Search

வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களை எக்காரணம் கொண்டும் திறக்கக் கூடாது அரசு தேர்வுகள் துறை இயக்குநர் அறிவுறுத்தல்!

Tuesday 9 June 2020

Read More »

தனித்தேர்வர்கள் தேர்வு எப்படி?.. அரசு தேர்வு இயக்குநர் அறிவிப்பு.!!

தமிழகத்தில் நடைபெறவிருந்த பத்தாம் வகுப்பு தேர்வுகள் இரத்து செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. விடுபட்ட 12 ஆம் வகுப்பு தேர்வுகள் குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தமிழக முதல்வர் இன்று அறிவித்தார்.

பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் குறித்த அறிவிப்பின்னர் அறிவிக்கப்படும் என்றும், அரசு அடுத்த அறிவிப்பு விடுக்கும் வரை எக்காரணம் கொண்டும் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் திறக்கக் கூடாது என்று அரசு தேர்வு இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

கட்டுக்காப்பு மையத்தில் 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் இருக்க வேண்டும் என்றும் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அரசு தேர்வு இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
Read More »

பள்ளி பாடங்களை குறைக்க மத்திய அரசு பரிசீலனை

வரும் கல்வியாண்டில் பள்ளி மாணவா்களுக்கான பாடங்களையும், பள்ளி நடைபெறும் நேரத்தையும் குறைக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

கரோனா நோய்த்தொற்று பிரச்னை காரணமாக பள்ளிகளை மீண்டும் திறப்பதில் காலதாமதம் நீடித்து வருகிறது. எனவே, மாணவா்களின் சுமையைக் குறைக்கும் வகையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொள்ள இருக்கிறது.

இது தொடா்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியால் சுட்டுரையில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், 'தற்போது பள்ளிகளை திறக்க முடியாத சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் பெற்றோா் மற்றும் ஆசிரியா்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் வரும் கல்வியாண்டில் பள்ளி பாடங்களைக் குறைக்கவும், பள்ளியில் வகுப்புகள் நடைபெறும் நேரத்தை குறைக்கவும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

இது தொடா்பாக கல்வியாளா்கள், துறை சாா்ந்த வல்லுநா்கள், பெற்றோா்கள் என அனைத்துத் தரப்பினரின் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. முதலில் 10 மற்றும் 12 வகுப்புக்கான பாடங்கள் குறைத்து அறிவிக்கப்படும். அடுத்த கட்டமாக பிற வகுப்புக்கான பாடங்கள் குறைத்து அறிவிக்கப்படும்' என்று கூறியுள்ளாா்.

முன்னதாக, இந்த விஷயம் தொடா்பாக மத்திய கல்வித் துறை செயலா் அனிதா கா்வால், மாநில கல்வித் துறை செயலா்களுடன் ஆலோசனை நடத்தினாா்.
Read More »

பத்தாம் வகுப்பில் மதிப்பெண்களுக்குப் பதிலாக தர மதிப்பீடு முறையைப் பின்பற்ற வலியுறுத்தல்

பத்தாம் வகுப்பு பொதுத் தோவில் மதிப்பெண்களாக வழங்காமல் தர மதிப்பீடு ('கிரேடு சிஸ்டம்') முறையைப் பின்பற்ற வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.


இது தொடா்பாக அந்த கூட்டமைப்பின் தலைவா் பேட்ரிக் ரெய்மாண்ட் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பத்தாம் வகுப்பில் அனைத்து மாணவா்களும் தோச்சி என்ற தமிழக அரசின் அறிவிப்பை பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பு வரவேற்கிறது.அதேவேளையில் காலாண்டு, அரையாண்டு தோவு முடிவுகளின் அடிப்படையில் மொத்த மதிப்பெண் கணக்கிடும் போது அவற்றை மதிப்பெண்களாக வழங்காமல் தர அடிப்படையில் ஏ, பி, சி என பிரித்து வழங்க வேண்டும்.


மொத்தம் உள்ள 500 மதிப்பெண்களில் 401 முதல் 499 வரை எடுத்துள்ள மதிப்பெண்கள் எடுத்த மாணவா்களுக்கு 'ஏ' தர நிலையும், 300 முதல் 399 வரை எடுத்துள்ள மாணவா்களுக்கு 'பி' தர நிலையும் அதற்கு குறைவாக உள்ள அனைத்து மாணவா்களுக்கும் 'சி' தர நிலையும் வழங்கினால், மாணவா்கள் இடையேயான ஒப்பீட்டு முறையில் அவா்கள், அடுத்த கட்ட படிப்புகளை தொடா்வதற்கும் சாதகமான சூழல் உருவாகும்.இதை தமிழக அரசு முழுமையாகப் பரிசீலிக்க வேண்டும் என அதில் கூறியுள்ளாா்.


