Search

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு: உடனே அப்ளை பண்ணுங்க!

Wednesday 28 June 2023

 Tamil Nadu Government Jobs சென்னை மாவட்டத்தில் உள்ள கந்தகோட்டம் கந்தசாமி  (ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி) திருக்கோயிலில் அமைக்கப்படவுள்ள மருத்துவ மையத்தில் மருத்துவ அலுவலர், செவிலியர் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் ஆகிய பணிகளுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள் எதிர்வரும் ஜுலை 24ம் தேதி (24.07.2023) ஆகும்.

எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் கடைசி நேரம் வரை காத்திருக்காமல் போதிய கால இடைவெளி இருக்கும் போதே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காலியிடங்கள் விவரம்:

பதவியின் பெயர்வயதுகல்வித்தகுதிஒப்பந்த ஊதியம்
மருத்துவ அலுவலர் (Medical Officer ) 2 பதவிகள்1.07.2023 அன்று 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்MBBSரூ.90,000/-
செவிலியர் (Staff Nurse) 2 பதவிகள்1.07.2023 அன்று 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்DGNM ( DiplomaIn General NursingMidwife )ரூ.14,000/-
பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் (Multi Purpose hospital worker/ Attender)2 பதவிகள்1.07.2023 அன்று 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்8ம் வகுப்புத் தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்ரூ.6,000

மேற்கண்ட விவரப்படியான காலிப்பணியிடங்களுக்கு தகுதியுள்ள இந்து சமயத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து 24.07.2023 மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

காலியிடங்கள் விவரம், வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை  இந்து அறநிலையத் துறை தேர்வு அறிவிப்பில் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அதனை இந்த லிங்கை கிளிக் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பொது நிபந்தனைகள்:

இந்து மதத்தை சார்ந்தவராகவும், தமிழ்நாட்டை சார்ந்தவராகவும் 01.07.2023 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் இருக்க வேண்டும்.

தொற்று நோய் உடல் அல்லது மனநிலை குன்றிய குறைபாடுகள், நீதிமன்றத்தில் தண்டனை அடைந்தவர்கள், பட்ட கடனை தீர்க்க முடியாதவர்கள் என நீதிமன்றத்தில் தீர்மானிக்கப்பட்டவர்கள், அரசுப்பணிகள், பொது ஸ்தாபனங்கள் மற்றும் வேறு இடங்களில் பணிபுரிந்து தண்டனை காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் ஆகியோர்கள் மேற்படி பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள்.

நன்னடத்தை உடையவராக இருக்க வேண்டும். இதற்கு அரசிதழ் பதிவு பெற்ற அரசு உயரதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட நன்னடத்தைச் சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் நல்ல தேக ஆரோக்கியம் உள்ளவராக இருக்க வேண்டும்.

இந்த வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடும் தேதிக்கு முன்னதாக வரப்பெற்ற விண்ணப்பங்களும், 24.07.2023-ம் தேதி மாலை 05.45 மணிக்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு பதவிக்கும் அந்தந்த பதவிக்குரிய கல்வி மற்றும் இதர தகுதி சான்றுகள் மற்றும் இதர விவரங்களுடன் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்பப்படும் மேலுறையின் மீது கண்டிப்பாக பதவியின் பெயர் குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டும்.

வரப்பெற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் சரிப்பார்க்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு பட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அறிவிப்பு அனுப்பப்படும்.

விண்ணைப்பங்களுடன் அனுப்பப்படும் அனைத்துச் சான்றிதழ்களும் அரசு பதிவு பெற்ற அலுவலர் சான்றொப்பம் பெறப்பட்ட புகைப்பட நகல்களாக மட்டுமே இருக்க வேண்டும். அசல் சான்றிதழ்கள் அனுப்ப கூடாது.

விண்ணப்பங்களுக்கு கட்டணம் கிடையாது. விண்ணப்பங்களை நேரிலோ அல்லது hrce.tn.gov.inஎன்கிற இணையதள முகவரியில் மூலமோ ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொன்னைம்.

