Search

DAILY HISTORY DAILY HISTORY HISTORY OF THE DAY 12.09.2018 | TNPSC | HISTORY STUDY MATERIALS FREE DOWNLOAD

Tuesday, 11 September 2018

நிகழ்வுகள் 


 • கிமு 490 – மாரத்தான் போர்: கிரேக்கத்தில், மாரத்தான் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பாரசீகத்தைத் தோற்கடித்த வெற்றிச் செய்தியைத் தெரிவிக்க பிடிப்பிட்சு என்ற கிரேக்க வீரன் நெடுந்தூரம் ஓடினான். மாரத்தான் ஓட்டப்போட்டிக்கு இதனாலேயே இப்பெயர் இடப்பட்டது.
 • 1185 – முதலாம் அந்திரோனிக்கசு கான்ஸ்டண்டினோபிலில் படுகொலை செய்யப்பட்டார்.
 • 1609 – என்றி அட்சன் அட்சன் ஆற்றைக் கண்டுபிடித்தார்.
 • 1634 – மால்ட்டாவில் வல்லெட்டா நகரில் வெடிமருந்துத் தொழிற்சாலையில் இடம்பெற்ற வெடி விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர், பல கட்டடங்கள் சேதமடைந்தன.
 • 1683 – உதுமானியப் பேரரசைத் தோற்கடிக்கும் முயற்சியில் பல ஐரோப்பிய நாடுகள் வியென்னாவில் இடம்பெற்ற போரில் ஒன்றிணைந்தன.
 • 1762 – சூலு சுல்தானகம் மலேசியாவில் உள்ள பலம்பாங்கன் தீவை பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்திடம் கையளித்தது.
 • 1814 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: வடக்கு முனை சமரில் அமெரிக்கப் படைகள் பிரித்தானியரின் பால்ட்டிமோர் நோக்கிய முன்னெடுப்பைத் தடுத்தன.
 • 1846 – எலிசபெத் பரெட் ராபர்ட் பிரௌனிங்குடன் ஓடிப் போனார்.
 • 1848 – சுவிட்சர்லாந்து கூட்டமைப்பு ஆட்சியை நடைமுறைப்படுத்தியது.
 • 1857 – மத்திய அமெரிக்கா கப்பல் வட கரொலைனாவில் ஆல்ட்டெராசு முனையின் கிழக்கே 160 மைல்கள் தூரத்தில் மூழ்கியதில், 426 பேர் உயிரிழந்தனர். இக்கப்பலில் கலிபோர்னியா தங்க வேட்டையில் இருந்து 13–15 தொன்கள் தங்கம் கொண்டு செல்லப்பட்டது.
 • 1890 – ரொடீசியாவில் சலிஸ்பரி நகரம் அமைக்கப்பட்டாது.
 • 1915 – பிரெஞ்சுப் போர்வீரர்கள் ஆர்மீனிய இனப்படுகொலைகளில் இருந்து தப்பிய 4,000 இற்கும் அதிகமானோரைக் காப்பாற்றினர்.
 • 1923 – தெற்கு ரொடீசியா (இன்றைய சிம்பாப்வே) ஐக்கிய இராச்சியத்துடன் இணைக்கப்பட்டது.
 • 1933 – அணுக்கரு தொடர்வினை குறித்த கருத்தை முதன் முதலாக லியோ சிலார்ட் அறிவித்தார்.
 • 1940 – குகை ஓவியங்கள் பிரான்சில் லாசுக்கோ நகரில் கண்டுபிடிக்கப்பட்டன.
 • 1940 – நியூ செர்சியில் தொழிற்சாலை ஒன்றில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 51 பேர் கொல்லப்பட்டு 200 பேர் காயமுற்றனர்.
 • 1942 – இரண்டாம் உலகப் போர்: நட்பு நாடுகளின் போர்வீரர்கள், இத்தாலியப் போர்க்கைதிகள், மற்றும் பொதுமக்களை ஏற்றிச் என்ற லக்கோனியா என்ற கப்பல் மேற்கு ஆபிரிக்காவில் செருமனியர்களால் தாக்கப்பட்டு மூழ்கியது.
 • 1943 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி வீட்டுக்காவலிலிருந்து செருமனிய படைத்தளபதி ஒட்டோ ஸ்கோர்செனி என்பவனால் விடுவிக்கப்பட்டார்.
 • 1948 – முகமது அலி ஜின்னா மறைந்த அடுத்த நாள் இந்திய இராணுவம் பாகிஸ்தானின் ஐதராபாத் மாநிலத்தினுள் நுழைந்தது. ஆயிரக்கணக்கான முசுலிம்கள் கொல்லப்பட்டனர்.
 • 1959 – லூனா 2 விண்கலத்தை சோவியத் ஒன்றியம் ஏவியது. சந்திரனை அடைந்த முதலாவது விண்கலம் இதுவாகும்.
 • 1974 – எத்தியோப்பியாவின் பேரரசராக 58 ஆண்டுக் காலம் பதவியில் இருந்த முதலாம் ஹைலி செலாசி இராணுவப் புரட்சியை அடுத்து பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
 • 1977 – தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல் கொள்கைக்கெதிரான செயற்பாட்டாளர் ஸ்டீவ் பைக்கோ காவற்துறையினரின் காவலில் இருந்தபோது கொல்லப்பட்டார்.
 • 1980 – துருக்கியில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.
 • 1990 – செருமானிய மீளிணைவுக்கான ஒப்பந்தம் மாஸ்கோவில் கையெழுத்தானது.
 • 1992 – நாசாவின் எண்டெவர் விண்ணோடம் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்ணான மேய் சரோல் ஜமிசன் என்பவருடன் விண்ணுக்கு ஏவப்பட்டது.
 • 2001 – ஆஸ்திரேலியாவின் மாநிலங்களுக்கிடையேயான முதலாவது பயணிகள் போக்குவரத்து விமான சேவையான "ஆன்செட் ஆஸ்திரேலியா" மூடப்பட்டது. 10,000 பேர் வேலையிழந்தனர்.
 • 2003 – லிபியா மீதான பன்னாட்டுப் பொருளாதாரத் தடையை ஐக்கிய நாடுகள் அவை விலக்கியது.
 • 2006 – திருத்தந்தை பதினாறாம் ஆசீர்வாதப்பர் ஜேர்மனியில் நிகழ்த்திய உரையின் போது "தீங்கு விளைவிக்கிற மற்றும் மனிதத் தன்மையற்ற விடயங்களையே நபிகள் நாயகம் இவ்வுலகிற்கு அளித்தார்" என்று தெரிவித்தார். இதற்கு இஸ்லாம் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து திருத்தந்தை மன்னிப்புக் கேட்டார்.
 • 2008 – லாஸ் ஏஞ்சலஸ் நகரில் இரண்டு தொடருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 25 பேர் உயிரிழந்தனர்.
 • 2015 – மத்தியப் பிரதேசம், பெட்லாவாத் நகரில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 105 பேர் உயிரிழந்தனர், 150 பேர் காயமடைந்தனர்.பிறப்புகள்


