Search

NATIONAL ICT AWARD FOR TEACHERS..Guidelines and Entry Form 2018-09

Monday 9 March 2020

Read More »

பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆசிரியர், அரசு ஊழியர் மீதான நடவடிக்கை ரத்தாகுமா?

Read More »

கொரோனா வைரஸ் குறித்து பள்ளி, கல்லூரிகளில் இன்று முதல் விழிப்புணர்வு சுகாதாரத்துறை உத்தரவு

கொரோனா வைரஸ் குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இன்று முதல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.கொரோனா வைரஸ் தாக்கம் சீனாவை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கானோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவிலும் இந்நோய் தற்போது பரவி வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.நாடு முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு மாநில அரசுகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.



இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதாவது, மாணவர்கள் அடிக்கடி கைகளை கழுவுதல், தும்மல்-இருமல் வரும்போது துணிகளை கொண்டு மூடிக்கொள்ளுதல், உடல்நிலை சரியில்லாத சமயங்களில் தனியாக டிஷ்யூ பேப்பர்களை பயன்படுத்துதல், தொடுதல்களை தவிர்த்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலமாக, கொரோனா மட்டுமின்றி, அனைத்து விதமான தொற்று நோய்களும் பரவாமல் தடுக்க முடியும் என்று மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பள்ளிக்கல்வித்துறை மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது.



இதுதொடர்பாக அனைத்து பள்ளிகள், கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சுகாதாரத்துறை எடுத்துள்ளது. அதன்படி இன்று முதல் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வில் செயல்முறை விளக்கங்களை அளிக்க தனியாக டாக்டர்கள் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Read More »

கணிதம், வணிகவியல் தேர்வு வினாக்கள் கடினம்: பிளஸ் 2 மாணவர்கள் வேதனை

கணிதம் மற்றும் வணிகவியல் பாடத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது கேள்விக்குறியாகும் நிலையில் வினாத்தாள் வடி வமைப்பு உள்ளதாக மாணவர்கள் வேதனை தெரிவித்தனர்.உடுமலை கல்வி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு 17 மையங்களில் நடக்கிறது. நேற்று அறிவியல் மற்றும் கலைப்பிரிவு மாணவர்களுக்கு, கணிதம் மற்றும் வணிகவியல் தேர்வு நடந்தது.புதிய பாடத்திட்டம் என்பதால் மாணவர்கள் குழப்பமான மனநிலையில் தேர்வை எதிர்கொள்கின்றனர். கணிதம் மற்றும் வணிகவியல் தேர்வுகளில், நேரடியாக இல்லாமல், கேட்கப்பட்டுள்ளது.மாணவர்கள் கூறியதாவது:தீபிகா ஸ்ரீ:தமிழ் எளிமையாகவும், ஆங்கிலம் சிறிது கடினமாக முறையிலும் வினாக்கள் கேட்கப்பட்டிருந்தது. இதனால் கணிதப்பாடத்துக்கு அதிகமான பயிற்சி எடுத்திருந்தோம்.



இருப்பினும், இப்படி ஒரு வினாக்கள் எந்த பகுதியில் உள்ளன என்பதே தெரியாத வகையில், மிக கடினமாக தேர்வு இருந்தது. ஒரு மதிப்பெண், ஐந்து மதிப்பெண் என அனைத்து பகுதிகளும், வினாக்கள் குழப்பும் வகையில் தான் கேட்கப்பட்டுள்ளன.திவ்யா:காலாண்டு, அரையாண்டு, என எந்த தேர்வுகளிலும் கேட்கப்படாத, நாங்கள் எதிர்பார்க்காத வினாக்கள் தான் பொதுத்தேர்வில் கேட்டுள்ளனர். தேர்ச்சி அடைந்தாலே போதும் என்ற மனநிலையில் தான் தேர்வை எழுதி முடித்தோம். வினாக்களை புரிந்து கொள்வதற்கே பாதிநேரம் போய் விட்டது.