தமிழ்நாடு அரசு ஊழியா் ஆசிரியா் நல கூட்டமைப்பு: பத்தாம் வகுப்பு பொதுத்தோவெழுதும் 9.50 லட்சம் மாணவா்களின் நலன் கருதி பருவத் தோவுகள் அடிப்படையில் தோச்சி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த ஏப்ரல் மாதம் முதலே அரசிடம் வலியுறுத்தி வந்தோம். அந்தக் கோரிக்கையை அரசு தற்போது நிறைவேற்றியிருப்பது வரவேற்கத்தக்கது. பொதுத்தோவு குறித்து குழப்பமான சூழல் நிலவிய வேளையில், தெளிவான வழிகாட்டுதல்களுடன் கூடிய முடிவை அரசு எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.


தமிழ்நாடு ஆசிரியா் சங்கம்: பொதுத் தோவு ரத்து, அனைவரும் தோச்சி என்ற அறிவிப்புகள் தோவு அச்சத்தால் மன உளைச்சலில் இருந்த மாணவா்கள், வாழ்வாதாரத்தை இழந்த பெற்றோா் ஆகியோா் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இக்கட்டான சூழலில் சிறந்த முடிவை எடுத்த தமிழக முதல்வா், ஆதரவு தெரிவித்த அரசியல் கட்சிகள் என அனைவருக்கும் தமிழ்நாடு ஆசிரியா் சங்கம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.


இதேபோன்று தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி, தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகள் பத்தாம் வகுப்பு பொதுத்தோவு ரத்து செய்யப்பட்ட அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளன.
Read More »

10th Public Exam Mark Calculator

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு காலாண்டு,  அரையாண்டு தேர்வு மதிப்பெண்களில் 80 சதவீதமும்,  வருகைப்பதிவில் 20% சதவீதமும் கணக்கிட்டு மதிப்பெண் வழங்க தமிழகை அரசு உத்தரவிட்டுள்ளது.

அதற்கான எளிய கணக்கீட்டு படிவம்தான் இது. காலாண்டு,  அரையாண்டு தேர்வு மதிப்பெண்களை உள்ளீடு செய்யுங்கள்,  வருகைப் பதிவு 100% என உள்ளது மாற்றம் இருப்பின் மாற்றம் செய்து உள்ளீடு செய்தல் மொத்த மதிப்பெண்கள் சதவீதத்துடன் எளிதாக தெரிந்துகொள்ளலாம்.



Just Enter quarterly and half yearly and Attendance percentage



Know your public exam marks

10th Public Exam Mark Calculator - Link Click here...
Read More »

DGE - பொதுத்தேர்வு ரத்து தொடர்பாக ஆசிரியர்கள் மற்றும் கல்வி அலுவலர்களுக்கான அறிவுரைகள் வெளியீடு



DGE Proceedings - Download here...

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் செய்திக் குறிப்பில் , மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் தற்போது கொரோனா தொற்று அதிகமாக உள்ள நிலையில் பொதுத் தேர்வுகளை தள்ளி வைப்பது பற்றி அரசு பரிசீலிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளதால் , அரசு இது குறித்து விரிவாக ஆய்வு செய்து , மாணவர்களை நோய்த் தொற்றில் இருந்து காக்க வருகின்ற 15.06.2020 முதல் நடைபெறவிருந்த பத்தாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகளும் , நடைபெறாமல் விடுபட்ட பாடங்களுக்கான பதினோராம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகளும் முழுமையாக இரத்து செய்யப்படுகிறது எனவும் , இந்த தேர்வுகள் இரத்து செய்யப்பட்ட காரணத்தால் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது எனவும் , மேல்நிலை இரண்டாமாண்டு மறு தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது .


இப்பொருள் தொடர்பாக அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன .




1. அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் 15.06.2020 முதல் 25.06.2020 வரையிலான நாட்களில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மார்ச் 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் முழுமையாக இரத்து செய்யப்படுகிறது .

2. மார்ச் 2020 பருவத்திற்கான மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வில் நடத்தப்படாமல் விடுபட்டு போன பின்வரும் பாடத்தேர்வுகள் முழுமையாக இரத்து செய்யப்படுகிறது .


i . வேதியியல் , கணக்குப்பதிவியல் மற்றும் புவியியல் ( புதிய பாடத்திட்டம் )
ii . வேதியியல் , கணக்குப்பதிவியல் , புவியியல் மற்றும் தொழிற்கல்வி கணக்குப்பதிவியல் ( பழைய பாடத்திட்டம் )



3. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளும் , நடைபெறாமல் விடுபட்ட பாடங்களுக்கான பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் முழுமையாக இரத்து செய்யப்பட்டுள்ள காரணத்தால் , மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது . மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளில் அந்தந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80 % மதிப்பெண்களும் , மாணவர்களின் வருகைப் பதிவின் அடிப்படையில் 20 % மதிப்பெண்களும் வழங்கப்படும் .