 • 1832 – சி. வை. தாமோதரம்பிள்ளை, தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடி (இ. 1901)
 • 1866 – வெல்லிங்டன் பிரபு, ஆங்கிலேயத் துடுப்பாளர், அரசியல்வாதி, கனடாவின் 13வது ஆளுநர் (இ. 1941)
 • 1897 – ஐரீன் ஜோலியோ கியூரி, நோபல் பரிசு பெற்ற பிரான்சிய வேதியியலாளர் (இ. 1956)
 • 1912 – பெரோஸ் காந்தி, இந்திய அரசியல்வாதி, பத்திரிகையாளர் (இ. 1960)
 • 1913 – ஜெசி ஓவென்ஸ், அமெரிக்கத் தடகள விளையாட்டு வீரர் (இ. 1980)
 • 1913 – இஜி டொயோடா, சப்பானியத் தொழிலதிபர் (இ. 2013)
 • 1915 – பி. எஸ். கைலாசம், இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி
 • 1930 – அக்கிரா சுசுக்கி, நோபல் பரிசு பெற்ற சப்பானிய வேதியியலாளர்
 • 1938 – திலகன், மலையாள நடிகர் (இ. 2012)

 • 1944 – லியோனார்ட் பெல்டியர், அமெரிக்க அரசியல் செயற்பாட்டாளர்
 • 1957 – ஹான்ஸ் சிம்மர், செருமானிய இசையமைப்பாளர்
 • 1965 – மாவை வரோதயன், ஈழத்து எழுத்தாளர் (இ. 2009)
 • 1968 – அமலா, இந்திய நடிகை
 • 1969 – கப்டன் மொறிஸ், விடுதலைப் புலிகளின் போராளி (இ. 1989)
 • 1973 – பால் வாக்கர், அமெரிக்க நடிகர் (இ. 2013)


இறப்புகள்


 • 1927 – சாரா பிரான்சிசு வைட்டிங், அமெரிக்க இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1847)
 • 1977 – ஸ்டீவ் பைக்கோ, தென்னாபிரிக்க செயற்பாட்டாளர் (பி. 1946)
 • 1981 – எயுஜேனியோ மொண்டாலே, நோபல் பரிசு பெற்ற இத்தாலிய எழுத்தாளர் (பி. 1896)
 • 1983 – ரஞ்சன், இந்திய நடிகர், நாட்டிய, இசைக் கலைஞர், எழுத்தாளர் (பி. 1918)
 • 1997 – இளங்கீரன், ஈழத்து முஸ்லிம் எழுத்தாளர் (பி. 1927)
 • 2004 – பி. டி. சாமி, தமிழக எழுத்தாளர், திரைக்கதையாசிரியர் (பி. 1930)
 • 2009 – நார்மன் போர்லாக், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1914)
 • 2010 – சுவர்ணலதா, தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி
Read More »

