Search

HRA SLAP - Single Page For All Teachers For 01/06/2020 Annual Increment

Friday 26 June 2020


Read More »

+2 பொதுத் தேர்விற்கு வருகை புரியாத மாணவர்கள் - காரணம் என்ன - விளக்கம் தர உத்தரவு

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
24/03/2020 அன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாமாண்டு ( வேதியியல், கணக்குப் பதிவியல் மற்றும் புவியியல்) பொதுத் தேர்விற்கு வருகை புரியாத மாணவர்களின் விவரங்கள் கீழ்க்காணும்  Link-ஐ பயன்படுத்தி அன்று  உள்ளீடு செய்யுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
 
குறிப்பு
தேர்வு எழுதாததற்கான காரணங்கள் கீழ்க்காணும் காரணங்களாக இருந்தால் அக்காரணங்களைஉள்ளீடுசெய்யவும்
1. மாற்றுச்சான்றிதழ் பெற்றுபள்ளிக்கு வருகைபுரியவில்லை
2. மாற்றுச் சான்றிதழ் பெறப்படாமல் பள்ளிக் தொடர்ந்த வருகை புரியாமை (நீண்ட விடுப்பு)
3. சார்ந்த மாணவனின் இறப்பு
4. கொரான தொற்றுநோய் காரணமாக போக்குவரத்து பயன்படுத்த முடியாமை
 
 
Read More »

பிளஸ் 2 மாணவருக்கான ஊக்கத்தொகை தாமதம்; வங்கி கணக்கு விபரம் சேகரிப்பில் தொய்வு

வங்கி கணக்கு விபரம் சேகரிப்பு, பதிவேற்றத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் 2019-20 கல்வி ஆண்டு பிளஸ் 2 மாணவர்களுக்கான ஊக்கத்தொகை பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இடைநிற்றலை தவிர்க்க பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி பிளஸ் 2 மாணவர்களுக்கு ரூ.2 ஆயிரம், பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.ஆயிரத்து 500 வீதம் வங்கி கணக்கில் பணம் வழங்கப்படும். 2019-20ல் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு இன்னும் ஊக்கத்தொகை கிடைக்கவில்லை.
ஊரடங்கு காலத்தில் உயர்கல்விக்கான முயற்சிகளை எடுக்க நிதியின்றி மாணவர்கள் தவிக்கின்றனர்.கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 5 லட்சத்து 35 ஆயிரத்து 82 ஆயிரம் மாணவர்கள் ஊக்கத்தொகை பெற தகுதியானவர்கள். இதில் 1 லட்சத்து 69 ஆயிரத்து 108 பேரின் வங்கி கணக்கு மட்டும் 'எமிஸ்'ல் ஏற்றியுள்ளனர். 3 லட்சத்து 65 ஆயிரத்து 974 பேரின் வங்கி கணக்குகள் பதிவேற்றும் பணி நடக்கிறது. 2019-20 ஆண்டுக்கான ஊக்கத்தொகை விரைவில் வழங்கப்படும்' என்றார்.

Read More »

CBSE -10 & 12 பொதுத்தேர்வு ரத்து - தேர்ச்சி அடையச் செய்வதற்கான வழிமுறைகள் வெளியீடு


10 மற்றும் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மாணவர்களை தேர்ச்சி அடையச் செய்வதற்கான வழிமுறைகளை சி.பி.எஸ்.இ வெளியிட்டுள்ளது.

10 & 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மாணவர்களுக்கு நடத்தி முடிக்கப்பட்ட பொதுத்தேர்வு பாடங்களின் அடிப்படையில் வழங்கப்படும்.

12ம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனோ தாக்கம் குறைந்த பிறகு தங்கள் மதிப்பெண்களை உயர்த்துவதற்காக சிறப்பு தேர்வு ஒன்று நடத்தப்படும்.ஜூலை 1 முதல் 15 வரை நடைபெறுவதாக இருந்த தேர்வுகளுக்கு இந்த சிறப்பு தேர்வு நடைபெறும். விரும்பும் மாணவர்கள் சிறப்பு தேர்வில் பங்கேற்கலாம்.

10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண்,

3 தேர்வுகளுக்கு அதிகமான பாடங்களை எழுதிய மாணவர்களுக்கு எந்த 3 பாடங்களில் பெற்ற மதிப்பெண் அதிகமோ அதன் அடிப்படையில் பொதுத்தேர்வு மதிப்பெண் கணக்கிடப்படும்.

