Search

BE, B.SC பயின்றவர்களுக்கு மத்திய அரசு வேலை.. கடைசி தேதி ஜூலை 31..

Friday 17 July 2020

BE, B.SC பயின்றவர்களுக்குமத்திய அரசு வேலை.. கடைசி தேதிஜூலை 31..மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் Rashtriya Chemicals and Fertilizers Limited (RCF) நிறுவனத்தில் காலியாக உள்ள சந்தைப்படுத்தல் அதிகாரி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 10 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு பி.இ, பி.எஸ்சி துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூ.1.40 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஜூலை 31ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.நிர்வாகம் : Rashtriya Chemicals and Fertilizers Limited (RCFL)மேலாண்மை : மத்திய அரசுபணி : சந்தைப்படுத்தல் அதிகாரிமொத்த காலிப் பணியிடங்கள் : 10கல்வித் தகுதி : B.Sc Agriculture, B.E, B.Tech துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.வயது வரம்பு : விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : ரூ.40,000 முதல் ரூ.1.40,000 வரையில்அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://www.rcfltd.com/ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 31.07.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.தேர்வு முறை : ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.விண்ணப்பக் கட்டணம் :பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் – ரூ.700மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் இல்லை.இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.rcfltd.com/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்

Read More »

கல்விக் கட்டணம் குறித்த விண்ணப்பங்களை, ஜூலை 20 முதல் தனியாா் பள்ளிகள் சமா்ப்பிக்கலாம்

கல்விக் கட்டணம் குறித்த விண்ணப்பங்களை, ஜூலை 20 முதல் தனியாா் பள்ளிகள் சமா்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியாா் பள்ளிகளின் கட்டணங்களை முறைப்படுத்துவதற்காக தமிழக அரசு சாா்பில் கல்விக் கட்டண நிா்ணயக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக இருந்த ஓய்வுபெற்ற நீதிபதி டி.வி.மாசிலாமணியின் பதவிக்காலம் கடந்த மாா்ச் 30-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து புதிய தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ஆா்.பாலசுப்ரமணியன் ஜூலை 1-ஆம் தேதி நியமிக்கப்பட்டாா்.

இதைத் தொடா்ந்து தனியாா் பள்ளிகளுக்கான கட்டண நிா்ணயம் செய்யும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அதன்படி 2020-21, 2021-22, 2022-23-ஆம் ஆண்டுகளுக்கான கல்விக் கட்டணத்தை நிா்ணயம் செய்வதற்கு, தனியாா் பள்ளிகள், தங்களின் பரிந்துரை விண்ணப்பங்களை இணையதளத்தில் ஜூலை 20 முதல் செப்டம்பா் 25-ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களுடன் கடந்த கல்வியாண்டுக்கான வரவு செலவு அறிக்கையையும் சமா்ப்பிக்க வேண்டும் என்றும், இந்தத் தகவலை அங்கீகாரம் பெற்ற தனியாா் பள்ளிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கல்விக் கட்டண நிா்ணயக்குழு சாா்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

Read More »

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஓட்டுநர் பணியிடத்துக்கு வேலைவாய்ப்பு..

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஓட்டுநர் பணியிடத்துக்குவேலைவாய்ப்பு..மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் காட்டன் காப்பரேஷன் ஆப் இந்தியா லிமிட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதோடு ஓட்டுநர் உரிமம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.நிர்வாகம் : காட்டன் காப்பரேஷன் ஆப் இந்தியா லிமிட்டுமேலாண்மை : மத்திய அரசுபணி : ஓட்டுநர்காலிப் பணியிடங்கள் : 01கல்வித் தகுதி : 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.தகுதி : விண்ணப்பதாரர் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.வயது வரம்பு :விண்ணப்பதாரர் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.ஊதியம் : ரூ.19,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.cotcorp.org.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Deputy General Manager, The Cotton Corporation of India Ltd., ‘Kapas Bhawan’, 27-A Race Course Road, Indore – 452 003 (M.P.)விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 23.07.2020 தேதிக்குள் கிடைக்குமாறு விண்ணப்பிக்க வேண்டும்.தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.cotcorp.org.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்