DAILY HISTORY DAILY HISTORY HISTORY OF THE DAY 11.09.2018 | TNPSC | HISTORY STUDY MATERIALS FREE DOWNLOAD

நிகழ்வுகள்


 • 1297 – ஸ்டேர்லிங் பாலம் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் ஸ்கொட்லாந்துப் படையினர் ஆங்கிலேயரைத் தோற்கடித்தனர்.
 • 1541 – சிலியின் சண்டியாகோ நகரம் மிச்சிமாலொன்கோ தலைமையிலான பழங்குடிகளினால் அழிக்கப்பட்டது.
 • 1609 – ஹென்றி ஹட்சன் மான்ஹட்டன் தீவைக் கண்ணுற்றார்.
 • 1649 – ஒலிவர் குரொம்வெல்லின் இங்கிலாந்து நாடாளுமன்றப் படைகள் அயர்லாந்தின் ட்ரொகேடா நகரைக் கைப்பற்றி ஆயிரக்கணக்கானோரைக் கொன்றனர்.
 • 1708 – சுவீடனின் பன்னிரண்ட்டாம் சார்ல்ஸ் மன்னன் தனது மாஸ்கோவின் மீதான படையெடுப்பை ஸ்மொலியென்ஸ்க் என்ற இடத்தில் இடைநிறுத்தினான். அவனது படைகள் 9 மாதங்களின் பின்னர் தோற்கடிக்கப்பட்டன.
 • 1709 – பிரித்தானியா, நெதர்லாந்து, ஆஸ்திரியா ஆகியன பிரான்ஸ் மீது போர் தொடுத்தன.
 • 1802 – பிரான்ஸ் சார்டீனியா பேரரசை இணைத்துக் கொண்டது.
 • 1857 – யூட்டாவில் மெடோஸ் மலை படுகொலைகள் இடம்பெற்றன. நூற்றுக்கும் அதிகமான ஆர்கன்சஸ் குடியேற்றவாசிகள் கொல்லப்பட்டனர்.
 • 1889 – யாழ்ப்பாணத்தில் இந்து சாதனம் (The Hindu Organ) என்ற ஆங்கிலப் பத்திரிகை டி. பி. செல்லப்பாபிள்ளை என்பவரால் வெளியிடப்பட்டது.
 • 1893 – முதலாவது உலக சமய நாடாளுமன்ற மாநாடு சிக்காகோவில் ஆரம்பமானது.
 • 1897 – எதியோப்பியாவின் இரண்டாம் மெனெலிக் மன்னன் கஃபா இராச்சியத்தைக் கைப்பற்றினான்.
 • 1906 – மகாத்மா காந்தி சத்தியாக்கிரகம் என்ற சொற்பதத்தை தென்னாபிரிக்காவில் வன்முறையற்ற இயக்கத்தின் செயற்பாடுகளுக்கு பயன்படுத்த ஆரம்பித்தார்.
 • 1914 – ஆஸ்திரேலியா புதிய பிரித்தானியத் தீவினுள் நுழைந்து அங்கு நிலை கொண்டிருந்த ஜெர்மனியப் படைகளை வெளியேற்றினர்.
 • 1916 – கனடாவின் கியூபெக் பாலத்தின் மத்திய பகுதி உடைந்து வீழ்ந்ததில் 11 பேர் கொல்லப்பட்டனர்.
 • 1919 – ஐக்கிய அமெரிக்காவின் கடற்படையினர் ஹொண்டுராசினுள் நுழைந்தனர்.
 • 1926 – பெனிட்டோ முசோலினி மீதான கொலைமுயற்சி தோல்வியடைந்தது.
 • 1940 – இரண்டாம் உலகப் போர்: பக்கிங்ஹாம் அரண்மனை ஜேர்மனியினரின் வான் தாக்குதலில் சேதமடைந்தது.
