பொது அறிவு கண்டுபிடிப்புகளும் கண்டுபிடித்தவர்களும் :

அலுமினியத்தை கண்டுபிடித்தவர் யார்? - F.ஹோலர், 1827.

- கால்சியத்தை கண்டுபிடித்தவர் யார்? - H.டேவி, 1808.

- ஹைட்ரஜனை கண்டுபிடித்தவர் யார்? - H.கேவண்டிஸ், 1766.

- பாஸ்பரஸை கண்டுபிடித்தவர் யார்? - H.பிராண்ட், 1669.

- ரேடியத்தை கண்டுபிடித்தவர் யார்? - P&M.கியூரி, 1898

- பொட்டாசியத்தை கண்டுபிடித்தவர் யார்? - H.டேவி, 1807.

- நைட்ரஜனை கண்டுபிடித்தவர் யார்? - D.ரூதர்போர்டு, 1772.

- யுரேனியத்தை கண்டுபிடித்தவர் யார்? - E.M.பெலிகாட், 1841.

- அயோடியனை கண்டுபிடித்தவர் யார்? - B.கோர்ட்டாய்ஸ், 1812.

- நிக்கலை கண்டுபிடித்தவர் யார்? - A.க்ரான்ஸ்டெட், 1751.

- ரேடியோ கதிர் வீச்சை கண்டுபிடித்தவர் யார்? - கியூரி.

- விமானத்தை கண்டுபிடித்தவர் யார்? - ஆர்வில் பி வில்பர்ரைட், 1903

- திருடர் எச்சரிப்பு கருவியை கண்டுபிடித்தவர் யார்? - எட்வின் டி.ஹோம்ஸ், 1858.

- டீசல் இன்ஜினை கண்டுபிடித்தவர் யார்? - ருடோலஃப் டீசல் 1895. (ஜெர்மன்)

- கண்ணாடியை கண்டுபிடித்தவர் யார்? - ஆக்ஸ்பர்க், 1080 (ஜெர்மனி)

- மதிவண்டியை கண்டுபிடித்தவர் யார்? - கிர்க்பாடிரிக் மாக்மிலென், 1839-40 (பிரிட்டன்)

- சினிமாவை கண்டுபிடித்தவர் யார்? - லூயி பிரின்ஸ், 1885 (பிரான்ஸ்)

- லேசரை கண்டுபிடித்தவர் யார்? - T.H.மைமா, 1960.

- செயற்கை ரப்பரை கண்டுபிடித்தவர் யார்? - குஸ்டீவ்வான் சார்டெட், 1827.

- மயக்க மருந்தை கண்டுபிடித்தவர் யார்? - மோட்டன் மற்றும் ஜாக்ஸன்.

- கதிரியக்கச் செயலை கண்டறிந்தவர் யார்? - ஹென்றி பெக்கோரல், 1896.

- ரேயானை முதன் முதலில் கண்டுபிடித்தவர் யார்? - கார்டனேட்.

- மின் விளக்கை கண்டுபிடித்தவர் யார்? - தாமஸ் ஆல்வா எடிசன், 1878.

- அசைவின் சட்டத்தை கண்டுபிடித்தவர் யார்? - ஐசக் நியூட்டன்.

- அணுகுண்டை கண்டுபிடித்தவர் யார்? - ஜெ.ராபர்ட் ஓப்பன்ஹைமர்,1945.

- புன்சன் அடுப்பை கண்டுபிடித்தவர் யார்? - வில்ஹெம் வான்பன்சன், 1855 (ஜெர்மனி)
பொது அறிவு வினா விடைகள்
1. வெள்ளை துத்தம் என்பது - ஜிங்க் சல்பேட்

2. சுத்தமான தங்கம் என்பது எத்தனை காரட்? - 24 காரட்

3. சாண எரிவாயுவில் உள்ள முக்கிய வாயு எது? - மீத்தேன்

4. பொதுவாக உலோக ஆக்ஸைடுகள் பெற்றுள்ள பண்பு? - காரத்தன்மை

5. காஸ்டிக் சோடாவை எதனுடன்
சூடாக்குவதன் மூலம் சோப்பு கிடைக்கிறது? - கொழுப்பு

6. பாதரசத்தின் கொதிநிலை என்பது? - 357 டிகிரி சென்டிகிரேடு

7. சேமித்து வைக்கும் மின்கல அடுக்குகளில் உலோகப் பு+ச்சாக பயன்படும் அரிதான உலோகம்? - காட்மியம்