பொதுத்தேர்வில் 3 பாடங்களை மட்டும் எழுதிய மாணவர்களுக்கான மதிப்பெண் மூன்றில் எந்த 2 பாடங்களில் அதிக மதிப்பெண் உள்ளதோ அதன் அடிப்படையில் கணக்கிடப்படும்.

டெல்லியில் பொதுத்தேர்வு ஒன்றிரண்டு பாடங்களுக்கு மட்டும் நடத்தப்பட்டதால் அந்த மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மதிப்பெண் அவர்கள் பெற்ற செய்முறை தேர்வு மதிப்பெண்,

உள்மதிப்பீட்டு மதிப்பெண், ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்படும்.

மேலும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு நடைபெறாது என்றும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.
Read More »

அக்டோபர் வரை பள்ளிகள் திறப்பில்லை: தனியார் பள்ளி நிர்வாகிகள் கருத்து


'பள்ளிகளை அக்டோபர் வரை திறக்க வாய்ப்பு இல்லை' என தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையை சேர்ந்த ராம்கோ நிறுவனத்தின் உறுப்பு நிறுவனமான 'பேரன்ட் சர்க்கிள்' நிறுவனம் பள்ளி முதல்வர்களை ஒருங்கிணைத்து ஆன்லைன் வாயிலாக ஆலோசனை மற்றும் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தியது. இதில் சென்னை, மும்பை மற்றும் டில்லியில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் பங்கேற்று பேசினர்.

அவர்களின் கருத்துக்கள் வருமாறு:

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில் பள்ளிகளை தற்போதுதிறக்க முடியாத சூழல் உள்ளது. தென்மேற்கு பருவமழையால் தொற்று பரவல் அதிகரிக்கும்.வகுப்புகளில் தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது சவாலான பணி. குறிப்பாக 'பிளே ஸ்கூல், ப்ரீ ஸ்கூல், பிரைமரி ஸ்கூல்' என இரண்டரை வயது முதல் 10 வயது வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்த முடியாது.

பாடதிட்டங்கள் பாடங்களின் அளவுகள் குறைக்கப்பட வேண்டும். கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் ஏற்படுத்த வேண்டும்.கொரோனாவுக்கு பிந்தைய நிலைக்கான விதிகள் வகுக்கப்பட வேண்டும். கல்வி ஆண்டின் காலத்தை மாற்றி அமைக்க வேண்டும். இதுபோன்ற காரணங்களால் அக்டோபர் வரை பள்ளிகளை திறப்பது சாத்தியம் இல்லை.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்
Read More »

தருமபுரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தலைமை ஆசிரியர்கள் வீட்டு வாடகைப்படியினை வகை 4 ல் உள்ள வரையறுக்கப்படாத இடங்களிலுள்ள பள்ளிகளுக்கும் வகை 3 ன் வட்டத்திற்குட்பட்ட தலைமையிடமாகக் கொண்டு வீட்டு வாடகைப்படியினை தவறுதலாக கணக்கிட்டு பட்டியல் சமர்ப்பித்து காசாக்கியுள்ளனர் எனவும் , மேலும் கருவூல அலுவலகத்தால் பட்டியல்கள் சரிபார்க்கப்பட்டதில் குறிப்பாக கடத்தூர் , பாப்பாரப்பட்டி , மாரண்டஅள்ளி மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள தலைமையாசிரியர்கள் வகை 4 ல் உள்ள வரையறுக்கப்படாத தேதிகளில் வழங்கப்பட வேண்டிய வீட்டு வாடகைப்படிக்கு பதிலாக வகை 3 ல் உள்ள வட்ட தலைமையிடத்திற்குண்டான வீட்டு வாடகைப் படியினை அனுமதித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேற்கண்டவாறு அரசாணைக்கு மாறாக வகை - 4 ற்கு பதிலாக வகை 3 ன் படி வீட்டு வாடகைப்படியினை தவறுதலாக பெற்று வழங்கியுள்ள கீழ்கண்ட பள்ளி தலைமையாசிரியர்கள் அனைவரும் இதன் மீது தனிக்கவனம் செலுத்தி தங்கள் பள்ளியில் உள்ள பணியாளர்களுக்கு ( ஆசிரியர்கள் உட்பட ) 01.10.2017 முதல் மிகையாக பெற்று வழங்கப்பட்ட வீட்டு வாடகைப்படியினை பிடித்தம் செய்து அரசுக்கணக்கில் செலுத்தி அதற்கான விவரத்தினை தவறுதலாக வீட்டு வாடகைப்படி எதன் அடிப்படையில் பெற்று வழங்கப்பட்டது என்பதற்கான விளக்கம் மற்றம் செலுத்து சீட்டு நகலுடன் இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்க தெரிவிக்கப்படுகிறது.மேலும் மேற்கண்டவாறு அரசாணைக்கு மாறாக வகை - 4 ற்கு பதிலாக வகை 3 ன் படி வீட்டு வாடகைப்படியினை தவறுதலாக வேறு பள்ளி தலைமையாசிரியர்கள் பெற்று வழங்கியிருப்பின் அவர்களும் மேற்கண்ட அறிவுரைகளின் படி மிகையாக வழங்கப்பட்ட வீட்டு வாடகைப்படியினை பிடித்தம் செய்து அரசுக்கணக்கில் செலுத்தி அதற்கான விவரத்தினை செலுத்து சீட்டு நகலுடன் இவ்வலுவலகத்திற்கும் சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலகத்திற்கும் சார்ந்த சார்நிலை கருவூல அலுவலருக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.



