Search

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை : எப்போது விண்ணப்பிக்கலாம்

Sunday 19 July 2020

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 2020-21 ஆம் ஆண்டுக்கான இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது .

ஆகஸ்ட் முதல் வாரத்தில் பதிவு செய்யலாம்

விண்ணப்பம் மற்றும் விண்ணப்ப கட்டணத்தை https://www.tnauonline.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் படிக்க விரும்பும் மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு பல்கலைக்கழகத்தின் விண்ணப்பத்தை இணையதளம் வழியாக பூர்த்தி செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

இன்ஜினீயரிங் படிப்புகள்:

முன்னதாக இன்ஜினீயரிங் கலந்தாய்விற்கு ஆகஸ்ட் 16-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார். மேலும், அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் கலந்தாய்வை முடிக்கவேண்டும் எனவும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு ஆன்லைன் மூலமே சான்றிதழ் சரிபார்க்கப்படும். பொறியியல் படிப்புகளில் சேர www.tneaonline.org மாணவர்கள் இந்த வலைதளத்தில் பதிவு செய்யலாம்.

கலை, அறிவியல் படிப்புகள்:

கலை,அறிவியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், http://tngasa.in மற்றும் http://tndceonline.org என்ற இணையதள பக்கங்களில் விண்ணப்பிக்கலாம் அதேபோன்று, தொழில்நுட்ப கல்லூரிகளில் சேருவதற்கு http://tngptc.in,http://tngptc.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

தமிழகத்தில் உள்ள அரசு கலை கல்லூரிகளில் சேர எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

தமிழகத்தில் உள்ள அரசு கலை கல்லூரிகளில் சேர எப்படி விண்ணப்பிக்க வேண்டும்..

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தற்போது வரை மூடப்பட்டு உள்ளது.
இதனிடையில் தமிழகத்தில் கடந்த 16 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதனை அடுத்து மாணவர்கள் அரசு கலை கல்லூரிகளில் சேருவதற்கு இணையத்தளம் வாயிலாக ஜூலை 20 ஆம் தேதி முதல் ஜூலை 31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் மாணவர்கள் www.tngasa.inமற்றும் www.dceonline.org என்ற இணையத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் ஜூலை 25 ஆம் தொடங்கி ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை மாணவர்கள் இணையத்தளம் வாயிலாக சான்றிதழ்களை பதிவேற்றலாம் என்றும் பொதுப்பிரிவினர் 50 ரூபாய் விண்ணப்ப கட்டணம் 
செலுத்தி விண்ணப்பிக்கலாம் என்றும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Read More »

தேர்வு முடிவுகள், ‘ஆன்லைன்’ வகுப்பு, பள்ளிகள் திறப்பு குறித்து, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன், இன்று(ஜூலை 20) அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்

தேர்வு முடிவுகள், ‘ஆன்லைன்’ வகுப்பு, பள்ளிகள் திறப்பு குறித்து, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன், இன்று(ஜூலை 20) அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள், கடந்த வாரம் வெளியிடப்பட்டன. 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிட வேண்டியுள்ளது. மற்ற வகுப்புகளுக்கு, அனைவருக்கும் தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்ட விவகாரம், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி கல்வி இயக்குனரகம் மற்றும் தேர்வுத்துறை இயக்குனரகத்தில், துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது.இந்நிலையில், அமைச்சர் செங்கோட்டையன், பள்ளி கல்வி அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். 

சென்னை, தலைமை செயலகத்தில் நடக்கும் கூட்டத்தில், பள்ளி கல்வி செயலர் தீரஜ்குமார், கமிஷனர் சிஜி தாமஸ், இயக்குனர் கண்ணப்பன் பங்கேற்கின்றனர்.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு, ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது, கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து, ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

Read More »

1 முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பாடங்கள்… வீடியோ பதிவு.. பள்ளி கல்வித்துறை அறிக்கை


சென்னை: ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பாடங்களை வீடியோவாக மாற்றி பதிவு செய்யும் பணிகளை தகுந்த ஆசிரியர்களை தேர்வு செய்து அனுப்பி வைக்குமாறு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஒன்பதாம் வகுப்பு வரையிலான பாடங்களை வீடியோ பதிவு செய்யும் பணியை தகுந்த ஆசிரியா்களைத் தேர்வு செய்து, மேற்கொள்ளுமாறு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது

தமிழகத்தில் தற்போதைய நிலையில் பிளஸ் 2 வகுப்பு பாடங்களுக்கான வீடியோ படப் பதிவு மேற்கொள்ப்பட்டுள்ளது. இந்த பணியை மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் மேற்கொண்டன. இதையடுத்து 11ம் வகுப்பிற்கான அனைத்து பாடங்களையும் வீடியோ பதிவு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் விரைவில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான பாடங்களை வீடியோவாக பதிவு செய்யமுடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை வெளியிட்ட சுற்றறிக்கையில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் மற்றும் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா்கள் கலந்து ஆலோசித்து, கருத்தாளா்களைத் தெரிவு செய்து, படப்பதிவு மேற்கொள்ள ஆவன செய்ய வேண்டும் என, முதன்மைக் கல்வி அலுவலா்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். குறிப்பிட்ட ஒரு ஆசிரியரை அனைத்து அலகுகளுக்கான படப் பதிவினை மேற்கொள்ளச் செய்யாமல், வெவ்வேறு ஆசிரியா்களை பயன்படுத்த வேண்டும்

இதற்கு உரிய பாட ஆசிரியா்களைத் தெரிவு செய்வதுடன், அவா்களுக்குத் தலைமை ஆசிரியா்கள் வாயிலாக தகவலளித்து, மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மேற்கொள்ளும் படப்பிடிப்பில் பங்கேற்க ஆசிரியா்களை அனுப்பி வைக்க வேண்டும். இதன் மூலம், பணிகள் தொய்வின்றி நடைபெற அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் மற்றும் அனைத்து மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Read More »

பள்ளி திறப்பு பற்றி அனைத்து மாநிலங்களின் நிலைப்பாடு…..

தமிழகத்தில், பள்ளிகள் திறக்கும் தேதி குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை’ என, மத்திய அரசிடம், தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, பெற்றோரிடம் கருத்து கேட்கவும், முடிவு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக, தமிழகத்தில் பள்ளி, கல்லுாரிகளில் நேரடி வகுப்புகள் இன்னும் துவங்கப்பட வில்லை. மாணவர்களுக்கு வீட்டில் இருந்தே, பாடம் படிக்கும் வகையில், ‘வீடியோ’ பாடங்கள் நடத்தப்படுகின்றன. 
தனியார் பள்ளிகள் தரப்பில், ‘ஆன்லைனில்’ வகுப்புகளை நடத்துகின்றன. இந்நிலையில், ஊரடங்கு விரைவில் முடிவுக்கு வரும் நிலையில், விரைவில் பள்ளிகளை திறந்து, இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்த, மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன.
இதுதொடர்பாக, மத்திய அரசின் சார்பில், மாநில பள்ளி கல்வித் துறை அதிகாரிகளிடம், ஆன்லைன் வாயிலாக ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது. அதில், பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்துவது குறித்து, விவாதிக்கப்பட்டது.அப்போது, ஒவ்வொரு மாநில அரசும், தங்கள் மாநிலத்தில், கொரோனா தொற்று நிலையை பொறுத்து, பள்ளிகளை திறக்கும் தேதியை முடிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதுதொடர்பாக, பெற்றோர் மற்றும் கல்வியாளர்களின் கருத்துகளை கேட்டு பெற வேண்டுமென, மத்திய மனிதவள அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும், பள்ளிகளை திறக்கும் தேதி குறித்து, முதற்கட்ட அறிக்கையை, ஒவ்வொரு மாநில அரசும் தாக்கல் செய்துள்ளன. அந்த அறிக்கையில், ஒவ்வொரு மாநிலமும், பள்ளிகளை மீண்டும் திறக்க உள்ள மாதத்தை அறிவித்துள்ளன. 

அதில், ‘பள்ளிகள் திறப்பு குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை’ என, தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.இந்நிலையில், பள்ளிகளை திறப்பது குறித்து, இந்த வாரத்தில் முடிவு செய்து, அறிக்கை சமர்ப்பிக்குமாறு, தமிழக அரசுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Read More »

பொறியியல் படிப்பில் சேர்வதற்கான கட் ஆப் மதிப்பெண் குறைந்தது!