8. வெண் பாஸ்பரசை சிவப்பு பாஸ்பரஸாக மாற்றுவதற்கு பயன்படும் வினையு+க்கி? - அயோடின்

9. லாக்டோ மீட்டர் என்பது எதனுடைய அடர்த்தியை கண்டுபிடிக்க உதவுகிறது? - பால்

10. அறிவியலின் பாரம்பரிய குணத்தை பற்றி படிப்பது? - மரபியல்

11. திண்மப் பொருள்களில் மூலக்கூறுகளுக்கு இடையே உள்ள ஈர்ப்பு விசை ........... ஆக இருக்கும்? - மிக அதிகமாக

12. பேனாவின் முனை பிளவுபட்டு இருப்பதன் தத்துவம்? - நுண்புழை ஏற்றம்

பொது அறிவுத் தகவல்கள் :

🌟 திரவ நிலையிலுள்ள உலோகம் - பாதரசம்

🌟 தீயின் எதிரி என அழைக்கப்படுவது - கார்பன்-டை-ஆக்சைடு

🌟 இரத்தத்திலுள்ள ஹீமோகுளோபினைப் பாதிக்கக்கூடிய வாயு - கார்பன் மோனாக்சைடு

🌟 மயில் துத்தம் என்பதன் வேதிப்பெயர் - காப்பர் சல்பேட்

🌟 திரவங்களின் கன அளவை காணப்பயன்படும் அலகு - லிட்டர்

🌟 விண்வெளி ஆய்வுநிலையங்களில் மின்சாரம் தயாரிக்க உதவுவது - சு+ரிய மின்கலம் (சோலார்)

🌟 தாவரங்களில் ஒளிச் சேர்க்கையின் போது சேமிக்கப்படும் ஆற்றல் - வேதி ஆற்றல்

🌟 விலங்கினங்களில் முதன் முதலாகத் தோன்றும் நிணநீர் உறுப்பு - தைமஸ் சுரப்பி

🌟 அசுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய் - நுரையீரல் தமனி

🌟 ஒளிச்சேர்க்கையின் போது வெளியிடப்படும் வாயு - ஆக்ஸிஜன்

குரூப் தேர்விற்காக வேதியியலில் சில முக்கிய குறிப்புகள்


ரொட்டி தயாரிக்கப் பயன்படும் பேக்கிங் பவுடர் தயாரிக்க பயன்படுவது - சோடியம் பை கார்பனேட்
பேக்கிங் பவுடரில் கலந்துள்ள கலவை - சோடியம் பை கார்பனேட், டார்டாரிக் அமிலம்
சலவைத் தொழில் சலவை சோடாவாகப் பயன்படுவது - சோடியம் கார்பனேட்
பலவித உலர்ந்த சோப்பு பவுடர்களில் முக்கியப் பகுதிப்பொருளாக உள்ளது - சோடியம் கார்பனேட்
கடின நீரை மன்னீராக்கப் பயன்படுவது - சோடியம் கார்பனேட்
எரிசோடா, வாஷிங் சோடா, சலவை சோடா போன்ற சோடிய சேர்மங்கள் தயாரிக்க மூலப்பொருளாகப் பயன்படுவது - சோடியம் குளோரைடு
உறைகலவை என்பது - பனிக்கட்டி + சோடியம் குளோரைடு
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தூய பொருட்கள் எந்த விகிதத்திலும் கலந்திருப்பது கலவை ஆகும்
ஒருபடித்தான கலவைக்கு எடுத்துக்காட்டு - காற்று
பலபடித்தான கலவைக்கு எடுத்துக்காட்டு - மரத்தூள், இரும்புத்தூள், சாதாரண உப்பு
கார்பன் துகள்களும், காற்றும் கலந்த கலவை புகை எனப்படும்.
ஆக்சிஜன், நைட்ரஜன், கார்பன் டை ஆக்சைடு, நீராவி கலந்த கலவை - காற்று ஆகும்.
எரிதலுக்கு துணை புரியும் வாயு - ஆக்சிஜன்
சோடியம் பால்மிடேட் என்பது - சோப்பு
w என்ற குறியீடு எத்தனிமத்தைக் குறிக்கும் - டங்ஸ்டன்
உரமாகப் பயன்படுவது - அம்மோனியம் பாஸ்பேட்
ஒரு கந்தக மூலக்கூறில் அடங்கியுள்ள கந்தக அணுக்களின் எண்ணிக்கை - 8
Sio2 - ன் வேதிப்பெயர் - மண்
பியூட்டேன் மற்றும் பென்டேன் வாயுக்களின் கலவையே சமையல் வாயு ஆகும்.
எலும்பு மற்றும் பற்களில் உள்ள தனிமம் - கால்சியம் பாஸ்பேட்
அசிடஸ் என்ற இலத்தீன் மொழிச்சொல்லின் பொருள் - அமிலம்
நீரில் கரைக்கப்படும் பொழுது ஹைட்ரஜன் அயனிகளைக் கொடுப்பது அமிலம் எனப்படும்.
தாவரங்களிலிருந்து விலங்குகளிலிருந்தும் பெறப்படும் அமிலங்கள் கரிம அமிலங்கள் எனப்படும்
தாதுப் பொருட்களில் இருந்து பெறப்படும் அமிலங்கள் கனிம அமிலங்கள் எனப்படும்