 • 1944 – இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனியின் டார்ம்ஸ்டாட் நகரில் இடம்பெற்ற பிரித்தானியரின் குண்டுவீச்சில் 11,500 பேர் கொல்லப்பட்டனர்..
 • 1945 – இரண்டாம் உலகப் போர்: போர்ணியோ தீவில் ஜப்பானியரினால் அடைக்கப்பட்டிருந்த போர்க்கைதிகளை ஆஸ்திரேலியப் படையினர் விடுவித்தனர். இவர்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட 2,000 பேர் செப்டம்பர் 15இல் கொல்லப்படவிருந்தனர்.
 • 1961 – டெக்சாசை 4ம் கட்ட சூறாவளி கார்லா தாக்கியது.
 • 1968 – பிரான்சில் விமானம் ஒன்று வீழந்ததில் 95 பேர் கொல்லப்பட்டனர்.
 • 1973 – சிலியின் மக்களாட்சி அரசு இராணுவப் புரட்சியில் கவிழ்க்கப்பட்டது. சனாதிபதி சல்வடோர் அலெண்டே கொல்லப்பட்டார். இராணுவத் தலைவர் ஆகுஸ்டோ பினொச்சே ஆட்சியைக் கைப்பற்றி 17 ஆண்டுகள் சர்வாதிகார ஆட்சியை நடத்தினார்.
 • 1974 – வட கரோலினாவில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 71 பேர் கொல்லப்பட்டனர்.
 • 1978 – அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர், எகிப்திய அதிபர் அன்வர் சதாத், இஸ்ரேல் பிரதமர் பெகின் ஆகியோர் மத்திய கிழக்கு அமைதீ முயற்சிகளை முன்னெடுக்க காம்ப் டேவிட்டில் சந்தித்தனர்.
 • 1982 – பாலஸ்தீன அகதிகளின் பாதுகாப்புக்கென வந்திருந்த பன்னாட்டுப் படைகள் பெய்ரூட் நகரை விட்டு அகன்றனர். ஐந்து நாட்களின் பின்னர் அங்கு பல்லாயிரக்கணக்கான அகதிகள் கொல்லப்பட்டனர்.
 • 2001 வான் தாக்குதல்களில் உலக வர்த்தக மையம் எரிகிறது
 • 1989 – ஹங்கேரிக்கும் ஆஸ்திரியாவுக்குமான எல்லை திறந்து விடப்பட்டதில் ஆயிரக்கணக்கான கிழக்கு ஜேர்மனி மக்கள் தப்பியோடினர்.
 • 1992 – ஹவாய் தீவை சூறாவளி இனிக்கி தாக்கியதில் தீவு பலத்த சேதத்தைச் சந்தித்தது.
 • 1997 – ஐக்கிய இராச்சியத்தினுள் அடங்கிய தனியான ஸ்கொட்லாந்து நாடாளுமன்றத்தை அமைக்க ஸ்கொட்லாந்து மக்கள் வாக்களித்தன்னர்.
 • 2001 – நியூயார்க் நகரின் உலக வர்த்தக மையம் மற்றும் பெண்டகன் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் மொத்தம் 2,974 பேர் கொல்லப்பட்டனர்.
 •    2006 – ஜேர்மனியின் முதல் 24 மணி நேரத் தமிழ் வானொலியான ஐரோப்பியத் தமிழ் வானொலி ஆரம்பிக்கப்பட்டது.