அடுத்து வரும் தேர்வுகள் மேலும் அச்சத்தையே ஏற்படுத்துகின்றன.வணிகவியல் தேர்வுசத்யப்ரியா:கலைப்பிரிவு பாடங்கள் வழக்கமாக, மற்ற பிரிவுகளை விட ஓரளவு எளிமையாக வரும். ஆனால், வணிகவியல் தேர்வில், வினாக்கள் ஒன்றும் எந்தெந்த பாடங்கள் என்பதே தெரியவில்லை. ஐந்து மதிப்பெண் வினாக்களின் கருத்துகளையும் புரிந்துகொள்ள முடியவில்லை.தேவி:வணிகவியல் பாடத்தேர்வில், ஒரு மதிப்பெண் வினாக்களில் தான் அதிகமாக முழுமதிப்பெண்களை பெற முடியும். ஆனால், ஒருமதிப்பெண் வினாக்களும் குழப்பமாகவே கேட்கப்பட்டிருந்தன. அடுத்தடுத்து வரும் தேர்வுகள் எளிமையாக வர வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
Read More »

விடைத்தாள் திருத்த ஆசிரியர்கள் ஊதியத்தில் பிடித்த வருமான வரியை செலுத்தாதது ஏன்? வருமான வரித்துறை நோட்டீஸ்


விடைத்தாள் திருத்த ஆசிரியர்கள் ஊதியத்தில் பிடித்த வருமான வரியை செலுத்தாதது ஏன் என்று வருமான வரித்துறை கேள்வி எழுப்பியுள்ளது. ஆசிரியர் வருமானத்தில் பிடித்த வரித் தொகையை செலுத்தாதது குறித்து அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் 2018-19, 2019-20 ஆகிய ஆண்டுகளுக்கான காலாண்டு கணக்கை அண்ணா பல்கலை. தாக்கல் செய்யாதது ஏன் என வருமான வரித்துறை வினவியுள்ளது.



தமிழ்நாடு முழுவதும் 23 மையங்களில் அண்ணா பல்கலை. விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட பேராசிரியர்களுக்கு வழங்கிய உழைப்பூதியத்தில் TDS எனப்படும் வருமான வரி பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேராசிரியர்களிடம் இருந்து சுமார் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் வரை TDS வரி பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த தொகையை முறையாக அண்ணா பல்கலைக்கழகம் செலுத்தவில்லை. 

தேர்வு கட்டுப்பாட்டு அலுவலருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்



இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் விடைத்தாள் திருத்திய ஆசிரியருக்கு அளிக்கப்பட்ட ஊதியத்தில் எவ்வளவு வருமான வரி பிடிக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. வருமான வரியை தாக்கல் செய்திருந்தால் அதன் நகலை தாக்கல் செய்ய அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விடைத்தாள் திருத்த ஆசிரியர்கள் ஊதியத்தில் பிடித்த வருமான வரியை செலுத்தாதது ஏன் என்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேசனுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வரியை உடனடியாக செலுத்தி அதற்கான ரசீதுகளுடன் மார்ச் 13-ம் தேதி காலை 11.30 மணிக்கு வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தவறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.
Read More »

School Morning Prayer Activities - 10.03.2020

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 10.03.20

திருக்குறள்


அதிகாரம்: கல்லாமை

குறள் 401:

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்.

விளக்கம்

பல நூல்களை படிக்காமல் அரங்கம் ஏறுவது கட்டம் இல்லாமல் பகடை ஆடுவது போன்றது.

பழமொழி

Both the child and God are there where they are praised.

 குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில்.

இரண்டொழுக்க பண்புகள்

1. வெற்றி என்பது தற்காலிகம் எனவே எனது வெற்றியில் பெருமை கொள்ள மாட்டேன்.

2. தோல்வி எனக்கு பாடம் எனவே அதிலிருந்து நான் கற்றுக் கொள்வேன்.

பொன்மொழி

உங்களின் சிறு செயல்களில் கூட உங்களின் மனம், புத்தி மற்றும் ஆன்மா ஆகியவற்றை ஒருமித்து செயல்படுத்துவதே உங்கள் வெற்றியின் இரகசியம்
      சுவாமி விவேகானந்தர்

பொது அறிவு

1."பூமியின் நுரையீரல்" என்றழைக்கப்படும் காடு எது?