Read More »

கல்விக் கட்டணம் குறித்த விண்ணப்பங்களை, ஜூலை 20 முதல் தனியாா் பள்ளிகள் சமா்ப்பிக்கலாம்

கல்விக் கட்டணம் குறித்த விண்ணப்பங்களை, ஜூலை 20 முதல் தனியாா் பள்ளிகள் சமா்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியாா் பள்ளிகளின் கட்டணங்களை முறைப்படுத்துவதற்காக தமிழக அரசு சாா்பில் கல்விக் கட்டண நிா்ணயக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக இருந்த ஓய்வுபெற்ற நீதிபதி டி.வி.மாசிலாமணியின் பதவிக்காலம் கடந்த மாா்ச் 30-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து புதிய தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ஆா்.பாலசுப்ரமணியன் ஜூலை 1-ஆம் தேதி நியமிக்கப்பட்டாா்.

இதைத் தொடா்ந்து தனியாா் பள்ளிகளுக்கான கட்டண நிா்ணயம் செய்யும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அதன்படி 2020-21, 2021-22, 2022-23-ஆம் ஆண்டுகளுக்கான கல்விக் கட்டணத்தை நிா்ணயம் செய்வதற்கு, தனியாா் பள்ளிகள், தங்களின் பரிந்துரை விண்ணப்பங்களை இணையதளத்தில் ஜூலை 20 முதல் செப்டம்பா் 25-ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களுடன் கடந்த கல்வியாண்டுக்கான வரவு செலவு அறிக்கையையும் சமா்ப்பிக்க வேண்டும் என்றும், இந்தத் தகவலை அங்கீகாரம் பெற்ற தனியாா் பள்ளிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கல்விக் கட்டண நிா்ணயக்குழு சாா்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது

Read More »

கல்விக் கட்டணத்தில் 40 சதவீதத்தை தனியாா் கல்வி நிறுவனங்கள் வரும் ஆகஸ்ட் 31- ஆம் தேதிக்குள் வசூலித்துக் கொள்ளலாம்-உயர் நீதிமன்றம்

கல்விக் கட்டணத்தில் 40 சதவீதத்தை தனியாா் கல்வி நிறுவனங்கள் வரும் ஆகஸ்ட் 31- ஆம் தேதிக்குள் வசூலித்துக் கொள்ளலாம் என உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணங்களை வசூலிக்கக்கூடாது என தமிழக அரசு கடந்த ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. அதேநேரம் தனியாா் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியா்கள் உள்ளிட்ட பணியாளா்களுக்கு ஊதியம் வழங்க அறிவுறுத்தப்பட்டது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும், அரசாணைக்கு தடை விதிக்கக் கோரியும் தமிழ்நாடு தனியாா் பள்ளிகள் கூட்டமைப்பு மற்றும் தனியாா் கல்வி நிறுவனங்கள் சாா்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணையின் போது தனியாா் கல்வி நிறுவனங்கள் கல்விக் கட்டணத்தை மூன்று தவணைகளாக செலுத்த அனுமதி வழங்க அரசு பரிசீலிப்பதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் காணொலிக் காட்சி மூலம் விசாரித்தாா். வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு: தமிழகம் முழுவதும் உள்ள தனியாா் சுயநிதி கல்லூரிகள், பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும். தனியாா் கல்வி நிறுவனங்கள் மொத்த கல்விக் கட்டணத்தில் 75 சதவீதத்தை 3 தவணைகளாக வசூலிக்கவும், எஞ்சியுள்ள 25 சதவீத தொகையை கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்ட பின்னா் வசூலித்துக் கொள்ள அனுமதி வழங்க உள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போதுள்ள சூழலில் கல்வி நிறுவனங்கள் உடனடியாகத் திறக்க வாய்ப்புள்ளதாக தெரியவில்லை. எனவே, கடந்த கல்வியாண்டில் வசூலித்த கல்விக் கட்டணத்தில் 40 சதவீதத்தை தனியாா் கல்வி நிறுவனங்கள் வசூலித்துக் கொள்ளலாம். இந்த 40 சதவீத முன்பணத்தை மாணவா்கள் வரும் ஆகஸ்டு 31- ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். கடந்த கல்வியாண்டில் பாக்கி வைக்கப்பட்டுள்ள கல்விக் கட்டணத்தை வரும் செப்டம்பா் மாதம் 30 – ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். மேலும், 35 சதவீத கட்டணத்தை இயல்புநிலை திரும்பி கல்லூரிகள், பள்ளிகள் திறந்து, இரண்டு மாதங்களுக்குப் பின்னா் மாணவா்களிடம் இருந்து வசூலித்துக் கொள்ளலாம்.