பிறப்புக்கள்

 • 1862 – ஓ ஹென்றி, ஆங்கில எழுத்தாளர் (இ. 1910)
 • 1917 – பேர்டினண்ட் மார்க்கோஸ், பிலிப்பீன்ஸ் அதிபர் (இ. 1989)
 • 1982 – ஷ்ரியா சரண், தென்னிந்திய நடிகை


இறப்புகள்


 • 1921 – சுப்பிரமணிய பாரதியார், (பி. 1882)
 • 1948 – முகம்மது அலி ஜின்னா, பாகிஸ்தான் தாபகர்
 • 1957 – இம்மானுவேல் சேகரன், தலித் மக்களின் உரிமைகளுக்காக போராடிய ஒரு தலைவர்.(பி. 1924
 • 1971 – நிக்கிட்டா குருசேவ், சோவியத் ஒன்றியத் தலைவர் (பி. 1894)
 • 1973 – சல்வடோர் அலெண்டே, சிலியின் அதிபர் (பி. 1908)
 • 2009 – யுவான் அல்மெய்டா, கியூப புரட்சியாளர் (பி. 1927)


Read More »

DAILY HISTORY HISTORY OF THE DAY 10.09.2018 | TNPSC | HISTORY STUDY MATERIALS FREE DOWNLOAD • 1759 – பாண்டிச்சேரியில் பிரெஞ்சுக் கடற்படைகளுக்கும் ஜோர்ஜ் போக்கொக் தலைமையிலான பிரித்தானியக் கடற்படைக்கும் இடையில் போர் வெடித்தது. பிரெஞ்சுக் கப்பல் பலத்த சேதத்துடன் பின்வாங்கியது.
 • 1823 – சிமோன் பொலிவார் பெருவின் சனாதிபதியாக அறிவிக்கப்பட்டார்.
 • 1840 – ஓட்டோமான், மற்றும் பிரித்தானியப் படைகள் பெய்ரூட் நகர் மீது தாக்குதலைத் தொடுத்தனர்.
 • 1846 – எலியாஸ் ஹோவ் தையல் இயந்திரத்துக்கான காப்புரிமம் பெற்றார்.
 • 1858 – 55 பண்டோரா என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது.
 • 1898 – ஆஸ்திரியாவின் அரசி எலிசபெத் கொலை செய்யப்பட்டார்.
 • 1931 – பெலீசில் இடம்பெற்ற மிகப் பெரும் சூறாவளியினால் 1,500 பேர் கொல்லப்பட்டனர்.
 • 1939 – இரண்டாம் உலகப் போர்: கனடா ஜேர்மனி மீது போரை அறிவித்தது.
 • 1943 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மானியப் படையினர் ரோம் நகரினுள் நுழைந்தனர்.
 • 1951 – ஐக்கிய இராச்சியம் ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை அறிவித்தது.
 • 1967 – கிப்ரல்டார் மக்கள் பிரித்தானியாவின் கீழ் தொடர்ந்திருக்க வாக்களித்தனர்.
 • 1974 – கினி பிசாவு போர்த்துக்கல்லிடம் இருந்து விடுதலை பெற்றது.
 • 1976 – பிரித்தானிய விமானம் ஒன்று யூகொஸ்லாவியாவின் சாக்ரெப் நகரில் வேறொரு விமானத்துடன் மோதியதில் 176 பேர் கொல்லப்பட்டனர்.
 • 2000 – மட்டக்களப்பு நகர முன்னாள் நகரத் தந்தை செழியன் பேரின்பநாயகம் படுகொலை செய்யப்பட்டார்.
 • 2002 – சுவிட்சர்லாந்து, ஐநாவில் இணைந்தது.
 • 2006 – ஈழப்போர்: முகமாலை முன்னரங்கப் பகுதியில் இலங்கை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே இடம்பெற்ற மோதலில் 28 இராணுவத்தினர் கொல்லப்பட்டு 119 பேர் படுகாயம் அடைந்தனர்.
Read More »