விண்ணப்பதாரர் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி உதவி ஆணையர் / செயல் அலுவலர்,  ஸ்ரீ முத்துக்குமாரசாமி திருக்கோயில், எண்- 44, இராசப்ப செட்டி தெரு, பூங்காநகர், சென்னை - 3 ஆகும்.


Read More »

யோகா தெரியுமா உங்களுக்கு? பயிற்சி மையம் அமைத்து ரூ.2 லட்சம் வரை சம்பாதிக்கலாம்..!

 நமது உடல், மனம் மற்றும் ஆன்மீக நலத்தை பேணும் பண்டையக் கால உடற்பயிற்சி முறையான யோகா, இன்றைய நவீன காலத்திலும் மக்களிடம் பிரபலமாக இருக்கிறது. தற்போதைய வாழ்க்கை முறைக்கு யோகா அத்தியாவசிய தேவையாக இருக்கிறது.

இன்றைக்கும் ஜிம் செல்வதை விட யோகா பயிற்சிக்கு செல்வதுதான் டிரெண்டிங்காக உள்ளது. சமீப காலமாக யோகா சென்டர் அமைக்கும் தொழில் இந்தியாவில் வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது. உலகளவில் 80 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்டதாக இந்த யோகா பிசினஸ் இருக்கிறது.

பலரும் யோகா பயிற்சி மீது விருப்பம் கொண்டிருப்பதால், யோகா சென்டர் அமைப்பது நல்ல தொழிலாக வளர்ந்திருக்கிறது. பலருக்கும் யோகா சென்டர் தொடங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதை எப்படி தொடங்க வேண்டும், எப்படி அனுமதி வாங்க வேண்டும் போன்ற விவரங்கள் தெரியாமல் இருப்பார்கள். அவர்களைப் போன்றவர்களுக்கு உதவவே பிரான்சைஸ் நிறுவனங்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு பிரேமானந்த் யோகா, ஸ்கில் யோகா, யோக் ட்ரீ போன்றவை யோகா சென்டர் பிரான்ச்சைஸ் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறக்கின்றன.

அனுமதி மற்றும் உரிமை :  யோகா சென்டர் அமைப்பதற்கான முறையான அனுமதி பெறுவது அவசியமாக உள்ளது. யோகா மையம் அமைப்பதற்கு முன்பே அதற்குண்டான அனுமதி மற்றும் உரிமத்தை வாங்கிவிட வேண்டும்.

வருடத்திற்கு ரூ.9 லட்சத்திற்கு மேல் வருமானம் வருவதாக இருந்தால், இந்தியாவில் யோகா சென்டர் தொடங்க சேவை வரி உரிமம் மிகவும் அவசியம். ரூ.10 லட்சத்திற்கு மேல் வருமானம் வந்தால் 14 சதவிகிதம் சேவை வரி கட்ட வேண்டும். ஒரு சில பிரான்சைஸ் நிறுவனங்கள் இந்த தொகையும் சேர்த்தே வாங்கிவிடுகின்றன. யோகா மையம் அமைக்க எவ்வுளவு முதலீடு தேவை ?  

பெரும்பாலான யோகா சென்டர்கள் குறைந்த முதலீட்டில் தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இடத்தின் அளவைப் பொருத்தே நாம் முதலீடு செய்யும் தொகை மாறுபடும். யோகா சென்டர்களை நீங்கள் தனியாகக் கூட ஆரம்பிக்க வேண்டாம். ஏதாவது பிரான்சைஸ் மூலம் நீங்கள் யோக சென்டர்களை அமைக்கலாம். இதற்கு குறைந்த செலவே ஆகும்.

கொஞ்சம் தீவிரமாக பல திறன்களை கற்றுக் கொடுக்கும் யோகா சென்டர்கள் அமைக்க வேண்டும் என்றால் அதற்கு 5,00,000 ரூபாய் முதல் 7,00,000 ரூபாய் வரை செலவாகும். இதற்கு 500 சதுர அடியில் திறந்தவெளி அரங்கம் வேண்டும். மற்ற யோகா பயிற்சிகளுக்கு 1500 சதுர அடியில் இடம் தேவைப்படும்.

Read More »
 

Most Reading

Tags

Sidebar One