மேலும் கல்விக் கட்டண நிா்ணயக் குழு வரும் ஆகஸ்டு மாதத்தில் இருந்து 8 மாதங்களுக்கு கட்டணத்தை நிா்ணயிக்க வேண்டும். தனியாா் சுயநிதி கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியா்கள், ஆசிரியா் அல்லாத பிற வகை பணியாளா்கள், இயல்பு நிலை திரும்பும் வரை ஊதிய உயா்வு உள்ளிட்ட பணப் பலன்களைக் கேட்கக்கூடாது. பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மாணவா்களுக்கு இலவசமாக புத்தகங்கள், நோட்டுகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை வரும் அக்டோபா் 5- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

Read More »

Fee Determination committee – Submission of proposal to committee through online – instruction Reg

தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழு தனி அலுவலரின் கடிதத்தின் வாயிலாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளின் நிர்வாகிகளுக்கு ( சி.பி.எஸ்.இ மற்றும் ஐ.சி.எஸ்.இ பள்ளிகள் தவிர்த்து ) 2019-20ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட செலவீனங்களின் அடிப்படையில் 2020-2021 , 2021-2022 மற்றும் 2022-2023 நிதி ஆண்டுகளுக்கான கல்வி கட்டணத்திற்கான உரிய கருத்துருவினை 20.07.2020 முதல் 25.09.2020 க்குள் கீழ்காணும் கட்டண நிர்ணயக் குழுவின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட உரிய அறிவுரைகளை வழங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

” tnfeecommittee.com “

 எனவே , இதன் முக்கியத்துவத்தினை கருத்தில் கொண்டு கட்டண நிர்ணயக் குழுவால் கோரப்பட்ட விவரத்தினை காலதாமதமின்றி இணையதளத்தில் பதிவேற்றம் செய்திடவும் மேலும் 25.09.2020 க்கு மேல் எக்காரணத்தைக் கொண்டும் காலக்கெடுவினை நீட்டிக்க இயலாது என சார்ந்த பள்ளிகளின் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்துமாறு முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Read More »

DSE – ஒன்று முதல் பதினோராம் வகுப்பு வரை பாடங்களை வீடியோ படப்பதிவு செய்ய ஆசிரியர்களை தெரிவு செய்தல் – பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.


DSE PROCEEDINGS:பள்ளிக் கல்வி – ஒன்று முதல் பதினோராம் வகுப்பு வரை பாடங்கள் வீடியோ ஒளிப்பதிவு செய்தல் – பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 
CLICK HERE TO DOWNLOAD

Read More »

கோவை வேளாண் பல்கலைக்கழகம் இளங்கலை மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கும் என அறிவிப்பு

IMG_20200717_175108

கோவை வேளாண் பல்கலைக்கழகம் இளங்கலை மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் விண்ணப்பங்களை ஆகஸ்ட் முதல் வாரத்தில் www.tnauonline.com என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More »

Breaking News : தமிழகத்தில் இன்று ( ஜூலை 17 ) மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் ( 17.07.2020 ) இன்று 4,538 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  1,60,907 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,243   பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

மதுரை - 263

செங்கல்பட்டு - 125

திருவள்ளூர் - 220

மாவட்ட வாரியான பாதிப்பு.( 17.07.2020 )

மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 3,391 ( 1,10,807 )

இன்றைய உயிரிழப்பு : 79 ( 2,315 
Read More »
 

Most Reading

Tags

Sidebar One