தமிழகத்தை பொறுத்தவரை இந்த ஆண்டு 12ம் வகுப்பு பொதுத் தேர்வு புதிய பாடத்திட்ட அடிப்படையில் முதல் முறையாக நடைபெற்றது. முக்கிய பாடங்களான இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களின் வினாத்தாள் கடுமையாக இருந்ததாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தரப்பில் தெரிவித்தனர்.

இதனால் இந்த பாடங்களில் இந்த ஆண்டு 100க்கு 100 மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் குறைந்துள்ளது.

இந்த நிலையில் மாநில பாடத்திட்டத்தை பொறுத்தவரை 170-க்கும் அதிகமாக கட் ஆப் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் குறைவாகவே உள்ளனர். அதே சமயம் கட் ஆப் மதிப்பெண் 150-க்கும் குறைவாக பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.

எனவே குறைந்த கட் ஆப் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் தமிழகத்தில் உள்ள முன்னணி கல்லூரிகளில் இடம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக கட் ஆப் மதிப்பெண் 150-க்கு குறைவாக பெற்ற MBC, SC, ST, SCA மாணவர்களுக்கு தமிழகத்தில் உள்ள 25 முன்னனி பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்கிற கருத்தை முன்வைக்கின்றனர்.

மேலும், மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களை காட்டிலும் சிபிஎஸ்சி மாணவர்களின் கட்ஆப் மதிப்பெண் இந்த ஆண்டு அதிகரித்துள்ள போதிலும், சிபிஎஸ்சிஇ மாணவர்களின் எண்ணிக்கை குறைவு என்பதால் மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும், இருப்பினும் அதிகளவில் சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு பொறியியல் இடம் கிடைக்கும் என்கிற கருத்தை கல்வியாளர்கள் முன்வைக்கின்றனர்

Read More »

நியாய விலைக் கடைகளில் வேலை வேண்டுமா? – 10, +2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

சென்னை மாவட்டத்தில் கூட்டுறவுச்சங்கங்களால் நடத்தப்படும் பொது விநியோகத்திட்ட நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள 272 விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நிர்வாகம்: நியாய விலைக் கடை

பணி : விற்பனையாளர்

காலியிடங்கள்: 80

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ்மொழியில் பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: நியமன நாளிலிருந்து தொகுப்பு ஊதியம் மாதம் ரூ.5000, ஓராண்டுக்குப் பிறகு ஊதிய விகிதம் ரூ.4,300 – 12,000

பணி: கட்டுநர்

காலியிடங்கள்: 192

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழ்மொழியில் பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: நியமன நாளிலிருந்து தொகுப்பு ஊதியம் மாதம் ரூ.5000, ஓராண்டுக்குப் பிறகு ஊதிய விகிதம் ரூ.3,900 – 11,000

வயது வரம்பு: 01.01.2020 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 35 வயதிற்குள்பட்டவாரகவும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : கூடுதல் பதிவாளர், சென்னை மண்டலம் அலுவலகம், எண்.91, தூய மேரி சாலை, அபிராமபுரம், சென்னை-600018 என்ற முகவரியில் 31.07.2020 வரை அனைத்து வேலை நாள்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் விற்பனையாளர் பணிக்கு ரூ.150, கட்டுநர்கள் பணிக்கு ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். ரூ.100 செலுத்த வேண்டும். மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

தேர்வு செய்யப்படும் முறை: குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம், சென்னை மாவட்டம், கூடுதல் பதிவாளர், சென்னை மண்டலம் அலுவலகம், எண்.91, தூய மேரி சாலை, அபிராமபுரம், சென்னை – 600018 என்ற முகவரிக்கு அஞ்சலில் அனுப்பிவைக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.07.2020 அன்று மாலை 5.45க்குள் சென்று சேர வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.chndrb.in/doc_pdf/Notification_salesmanpacker.pdf என்னும் அதிகாரப்பூர்வ லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்

Read More »

பொறியியல் பட்டதாரிகளுக்கு தேசிய வெப்ப மின் கழகத்தில் வேலை-சம்பளம் 50,000- 1,60,000.

