Search

TNPSC | TRB | TET STUDY MATERIALS | TAMIL FREE DOWNLOAD |10 ஆம் வகுப்பு பொதுத்தமிழ் - PART-4

Saturday 3 November 2018

TNPSC | TRB | TET STUDY MATERIALS | பத்தாம் வகுப்பு - பொதுத்தமிழ்- PART -4
===========================

301) கைகேயின் மகன்?
பரதன்
302) இராமன் காடு செல்லவும், தன்மகன் பரதன் நாடாளவும் வேண்டுமெனக் கூறியவள்?
கைகேயி
303) மணிமுடி சூடப் புறப்பட்டு வந்த இராமனிடம், கைகேயி எத்தனை ஆண்டுகள் காடு செல்ல வேண்டும் – என்று கூறினாள்?
பதினான்கு ஆண்டுகள்
304) அன்பே வடிவான வேட்டுவத் தலைவன்?
குகன்
305) போர்க்குணம் மிக்கவன்?
குகன்
306) ஆயிரம் படகுகளுக்கு தலைவன்?
குகன்
307) கங்கையாற்று தோணித்துறைக்குத் தொன்றுதொட்டு உரிமையுடையவன்?
குகன்
308) பகைவர்களை அழிக்கும் வில்லாற்றல் பெற்றவன்?
குகன்
309) மலைபோன்ற திரண்ட தோள்களை உடையவர்?
குகன்
310) துடியெனும் பறையை உடையவன்?
குகன்
311) வேட்டை நாய்களைக் கொண்டிருப்பவன்?
குகன்
312) தோல் செருப்பணிந்த பெருங்கால்களை உடையவன்?
குகன்
313) இருள் போன்ற கரிய நிறத்தை உடையவன்?
குகன்
314) கரிய மேகக் கூட்டம் திரண்டு வந்தாற்போன்ற மிகுதியான படைபலம் உடையவன்?
குகன்
315) அலைகளையை உடைய நதிக்கரை?
கங்கை நதிக்கரை
316) கங்கைக்கரையோர நகரம்?
சிருங்கிபேரம்
317) சிருங்கிபேரம் என்னும் நகரில் வாழும் தலைவன்?
குகன்
318) இராமனைக் காண தேனும்மீனும் கொண்டு சென்றவன்?
குகன்
319) தமிழர் மரபுகளில் எவரை காணச் செல்லும்போது வெறுங்கையோடு செல்லலாகாது?
அரசர், குரு, தெய்வம்
320) நாயினும் அடியவன்?
குகன்
321) கங்கைக்கரையில் நாவாய்களை இயக்குகின்றவன்?
குகன்
322) தாயினும் சிறந்த அன்பினன் என்று இலக்குவனன் குறிப்பிடுவது யாரை?
குகன்
323) இராமனைக் காண குகன் யாருடன் சென்றான்?
உறவினருடன்
324) நெடியவன் என்பது யாரைக் குறிக்கும்?
உயர்ந்தவராகிய இராமன்
325) இராமனைக் கண்ட குகன் எவ்வாறு வணங்கினான்?
நீண்டமுடியுடைய தலை, மண்ணில் படியக் கீழே விழுந்து வணங்கினான்
326) பண்ணவன் என்பது யாரைக் குறிக்கும்?
நற்குணங்கள் பல உடைய இலக்குவன்
327) கிடைத்தற்கரியன என்றும் அமுதத்தைவிடச் சிறத்தென இராமன் குறிப்பிடுவது எதனை?
குகன் கொண்டுவந்த தேனும்மீனும்
328) கருமுகில் வண்ணனாகியவன்?
இராமன்
329) கோதண்டம் என்னும் வில்லேந்தியவன்?
இராமன்
330) ஆடவரில் நல்லவனாகியவன்?
இராமன்
331) இவன் நம்மிடத்து நீங்காத அன்பு உடையவன் – என்று உரைத்தவன்?
இராமன் (இலக்குவனிடம்)
332) தாமரைமலர்போன்ற கண்களை உடையவன்?
இராமன்
333) பிறைநிலவு போன்ற நெற்றியை உடையவர்?
சீதை
334) விரைந்து படகினைச் செலுத்துமாறு குகனிடம் கட்டளையிட்டவன்?
