிதத்தின் பயன்பாடுகள்' என்ற தலைப்பில் வலைதள முகவரியில் இணையவழி பயிலரங்கம் கடந்த 19-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம் முழுவதும் 3,650 முதுநிலை ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

இ-பாக்ஸ் நிறுவனத்துடன் பள்ளிக் கல்வித்துறையுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்கப்படும் இந்தப் பயிற்சி, மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவா்கள் கணிதத்தை எளிய முறையில் கற்றுக் கொடுக்க உறுதுணையாக இருப்பதாகப் பயிற்சி பெற்று வரும் ஆசிரியா்கள் தெரிவித்தனா்.இது குறித்து, திருப்பூா் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியா் விஜயலட்சுமி, திண்டுக்கல் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியா் காா்த்திகேயன் ஆகியோா் கூறியது:இணைய வழி கணிதப் பயிலரங்கில் பிளஸ் 1, பிளஸ் 2 கணிதப் பாடத்தில் உள்ள பகுதிகள் அதிகளவில் இடம்பெற்றிருந்தன.

நாம் வகுப்பறையில் போடும் கணக்குகள் நடைமுறை வாழ்வில் எவ்வாறு உதவும், கடினமான கணக்குகளுக்கு எளிய முறையில் தீா்வு காணுவது என்பன உள்ளிட்ட கணிதம் தொடா்பான பல்வேறுவிஷயங்கள் இந்தப் பயிலரங்கில் கற்றுத் தரப்படுகின்றன. தொடக்கத்தில் அணிக்கோவை, கலப்பு எண்கள் போன்ற பகுதிகள் குறித்து வகுப்புகள் நடைபெற்றன. வரும் நாள்களில் பகுமுறை வடிவியல், அடிப்படை இயற்கணிதம், தொகை நுண் கணிதம் போன்ற பாடப்பகுதிகள் இடம்பெறவுள்ளன.கணிதம் சாா்ந்த பல்வேறு செயல்பாடுகளை கணிப்பது குறித்து பயிற்சியில் விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன.

இதை வகுப்பறையில் மாணவா்களுக்கு கற்றுத்த ருவதன் மூலம் கணிதப் பாடத்தின் மீது அவா்களுக்கு இருக்கும் அச்சம் நீங்கி அதை கற்பதற்கான ஆா்வம் அதிகரிக்கும். பயிற்சி தொடா்பான கூடுதல் தகவல்களை அறிய யு-டியூப் இணைப்பும் செல்லிடப்பேசிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தினமும் கணித செயல்பாடுகள் சாா்ந்து 40 பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அவற்றுக்கு ஆசிரியா்கள் எவ்வளவு நேரத்தில் தீா்வு காண்கிறாா்கள் என்பது மதிப்பிடப்படுகிறது.

10 நாள்கள் நடைபெறும் இணையவழி பயிற்சி, ஜூலை 1-ஆம் தேதி இந்தப் பயிற்சிமுடிவடையவுள்ளது என்றனா்

கணினி பாடம் புறக்கணிப்பு ஆசிரியர்கள் சங்கம் கவலை

பிளஸ் 1 வகுப்புக்கான புதிய பாடப் பிரிவுகளில்,கணினி பயன்பாடு புறக்கணிக்கப்பட்டு உள்ளதாக, கணினி ஆசிரியர்கள் குற்றம் சாட்டிஉள்ளனர்.

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, இந்த ஆண்டு முதல், புதிய பாடப் பிரிவுகள் துவக்கப்படுகின்றன. மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலத்துடன் சேர்த்து, நான்கு முதன்மை பாடங்கள் இணைந்த பாடப்பிரிவுகள், ஏற்கனவே அமலில் உள்ளன. இதில், மாணவர்களுக்கான பாடச்சுமைகளை குறைக்கும் வகையில், முக்கிய பாடங்களை, மூன்றாக குறைத்து, புதிய பிரிவுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.இதில், கணினி பயன்பாட்டு பாடம் இடம் பெறவில்லை என, புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து, மேல்நிலை பள்ளி முதுநிலை கணினி ஆசிரியர்கள் சங்க பொதுச்செயலர், பரசுராமன் அறிக்கை:பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வுக்கான, ஐந்து பாடங்கள் அடங்கிய பாடப்பிரிவில், கணினி பயன்பாடு பாடம் முழுவதுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய தகவல் தொழில்நுட்ப காலத்துக்கு, கணினியின் செயல்பாடுகளை, மாணவர்கள் அறிய வேண்டியது அவசியம். எனவே, முக்கிய பாடங்களுடன் கணினி பயன்பாடு பாடத்தையும் சேர்க்க வேண்டும்.