தேசிய வெப்ப மின் கழகம் தற்பொழுது புதிய பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: தேசிய வெப்ப மின் கழகம்
விளம்பர எண்: 03/2020
மொத்த காலியிடங்கள்: 275
பணியிடம்: இந்தியா முழுவதும்

பணி: Engineers – 250 
சம்பளம்: மாதம் ரூ. 50,000 -1,60,000

பணி: Assistant Chemist – 25 
சம்பளம்: மாதம் ரூ.40,000 -1,40,000

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக், இன்ஸ்ட்ரூமென்டேஷன் போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப முறை: www.ntpccareers.net என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், விண்ணப்ப கட்டணம், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறியhttp://open.ntpccareers.net/2020_ShiftEngrRec/index_files/Employment%20News%20Ad%20English.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.07.2020

Read More »

பள்ளிகளை எப்போது திறக்கலாம்? வரும் 20 ஆம் தேதிக்குள் பெற்றோர்கள் கருத்து தெரிவிக்க மத்திய அரசு வேண்டுகோள்.


ஆகஸ்ட் , செப்டம்பர் , அக்டோபர் மாதத்தில் எப்போது பள்ளிகளை திறக்கலாம் ? வரும் 20 ஆம் தேதிக்குள் பெற்றோர்கள் கருத்து தெரிவிக்க மத்திய அரசு வேண்டுகோள். மின்னஞ்சலில் ஆலோசனை சொல்ல மனிதவள மேம்பாட்டுத் துறை வேண்டுகோள்.

Feedback of parents concerning to reopening of schools – regarding

I am directed to refer to the subject matter with a request to furnish feedback of parents of school going children on the following points by 20.07.2020 ( Monday ) positively :

i . What is the likely period when they will be comfortable with reopening of schools – August / September October , 2020

ii . What are the parents expectations from Schools – as and when they reopen.

iii . Any other feedback / remarks in this regard.

2 . You are requested to kindly furnish information on the above points through e – mail at coordinationeel@gmail.com or rsamplay.edu@nic.in

Read More »

Whatsapp விவகாரம் ஆசிரியர்கள் பணியிட மாற்றம்!

முதல்வர் பற்றி வாட்ஸ்அப்பில் மீம்ஸ் ...
சேலம் மாவட்டம் ஆத்தூர் கல்வி மாவட்டத்தை மையமாக கொண்டு வாட்ஸ்அப் குழு ஒன்று செயல்பட்டு வருகிறது . இக்குழுவில் உள்ள ஆத்தூர் அரசுப்பள்ளியைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர் ஒருவர் , சில நாட்களுக்கு முன்பு தமிழக முதல்வர் பற்றி மீம்ஸ் பகிர்ந்துள்ளார் .

இதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி விசாரித்தார் . இதையடுத்து அந்த ஆசிரியரும் , குழுவை நிர்வகித்து வந்த ( அட்மின் ) பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த மற்றொரு ஆசிரியரும் இடைப்பாடி கல்வி மாவட்டத்தில் உள்ள வெவ்வேறு பள்ளிகளுக்கு மாற்றுப்பணியாக தூக்கியடிக்கப்பட்டனர்.
Read More »

பள்ளிகளை எப்போது திறக்கலாம்? வரும் 20 ஆம் தேதிக்குள் பெற்றோர்கள் கருத்து தெரிவிக்க மத்திய அரசு வேண்டுகோள்


ஆகஸ்ட் , செப்டம்பர் , அக்டோபர் மாதத்தில் எப்போது பள்ளிகளை திறக்கலாம் ? வரும் 20 ஆம் தேதிக்குள் பெற்றோர்கள் கருத்து தெரிவிக்க மத்திய அரசு வேண்டுகோள். மின்னஞ்சலில் ஆலோசனை சொல்ல மனித வள் மேம்பாட்டுத் துறை வேண்டுகோள்.

Feedback of parents concerning to reopening of schools - regarding

I am directed to refer to the subject matter with a request to furnish feedback of parents of school going children on the following points by 20.07.2020 ( Monday ) positively :

i . What is the likely period when they will be comfortable with reopening of schools - August / September October , 2020

ii . What are the parents expectations from Schools - as and when they reopen.

iii . Any other feedback / remarks in this regard.

2 . You are requested to kindly furnish information on the above points through e - mail at coordinationeel@gmail.com or rsamplay.edu@nic.in
Read More »
 

Most Reading

Tags

Sidebar One