இராமன்
335) குகன் படகினை விரைவாக செலுத்தியவிதம் எவ்வாறு வருணிக்கப்படுகிறது?
உயிரின் ஏவலுக்கு மெய் செயல்படுவதுபோல
336) கங்கையாற்றில் படகு சென்றதை எவ்வாறு வருணிக்கப்படுகிறது?
இளம் அன்னம் விரைந்து செல்வதைப் போல
337) இராமன், சீதை, இலக்குவன் ஆகியோரின் பிரிவால் அனல்பட்ட மெழுகுபோல துன்புற்று மனமுறுகி நின்றவர்?
அந்தணர்கள்
338) இராமனின் உயிர்போன்றவன்?
குகன்
339) விரிந்த அன்பினால் இனி உன்னோடு ஐவரானோம் – என்று கூறியவன்?
இராமன், குகனிடம்
340) கம்பர் பிறந்த ஊர்?
தேரழுந்தூர்
341) தேரழுந்தூர் எங்கு உள்ளது?
நாகை மாவட்டம், மயிலாடுதுறைக்கு அருகில்
342) கம்பரின் தந்தையார் பெயர்?
ஆதித்தன்
343) கம்பர் எந்த மன்னன் காலத்தில் வாழ்ந்தார்?
இரண்டாம் குலோத்துங்கன்
344) கம்பரை ஆதரித்தவர்?
சடையப்ப வள்ளல்
345) சடையப்ப வள்ளல் எந்த ஊரைச் சேர்ந்தவர்?
திருவெண்ணை நல்லூர்
346) கம்பர் வாழ்ந்த காலம் யாது?
கி.பி.பன்னிரண்டாம் நூற்றாண்டு
347) செய்நன்றி மறவா இயல்பினர்?
கம்பர்
348) கம்பர், தன்னை ஆதரித்த சடையப்ப வள்ளலை எவ்வாறு சிறப்பித்துள்ளார்?
ஆயிரம் பாடல்களுக்கு ஒரு பாடல் எனப் பாடிச் சிறப்பித்துள்ளார்
349) கம்பர் இயற்றிய நூல்கள்?
1) கம்பராமாயணம்
2) சடகோபர் அந்தாதி
3) ஏர் எழுபது
4) சிலை எழுபது
5) சரசுவதி அந்தாதி
6) திருக்கை வழக்கம்
350) கம்பர் காலத்தில் வாழ்ந்த புலவர்கள்?
1) சயங்கொண்டார்
2) ஒட்டக்கூத்தர்
3) புகழேந்தி
351) கம்பரிண் பெருமையை அறிய உதவும் தொடர்கள்?
1) கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்
2) விருத்தமெனும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்
3) கல்வியில் பெரியவர்
352) பாரதியார், கம்பரை எவ்வாறு புகழ்கிறார்?
யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்
353) வான்மீகி முனிவர் வடமொழியில் எழுதிய இராமாயணத்தை தழுவி தமிழில் இயற்றியவர்?
கம்பர்
354) கம்பர் தாம் இயற்றிய நூலுக்கு என்ன பெயரிட்டார்?
இராமாவதாரம்
355) கம்பராமாயணம் எத்தனை காண்டங்களை உடையது?
ஆறு காண்டங்கள்
356) கம்பராமாயணத்தின் பெரும்பிரிவு எவ்வாறு குறிக்கப்பெறுகிறது?
காண்டம்
357) கம்பராமாயண பெரும்பிரிவின் உட்பிரிவு எவ்வாறு குறிக்கப்பெறுகிறது?
படலம்
358) தமிழிலக்கியத்தில் காப்பிய வளர்ச்சி யாருடைய படைப்பினால் உச்சநிலையை அடைந்தது?
கம்பர்
359) கம்பராமாயனத்தின் சிறப்புச் கருதியும், திருக்குறளின் பெருமை கருதியும் இவ்விரு நூல்களையும் எவ்வாறு அழைப்பர்?
தமிழுக்குக் கதி
360) பெருங்காப்பியத்திற்குரிய இலக்கணங்களை முழுமையாகப் பெற்றுள்ள நூல்?
கம்பராமாயணம்
361) பொருள், அணி, நடை ஆகியவற்றால் சிறந்த நூல்?
கம்பராமாயணம்
362) கற்போர்க்கு இனிமை தரும் கவிச்சுவை நிறைந்த நூல்?