கலைப்பிரிவு மாணவர்கள், மற்ற பாடங்களுடன், கணினி பயன்பாடும் இணைந்த பிரிவை தேர்வு செய்ய, இந்த நடவடிக்கை உதவியாக இருக்கும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

பகுதி நேர ஆசிரியர்களுக்கு நிர்வாக பணி வழங்க முடிவு


பள்ளிகள் திறக்கும் வரை, பகுதி நேர ஆசிரியர்களுக்கு நிர்வாக பணி வழங்க, பள்ளி கல்வி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

தமிழக பள்ளி கல்வித்துறை கட்டுப்பாட்டில், அரசு பள்ளிகளில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.ஓவியம், கலை, தையல், தோட்டக்கலை உள்ளிட்ட, பல்வேறு சிறப்பு பாடங்களை கற்று கொடுக்கின்றனர்.மேலும், கல்வி அலுவலகங்களுக்கு கோப்புகளை எடுத்து செல்லுதல், தலைமை ஆசிரியர்களுக்கு உதவியாக இருத்தல் போன்ற பணிகளையும் மேற்கொள்வர்.

இந்நிலையில், பள்ளிகள் திறக்கப்படாததால், பகுதி நேர ஆசிரியர்களுக்கு பாடம் கற்பிக்கும் வேலை இல்லை. ஆனால், அவர்களுக்கு சம்பளம் வழங்க, அரசு உத்தரவிட்டு உள்ளது. எனவே, பகுதி நேர ஆசிரியர்களை, பள்ளி நிர்வாக பணியில் ஈடுபடுத்துமாறு, தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்

PG Teachers / Physical Dir Vacancy List as on 01.06.2020

01.06.2020 நிலவரப்படி நிரப்பத் தகுந்த முதுகலை ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை 1 காலிப் பணியிட விவரம். ( கடலூர் மாவட்டம் )


PG Teachers / Physical Dir Vacancy List as on 01.06.2020 - Download here...

Surprise Visit - BEO மற்றும் பணியாளர்களை கண்டித்த CEO - துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து செயல்முறைகள்


ராணிப்பேட்டை முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள் பள்ளிக்கல்வி விலையில்லா பாடநூல்கள் பள்ளிகளுக்கு நேரடியாக விநியோகம் செய்யப்பட வேண்டும் அறிவுரை வழங்குதல் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டார கல்வி அலுவலகம் எவ்வித முன்னறிவிப்பின்றி ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் 22.06.2020 பிற்பகல் பார்வையிட பட்டது. வட்டார கல்வி அலுவலகத்தில் இருந்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை திருமதி கோமதி என்பார் தனது சொந்த இருசக்கர வாகனத்தில் 28 மாணவர்களுக்குரிய புத்தகங்களை எடுத்துச் சென்றபோது முதன்மை கல்வி அலுவலரின் நேரடிப் பார்வைக்கு தெரிய வந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.பார்வையில் காணும் இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் கூறிய அறிவுரைகளில் இப்படி வட்டார கல்வி அலுவலர்கள் வாகனங்கள் மூலமாக மட்டுமே எடுத்துக் கொண்டு போய் நேரடியாக பள்ளிகளுக்கு வினியோகிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது வட்டார கல்வி அலுவலரின் இவ்வகையான செயல்கள் எச்சரிக்க தக்கது என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு இனிவரும் காலங்களில் இதுபோன்று நிகழாமல் அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலக பணியாளர்கள் மற்றும் பள்ளியில் உள்ள அனைத்து பணியாளர்கள் மூலமாக விநியோகிக்கப்பட வேண்டும் எனவும் திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் தொடர்ந்து இது போன்று செயல்பட்டால் சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது

மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றால் இ-பாஸ் கட்டாயம்": முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

மண்டல ரீதியிலான போக்குவரத்தும் நாளை முதல் 30 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சென்னையைத் தாண்டி மாவட்ட அளவிலும் கொரோனா தொற்று பரவுவதால் அடுத்து என்ன நடவடிக்கை குறித்து முதல்வர் பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவல் ஆரம்பித்தவுடன் மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் படிப்படியாக ஊரடங்கு தொடர்ந்து 5 கட்டங்களாக நீட்டிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய ஊரடங்கு வரும் ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
இந்நிலையில் ஆலோசனைக்கு பின்பு பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி "நாளை முதல் 30 ஆம் தேதி வரை மண்டலத்துக்குள் போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது. மேலும் அனைத்து மாவட்டங்களின் எல்லையும் நாளை முதல் 30 ஆம் தேதி வரை மூடப்படுகிறது. இந்நாட்களில் அனைத்தவிதமான போக்குவரத்தும் ரத்துச் செய்யப்படுகிறது. மாவட்டத்தை விட்டு மாவட்டம் சென்றால் இ-பாஸ் பெற வேண்டியது கட்டாயம்" என தெரிவித்துள்ளார்.