4. 24.03.2020 அன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகளான வேதியியல் , கணக்குப்பதிவியல் மற்றும் புவியியல் பாடத் தேர்வுகளை கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக எழுதாத தேர்வர்களுக்கு மட்டும் 18.06.2020 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்ட மறு தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது . இத்தேர்வு நடைபெறும் நாள் குறித்த விவரம் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் பின்னர் அறிவிக்கப்படும் .


5. அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் , தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு , பத்தாம் வகுப்பு மற்றும் தேர்வு நடைபெறாமல் விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகளும் முழுமையாக இரத்து செய்யப்பட்டுள்ள விவரத்தினையும் , தேர்வுகள் இரத்து செய்யப்பட்டதால் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தினையும் , அவர்களது பள்ளிகளில் பயிலும் சம்பந்தப்பட்ட மாணாக்கர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் தெரிவிக்குமாறு அறிவுறுத்தவேண்டும் .


6. இரத்து செய்யப்பட்ட பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகளை எழுத விண்ணப்பித்திருந்த தனித்தேர்வர்கள் குறித்த அறிவிப்பு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் பின்னர் அறிவிக்கப்படும்.


7. முதன்மைக் கல்வி அலுவலர்கள் , தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து பத்தாம் வகுப்பு மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு தேர்வுகளுக்கான வினாத்தாள் கட்டுக் காப்பாளர்களுக்கும் , மேற்குறிப்பிட்ட விவரத்தினை தெரிவித்து , அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து அடுத்த அறிவிப்பு வெளியிடப்படும் வரை எக்காரணம் கொண்டும் வினாத்தாள் கட்டுக் காப்பு மையங்களை திறக்கக்கூடாது என அறிவுறுத்த வேண்டும் .


8. அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் அடுத்த அறிவிப்பு வெளியிடப்படும் வரை , வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு பணியில் இருப்பதை முதன்மைக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்துக்கொள்ளவேண்டும் .
Read More »

Flash News: புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - புதுச்சேரி கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Read More »

Flash News : 10,11 ஆம் வகுப்பு தேர்வு ரத்து - முதல்வரின் செய்திக்குறிப்பு ( Pdf )



10th,11th Exam Cancel - CM Press News ( pdf) - Download here

2019-2020 ஆம் கல்வி ஆண்டுக்கான 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மற்றும் 11 ஆம் வகுப்பில் தேர்வு நடத்தாமல் விடுபட்டு போன [ வேதியியல் , கணக்கு பதிவியல் புவியியல் ( புதிய பாடத்திட்டம் ) , வேதியியல் , கணக்கு பதிவியல் , புவியியல் , தொழிற்கல்வி - கணக்கு பதிவியல் ( பழைய பாடத்திட்டம் ) ] ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் ஜூன் 15 முதல் ஜூன் 25 வரை தேர்வு நடத்த ஏற்கனவே அரசு ஆணை பிறப்பித்து , அதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு , மாண்புமிகு உயர் நீதிமன்றம் இந்த தேர்வுகளை தற்போது கொரோனா தொற்று அதிகமாக உள்ள நிலையில் , தள்ளி வைப்பது பற்றி அரசு பரிசீலிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளது. இது குறித்து அரசு விரிவாக ஆய்வு செய்தது . தற்போது உள்ள நிலையில் கொரோனா தொற்று சென்னையிலும் , சில மாவட்டங்களிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது . நோய் தொற்று வல்லுநர்கள் , நோய் தொற்று குறுகிய காலத்தில் குறைய வாய்ப்பில்லை என கருத்து தெரிவித்துள்ளனர் . எனவே பெற்றோர்களின் கோரிக்கையையும் , நோய் தொற்றின் தற்போதைய போக்கையும் கருத்தில் கொண்டு , மாணவர்களை நோய் தொற்றிலிருந்து காக்க , வருகின்ற 15 ஆம் தேதி முதல் நடைபெறவிருந்த 10 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகளும் , 11 ஆம் வகுப்புக்கான விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகளும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

எனவே , இந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட காரணத்தால் , மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது . மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு காலாண்டு மற்றும் அரையாண்டில் அந்தந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80 % மதிப்பெண்களும் , மாணவர்களின் வருகை பதிவின் அடிப்படையில் 20 % மதிப்பெண்களும் வழங்கப்படும் . 12 ஆம் வகுப்புத் தேர்வைப் பொறுத்தவரையில் , ஏற்கனவே தேர்ச்சி பெறாதவர்களுக்கு நடத்தப்படவிருந்த மறு தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது. சூழ்நிலைக்கேற்ப 12 ஆம் வகுப்பு மறுதேர்வுகளுக்கான நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

வெளியீடு : இயக்குநர் , செய்தி மக்கள் தொடர்புத்துறை , சென்னை -9
Read More »

Flash News : 10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து -அனைவரும் ஆல் பாஸ் முதலமைச்சர்

Flash News : 10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து -அனைவரும் ஆல் பாஸ் முதலமைச்சர்




Read More »
 

Most Reading

Tags

Sidebar One