கம்பராமாயணம்
363) சொற்சுவையும் பொருட்சுவையும் தமிழ்ப்பண்பாடும் மிளிர்ந்துள்ள நூல்?
கம்பராமாயணம்
364) கம்பராமாயணத்தில் இரண்டாவது காண்டம்?
அயோத்தியா காண்டம்
365) கம்பராமாயணத்தின் அயோத்தியா காண்டத்தில் உள்ள படலங்கள் எத்தனை?
பதின்மூன்று படலங்கள்
366) குகப்படலம் எத்தனையாவது படலம்?
ஏழாவது படலம்
367) குகக்கபடலத்தின் வேறுபெயர்?
கங்கைப் படலம்
368) தொல்காப்பிய நெறி நின்றவர்?
கம்பர்
369) கம்பராமாயணத்தில் உள்ள காண்டங்கள் எவை?
1) பாலகாண்டம்
2) அயோத்தியா காண்டம்
3) ஆரண்ய காண்டம்
4) கிட்கிந்தா காண்டம்
5) சுந்தர காண்டம்
6) யுத்த காண்டம்
370) தமிழ் வேந்தர் என சிறப்பிக்கப்படுபவர்?
கம்பர்
371) வடமொழி எழுத்தையும் பிறமொழிக் கலப்பையும் தடுத்தவர்?
கம்பர்
372) உலகினில் நாகரிகம் முற்றும் அழிந்துவிட்டாலும் திருக்குறளும், கம்பன் காவியமும் இருந்தால் போதும்; மீண்டும் அதனை புதுப்பித்துவிடலாம் – என்று கூறியவர்?
டாக்டர்.கால்டுவெல்
373) விடுதலைக்கும் சமத்துவத்துக்கும் முரசு கொட்டிய கவிஞர்?
பாரதியார்
374) அண்ணல் அம்பேத்கர் பிறந்த ஊர்?
அம்பவாடே எனும் சிற்றூர் – கொங்கண் மாவட்டம் – மகாராஷ்ட்ரா
375) சமுதாய மறுமலர்ச்சியின் முன்னோடி, சமத்துவக் காவலர்?
அண்ணல் அம்பேத்கர்
376) உலக சாதனையாளர் வரிசையில் முன்னிற்பவர்?
அண்ணல் அம்பேத்கர்
377) அண்ணல் அம்பேத்கர் ஆரம்பத்தில் படித்த பள்ளி எங்குள்ளது?
தபோலி
378) அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள்?
ஏப்ரல் 14 - 1891
379) அண்ணல் அம்பேத்கரின் பெற்றோர்?
தந்தை  = இராம்ஜி சக்பால்
தாய்  = பீமாபாய்
380) தம் பெற்றோர்க்கு எத்தனையாவது மகனாக அம்பேத்கர் பிறந்தார்?
பதினான்காவது மகன்
381) அம்பேத்கருக்கு தம் தந்தை இராம்ஜி சக்பால் சூட்டிய பெயர்?
பீம்
382) அம்பேத்கரின் இயற்பெயர்?
பீமாராவ் ராம்ஜி
383) டாக்டர் அம்பேத்கருக்கு பீம் என பெயர் சூட்ட காரணம்?
மகாபாரத பீமனைப்போல் தன்மகனும் அசைக்க முடியாத வீரனாக வரவேண்டுமென
384) ஆசிரியர் என்பர் அறிவுக்கடலாக மட்டுமன்றி அறத்தின் ஆழியாகவும் விளங்க வேண்டும் என்னும் உயரிய நோக்குடன் செயல்பட்டவர்?
அம்பேத்கர் (பீமாராவின் ஆசிரியர்)
385) பீமாராவ், தன் பெயரை அம்பேத்கர் என பெயர் மாற்றிக்கொள்ள காரணம்?
தம் ஆசிரியர் அம்பேத்கர் மீது கொண்ட பற்றினாலும், காலத்தினால் செய்த உதவிக்காக
===========================
386) டாக்டர் அம்பேத்கர் பள்ளி படிப்பு முதல் கல்லூரி படிப்பு வரை வரிசைப்படுத்துக.