நடப்பு நிகழ்வுகள் அறிவோம் [ DAILY CURRENT AFFAIRS] 10.09.2018


இந்திய நிகழ்வுகள்


நகர்புற மேம்பாட்டுக்கான திட்டங்களை நிலையாக செயல்படுத்தவும், கார்பன் மோனாக்ஸைடு போன்ற பசுமை இல்ல வாயுவை குறைப்பதையும் நோக்கமாகக் கொண்ட MOBILIZE YOUR CITY” (MYC) மீது இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கிடையே உடன்படிக்கை ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இவ்வுடன்படிக்கை, உள்ளுர் மட்டத்தில் நகர்புற திட்டங்களை செயல்படுத்துவதில் உதவுவதோடு, தேசிய அளவிலான இந்தியாவின் நிலையான போக்குவரத்து கொள்கையை மேம்படுத்துவதற்கு உதவும்.


நாடு முழுவதிலும் உள்ள வனம் மற்றும் மலைப்பகுதிகளுக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள ரயில்;வே தண்டவாளங்களை அப்பகுதியில் வசிக்கும் யானை கூட்டங்கள் கடந்து செல்லும் போது, அவை அடிபட்டு இறப்பதை தடுக்க ரயில்வே துறையானது “Plan Bee” என்னும் திட்டத்தை தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் இரயில்கள் தண்டவாளங்களில் செல்லும் போது தேனீக்கள் போல சத்தம் எழுப்பும் ஒலிப் பெருக்கிகளை தண்டவாளத்தின் அருகே இணைக்க உள்ளது.


பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, 12வது ஐந்தாண்டு திட்டக் காலத்தையும் தாண்டி 2017-18 முதல் 2019-20 வரையில் மத்திய அரசு ஆதரவு பெற்ற சிறப்புத் திட்டமான வனவுயிர் வாழ்விடங்களுக்கான ஒருங்கிணைந்த மேம்பாட்டுத் திட்டத்தை தொடர்ந்து செயல்பட ஒப்புதலளித்துள்ளது.
இத்திட்டம் மத்திய அரசின் ஆதரவுத் திட்டமான புராஜெக்ட் டைகர், புராஜெக்ட் எலிபெண்ட் மற்றும் வனவுயிர் வாழ்விட மேம்பாடு ஆகியவைகளை உள்ளடக்கியது.


கலாச்சாரம், வணிகம் மற்றும் கல்வியாளர்களுக்கிடையேயான ஊடாடல்கள் போன்றவற்றில் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கான ஒப்பந்தத்தில் ஜப்பானும் குஜராத்தும் கையெழுத்திட்டுள்ளன.


உலக நிகழ்வுகள்


துருக்கியில் உள்ள இஜ்மிர் நகரில் நடைபெற்ற “87வது இஜ்மீர் சர்வதேச வர்த்தக கண்காட்சியில்” இந்தியா சார்பில் “மூல இந்தியா” என்ற பெயரில் ஒரு மெகா வணிக கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த “மூல இந்தியா” துருக்கியிலும் ஏனைய அண்டை நாடுகளிலும் இந்தியாவின் ஏற்றுமதிகளை உயர்த்தவும் பயன்படும்.


