Pages

TIPS FOR TET EXAM ...

Thursday, 6 June 2019



         TET exam : அரசு ஆசிரியர் வேலை உறுதி
இதோ படிக்க வேண்டியவை

MAJOR SUBJECT : 1.TAMIL 2.ENGLISH  3. HISTORY 4. GEOGRAPHY

1.  1 முதல் +2 வரை தமிழ் சமச்சீர் புத்தகம்

2.   1 முதல் +2 வரை ENGLISH சமச்சீர் புத்தகம்


3.    1 முதல் 10 வரை சமுக அறிவியல்  சமச்சீர் புத்தகம்

4.   WREN AND MARTIN GUIDE FOR ENGLISH

5.  SOCIAL SCIENCE சேவியர் GUIDE

6. தமிழ் விகடன் TET பிரசுரம்

7.  TAMILNADU GUIDE SHANKAR IAS ACADEMY

8. கல்வி  உளவியல் ராம் பதிப்பகம் , கவிய மாலா  பதிப்பகம்

9.  கல்வி  உளவியல் 1000 உளவியல் 1 MARK QUESTION ANSWER 

10. MADHURAI SAI  STUDY MATERIAL

11. PALANI AAIYAKUDI (ஆயக்குடி ) இலவசப் பயிற்சி மையம் MATERIAL

12. புதிய தலைமுறை கல்வி - ஆங்கிலம் உளவியல் MATERIAL

13. தினதந்தி, தினமணி, தினகரன், தினமலர், போன்ற செய்தி தாள்களின் சமுக அறிவியில் MATERIAL

                               இதை திட்டமிட்டு படித்தல் வெற்றி உறுதி ...

How to Prepare TET Exam - Full Article.


     ஒரு பள்ளி ஆண்டு விழாவில் நடைபெறும் போட்டியில் கலந்துகொள்ள உங்கள் மாணவர்களை தயார் செய்ய வேண்டும் என்றால் நீங்கள் கீழ்கண்ட காரணங்களை யோசித்து அதற்கேற்ப தயார் செய்ய வேண்டும்.

    போட்டி நடைபெறும் நாள்?


   போட்டி நடைபெறுவதற்கான காரணம்?

   (ஆசிரியார் தின விழாவா? குழந்தைகள் தின விழாவா?, அறிவியல் கண்காட்சியா?)

   உதாரணமாக மாறுவேட போட்டி எனில்  போட்டியில் வழங்கப்படும் பரிசுகள் எத்தனை?

 மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது போட்டியில் பரிசுக்குரியவரை தீர்மானிக்கும் நடுவர் யார்? ( நடுவர் விஞ்ஞானி – எனில் அறிவியல் அறிஞரை போல் வேடமிடலாம்., ஆன்மீகவாதி – எனில் கடவுள்களை போல வேடமிடலாம்., அரசியல்வாதி – எனில் முதுபெரும் அரசியல் தலைவரை போல வேடமிடலாம்.)

இதுபோன்று பள்ளி அளவிலான போட்டிகளுக்கு நம் மாணவர்களை தயார்செய்ய வேண்டும் என்றாலே இத்தனை காரணிகளை நாம் கவனித்து தயார் செய்ய வேண்டியுள்ளது எனில் நம் வாழ்க்கையை தீர்மானிக்கும் தகுதி தேர்வுக்கு தயார் ஆவதற்க்கு நாம் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும்.



இனி அடுத்த தகுதி தேர்வு எவ்வாறு இருக்கும் என பார்ப்போம்?


1. தேசிய அளவிளான தகுதித் தேர்விலேயே 5 முதல் 10 சதவீதம் தான் தேர்ச்சி சதவீதம் இருப்பதால் கேள்வித்தாள் தயாரிப்பில் எந்த வித சமரசத்துக்கும் இடமில்லை என ஏற்கனவே TRB  அறிவித்துள்ளதை கவனிக்க வேண்டும்.


2. இது ஆசிரியர் தகுதி தேர்வு தானே தவிர ஆசிரியர்  பணிநியமன தேர்வு கிடையாது என நாம் அனைவரும் நன்கு அறிவோம்.


3. அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளிலும் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர் மட்டுமே பணிநியமனம் பெற முடியும் என்ற நிலையில் போட்டி அதிகமாக இருக்கும்.


    இந்த தேர்விலேயே தகுதி தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பணிநியமனம் கிடைக்குமா? இல்லையா? என்ற பயம் இறுதிநாள் வரை பெரும்பாலோருக்கு இருந்த நிலையில் அடுத்த முறை எவ்வளவு பணியிடங்கள் காலி ஏற்படும்? அப்பணியிடங்கள் அனைத்துக்கும்

   ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்களா? என எண்ணிப்பார்க்க வேண்டும்.


                 தகுதி தேர்வு என்றால் எப்படி இருக்கும் என  தெரியாத நிலையில் 0.3 சதவீதம் தேர்வர்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில் அடுத்த மறுதேர்வில் 3 சதவீதத்திற்கும் அதிகமான தேர்வர்கள் வெற்றி பெற்றுள்ளனர். எனவே அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது ஜுலை மாத தேர்வில் தற்போதைய நிலையை விட அதிகமான தேர்வர்களே வெற்றி பெறுவார்கள் என ஊகித்தறிய இயலும்


         குறைவான பணியிடங்கள், அதிகமானோர் தேர்ச்சி பெறும் நிலையில் தகுதி தேர்வில் தேர்ச்சி மட்டும் போதாது. மிக அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டும் என்பதை மனதில் கொள்ளவும்.
       அடுத்த தகுதித்தேர்வுக்கு எவ்வாறு தயார் ஆகலாம் என்பது குறித்து நாம் ஆலோசனை கேட்டது – கல்வியாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள், பேரறிஞர்கள், ஐ.ஏ.எஸ் போன்ற போட்டித் தேர்வுகளை நடத்தும் விரிவுரையாளர்கள்

           -போன்றோர்களிடம் அல்ல.

     நாம் நான்கு வகையானோரிடம் கருத்து கேட்டு தொகுத்துள்ளோம்.
1. எவ்வாறெல்லாம் அலட்சியமாக செயல்பட கூடாது என்பதற்காக கடந்த தகுதி தேர்வில் 0 – 50 க்குள் மதிப்பெண் எடுத்தவர்களிடம் கருத்து கேட்டோம்.
2.   எதனால் மிக குறைந்த மதிப்பெண் வித்தியாசத்தில் தேர்ச்சி பெற தவறினார்கள்? என்பதை அறிய 70 – 90 க்குள் மதிப்பெண் எடுத்தவர்களிடம் கேட்டோம்
3. எந்த காரணத்தால் குறைந்தபட்ச மதிப்பெண் பெற்று தகுதி பெற்றீர்கள் என்று 90 – 95 க்குள் மதிப்பெண் எடுத்தவர்களிடம் கேட்டோம்
4.   மிக முக்கியமாக 110 – 125 மதிப்பெண் பெற்றவர்களிடம் எவ்வாறு திட்டமிட்டு கடினமாக உழைத்தீர்கள் என கேட்டறிந்தோம்.

இவர்களின் கருத்துகளையே நாம் பிரதிபலிக்கிறோம்.

திட்டம் 1:
1.   மிக அலட்சியமாக படிக்க கூடாது.
2. தற்போது நாம் படிப்பது தான் இத்தனை வருடங்களாக நாம் படித்ததின் இறுதி அத்தியாயம் என்பதை உணருங்கள்.
3.  குறிப்பாக இனி ஒரு வாய்ப்பு கிடையாது. அப்படியே கிடைத்தாலும் நான் அதை பயன்படுத்த முயற்சிக்க மாட்டேன். இதுவே எனது இறுதி முயற்சி. என முடிவு செய்து இதில் நான் அதிக மதிப்பெண் பெற்று என்னுடைய பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், சமூகம், அரசு அனைத்திற்கும் எனது உண்மையான திறமையை உணர வைப்பேன் என உறுதி எடுத்துக்கொள்ளுங்கள்.

திட்டம் 2
1.   தாள் 1 ல் தேர்ச்சி பெற விரும்புபவர்கள் கீழ்கண்டவாறு படிக்க வேண்டும்

1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள பாடபுத்தகங்கள் – 100 சதவீதம் ஆழ்ந்து படிக்க வேண்டும்.