அஞ்சல் அலுவலகத்தில் உள்ள 9 சேமிப்பு திட்டங்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

இந்திய தபால் துறையானது வங்கிகள் போன்று பொது மக்களின் சேமிப்புப் பழக்கத்தினை ஊக்குவிக்கப் பல முதலீட்டுத் திட்டங்களை வழங்கி வருகிறது. பொது வருங்கால வைப்பு நிதி திட்டம், மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் என வருமான வரி விலைக்கு அளிக்கக் கூடிய சேமிப்பு

திட்டங்களையும் தபால் அலுவலகங்கள் வழங்கி வருகின்றன. சிறு சேமிப்புத் திட்டங்கள் என்றிழைக்கப்படும் பிபிஎப், மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம், சுகன்யா சம்ரிதி யோஜனா என ப்படும் செல்வ மகள் திட்டம் மற்றம் சில திட்டங்களுக்கு மூன்று மாதத்திற்கு ஒரு முறை என ஒவ்வொரு காலாண்டும் வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்படுகிறது. 


இந்த வட்டி விகித மாற்றமானது அரசு பத்திரங்கள் மூலமாகக் கிடைக்கும் வருவாயினைப் பொருத்து அளிக்கப்படுகிறது. எனவே தபால் நிலயத்தில் வழங்கப்படும் 9 வகையான சேமிப்புத் திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன் குறித்து விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.தபால் அலுவலகச் சேமிப்பு கணக்கு தபால் அலுவலகங்களில் வங்கிகள் போன்றே சேமிப்புக் கணக்குகள் உள்ளது. அதுவும் வங்கிகளில் 3.5 சதவீதம் மட்டுமே லாபம் அளிக்கும் நிலையில் தபால் அலுவலகம் 4 சதவீதம் லாபத்தினைத் தனிநபர் மற்றும் ஜாயிண்ட் சேமிப்புக் கணக்குகளுக்கு அளிக்கிறது. குறைந்தபட்ச இருப்புத் தொகை 500 ரூபாய் வைத்துக் கணக்கை துவங்கும் போது செக் புக் மற்றும் டெபிட் கார்டு போன்றவற்றையும் பெற முடியும். சேமிப்புக் கணக்குகளில் பணத்தினை டெபாசிட் செய்ய மற்றும் எடுக்க அருகில் உள்ள தபால் அலுவலகங்கள் மூலமாகச் செய்ய முடியும்.


5 வருட தபால் அலுவலக ரெக்கரிங் டெபாசிட் கணக்குகள் தபால் அலுவலக ரெக்கரிங் டெபாசிட் திட்டம் ஒரு வருடத்திற்கு 7.3 சதவீதம் லாபம் அளிக்கிறது. குறைந்தபட்சம் மாதம் 10 ரூபாய் எனவும் சேமிப்பினை தொடர அனுமதி அளிக்கிறது. ஆனால் வங்கிகளில் குறைந்தபட்சம் 500 ரூபாய் என டெபாசிட் செய்ய வேண்டும். எனவே இது பள்ளி குழந்தைகளுக்குச் சேமிப்புப் பழக்கத்தினைக் கற்றுக்கொடுக்கு ஏற்றதாக இருக்கும்.போஸ்ட் ஆப்பிஸ் டைம் டெபாசிட் கணக்கு போஸ்ட் ஆப்பிஸ் டைம் டெபாசிட் கணக்கில் ஒவ்வொரு காலாண்டுக்கும் வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது. தற்போது ஒரு வருடம் முதல் 5 வருடம் வரை வட்டி விகிதம் எப்படி அளிக்கப்படுகிறது என்று இங்குப் பார்க்கலாம். 1 வருட கணக்கு: 6.9% 2 வருட கணக்கு: 7.0% 3 வருட கணக்கு: 7.2% 5 வருட கணக்கு: 7.8% அதிகபட்ச டெபாசிட் வரம்பு என்று ஏதுமில்லை. 5 வருட டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் போது பிரிவு 80சி கீழ் வரி விலக்கும் அளிக்கப்படுகிறது. தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்ட கணக்கு தற்போது தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்ட கணக்கிற்கு 7.3 சதவீத வட்டி விகித லாபம் அளிக்கப்படுகிறது. ஒரு கணக்கில் அதிகபட்சம் 4.5 லட்ச்ம் வரை டெபாசிட் செய்யலா. இதுவே ஜாயிண்ட் கணக்கு என்றால் 9 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். ஜாயிண்ட் கணக்கு திறக்கும் போது இருவரும் ஒரே சம நிலையான முதலீட்டினை செய்ய வேண்டும். முதிர்வு காலம் 5 வருடம். ஒரு வருடத்திற்குப் பிறகு தேவைப்பட்டால் முன்கூடியே பணத்தினை எடுத்துக்கொள்ளலாம்.மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்கள் இந்தத் திட்டத்தில் அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இந்தக் கணக்கினை ஜாயிண்ட் கணக்காகவும் திறக்கலாம். வருமான வரிச் சட்டம் பிரிவு 80சி கீழ் வரி விலக்கும் அளிக்கப்படுகிறது. முதிர்வு கால,ம் 5 வருடம். ஆண்டுக்கு 8.7 சதவீத லாபத்தினை அளிக்கிறது.