அமேசான் காடு

2."தமிழகத்தின் பண்டிகை நகரம்" என்றழைக்கப்படும் நகரம் எது?

மதுரை.

English words & meanings

Magnate - a person who is successful in business, வணிகத்தில் வெற்றி பெற்ற மனிதர்

Magnet- a piece of substance that attract some metals, காந்தம்.

ஆரோக்ய வாழ்வு

எலும்பு மஜ்ஜைகளிலிருந்து இரத்தம் ஊறுவதற்கு காய்ந்த திராட்சை மிகவும் உதவுகிறது .இந்தப் பழத்தை எடுத்து வாயில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாறு இறக்கினால் எலும்பு மஜ்ஜைகள் பலமடைந்து இரத்தம் அதிகம் சுரக்கும். மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கின்றன.

Some important  abbreviations for students

RIP - Rest In Peace

DELL - Digital electronic link library

நீதிக்கதை

பஞ்சதந்திரக் கதைகள்

நரிக்குட்டி சிங்கக் குட்டியாகாது

ஒரு பெரிய கானகத்தில் ஆண் சிங்கம் ஒன்றும், ஒரு பெண் சிங்கம் ஒன்றும் சேர்ந்து வாழ்ந்து வந்தன. எப்போதும் இரண்டும் இணையாகவே சென்று வேட்டையாடி சாப்பிட்டு வந்தன. அந்தச் சிங்கத் தம்பதியருக்கு இரண்டு குட்டிகள் பிறந்தன. அதனால், ஆண் சிங்கம் பெண் சிங்கத்தை ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு தான் மட்டும் வேட்டைக்குச் சென்று பெண் சிங்கத்திற்கும் குட்டிகளுக்கும் இரைகளைக் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருந்தது.

ஒரு நாள் அந்த ஆண் சிங்கத்துக்கு ஒரேயொரு நரிக்குட்டி மட்டும் தான் கிடைத்தது. அது அந்த நரிக்குட்டியைக் கொண்டு வந்து பெண் சிங்கத்திடம் கொடுத்தது.

பெண் சிங்கம் நரிக்குட்டியின் மீது இரக்கப்பட்டு உண்ணாமல் தன் சிங்கக் குட்டிகளோடு இணைத்து வளர்த்து வந்தது.

நன்றாக வளர்ந்த அந்த மூன்று குட்டிகளும் ஒரு நாள் காட்டிற்குள் வேட்டையாடச் சென்றன. வழியில் ஒரு பெரிய யானையைப் பார்த்ததும் நரிக்குட்டி பயந்துவிட்டது. அது அங்கிருந்து ஓடியது. அதனைப் பார்த்த இரண்டு சிங்கக் குட்டிகளும் அதன் பின்னாலேயே ஓடிவந்து குகைக்குள் ஒளிந்துக் கொண்டது.

இதனைப் பார்த்த பெண் சிங்கம் நடந்ததைத் தன் குட்டிகளிடம் விசாரித்தது. யானையைப் பார்த்து இவன் பயந்து விட்டான். அதனால் நாங்களும் இவன் பின்னாலேயே வந்து விட்டோம் என்றன.

பின்னர் சிங்கக் குட்டிகள் இரண்டும் நரியைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தன. உடனே நரிக்குக் கோபம் வந்து விட்டது. உடனே பெண் சிங்கத்திடம், இவர்கள் ஏன் என்னைப் பார்த்து சிரிக்கிறார்கள்? நான் எந்த விதத்தில் இவர்களைவிடத் தாழ்ந்தவன்? நான் இவர்களை வெல்வேன் என்று கூறியது.

பெண் சிங்கம் நரியைத் தனியே அழைத்துச் சென்று, நீ சிங்கக் குட்டி அல்ல. நீ நரிக்குட்டி. யானையை வெல்லும் தீரமும் வீரமும் நரிக்கு எப்படி இருக்கும்? நரிக்குட்டிச் சிங்கக் குட்டிகளுடன் வளர்வதனாலேயே அது சிங்கக் குட்டியாகிவிடுமா? நீ நரி என்பதனை இவர்கள் அறிந்து கொள்வதற்கு முன்னர், நீ இங்கிருந்து ஓடிச் சென்று தப்பித்துக்கொள் என்று எச்சரித்தது. உடனே அந்த நரிக்குட்டி அங்கிருந்து ஓடிவிட்டது.