11 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பாடபுத்தகங்கள் – 25 சதவீதம் கழுகுப்பார்வையில் மேம்போக்காக படிக்க வேண்டும்.

ஆசிரியர் பயிற்சியின் போது படித்த உளவியல், கற்பிக்கும் முறைகள் மற்றும் உள்ள இதர புத்தகங்களை 70 சதவீதம் ஆழந்து படிக்க வேண்டும்.

இதே தலைப்பில் உள்ள பி.எட் மற்றும் எம்.எட் புத்தகங்களை 20 சதவீதம் மட்டுமே உழைத்து ஆரம்ப நிலையில் ஒருமுறையும் தேர்வுக்கு முந்தைய வாரத்தில் ஒருமுறையும் படிக்க வேண்டும்.


2.   தாள் 2 ல் தேர்ச்சி பெற விரும்புபவர்கள் கீழ்கண்டவாறு படிக்க வேண்டும்

4 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள பாடபுத்தகங்கள் – 100 சதவீதம் ஆழ்ந்து படிக்க வேண்டும்.

11 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பாடபுத்தகங்கள் – 50 சதவீதம் கழுகுப்பார்வையில் மேம்போக்காக படிக்க வேண்டும்.

ஆசிரியர் பயிற்சியின் போது படித்த உளவியல், கற்பிக்கும் முறைகள் மற்றும் உள்ள இதர புத்தகங்களை 70 சதவீதம் ஆழந்து படிக்க வேண்டும்.

இதே தலைப்பில் உள்ள பி.எட் மற்றும் எம்.எட் புத்தகங்களை 60 சதவீதம் மட்டுமே உழைத்து ஆரம்ப நிலையில் ஒருமுறையும், நடுவில் ஒருமுறையும், தேர்வுக்கு முந்தைய வாரத்தில் ஒருமுறையும் படிக்க வேண்டும்.

    இவ்வாறு நீங்கள் படிக்கும்போது ஒவ்வொரு வகுப்பில் உள்ள ஒவ்வொரு பாடத்தையும் தனித்தனியாக படிக்காமால் ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டால் அதே தலைப்பு தொடர்பாக மற்ற வகுப்புகளில் உள்ள பாடங்களையும் படித்து முடித்து விட வேண்டும்.

    ஏனெனில் நமது பாடப்பகுதிகள் பெரும்பாலும் ”மரம் கிளை வகை” மற்றும் ”மை சிந்தும் முறை” பாடதிட்டத்தை கொண்டிருப்பவை.

    உதாரணமாக 6 ஆம் வகுப்பில் இந்திய நிலங்கள் குறித்து படித்தால் 7 ஆம் வகுப்பில் மண் வகைகள் பற்றியும், அடுத்த வகுப்பில் மண்ணில் உள்ள கனிம வகைகளை பற்றியும் விரிவாக தரப்பட்டு இருக்கும். – இது நம் பாடப்பகுதிகள் எவ்வாறு தரப்பட்டிருக்கிறது என ஒரு உதரணத்துக்காக மட்டுமே நாம் கூறியுள்ளோம்.

     எனவே ஒரு தலைப்பு பற்றி படிக்கும் போது இதர வகுப்புகளில் அதே தலைப்பில் உள்ள பாடங்களை படிக்கும்போது நமக்கு அது குறித்து விரிவான, முழுமையான அறிவு ஏற்படும்.
       பாடப்பகுதிகளை படித்த பிறகு அவற்றில் உள்ள முக்கிய கருத்துகளை நீங்களே 1 மதிப்பெண் வினாவாக மாற்றி வினா மற்றும் விடைகளை ஒரு குறிப்பேட்டில் எழுதி வரவும். இக்குறிப்புகள் அடுத்த முறை நீங்கள் மீள்பயிற்சி செய்ய உதவும்.