பிபிஎப் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு ஆண்டுக்கு 8 சதவீத வட்டி விகித லாபம் அளிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் ஆண்டுக்கு 5,00 ரூபாய் முதல் 1,50,000 ரூபாய் வரை முதலீடு செய்யலாம். மொத்தமாக ல்லது 12 மாத தவணையாகவும் முதலீட்டை ஒவ்வொரு ஆண்டும் செய்ய முடியும். டெபாசிட் தொகைக்கு வருமான வரி செலுத்த வேண்டும் ஆனால் வட்டி வருவாய்க்குச் செலுத்த தேவையில்லை.


5 வருட தேசிய சேமிப்பு பத்திர திட்டம் 5 வருட தேசிய சேமிப்பு பத்திர திட்டம் தற்போது 8 சதவீத வட்டி விகித லாபத்தினை அளிக்கிறது. இன்று 100 ரூபாய் நீங்கள் முதலீடு செய்தால் 5 வருடத்திற்குப் பிறகு உங்களுக்கு 144.23 ரூபாய் கிடைக்கும். அதிகபட்ச வரம்பு என்று ஏதுமில்லை. வரி விலக்கு அளிக்கப்படுகிறது.கிசான் விகாஸ் பத்ரா கிசான் விகாஸ் பத்ரா திட்டம் ஆண்டுக்கு 7.7 சதவீத வட்டி விகித லாபத்தினை அளித்து வருகிறது. இந்தத் திட்டத்தில் 118 மாதம் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாகக் கிடைக்கும். அதிகபட்ச முதலீட்டு வரம்பு என்றும் ஏதும் கிடையாது. பெரியவர்கள் அல்லது மைனர் என யார் பேரில் வேண்டும் என்றாலும் இந்தத் திட்டத்தில் பத்திரதிட்டத்தினைப் பெற்றுக்கொள்ள முடியும்.
சுகன்யா சம்ரிதி யோஜனா பெண் குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டமாக இந்தச் செல்வ மகள் திட்டம் இருக்கிறது. 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்யத் துவங்கி 15 வருடம் வரை தொடர்ந்து முதலீடு செய்ய முடியும். இந்தத் திட்டத்தில் தற்போது 8.5 சதவீத வட்டி விகித லாபம் அளிக்கப்படுகிறது. முதலீட்டாளர்கள் வரி விலக்கும் பெற முடியும். ஆண்டுக்கு அதிகபட்சம் 1.50 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய முடியும்.

வீடு, நிலம் வாங்குவதற்கு முன் நிலத்தை பற்றி அறிய வேண்டிய விவரங்கள்

நிலம் வாங்குவதற்கு முன் நிலத்தை பற்றி அறிய வேண்டிய விவரங்கள்
  1. அறிமுகம்
  2. புல எண் (Survey Number)
  3. பதிவுத்துறை
  4. வருவாய்த்துறை
  5. பதிவு செய்யும் முறை
  6. அறிமுகம்


அறிமுகம்

நிலம் வாங்குவதற்கு முன் அதைப் பற்றி முழு விவரங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதோடு நிலம் வாங்கும் முறை, அதைப் பாதுகாக்கும் முறைகள் பற்றியும் தெரிந்து கொள்வது நல்லது.

பொதுவாக மக்களுக்கு நிலம் வாங்கும் போதும், விற்கும் போதும் என்னென்ன ஆவணங்கள் சரிபார்க்க வேண்டும் அது தமிழ் நாடு அரசின் எந்தெந்த துறைகளின் கீழ் வருகிறது என்பது போன்ற விவரங்கள் தெரிவதில்லை. நிலத்தை வாங்கும் போது ஆவணங்களைச் சரிபார்ப்பது மிகக் கடினமான ஒன்றாக  கருதப்படுகிறது.

அதைப் பற்றிய முழு விவரங்கள் தெரிந்து கொண்டால் அடிப்படையான விஷயங்களை நாமே ஆவணங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

அதற்கு முன் சொத்தின் அடிப்படை விஷயமான புல எண்  (Survey Number) என்பது என்ன என்று தெரிந்து கொள்வோம்.