நீதி :
அறிஞர்கள் அமர்ந்திருக்கும் சபையில் நீயும் அமர்ந்திருப்பதால் மட்டும் நீ அறிஞன் ஆகி விட முடியாது. அறிஞன் அறிஞன் தான். நீ நீ தான்.

இன்றைய செய்திகள்

10.03.20

◆கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை காரணமாக, தமிழகப் பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறை நிறுத்தப்பட்டுள்ளது.

◆ரூ.1 கோடியில் இந்திய உணவுக் கழகம் சார்பில் நாட்டிலேயே முதன் முறையாக தஞ்சையில் உணவு அருங்காட்சியகம்: பண்டைய பொருட்கள், அரியவகை நெல் ரகங்களை தானமாக அளிக்க வேண்டுகோள்.

◆சென்னை உட்பட நாடு முழுவதிலும் ரயில்வே துறை அச்சகங்கள் மூடும் முடிவு ஜுன் 30 வரை தற்காலிகமாக ஒத்திவைப்பு.


கரோனா: சவுதி பள்ளிகள், பல்கலைக்கழகங்களுக்கு காலவரையற்ற விடுமுறை.

◆உலக வெள்ளிப்பதக்கம் வென்றவரும் டாப் குத்துச் சண்டை வீரருமான இந்தியாவின் அமித் பங்கல் (53 கிலோ உடல் எடைப்பிரிவு) ஒலிம்பிக் போட்டிககளுக்குத் தகுதி பெற்றுள்ளார்.

◆ஜோர்டானில் நடைபெற்று வரும் ஆசியா-ஒஷியானா குத்துச்சண்டை தகுதிப் போட்டியின் அரை இறுதிக்கு முன்னேறியதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியாவின் விகா கிருஷண், பூஜா ராணி ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

Today's Headlines

🌸 To prevent Coronavirus, Biometric System has been stopped  in Tamil Nadu schools.

 🌸 India's first  food museum was started in Tanjore on behalf of Indian Food Corporation of India at Rs.1crore.  Request is put to  public to donate ancient commodities and rare varieties of paddy.

 🌸The shutting down of Railway Presses  all over the country including Chennai have temporarily  postponed till June 30.

 🌸Corona:  Saudi schools and universities are indefinitely closed

 🌸World silver medalist and top boxer India's Amit Pangal (53 kg bodyweight) was qualified for the Olympics.

 🌸India's Vika Krishan and Pooja Rani have qualified for the Tokyo Olympics by advancing to the semi-finals of the Asian-Oceania Boxing Championships in Jordan.

Prepared by
Covai women ICT_போதிமரம்
Read More »

பள்ளிகளுக்கு ஏப்., 21 முதல் கோடை விடுமுறை

ஏப்ரல், 21 முதல், கோடை விடுமுறை விடப்பட உள்ளதால், அனைத்து வகுப்புகளுக்கும், பாடங்களை விரைந்து முடிக்க வேண்டும்' என, பள்ளிகளுக்கு கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.தமிழகத்தில், பிளஸ் 2வுக்கு, மார்ச், 2; பிளஸ் 1க்கு, மார்ச், 4ல் பொதுத் தேர்வுகள் துவங்கின. பத்தாம் வகுப்புக்கு, வரும், 27ல் தேர்வு துவங்க உள்ளது.

இந்த பொதுத் தேர்வுகள் அனைத்தும், ஏப்ரல், 13ல் முடிவுக்கு வருகின்றன.இதற்கிடையே, ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்புகளுக்கான, மூன்றாம் பருவத் தேர்வுகளை, ஏப்ரல், 1 முதல், 20ம் தேதிக்குள் விரைந்து முடிக்க, பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. ஏப்., 21 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் கோடை விடுமுறை விடவும் தீர்மானித்துள்ளது.

அதற்கேற்ப பாடங்களை விரைந்து நடத்தி, மாவட்ட அளவில் நடத்தப்படும், மூன்றாம் பருவத் தேர்வுகளை விரைந்து முடிக்க வேண்டும் என, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Read More »

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பிரச்சனைகள் விரைவில் தீர்க்கப்படும் - முதலமைச்சர் உறுதி!