ஐ.எஃப்.எச்.ஆர்.எம்.எஸ் மூலம் பில்கள் வழங்கல், ஏற்கனவே கன்னியாகுமரி, அரியலூர், தேனி, கரூர் மற்றும் சேலம் போன்ற மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது, 2020 ஜூன் 1 முதல் கருவூலங்கள் மற்றும் கணக்குத் துறையால் ஈரோடு, திருநெல்வேலி,  திருவாரூர், மற்றும் மதுரை ஆகியவை எந்தவொரு பிழையும் இல்லாமல் மசோதாக்களை முன்வைக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.  மீதமுள்ள மாவட்டங்களுக்கான திட்டத்தை செயல்படுத்த, எந்தவொரு பிழையும் இல்லாமல் பில்களை வழங்கும் செயல்முறையை மென்மையாக்குவதற்கு சில ஆரம்ப பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.  எனவே அனைத்து சியோஸும் 29 -6- 2020 தேதிக்குள் கீழே பரிந்துரைக்கப்பட்ட வடிவமைப்பில் உள்ள விவரங்களை எஃப்சி மின்னஞ்சல் முகவரிக்கு சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகின்றன. இது மிகவும் அவசரமாக கருதப்படலாம்.

Read More »

பெரும்பாலான ஆசிரியர்கள் மிகையாக பெற்ற வீட்டு வாடகைப்படியினை திரும்ப செலுத்தி விளக்கம் அளிக்க முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவு.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தலைமை ஆசிரியர்கள் வீட்டு வாடகைப்படியினை வகை 4 ல் உள்ள வரையறுக்கப்படாத இடங்களிலுள்ள பள்ளிகளுக்கும் வகை 3 ன் வட்டத்திற்குட்பட்ட தலைமையிடமாகக் கொண்டு வீட்டு வாடகைப்படியினை தவறுதலாக கணக்கிட்டு பட்டியல் சமர்ப்பித்து காசாக்கியுள்ளனர் எனவும் , மேலும் கருவூல அலுவலகத்தால் பட்டியல்கள் சரிபார்க்கப்பட்டதில் குறிப்பாக கடத்தூர் , பாப்பாரப்பட்டி , மாரண்டஅள்ளி மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள தலைமையாசிரியர்கள் வகை 4 ல் உள்ள வரையறுக்கப்படாத தேதிகளில் வழங்கப்பட வேண்டிய வீட்டு வாடகைப்படிக்கு பதிலாக வகை 3 ல் உள்ள வட்ட தலைமையிடத்திற்குண்டான வீட்டு வாடகைப் படியினை அனுமதித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்டவாறு அரசாணைக்கு மாறாக வகை - 4 ற்கு பதிலாக வகை 3 ன் படி வீட்டு வாடகைப்படியினை தவறுதலாக பெற்று வழங்கியுள்ள கீழ்கண்ட பள்ளி தலைமையாசிரியர்கள் அனைவரும் இதன் மீது தனிக்கவனம் செலுத்தி தங்கள் பள்ளியில் உள்ள பணியாளர்களுக்கு ( ஆசிரியர்கள் உட்பட ) 01.10.2017 முதல் மிகையாக பெற்று வழங்கப்பட்ட வீட்டு வாடகைப்படியினை பிடித்தம் செய்து அரசுக்கணக்கில் செலுத்தி அதற்கான விவரத்தினை தவறுதலாக வீட்டு வாடகைப்படி எதன் அடிப்படையில் பெற்று வழங்கப்பட்டது என்பதற்கான விளக்கம் மற்றம் செலுத்து சீட்டு நகலுடன் இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்க தெரிவிக்கப்படுகிறது.