புல எண் (Survey Number)
ஒவ்வொரு மாவட்டமும் பல வட்டங்களாகவும் (Taluk), வட்டங்கள் பல கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டிருக்கும். கிராமங்களின் கீழ் நிலங்கள் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு இலக்கம் இடப்படும். அதற்குப் புல எண் (survey Number) என்று பெயர்.

நிலம் தொடர்பான விவரங்கள் இருதுறைகளில் பராமரிக்கப்படுகின்றன.

பதிவுத்துறை
வருவாய்த்துறை
பதிவுத்துறை
நாம் சொத்து வாங்கும் போது அல்லது விற்கும் போது அந்தக் கிரயப் பத்திரத்தை (Sale Deed) சார்பதிவாளர் (Sub- Registration Office) அலுவலகத்தில் தான் பதிவு செய்ய வேண்டும்.

வருவாய்த்துறை
இந்த துறையில்தான் நிலத்திற்கான விவரங்கள் கீழ்க்கண்ட பதிவேட்டில் இருக்கும்.

பட்டா (Patta)
சிட்டா (Chitta)
அடங்கல் (Adangal)
அ' பதிவேடு ('A' Register)
நிலத்திற்கான வரைபட எல்லை (FMB)
பட்டா (Patta)

நிலத்தின் உரிமை நமக்கு தான் இருக்கிறது என்பதற்கான ஆதாரம் பட்டாவாகும். பட்டாவை வைத்துதான் ஒரு நிலத்தின் உரிமை யாருக்கு என்பதை முடிவு செய்யப்படுகின்றது. பின்வரும் விவரங்கள் பட்டாவில் இருக்கும் :-

மாவட்டத்தின் பெயர், வட்டத்தின் பெயர் மற்றும் கிராமத்தின் பெயர்
பட்டா எண்
உரிமையாளர் பெயர்
புல எண்ணும் உட்பிரிவும் (Survey Number and Subdivision)
நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா
நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை

சிட்டா (Chitta)

ஒரு தனி நபருக்குக் குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறதென்று அரசாங்கம் வைத்திருக்கும் பதிவேடு. இதில் சொத்தின் உரிமையாளர் பெயர், பட்டா எண்கள், நிலம் நன்செய் அல்லது புன்செய் பயன்பாடு, தீர்வை கட்டிய விவரங்கள் எல்லாம் இருக்கும்.

அடங்கல் (Adangal)

ஒரு கிராமத்தில் இருக்கிற மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடு. இதில் குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உரிய நிலம் யார் பெயரில் இருக்கிறது, பட்டா எண் மற்றும் நிலத்தின் பயன்பாடு என்பன போன்ற விவரங்கள் இதில் இருக்கும்.

அ' பதிவேடு ('A' Register)

இப்பதிவேட்டில்

பழைய நில அளவை எண், உட்பிரிவு எண், (Survey Number and Subdivision)
ரயத்துவாரி(ர), சர்க்கார் (ச), அல்லது இனாம் (இ),
நன்செய் (ந), புன்செய் (பு), மானாவாரி (மா), தீர்வு ஏற்படாத தரிசு (தீ.ஏ.த), புறம்போக்கு,
பட்டா எண் மற்றும் பதிவு பெற்ற உடைமையாளரின் பெயர்,
நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை, போன்ற விவரங்கள் இருக்கும்.
நிலத்திற்கான வரைபட எல்லை (FMB)

நிலத்திற்கான வரைபடம். இது இடம் எவ்வாறு பல பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது .

கிரயப் பத்திரம் (Sale Deed)

சொத்து வாங்கும் போது அல்லது விற்கும் போது அந்தக் கிரயப் பத்திரத்தைச் சார் பதிவாளர் அலுவலகத்தில் (Sub- Registration office) பதிவு செய்ய வேண்டும். கிரயப் பத்திரத்தில் கீழ்க்கண்ட முக்கியமான விவரங்கள் இருக்கும்.

எழுதிக் கொடுப்பவரின் பெயர், முகவரி
எழுதி வாங்குபவரின் பெயர், முகவரி
எவ்வளவு அளவு
எவ்வளவு தொகைக்கு விற்கப்படுகிறது

சொத்து விவரம்
சொத்து விவரத்தில் நாம் வாங்கும் நிலத்தின் அளவு, அது எந்தப் புல எண்ணில் அமைந்திருக்கிறது, பட்டா எண், அது எந்தக் கிராமத்தில் இருக்கிறது மற்றும் வட்டம், மாவட்டம் பற்றிய விவரங்கள் இருக்கும். நிலம் வீட்டு மனையாக இருந்தால் அதனுடைய அங்கீகாரம் பெற்ற விவரங்கள் மற்றும் பிளாட் எண் முதலியவை இருக்கும்.