    மாவட்ட ஆட்சியர் தேர்வுக்கு தயாராகும் போது அதற்கான பாடதிட்டம் மட்டுமே தரப்பட்டு இருக்கும். அவை குறித்து பல்வேறு புத்தகங்களை நாம் தான் தேடி படிக்க வேண்டி இருக்கும். ஆனால் நமது ஆசிரியர் தகுதி தேர்வை பொறுத்தவரை 1 முதல் 12 ஆம் வரையுள்ள பாடபுத்தகங்களில் இருந்தே 80 சதவீதம் கேள்விகள் கேட்கப்படுகிறது. எனவே அவற்றை ஆழ்ந்து படித்தாலே போதுமானது.

     ஒவ்வொரு பாடப்பகுதியையும் படித்தமுடித்த பிறகு நண்பர்களுடன் கலந்துரையாடுங்கள். மற்றவரை கேள்வி கேட்க செய்து அதற்கு பதிலளிக்க முற்படுங்கள். இது உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். மேலும் எந்த வகையில் நீங்கள் பாடப்பகுதியை ஆழந்து படிக்க வேண்டும் என்ற அறிவையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தும்.

    ஒரு பாடப்பகுதியை முழுமையாக பயின்ற பிறகு தான் அது குறித்த மீள்பயிற்சிக்காக மட்டுமே நீங்கள் ஆசிரியர் தகுதி தேர்வுக்காக இணையத்திலும், புத்தக வடிவிலும் உள்ள பல்வேறு பயிற்சி புத்தகங்களை நாட வேண்டும். முழுமையாக பயிற்சி புத்தகங்களை மட்டுமே நம்பியிருக்க வேண்டாம்.

        இறுதியாக எவ்வாறு படிப்பது என ஒரு மாதிரி நேர வழிகாட்டியை (Model Schedule) அமைத்துக்கொள்வோம்.

    தோராயமாக ஜூன் மாதத்தில் அடுத்த தகுதி தேர்வு நடப்பதாக வைத்து கொள்வோம்.

         அப்படியெனில் ஜனவரி முதல் மே மாதம் வரை இடையில் 5 மாதங்கள் மட்டுமே உள்ளன. தாள் 2 க்கு தயார் ஆவதெனில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையுள்ள 15 பாட புத்தகங்களையும் நீங்கள் முதல் 3 மாதத்திற்குள்ளாகவே படித்து முடிக்க வேண்டும். அடுத்த நான்காவது மாதம் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாட புத்தகங்கள் மற்றும் DTEd, BEd, MEd  பாட புத்தகங்களை படிக்க வேண்டும். இறுதியாக உள்ள 5 ஆவது மாதத்தில் அனைத்து புத்தகங்களையும் மறுமுறை படிக்கும் போது நீங்கள் எடுத்த குறிப்புகளை மீள் பார்வை செய்யவும், பயிற்சி புத்தகங்கள் மற்றும் Study Materials இல் உள்ள முக்கிய வினாக்களையும் மீள் பார்வை செய்ய பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

        சரி முதல் 3 மாத்தில் எவ்வாறு 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையுள்ள பாடங்களை படிப்பது?

     ஒரு தலைப்பு குறித்து 6 ஆம் வகுப்பு புத்தகத்தில் உள்ள கருத்துகளை 15 நிமிடமும், அடுத்தடுத்த 7 முதல் 10 வகுப்பு வரையுள்ள புத்தகங்களை படிக்க நேர விகிதத்தை அதிகரித்துக்கொண்டே செல்லலாம்.

        90 நாட்கள் / 15 புத்தகங்கள் = 6 நாட்கள். சிறிய வகுப்புகளில் உள்ள புத்தகங்களை நீங்கள் வேகமாக படித்து முடித்தால் அந்த நாட்களை 9 மற்றும் 10 ஆம் வகுப்பில் உள்ள புத்தகங்களை ஆழந்து படிக்க பயன்படுத்தி கொள்ள முடியும். இதேபோன்று அடுத்தடுத்த வகுப்பு புத்தகங்களை படிப்பதற்கும் தேவையான நாட்களை முதலிலேயே திட்டமிட்டு அதற்கேற்ப படியுங்கள்.