மேலும் மேற்கண்டவாறு அரசாணைக்கு மாறாக வகை - 4 ற்கு பதிலாக வகை 3 ன் படி வீட்டு வாடகைப்படியினை தவறுதலாக வேறு பள்ளி தலைமையாசிரியர்கள் பெற்று வழங்கியிருப்பின் அவர்களும் மேற்கண்ட அறிவுரைகளின் படி மிகையாக வழங்கப்பட்ட வீட்டு வாடகைப்படியினை பிடித்தம் செய்து அரசுக்கணக்கில் செலுத்தி அதற்கான விவரத்தினை செலுத்து சீட்டு நகலுடன் இவ்வலுவலகத்திற்கும் சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலகத்திற்கும் சார்ந்த சார்நிலை கருவூல அலுவலருக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
Read More »

அனைத்து மாவட்டங்களிலும் IFHRMS முறையில் ஊதியப் பட்டியல் தயார் செய்வது - இயக்குநர் உத்தரவு!!

PROCEEDINGS OF THE DIRECTOR OF SCHOOL EDUCATION,

PRESENT: Dr.S.Kannappan Re.No.001027/FC/ 2020, Dated: 25-06-2020 

 Sub: School Education ~ IFHRMS - Bills Presentation ~ Reg.

The presentation of bills through IFHRMS, had already implemented in districts such as Kanyakumari, Ariyalur, Theni, Karur, and Salem and from 1* June 2020 onwards it has been decided by ‘Treasuries and Accounts department to present the bills through IFHRMS in Erode, Thirunelveli, Thiruvarur, and Madurai for which all efforts are being taken to present the bills without any error. 



To implement the scheme for the remaining districts, certain preliminary works are required to be undertaken for smoothening the process of presenting bills without any error. Hence all CEOs are directed to submit the details on the prescribed format below to the FC email address within the date of 29 -6- 2020. This may be treated as most urgent. 

Encl: Format | Director To All Chief Educational Officers. T Commissioner of School Education, DPI Campus, Chennai’6.
Read More »

Breaking News : தமிழகத்தில் இன்று ( ஜூன் 26 ) மேலும் 3,645 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் ( 26.06.2020 ) இன்று 3,645 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  74,622ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,956   பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

மதுரை - 190

வேலூர் - 148

செங்கல்பட்டு - 232

திருவள்ளூர் - 177

மாவட்ட வாரியான பாதிப்பு.( 26.06.2020 )

மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள : 1358

இன்றைய உயிரிழப்பு : 46
Read More »

பாடத் திட்டங்களைக் குறைக்க அரசு அமைத்த குழுவில் தகுதிவாய்ந்த நபர்களைக் கொண்ட புதிய குழுவை அரசு அமைக்க கோரிக்கை!


கொரோனோ பரவல் காரணமாக இந்த ஆண்டு பள்ளிகள் திறப்பதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு பாடத்திட்டங்களைக் குறைப்பது குறித்த பரிந்துரைகளை அளிக்க 18 பேர் கொண்ட குழுவை அரசு அமைத்துள்ளது. இதில் 13 பேர் பள்ளிக்கல்வித் துறையைச் சார்ந்த அதிகாரிகள் மீதமுள்ள 5 பேரில் ஒருவர் UNICEF அமைப்பின் உறுப்பினர் மற்ற 4 பேர் கல்வியாளர்கள். இதில் கல்வியாளர்களாக இடம்பெற்றுள்ள நால்வரும் தனியார் சி.பி.எஸ்.இ மற்றும் மெட்ரிக் பள்ளிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசின் நடவடிக்கை குறித்து குழந்தைகள் செயற்பாட்டாளர் மற்றும்  கல்வியாளர் தேவநேயனிடம் கேட்டபோது, ஆசிரியர்களையும் கல்வியில் நிபுணத்துவம் பெற்றவர்களையும் கல்வியாளர்களாக நியமிக்காமல் மாணவர்களோடு தொடர்பில்லாத தனியார் பள்ளி நிர்வாகிகளை அரசு நியமித்துள்ளது” என்றார்.