கிரயப் பத்திர முதல் தாளின் பின் பக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட முழு விவரங்கள் இருக்கும்.


பதிவு எண் மற்றும் வருடம்
சொத்து எழுதிக் கொடுப்பவரின் புகைப்படம், கைரேகை, கையெழுத்து, முகவரி சொத்து எழுதி வாங்குபவரின் புகைப்படம், கைரேகை, கையெழுத்து, முகவரி புகைப்படங்களில் சார் பதிவாளரின் கையொப்பம்

பதிவு செய்யப்பட்ட நாள், விவரம், பதிவு கட்டணம் செலுத்திய விவரம் சார்பதிவாளர் அலுவலகத்தின், விவரம் ஆகியவை
இரண்டு சாட்சிகளின் கையொப்பம் மற்றும் முகவரி
மொத்தம் எத்தனை பக்கங்கள்
மொத்தம் எத்தனை தாள்கள்
தமிழ்நாடு அரசின் ஸ்டிக்கர். 01.07.06 முதல்தான் கிரயப் பத்திரத்தில் சொத்து விற்பவர் மற்றும்
வாங்குபவர்களின் புகைப்படங்கள் ஒட்டும் முறை அரசால் நடைமுறைப் படுத்தப்பட்டது.


சொத்து வாங்குபவர் புகைப்படம் இரண்டும் சொத்து விற்பவரின் புகைப்படம் ஒன்று ஒட்டப்பட்டு இருக்கும். இதற்கு முன் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களில் புகைப்படங்கள் இருக்காது. 18.05.09 முதல் இந்த முறையிலும் மாற்றம் செய்யப்பட்டு சொத்து வாங்குபவரின் புகைப்படம் இரண்டிற்குப் பதிலாக ஒன்று ஒட்டினால் போதும் என்ற முறை  நடைமுறைக்கு வந்தது.


இது தவிர ஒவ்வொரு தாளின் இரு பக்கமும் இந்தக் கிரயப் பத்திரம் மொத்தம் எத்தனை பக்கங்கள் (Sheet) கொண்டது மற்றும் அந்தப் பக்கத்தின் எண், ஆவண எண், வருடம் போன்ற விவரங்கள் சார்பதிவாளர் அலுவலகத்தினரால் குறிக்கப்பட்டிருக்கும்.ஒவ்வொரு தாளின் பின்புறமும் இந்தக் கிரயப் பத்திரம் எத்தனை தாள்களைக் கொண்டது. அந்த தாளின் நம்பர், ஆவண எண், வருடம் முதலியவை குறிக்கப்பட்டு சார்பதிவாளர் கையொப்பம் இருக்கும்.


நாம் பதிவு விவரங்கள் முத்திரைத் தாள்களில் டைப் செய்யும் போது அதன் முன்பக்கம் மட்டும் தான் டைப் செய்ய வேண்டும். ஒவ்வொரு பக்கத்திற்கும் 1ல் இருந்து ஆரம்பித்து வரிசையாக இலக்கம் இடப்படும்.. அதனால் தாள்களின் எண்ணிக்கையும் பக்கமும் சமமாக இருக்கும். எடுத்துக்காட்டாக 16 முத்திரைத் தாள்களில் டைப் செய்தால் 16 பக்கங்கள் இருக்கும். ஆனால் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யும் போது பதிவின் விவரங்கள் அனைத்தும் முதல் தாளின் பின்புறம் குறிக்கப்பட்டிருக்கும்.


சார்பதிவாளர் அலுவலகத்தில் இதையும் ஒரு பக்கமாக கணக்கில் எடுத்துக் கொண்டு இலக்கம் கொடுப்பரார்கள். அதனால் மொத்தம் 16 தாள்கள்தான் இருக்கும். ஆனால் பக்கங்கள் மட்டும் 17 ஆகிவிடும்.


பதிவு செய்யும் முறை
நாம் வாங்கும் இடம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட புல எண்களில் அமைந்திருக்கலாம். ஒவ்வொரு புல எண்ணிற்கும் அது  மைந்திருக்கும் இடத்தை  பொறுத்து அரசாங்கம் மதிப்பீடு செய்து ஒரு விலை நிர்ணயம் செய்யும். அதற்கு பெயர் Guide line value .


நாம் பத்திரம் பதிவு செய்யும் போது இந்த பெயர் Guide line valueக்கு 8% முத்திரை தாள்களாக வாங்கி அதில் கிரயப் பத்திரத்தின் விவரங்கள் டைப் செய்து சார்பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல்  செய்ய வேண்டும். முழு மதிப்பிற்கும் (8%) முத்திரைத்தாள்கள் வாங்க  முடியாத நிலையில், ஏதாவது ஒரு மதிப்பிற்கு முத்திரைத் தாள் வாங்கிவிட்டு  மீதி தொகையை சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்தலாம்.