DAILY HISTORY HISTORY OF THE DAY 07.09.2018 | TNPSC | HISTORY STUDY MATERIALS FREE DOWNLOAD


நிகழ்வுகள்


70 – உரோமைப் பேரரசின் இராணுவம் டைட்டசு தலைமையில் எருசலேமைக் கைப்பற்றியது.
878 – திக்குவாயர் லூயி மேற்கு பிரான்சியாவின் மன்னராக எட்டாம் யோவான் திருத்தந்தையால் முடிசூடப்பட்டார்.
1159 – மூன்றாம் அலக்சாண்டர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்
1191 – மூன்றாம் சிலுவைப் போர்: இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட் அர்சுப் நகரில் நடந்த சண்டையில் சலாகுத்தீனைத் தோற்கடித்தார்.
1228 – புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் பிரெடெரிக் பாலத்தீனத்தில் உள்ள ஏக்கர் என்ற இடத்தில் ஆறாவது சிலுவைப் போரை ஆரம்பித்தார். இது இறுதியில் எருசலேம் பேரரசைத் தோற்றுவிக்க காரணமாக இருந்தது.[1]
1303 – பிரெஞ்சு மன்னர் நான்காம் பிலிப்பின் உத்தரவில் திருத்தந்தை எட்டாம் பொனிபேசு கைது செய்யப்பட்டார்.
1571 – நோர்போக்கின் 4-வது கோமகன் தோமசு அவார்டு இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்தைக் கொலை செய்ய சதி முயற்சியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டார்.
1652 – 15,000 ஆன் சீன விவசாயிகளும் துணை இராணுவக்குழுக்களும் சீனக் குடியரசில் இடச்சு ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
1695 – முகலாயர்களின் கஞ்ச்-இ-சவாய் கப்பலை ஆங்கிலேயக் கடற்கொள்ளைக்காரன் என்றி எவரி கைப்பற்றினான். இதுவே வரலாற்றில் மிகப்பெரும் கப்பல் கொள்ளை எனக் கருதப்படுகிறது. பதிலுக்கு, பேரரசர் ஔரங்கசீப் இந்தியாவுடனான ஆங்கிலேயர்களின் வணிகத்தைத் தடை எய்யப்போவதாக அச்சுறுத்தினார்.
1706 – எசுப்பானிய மரபுரிமைப் போர்: துரின் முற்றுகை முடிவடைந்தது. பிரெஞ்சுப் படைகள் வடக்கு இத்தாலியில் இருந்து விலகிக்கொண்டன.
1778 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரான்சு பிரித்தானிய மேற்கிந்தியத் தீவுகளில் டொமினிக்காவை ஆக்கிரமித்தது.
1812 – நெப்போலியப் போர்கள்: நெப்போலியன் உருசியப் படைகளை பரடீனோ என்ற கிராமத்தில் தோற்கடித்தான்.
1818 – மூன்றாம் காருல் நோர்வே மன்னராக குடி சூடினார்.
1822 – முதலாம் டொம் பெத்ரோ போர்த்துகலில் இருந்து பிரேசிலின் விடுதலையை சாவோ பாவுலோவில் இருந்து அறிவித்தார்.
1860 – இத்தாலிய ஐக்கியம்: கரிபால்டி நாபொலியை அடைந்தார்.
1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அட்லாண்டாவில் மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
1911 – இலூவா அருங்காட்சியகத்தில் இருந்து புகழ்பெற்ற மோனா லிசா ஓவியத்தைத் திருடியதாக சந்தேகத்தின் பேரில் பிரெஞ்சுக் கவிஞர் கியோம் அப்போலினேர் கைது செய்யப்பட்டார்.
1921 – கத்தோலிக்கரின் மரியாயின் சேனை என்ற அமைப்பு டப்ளின் நகரில் ஆரம்பிக்கப்பட்டது.
1923 – பன்னாட்டுக் காவலகம் (இன்டர்போல்) ஆரம்பிக்கப்பட்டது.
1927 – முதலாவது முழுமையான இலத்திரனியல் தொலைக்காட்சிப் பெட்டி பைலோ பார்ன்சுவர்த் என்பவரால் அமைக்கப்பட்டது.