மேலும், பாடத்திட்டங்களைக் குறைப்பது குறித்து தனியார் பள்ளி நிர்வாகிகளால் சரியான ஆலோசனைகளை முன்வைக்க இயலாது என்று கூறிய தேவநேயன், தமிழகத்தில் 60 சதவிகிதம் அரசுப் பள்ளிகள் உள்ள நிலையில், அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அல்லது பணியாற்றிய ஆசிரியர்கள் ஒருவர் கூட குழுவில் இல்லாதது எவ்வாறு சரியான அணுகுமுறையாக இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசு அமைத்துள்ள 18 பேர் கொண்ட குழுவில் தகுதியான கல்வியாளர்கள் இல்லாததால் குழுவை கலைத்துவிட்டு தகுதிவாய்ந்த நபர்களைக் கொண்ட புதிய குழுவை அரசு அமைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
Read More »

பள்ளிகளுக்கு புத்தகங்கள் கொடுத்தாச்சு , அடுத்து சீருடை ரெடி!


நாமக்கல் மாவட்டத்தில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இலவச சீருடை தைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், திருச்செங்கோடு ஆகிய இரண்டு மாவட்ட கல்வி அலுவலகமும், 15 வட்டார கல்வி அலுவலகமும் இயங்கி வருகின்றன.

மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து மதிய உணவு சாப்பிடும் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டிற்கு நான்கு பருவ இலவச சீருடை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பு கல்வியாண்டுக்கான சீருடைகளை மாணவ, மாணவிகளின் அளவிற்கேற்ப தைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.


 நாமக்கல் மாவட்டத்தில், மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கீழ் இயங்கும் வேலூர் மகளிர் ஆயத்த ஆடை தயாரிப்பாளர்கள் தொழில் கூட்டுறவு சங்கத்தின் மூலம் சீருடைகள் தைக்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில், இங்கு கோஆப்டெக்ஸ் மூலம் சீருடைக்கான துணிகள் வந்துள்ளது. இதனை இச்சங்கத்தில் உள்ள 1450 உறுப்பினர்களுக்கும் வெட்டி கொடுக்கப்படுகிறது. இவர்கள் அதனை பெற்று சென்று வீட்டில் வைத்து சீருடைகளை தைத்து சங்கத்தில் ஒப்படைத்து வருகின்றனர்.  தற்போது, முதல் பருவ சீருடை துணிகள் வந்துள்ளதால் அதனை மாவட்ட கல்வி அலுவலகம் மூலம் பெறப்பட்ட மாணவர்களின் அளவுகளின்படி சீருடை துணிகளை வெட்டி சங்க உறுப்பினர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர்.

இவர்கள் சுமார் 45 நாட்களில் தைத்து சங்கத்தினரிடம் ஒப்படைப்பர். வழக்கமாக பரமத்தி வேலூரில் உள்ள சங்க அலுவலகத்தில் உறுப்பினர்கள் தாங்கள் தைக்கும் துணிகளை பெற்றுச்செல்வார்கள்.  தற்போது, கொரோனா நோய் பரவல் காரணமாக, நாமக்கல் கோட்டை நகராட்சி துவக்கப்பள்ளியில் வைத்து சீருடை துணிகள் உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதேபோல், அந்தந்த வட்டார கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளிலேயே சீருடை தைக்கும் உறுப்பினர்களிடம் துணிகள் வழங்கப்படுகிறது.
Read More »

10-ஆம் வகுப்பு தனித்தேர்வர்களையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க கல்வித்துறை ஆலோசனை: அறிவிப்பு எப்போது?

பள்ளிகள் வாயிலாக 10ஆம் வகுப்பு தேர்வெழுத விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றவர்களாக அரசு அறிவித்த நிலையில் தனித்தேர்வர்களும் தேர்ச்சி என்ற அறிவிப்பை வெளியிட கல்வித்துறை ஆலோசனை செய்து வருகிறது.

10-ஆம் வகுப்பு தேர்வினை இந்த ஆண்டு தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்துள்ள  அனைவரையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை  ஆலோசித்து வருகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா பரவல்  காரணமாக  பள்ளிகளில் பயின்ற  9.75 லட்சம் 10ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றவர்களாக தமிழக அரசு அறிவித்தது. இந்த நிலையில் தனித்தேர்வர்களாக 10ஆம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்களையும் தேர்ச்சி அடையச் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
Read More »
 

Most Reading

Tags

Sidebar One