அரசு ஊழியர்கள் , ஆசி ரியர்கள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார் . 

திருவாரூருக்கு நேற்று முன்தினம் வருகை தந்த முதலமைச்சர் எடப்பாடி கே . பழனிசாமியை தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் அதன் பொதுச்செயலாளர் ந . ரெங்கராஜன் தலைமை யில் நிர்வாகிகள் சந்தித்து காவேரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்ததற்காக நன்றி தெரிவித்தனர் . மேலும் கடந்த ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் மீது துறைரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கைவிட வேண்டும் . ஆசிரியர்கள் ,அரசு ஊழியர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் . அதேபோல் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் 25 சதவீத மாணவர்களை மெட்ரிக் பள்ளிகளில் படிப்பதற்கு வழங்கப்படும் அரசின் நிதிஉதவியை நிறுத்தி , அந் நிதியினை கொண்டு அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர் .

இதனை கேட்ட முதலமைச்சர் எடப்பாடி கே . பழனிசாமி நடவடிக்கை களை மேற்கொள்வதாகவும் ,அரசு பாழியர் , ஆசிரியர்களின் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும் என நம்பிக்கை தெரிவித்தார் .

இந்த சந்திப்பின்போது உணவுத்துறை அமைச்சர் ஆர் . காமராஜ் , தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர்கள் திருவாரூர் ஈவேரா , நாகை லட்சுமி நாராயணன் , திருச்சி நீலகண் டன் , பெரம்பலூர் ராஜேந் திரன் , அரியலூர் எழில் , தஞ்சாவூர் குழந்தைசாமி , திருவாரூர் மாவட்ட ஓய்வு பிரிவு மாவட்ட செயலாளர் நா . மதிவாணன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர் .
Read More »

EMIS APP Flash News : மேம்படுத்தப்பட்ட பதிப்பில் வருகைப் பதிவில் புதிய மாற்றம் - உடன் மேம்படுத்தவும்


அனைத்து பள்ளிகளும் Play Store மூலம் TN-EMIS Attendance Appஐ Update செய்து கொள்ளவும்.

இந்த புதிய பதிப்பில் புதிதாக சேர்க்கப்பட்ட Part time Instructors-SSA விற்கான staff attendance சேர்க்கப்பட்டுள்ளது. அவர்களின் வருகை இல்லாத நாட்களில் "Part time No duty" optionஐ பயன்படுத்தவும்.

Direct Link to update: 

https://play.google.com/store/apps/details?id=com.emisone.tnschoolshttpshttp
Read More »

DEE - Corona Virus School Education Department Awareness Circular

creating awareness among students , preventive interventions such as frequent hand wash , respiratory etiquettes ( using handkerchief over mouth while coughing / sneezing , use of tissue paper or using the sleeve of shirt covering upper arm , staying away from school when sick , avoiding public gatherings etc . ) would help in preventing / reducing transmission of not only this diseases , but also large number of other communicable disease , notably flu - like illnesses . Further , such informed youth can be agents of changes for their family , community and beyond ' 2 . I am therefore directed to request you to issue necessary instructions to all the schools under your control and to create awareness amongst the students .

Read More »

ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கான Bio - Metric வருகை பதிவு 31.03.2020 வரை தற்காலிக நிறுத்தம் - DSE இயக்குநர் செயல்முறைகள்


கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்ளுதல் சார்ந்த விழிப்புணர்வு பிரச்சாரம் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது . இந்நிலையில் , பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 31 . 03 . 2020 வரை ஆதார் எண் இணைந்த தொட்டுணர் கருவிமுறையிலான வருகைப் பதிவேட்டு முறையினை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது .

இக்கால கட்டத்தில் வருகைப் பதிவேடு முறையில் ( Manual Attendance ) கையொப்பமிடுமாறு அனைத்து அரசு / அரசு உதவி பெறும் / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் அனைத்து சார்நிலை அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு தலைமை சிரியர்கள் மூலமாக அறிவுறுத்துமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Read More »
 

Most Reading

Tags

Sidebar One