1) உயர்நிலைப் பள்ளி படிப்பு - எல்பின்ஸ்டன் பள்ளி - மும்பை - 1908
2) இளங்களைப் பட்டம் - எல்பின்ஸ்டன் கல்லூரி - மும்பை - 1912
3) முதுகலைப் பட்டம் - கொலம்பியா பல்கலை - அமெரிக்கா - 1915
4) பொருளாதர முனைவர் - கேம்பிரிட்ஜ் பல்கலை - லண்டன் - 1916
5) அறிவியல் முதுகலை - கேம்பிரிட்ஜ் பல்கலை - லண்டன்
6) பாரிஸ்டர் பட்டம் - கேம்பிரிட்ஜ் பல்கலை - லண்டன்
===========================
387) டாக்டர் அம்பேத்கர் தன் இளங்கலைப் பட்டபடிப்பு யாருடைய உதவியுடன் படித்து முடித்தார்?
பரோடா மன்னர் - எல்பின்ஸ்டன் கல்லூரி – 1912 – பம்பாய்
388) 1916 இல் இலண்டனில் பொருளாதரத்தில் முனைவர் பட்டம் பெற்றபின் சிறிதுகாலம் எங்கு பணியாற்றினார்?
மும்பையில் (பொருளியல் பேராசிரியராக)
389) அரசியல், சட்டம், சமூகம், பொருளாதாரம், தத்துவம், வரலாறு, வாணிகம், கல்வி, சமயம் என அனைத்துத் துறைகளிலும் நிகரற்ற அறிஞராகத் திகழ்ந்தவர்?
அண்ணல் அம்பேத்கர்
390) அண்ணல் அம்பேத்கர் ஒருநாளில் கல்வி கற்பதற்காக எத்தனை மணி நேரம் செலவழித்தார்?
பதினெட்டு மணி நேரம்
391) நூலகத்தில், காலையில் முதல் ஆளாக நுழைந்து; மாலையில் இறுதி ஆளாக வெளியேறியவர்?
அண்ணல் அம்பேத்கர்
392) மனிதஉரிமைக்காக முதலில் நடத்தப்பெற்ற போராட்டங்கள்?
1) வைக்கம் போராட்டம்
2) மகாத்து குளத்தில் தண்ணீர் எடுக்கும் போராட்டம்
393) கேரளாவின் வைக்கத்தில் நடத்திய ஒடுக்கப்பட்டோர் ஆலையநுழைவு முயற்சியான வைக்கம் போராட்டம் யாருடைய தலைமையில் எந்த ஆண்டு நடைபெற்றது?
தந்தை பெரியார் – 1924
394) மனித உரிமைக்காக டாக்டர் அம்பேத்கர் நடத்திய போராட்டம் எது?
மகாத்து குளத்தில் தண்ணீர் எடுக்கும் போராட்டம் – மராட்டிய மாநிலம்
395) மகாத்து குளத்தில் தண்ணீர் எடுக்கும் போராட்டம் நடைபெற்ற நாள்?
20.03.1927 (மார்ச்சுத் திங்கள் இருபதாம் நாள்)
396) இங்கிலாந்து சொல்வதற்கெல்லாம் இந்தியா தலையசைக்கும் என்பது தவறு; இந்தநிலை எப்போதோ மாறிவிட்டது என வட்டமேசை மாநாட்டில் எடுத்துக்கூறியவர்?
டாக்டர் அம்பேத்கர்
397) இந்திய மக்களின் எண்ணங்களை நீங்கள் ஈடேற்ற வேண்டும் – என ஆங்கிலேயரிடம் அச்சமின்றி ஆணித்தரமாகக் கூறியவர்?
டாக்டர் அம்பேத்கர்
398) முழுமையான விடுதலை வழங்குவதற்கு முன் தன்னாட்சித் தகுதியை இந்தியாவிற்கு வழங்க வேண்டும் – என வட்டமேசை மாநாட்டில் முன்மொழிந்தவர்?
டாக்டர் அம்பேத்கர்
399) முதல் வட்டமேசை மாநாடு நடைபெற்ற ஆண்டு?
1930
400) அரைவயிற்றுக் கஞ்சிக்கு அல்லற்படும் ஊமைகளின் உறுப்பினனாக பேசியவர்?
டாக்டர் அம்பேத்கர் – 1930 - வட்ட மேசை மாநாட்டில்
==========================

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One