சுற்றுச்சூழலில் பிளாஸ்டிக் பைகளால் கேடு விளைவதை தடுக்கும் வகையில், தண்ணீரில் கரையும் பிரத்யேக பையை சீன விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர்.
தண்ணீரில் கரையும் இந்த பை மக்காச்சோளம் போன்றவற்றின் மாவில் இருந்து தயாரிக்கப்படுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.


விளையாட்டு நிகழ்வுகள்


அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற, கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில், மகளிர் ஒற்றையர் பிரிவில், செரினா வில்லியம்சை வீழ்த்தி ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை ஒசாகா வெல்வது இதுவே முதன்முறையாகும்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் நோவக் கோவிச் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.


அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்


விஞ்ஞானிகள், தகவல் பத்திரிக்கையாளர்கள் மற்றும் மற்றவர்கள் தங்கள் பணிக்காக தேவைப்படும் தகவல்களை பெற உதவிடும் வகையில் பலதரப்பட்ட மொழிகளில் இயங்கி தகவல்களை கொடுக்கும் Dataset Search என்ற புதிய தேடல் இயந்திரத்தை கூகுள் ஆரம்பித்துள்ளது.
Read More »

இந்திய_புகழ்பெற்ற_நடனங்கள்

#தமிழ்நாடு
கோலாட்டம், கும்மியாட்டம், தெருக்கூத்து, பரதநாட்டியம்

#கேரளா
சாக்கியார் கூத்து, கதகளி, மோகினிஆட்டம், ஓட்டம் துள்ளல், தாசி ஆட்டம், கூடி ஆட்டம், கிருஷ்ணா ஆட்டம்

#ஆந்திரா
குச்சுப்பிடி, கோட்டம், வீதி பகவதம்

#கர்நாடகம்
யக்ஷகானம்.

#ஒரிசா
ஒடிசி

#மணிப்பூர்
மணிப்புரி, லாய்-ஹரோபா

#பஞ்சாப்
பாங்ரா, கிட்டா

#பீகார்
பிதேஷியா, ஜட்டா-ஜட்டின், லாகூய், நாச்சாரி

#அஸ்ஸாம்
பிகு, கேல்-கோபால், தோபல்-சௌக்பீ

#ஜம்மு_காஷ்மீர்
சக்ரி, ரூக்ப்

#ராஜஸ்தான்
சமர் கிண்டாட், தாண்டியா, கண்கோர், கோபி லீலா, ஜீமர், காயல்

#மேற்கு_வங்காளம்
சௌ, ஜத்ரா

#குஜராத்
குர்பா ஆட்டம், கணபதி பஜன், ராஸ்லீலா

#இமாச்சலப்_பிரதேசம்
கீதா, கர்யாலா, லூடி ஆட்டம், முனீரா ஆட்டம்

#உத்திரப்பிரதேசம்
நௌதாங்கி

#மத்தியப்பிரதேசம்
பாண்டவாணி

#ஹரியானா
ஸ்வாங்

#மஹாராஷ்டிரா
தமாஷா

#மேகாலயா
வங்காள லகூகி
Read More »

பொதுத்தமிழ் வினா விடைகள்


1. 'உலக வசனம்" என அழைக்கப்பெறும் நு}ல் எது? - பழமொழிநானு}று

2. திருச்சிற்றம்பலக்கோவை என்ற அடைமொழி பெற்ற நு}லை இயற்றியவர் - மாணிக்கவாசகர்

3. கல்வியில் பெரியார் இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர்? - கம்பர்