இதற்கு 41 என்ற படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதில் வாங்க வேண்டிய முத்திரைத் தாள்களின் மதிப்பு, நாம் வாங்கிய முத்திரைத் தாளின் மதிப்பு,, மீதி செலுத்த வேண்டிய தொகை முதலிய விவரங்களை பூர்த்தி செய்து கிரயப்  பத்திரத்துடன் இணைத்து சார்பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்ய  வேண்டும்.


மீதி செலுத்த வேண்டிய தொகை ரூபாய் ஆயிரம் வரை இருந்தால் பணமாக  செலுத்தி விடலாம். அதற்கு மேல் இருக்கும் பட்சத்தில் காசோலையாக (Demand Draft) செலுத்த வேண்டும். காசோலை யார் பெயரில் எடுக்க வேண்டும் என்ற  விவரம் அந்தந்த சார்பதிவாளர் அலுவலகத் தகவல் பலகையில் குறிக்கப்பட்டிருக்கும்.


பதிவுக் கட்டணமாக Guide line valueவில் இருந்து  (1%) மற்றும் கணினி கட்டணம் ரூபாய் 100ம் பதிவு செய்யப்படும் போது  சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த வேண்டும். இதுவும் ரூபாய் ஆயிரம்  வரையில் பணமாகவும் அதற்கு மேல் காசோலையாகவும் செலுத்த வேண்டும்.


முத்திரைத் தாள்களில் கிரயப் பத்திர விவரங்கள் டைப் செய்து, ஒவ்வொரு பக்கத்திலும் கீழ்பகுதியில் ஒரு புறம் சொத்து வாங்குபவரும் மறுபுறம் சொத்து விற்பவரும் கையொழுத்து இட வேண்டும். பின்பு சார்பதிவாளரிடம் இந்தக் கிரயப் பத்திரத்தைப் பதிவு செய்வதற்காக தாக்கல் செய்ய வேண்டும்.


சார்பதிவாளர், சொத்து வாங்குபவர் மற்றும் விற்பவரின் புகைப்படம், அடையாள அட்டை முதலியவைகளையும், மற்ற எல்லா விவரங்களையும் சரி பார்த்து விட்டு  கிரயப் பத்திரத்திற்குப் பதிவு இலக்கம் கொடுப்பார்.

நாம் செலுத்த வேண்டிய  பதிவுக்  கட்டணத்தைச் செலுத்திய பின் நிலம் விற்பவர் மற்றும் வாங்குபவரின்  புகைப்படங்கள் முதல் முத்திரைத் தாளின் பின்புறம் ஒட்டப்பட்டு அவர்களுடைய  கையொப்பம், முகவரி, கைரேகை முதலியவை வாங்கப்படும். புகைப்படங்களின் மேல்  சார்பதிவாளர் கையொப்பம் இடுவார். சாட்சிகள் கையொப்பமிடுவர் இத்துடன்  பதிவு நிறைவு பெறும்.


பதிவுக் கட்டணம் செலுத்திய இரசீதில், சார்பதிவாளர்  மற்றும் சொத்து வாங்குபவர் கையொப்பம் இட வேண்டும். சொத்து வாங்குபவர்  பதிவு செய்யப்பட்ட பத்திரத்தைக் குறிப்பிட்ட சில நாட்களுக்குப் பிறகு,  இந்த இரசீதைக் காட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் சென்று பெற்றுக்  கொள்ளலாம். அவரைத் தவிர வேறு யாராவது சென்று வாங்க வேண்டியதிருந்தால்,  இரசீதில் அந்த நபரும் கையொப்பமிட வேண்டும்.


பத்திரப்பதிவின் போது Guide line value-விற்கு 8% முத்திரைதாள் வாங்க வேண்டும். அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட Guide line value அதிகமாக இருக்கிறது என எண்ணும் பட்சத்தில் நாமே சொத்திற்கு ஒரு மதிப்பு நிர்ணயம் செய்து அந்த மதிப்பிற்கு 8% முத்திரைத்தாள் வாங்க வேண்டும். அதை சார்பதிவாளர் பதிவு செய்து விட்டு pending document என முத்திரை இட்டு விடுவார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்(Collector office) இதற்கென்று ஒரு பிரிவு இருக்கிறது.

அங்கிருந்து அரசாங்க அலுவலர் ஒருவர் வந்து இடத்தை பார்வையிட்டு, அதைச் சுற்றி உள்ள சர்வே எண்களின் மதிப்பை வைத்து Guide line value சரியானதா என்பதை முடிவு செய்வார். அல்லது அவரே ஒரு மதிப்பை  நிர்ணயம் செய்வார்.