1929 – பின்லாந்தில் “குரு” என்ற பயணிகள் கப்பல் மூழ்கியதில் 136 பேர் கொல்லப்பட்டனர்.
1936 – கடைசி தாசுமேனியப் புலி ஓபார்ட்டில் இறந்தது.
1940 – இரண்டாம் உலகப் போர்: தி பிளிட்ஸ்: நாட்சி ஜெர்மனி பிரித்தானிய மக்களை அச்சுறுத்தும் வகையில் லண்டன் நகர் மீது 300 தொன் கனவெடிகுண்டுகளையும், 13,000 எரிகுண்டுகளையும் வீசினர். 50 நாட்கள் தொடர்ந்து குண்டுவீச்சு இடம்பெற்றது.
1943 – டெக்சாசில் உணவுவிடுதி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் சிக்கி 55 பேர் உயிரிழந்தனர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: வேக் தீவில் 1941 டிசம்பர் முதல் நிலை கொண்டிருந்த சப்பானியப் படைகள் அமெரிக்கக் கடற்படையிடம் சரணடைந்தன.
1945 – இரண்டாம் உலகப் போர்: பெர்லின் வெற்றி ஊர்வலம் இடம்பெற்றது.
1953 – நிக்கிட்டா குருசேவ் சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1965 – இந்திய-பாகிஸ்தான் போர், 1965: இந்திய எல்லையில் தனது படைகளைக் குவிக்கப்போவதாக சீனா அறிவித்தது.
1970 – யோர்தானில் அரபுக் கரந்தடிப் படைகளுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே சண்டை ஆரம்பமானது.
1977 – கனடா, ஒண்டாரியோவில் 300-மீட்டர் உயரத் தொலைத்தொடர்புக் கோபுரத்தின் மீது சிறிய ரக விமானம் ஒன்று மோதியதில் கோபுரம் உடைந்து வீழ்ந்தது.
1977 – பனாமா கால்வாய் தொடர்பாக பனாமாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது. 20ம் நூற்றாண்டின் இறுதியில் பனாமா கால்வாயின் கட்டுப்பாட்டை பனாமாவுக்குக் கையளிப்பதாக அமெரிக்கா உறுதி தந்தது.
1978 – கொழும்பு இரத்மலானை விமான நிலையத்தில் அவ்ரோ விமானம் ஒன்று குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது.
1978 – பல்கேரிய அதிருப்தியாளர் கியோர்கி மார்க்கொவ் லண்டன் வாட்டர்லூ பாலத்தைக் கடக்கையில் பல்கேரிய இரகசிய காவற்படையினன் ஒருவனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1986 – தென்னாபிரிக்காவின் ஆங்கிலிக்கத் திருச்சபையின் முதலாவது கறுப்பின ஆயராக டெசுமான்ட் டுட்டு நியமிக்கப்பட்டார்.
1988 – சோவியத் மீர் விண்வெளி நிலையத்தில் ஒன்பது நாட்கள் தங்கியிருந்த ஆப்கானித்தானின் முதலாவது விண்வெளி வீரர் அப்துல் அகாது மொகுமாண்டு சோயூஸ் விண்கலத்தில் பூமி திரும்பினார்.
1999 – ஏதன்சில் இடம்பெற்ற 6.0 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தினால் 143 பேர் கொல்லப்பட்டனர்.
1999 – இலங்கை இராணுவத்தினரால் யாழ்ப்பாணம் செம்மணியில் கொல்லப்பட்ட 600 இற்கும் மேற்பட்ட தமிழர்களின் புதைகுழி விபரம் தெரியவந்தது.
2005 – எகிப்தில் முதலாவது பல-கட்சி அரசுத்தலைவர் தேர்தல் இடம்பெற்றது.
2011 – உருசியாவில் இடம்பெற்ற விமான விபத்தில், லோக்கோமோட்டிவ் யாரொசுலாவ் பனி வளைதடியாட்ட அணியின் அனைத்து வீரர்கள் உட்பட 43 பேர் உயிரிழந்தனர்.
2017 – 2017 சியாப்பசு நிலநடுக்கம்: தெற்கு மெக்சிக்கோவில் இடமொஎற்ற 8.2 அளவு நிலநடுக்கத்தில் 60 பேர் உயிரிழந்தனர்.பிறப்புகள்