4. மணிமேகலையில் உள்ள காதைகளின் எண்ணிக்கை - 30

5. அஷ்டபிரபந்தத்தின் மறுபெயர் - திவ்யபிரபந்த சாரம்

6. ஆண்டவர் பிள்ளைத்தமிழ் பாடியவர் - சவ்வாது புலவர்

7. கம்பர் யாரால் ஆதரிக்கப்பட்டார்? - திருவெண்ணெய் நல்லு}ர் சடையப்ப வள்ளல்

8. கம்பர் இராமாயணத்திற்கு வைத்த பெயர்? - இராமாவதாரம்

9. கலாபம் என்பதன் பொருள் - தோகை

10. அண்டை என்னும் சொல்லின் பொருள் - அருகில்

11. கல்விக்கு அழகு கசடற மொழிதல் என்று பாடியவர் - அதிவீரராம பாண்டியர்

12. தமிழ் மூவாயிரம் என்று அழைக்கப்படும் நு}ல் - திருமந்திரம்

13. கம்பராமாயணக் காப்பியம் எவ்வகை நு}ல் - வழிநு}ல்

14. மருகி என்பதன் பொருள் - மருமகள்

15. மயிற்பொறி விமானத்தின் செயல் திறனைப் பற்றிக்கூறும் நு}ல் - சீவகசிந்தாமணி
Read More »

பொதுத்தமிழ் வினா விடைகள்1. முதன் முதலில் பத்மஸ்ரீ விருதை பெற்றவர் யார் ?

பதில்: அன்னை தெரசா

2. இந்தியாவில் வருமானவரி எந்த ஆண்டு வந்தது ?

பதில்: 1860

3. நதிகள் இல்லாத நாடு எது ?

பதில்: சவூதி அரேபியா

4. கிரிக்கெட் மட்டை எந்த மரத்தால் தயாரிக்கப்படுகிறது ?

பதில்: வில்லோ மரம்

5. இந்தியாவில் விண்வெளி ஆய்வகம் எங்குள்ளது ?

பதில்: பெங்களூர்.

6. எந்த மொழியில் இருந்து “பீரோ” என்ற வார்த்தைத் தமிழுக்கு வந்தது?

பதில்: ஃப்ரெஞ்ச்

7. மௌரிய வம்சத்தின் கடைசி மன்னன் யார்?

பதில்: பிருகத்ரதன்

8. யானைகளுக்கான சரணாலயம் உள்ள தமிழக மாவட்டம்?

பதில்: நீலகிரி

9. தேசிய வனவிலங்கு வாரம் முதன்முதலாக எந்த ஆண்டுத் தொடங்கப்பட்டது?

பதில்: 1955

10. தேசிய அறிவியல் தினம் எந்நாளில் கொண்டாடப்படுகிறது?

பதில்: பிப்ரவரி 28 ஆம் நாள்.

11. உலகின் மக்கள் தொகை கணக்கெடுப்பாளர் என அழைக்கப்படுபவர் யார் ?

பதில்: ராபர்ட் மால்தஸ்

12. இந்தியாவில் புதிய தொழில் கொள்கை நடைமுறைப் படுத்தப்பட்ட ஆண்டு எது ?

பதில்: 1991

13. வறுமை ஒழிப்பில் முதலிடம் பெற்ற திட்டம் எது ?

பதில்: இந்திரா காந்தியின் 20 அம்ச திட்டம்

14. தமிழ்நாடு மின்சார வாரியம் அமைக்கப்பட்ட ஆண்டு எது ?

 பதில்: 1957

15. இந்தியாவில் வரதட்சனை தடைச் சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது ?

பதில்: 1961.

16. உணவுக்கான வேலை திட்டத்தை அமைத்து மறு பெயர் சூட்டி எவ்வாறு அழைக்கப்பட்டது?

பதில்: என்ஆர்இபி

17. இடப்பெயர் அடையும் தாவரம் எது?

பதில்: வால்வாக்ஸ்

18. இரத்தம் சிவப்பாக இருக்க காரணம் யாது?

பதில்: ஹிமோகுளோபின்

19. சக்தி தரும் உணவுச் சத்து?

பதில்: கார்போ ஹைட்ரேட்

20. விழுங்கும் முறை உணவவூட்டம் கொண்டது?

பதில்: அமிபா.
Read More »
 

Most Reading

Tags

Sidebar One