Guide line value சரியாக இருக்கிறது என்று அவர்  முடிவு செய்யும் பட்சத்தில் Guide line value-விற்கும் நாம் நிர்ணயித்த மதிப்பிற்கும் உள்ள வித்தியாசத் தொகையில் 8% பணமாக கட்ட வேண்டும் அல்லது  அவர் நிர்ணயம் செய்த மதிப்பிற்கும், நாம் நிர்ணயம் செய்த மதிப்பிப்ற்கும் உள்ள வித்தியாசத் தொகையில் 8% பணமாக கட்ட வேண்டும்.

அப்பொழுது தான் நாம்  பதிவு செய்த document நம்மிடம் ஒப்படைக்கப்படும். இந்த முறை 47A பிரிவு  என்பதாகும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் மீதி தொகையை சார்பதிவாளர்   அலுவலகத்தில் செலுத்தி பத்திரத்தைப் பெற வேண்டும். இல்லை என்றால் அது  அந்த மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும். நாம்  அங்கு சென்று அந்த வித்தியாசத் தொகையை செலுத்தி பெற்று கொள்ளலாம்.

ண", "ன" மற்றும் "ந" எங்கெல்லாம் வரும்? ஒரு எளிய விளக்கம்


எழுத்துப்பிழை இல்லாமல்
தமிழ் சொல்லி தர பிள்ளைகளுக்கு சில விளக்கங்கள்...

"ண", "ன" மற்றும் "ந" எங்கெல்லாம் வரும்? 
ஒரு எளிய விளக்கம்

மூன்று சுழி “ண”, 
ரெண்டு சுழி “ன” மற்றும்
"ந" என்ன வித்தியாசம்?

தமிழ் எழுத்துகளில் 
ரெண்டு சுழி "ன" என்பதும், மூன்று சுழி "ண" என்பதெல்லாம் வெறும் பேச்சு வழக்கு.
"ண" இதன் பெயர் டண்ணகரம்,
"ன" இதன் பெயர் றன்னகரம்,
"ந" இதன் பெயர் தந்நகரம் என்பதே சரி.

மண்டபம், கொண்டாட்டம் – என எங்கெல்லாம் இந்த மூன்று சுழி "ணகர" ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து 'ட' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு "டண்ணகரம்" னு பேரு. (சொல்லிப் பாருங்களேன்!)

தென்றல், சென்றான் – என எங்கெல்லாம் இந்த ரெண்டு சுழி "னகர" ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து 'ற' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு "றன்னகரம்" னு பேரு. (சும்மா சொல்லிப்பாருங்க!)

இது ரெண்டும் என்றுமே மாறி வராது..
நினைவில் கொள்க..

மண்டபமா? மன்டபமா? சந்தேகம் வந்தா...
பக்கத்துல 'ட' இருக்கா,
அப்ப இங்க மூன்று சுழி 'ண்' தான் வரும்.
ஏன்னா அது "டண்ணகரம்".

கொன்றானா? கொண்றானா? சந்தேகம் வந்தா... 
பக்கத்துல 'ற' இருக்கா
அப்ப இங்க ரெண்டு சுழி 'ன்' தான் வரும்.
ஏன்னா அது "றன்னகரம்"
என்று புரிந்து கொள்ளலாம்.இதே மாதிரித்தான் 'ந' கரம் என்பதை, "தந்நகரம்" னு சொல்லணும்
ஏன்னா இந்த 'ந்' எழுத்தை அடுத்து 
வரக்கூடிய உயிர்மெய் 'த' மட்டுமே. (பந்து, வெந்தயம், மந்தை).

இந்த "ண", "ன" மற்றும் "ந" விளக்கம் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்..........

அருமையான விளக்கம் இதுவரை பலபேருக்கு தெரியாமல் இருந்தது. 
தமிழறிவோம் இதை பலபேருக்கு பகிர்வோம்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இருக்கக்கூடிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் கொரனா சிகிச்சையை இணைத்து தமிழக அரசு உத்தரவு

Flash News : GO : 279 , DATE : 24.06.2020 - ஊழியர்களுக்கான காப்பீடு திட்டம் மேலும் ஒரு வருட காலத்திற்கு நீட்டிப்பு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.

30-6-2020 அன்று காலாவதியாகும் ஊழியர்களுக்கான ABSTRACT MEDICAL AID - புதிய சுகாதார காப்பீட்டு திட்டம், 2016 - 1-7-2020 முதல் 30-6-2021 வரை இன்னும் ஒரு வருட காலத்திற்கு நீட்டிப்பு - உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.


 

Most Reading

Tags

Sidebar One