1533 – இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் (இ. 1603)
1860 – அன்னா மேரி ராபர்ட்சன் மோசஸ், அமெரிக்க ஓவியர் (இ. 1961)
1867 – சங்கரதாஸ் சுவாமிகள், தமிழக நாடகாசிரியர், நாடக நடிகர் (இ. 1922)
1870 – அலெக்சாண்டர் குப்ரின், உருசிய நாடுகாண் பயணி, எழுத்தாளர் (இ. 1938)
1877 – முகம்மது மாக்கான் மாக்கார், இலங்கை குடியேற்றக்கால அரசியல்வாதி, தொழிலதிபர் (இ. 1952)
1911 – அப்பாக்குட்டி சின்னத்தம்பி, இலங்கை மருத்துவர் (இ. 1986)
1925 – பி. பானுமதி, இந்திய நடிகை, பாடகி, இயக்குநர் (இ. 2005)
1928 – தொனால்டு எண்டர்சன், அமெரிக்க மருத்துவர், கல்வியாளர் (இ. 2016)
1929 – சார்வாகன், தொழுநோய் மருத்துவர், எழுத்தாளர் (இ. 2015)
1929 – பெரி. சிவனடியார், தமிழகக் கவிஞர் (இ. 2004)
1930 – எஸ். சிவநாயகம், இலங்கைப் பத்திரிகையாளர் (இ. 2010)
1934 – சுனில் கங்கோபாத்யாயா, இந்திய வங்காளக் கவிஞர் (இ. 2012)
1934 – சோசப் இடமருகு, கேரள இதழாளர், இறைமறுப்பாளர் (இ. 2006)
1951 – மம்முட்டி, மலையாள நடிகர்
1963 – நீரஜா பனோட், இந்திய விமானப் பணிப்பெண் (இ. 1986)
1984 – மாலிங்க பண்டார, இலங்கைத் துடுப்பாளர்
1985 – ராதிகா ஆப்தே, இந்தியத் திரைப்பட நடிகை
1987 – இவான் ரசேல் வூட், அமெரிக்க நடிகை
இறப்புகள்

1566 – முதலாம் சுலைமான், உதுமானியப் பேரரசர் (பி. 1494)
1809 – முதலாம் இராமா, தாய்லாந்து மன்னர் (பி. 1737)
1949 – எல்டன் மேயோ, ஆத்திரேலிய உளவியலாளர் (பி. 1880)
1974 – சி. மூ. இராசமாணிக்கம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1913)
1988 – வசுந்தரா தேவி, தமிழ்த் திரைப்பட நடிகை, பரதநாட்டியக் கலைஞர், கருநாடக இசைப் பாடகி (பி. 1917)
1997 – மொபுட்டு செசெ செக்கோ, கொங்கோவின் அரசுத்தலைவர் (பி. 1930)
2008 – நாகி நோடா, சப்பானிய இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1973)
2014 – சு. கிருஷ்ணமூர்த்தி, தமிழக எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் (பி. 1929)

நடப்பு நிகழ்வுகள் அறிவோம் [ DAILY CURRENT AFFAIRS] 09.09.2018

இந்திய நிகழ்வுகள்


இந்தியா, ஜப்பானிடமிருந்;து 7000 கோடி ரூபாய் மதிப்பிலான 18 புல்லட் இரயில்களை வாங்கவிருக்கின்றது. இந்த ஒப்பந்தம் இரயில்களை உள்ளுரில் தயாரிக்க உதவும் தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கான உத்திரவாத்தையும் கொண்டிருக்கும்.
இது 2022ம் ஆண்டிற்குள் நாட்டின் முதல் உயர்வேக இரயில் பாதையை நிறுவிடத் திட்டமிட்டுள்ள அரசாங்கத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.