        இறுதியாக தன்னம்பிக்கை அவசியம். 12 ஆம் வகுப்பு வரை படித்து மேற்கொண்டு ஆசிரியர் பயிற்சி 2 வருடமோ அல்லது கல்லூரியில் 3 வருடம் மற்றும் கல்வியியல் பட்டம் 1 வருடமோ பயின்ற பிறகும் இவர்களுக்கு 8 ஆம் வகுப்பு வரையுள்ள கேள்விகளுக்கே விடை தெரியவில்லை என்ற Media மற்றும் பொதுமக்களின் ஏளனத்தை மனதில் ஏற்றி வெறி கொண்டு படித்தால் வெற்றி நிச்சயம்!

        நேர மேலாண்மை மிக முக்கியம். இப்போதிருந்தே அடுத்த தகுதித்தேர்வுக்கு தயார் ஆகுங்கள். குறைந்தபட்ச தகுதி 90 மதிப்பெண் நமக்கு அவசியம் இல்லை. 120 மதிப்பெண்ணுக்கு மேல் பெறுவதே குறைந்தபட்ச இலக்கு என கருதி படித்தால் அனைவரும் வெற்றி பெறலாம்.

TNTET 2019 - தயாராவது எப்படி? TNTET Exam Success Tips



தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு
டி.என்.டி.இ.டி (TNTET -Tamil Nadu Teachers Eligibility Test) என்பது இரண்டு தாள்களைக் கொண்டது. 3மணிநேரம் கொண்ட இந்தத் தேர்வுகளை ஆசிரியர் தேர்வுவாரியமானடி.ஆர்.பி (TRB-Teachers Recruitment Board)நடத்துகிறது. இத்தேர்வு, இரண்டு தாள்களாக நடத்தப்படும்.
தாள்-I... 1-5 வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கானது.டி.டி.எட்(D.T.Ed) எனப்படும் ஆசிரியர் பட்டயத்தேர்வில் தேர்ச்சிபெற்றவர்கள்,இந்தத் தேர்வு எழுதுவார்கள். குழந்தை மேம்பாடும்கற்பித்தலும், தமிழ்,ஆங்கிலம், கணிதம், சூழ்நிலையியல் என மொத்தம் 5பாடங்களில்இருந்து தலா 30 மதிப்பெண்கள் வீதம் 150மதிப்பெண்களுக்கான தாள்இது.
தாள்-II... 6-8 வகுப்பு வரை பயிற்றுவிக்கும்ஆசிரியர்களுக்கானதகுதித்தேர்வு. கலை அல்லது அறிவியல்பட்டப்படிப்போடு பி.எட்கல்வியியல் படிப்பை முடித்தவர்கள் இந்தத்தேர்வை எழுதலாம்.அறிவியல் பிரிவை சேர்ந்தவர்களுக்கு குழந்தைமேம்பாடும் கற்பித்தல்முறைகளும், தமிழ், ஆங்கிலம் இவற்றில் தலா 30மதிப்பெண்களோடு கணிதம், அறிவியல் இவற்றை உள்ளடக்கி 60மதிப்பெண்களுமாக,மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு வினாத்தாள்அமைந்திருக்கும். கலைப்பிரிவு ஆசிரிய பட்டதாரிகளுக்கு இதேகேள்வித்தாளில் கணிதம்அறிவியல் வினாக்களுக்கு பதிலாக சமூகஅறிவியலில் இருந்து 60வினாக்கள் அமைந்திருக்கும்.
ஆக, தாள்- I என்பது இடைநிலை ஆசிரியர்களுக்கானது, தாள்- IIஎன்பதுபட்டதாரி ஆசிரியர்களுக்கானது. எனினும், ஆசிரியப்பட்டயம்தகுதியோடு... கலை அறிவியல் பட்டம் மற்றும் பி.எட் முடித்துபட்டதாரிஆசிரிய தகுதியையும் உயர்த்திக் கொண்டவர்கள் இந்தஇரண்டுதாள்களையும் எழுதலாம். இந்த வகையில் இடைநிலை, பட்டதாரிஎனஇரண்டு பிரிவுகளில் தங்கள் தகுதியை உறுதிபடுத்திக் கொள்ளலாம்.
Thanks to-Mr.Alla Baksh

ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) - அறிந்ததும் அறியாததும்

TET தேர்வு என்பது அனைவருக்கும் கட்டாய இலவச கல்வி உரிமைச்சட்டம் 2009 ன் படி அறிமுகப்படுத்தப்பட்டது. மத்தியிலும் (CTET) வேறு சில மாநிலங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகே தமிழகத்தில் TET தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. தகுதியும் திறமையும் வாய்ந்த ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
வினாக்கள் கடினமாக இருக்கிறது என்று புலம்புவதை விட அந்த தரத்தில் உங்களுடைய தயாரிப்பு முறைகள் மற்றும் பயிற்சி முறைகள் இருக்கவேண்டும். கேள்வி பதில்களை  மனப்பாடம் செய்து மட்டும் வெற்றி பெற முடியாது. பாடங்களை புரிந்து கொள்ளவேண்டும். அப்போதுதான் பல கடினமான கேள்விகளை புரிந்து கொண்டு விடையளிக்க முடியும்.மேலும் SET, NET தேர்வு போல  இத்தேர்வும் ஒரு தகுதித்தேர்வு தான்.  இதில் வெற்றிபெற்றால் நிச்சயம் பணி கிடைக்கும் என்று நினைக்கக்கூடாது. அதன்பிறகு தங்களுடைய 10, 12ம் வகுப்பு, பட்டபடிப்பு, D.T.Ed., (or) B.Ed.,  ஆகியவற்றில் உங்களது மதிப்பெண் மற்றும் TET தேர்வில் நீங்கள் பெறும் மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் கிடைக்கும் கட் ஆப் மதிப்பெண் அடிப்படையிலேயே பணிக்கு தேர்வு செய்யப்படுவீர்கள்.இனிவரும் தேர்வுகளில் தேவையை விட வெற்றி பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.  அந்நிலையில் அதிக கட்ஆப் மதிப்பெண் வைத்திருப்போர்களுக்கு மட்டும் பணி கிடைக்கும். எந்த பாடத்திற்கு எவ்வளவு ஆசிரியர்கள் தேவையென அறிவிக்கப்படுகிறதோ, அவ்வளவு ஆசிரியர்கள் மட்டுமே பணியமர்த்தப்படுவர்.குறிப்பாக கம்யூட்டர் சயின்ஸ் போன்ற பாடங்களில், வெற்றிபெற்றாலும் அப்பாடத்தில் காலிபணியிடங்கள் அறிவிக்கப்படும் போதுதான் பணி கிடைக்கும்.தேர்வில் வெற்றிபெற்றால் உடனே வேலை உறுதி என்று எண்ணி, பிறகு மனம் உடையக்கூடாது என்பதற்காகவே இந்த தகவல். தேர்வில் வெற்றிபெற்றும் கட்ஆப் மதிப்பெண் குறைவாக பெற்றதால் வேலை கிடைக்காதவர்கள் அடுத்தமுறை மீண்டும் தேர்வெழுதி தங்களுடைய மதிப்பெண்களை அதிகரித்துக்கொள்ளலாம். எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வெழுதி மதிப்பெண்களை அதிகரித்துக்கொள்ளலாம். முடிந்தவரையில் TET தேர்வில் அதிக மதிப்பெண்கள் (அதாவது 135) பெற்றுவிட்டால் வேலை கிடைப்பதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும்.(அதாவது கட்ஆப் மதிப்பெண்களை அதிகரித்துக்கொள்ளலாம்).இத்தேர்வில் வெற்றிபெற்றால் அரசுப்பள்ளிக்கு மட்டுமின்றி அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் அரசு ஊதியத்துடன் பணி கிடைக்கும். தனியார் பள்ளிகளிலும் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். தற்போது TET தேர்வில் வெற்றிபெற்றோருக்கான தேவை அதிகமாகவே உள்ளது என்பதை மனதில் கொண்டு தேர்வுக்கு மனஉறுதியுடன் தயார்செய்தால் உங்களுக்கு வெற்றி நிச்சயம்.இத்தேர்வைப்பற்றிய முறையான பார்வை, சரியான வியூகம்,கடின உழைப்பு ஆகியவை இருந்தால் இத்தேர்வில் வெற்றிபெறுவது என்பது ஒன்றும் சவாலான செயல் அல்ல.
 

Most Reading

Tags

Sidebar One