நபார்டு வங்கியானது ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் (Rural Infrastructure Development Fund – RIDF) கீழ் மேற்கு வங்கத்தின் நீர்பாசனத் திட்டங்களுக்கும், வெள்ளப் பாதுகாப்பு திட்டங்களுக்கும் சுமார் 335 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.


யூத் அபியாஸ் – இந்தியா மற்றும் அமெரிக்க இராணுவங்களுக்கிடையேயான செயல்திறனை வலுப்படுத்த “Yudh Abhyas” என்னும் பெரிலான கூட்டு இராணுவப் பயிற்சி, 2 + 2 பேச்சுவார்த்தைக்குப் பிறகு செப்டம்பர் 16 முதல் 29 வரை, உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள சௌபட்டியா என்னும் இடத்தில் நடைபெற உள்ளது.
குறிப்பு:
இப்பயிற்சியானது இவ்விரு நாடுகளுக்கிடையேயான 14வது பதிப்பு ஆகும். (14th Yudh Abhyas)
இவ்விரு நாடுகளுக்கிடையேயான யூத் அபியாஸ் பயிற்சியானது 2004 முதல் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


ஸ்மார்ட் சிட்டீஸ் இந்தியா என்னும் திட்டத்தால் நடைபெறும் சீர்திருத்தங்கள், மேம்பாடுகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரத்தில் நடைபெறும் வேலைகள் குறித்து விளக்குவதற்காக 4வது “இந்தியாவின் நிலையான ஸ்மார்ட் நகரங்கள் மாநாடு” கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களுரில் ஸ்மார்ட் இந்தியா திட்ட இயக்குநர் A.B. இப்ராஹிம் தலைமையில் நடைபெற்றது.


உலக நிகழ்வுகள்


“உலகளாவிய முதியோர் மற்றும் வயதானவர்களுக்கான மனித உரிமைகள்” என்ற தலைப்பின் கீழ் தென்கொரியாவின் சியோல் நகரத்தில், 3வது ஆசிய ஐரோப்பிய சந்திப்பு மாநாடு (ASEM – Asia Europe Meeting) நடைபெற்றது.
இம்மாநாட்டில் இந்தியா சார்பில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகமானது தலைமை வகித்தது.
மேலும் UNESCAP – (UN Economic and Social Commission for Asia and the Pacific), UNECE – (United Nations Economic Commission for Europe), ஐரோப்பிய ஒன்றியம், ஆசியான், புயுNர்சுஐ GANHRI (Global Alliance for National Human Rights Institution) போன்ற பல்வேறு அமைப்புகள் பங்கு பெற்றன.


அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்


இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட தேஜாஸ் என்ற இலகு ரக போர் விமானத்திற்கு நடுவானில் மறு எரிபொருள் நிரப்பும் பணியானது முதன்முதலாக இந்திய விமானப் படையால் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.
இரஷ்யாவல் கட்டமைக்கப்பட்ட IL – 78 MKI எரிபொருள் நிரப்பு விமானமானது தேஜாஸ் MK – I விமானத்திற்கு எரிபொருளை நிரப்பியது.


கடல்நீரை கண்காணித்து அதனால் பருவநிலை மாற்றத்தில் ஏற்படும் விளைவுகளை கண்டுபிடிப்பதற்காக சீனாவானது “HY-1C” என்னும் கடற்சார் செயற்கைகோளை லாங் மார்ச் 2C என்னும் இராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.


முக்கிய தினங்கள்


செப்டம்பர் 08 – சர்வதேச எழுத்தறிவு தினம்
இனம், மொழி, வயது, சமூக பாகுபாடின்றி அனைவரும் எழுத்தறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு ஐ.நா. சார்பில் 1966 செப்டம்பர் 08 முதல், ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச எழுத்தறிவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான கருத்துரு – “Literacy and skills development” (எழுத்தறிவு மற்றும் திறன்களை மேம்படுத்துதல்)