Search

பிளஸ்டூ முடித்தவர்கள் கடற்படையில் மாலுமி பணிக்கு விண்ணப்பிக்கத் தயாரா?

Tuesday 12 November 2019

இந்திய கடற்படையில் பயிற்சியுடன் கூடிய Sailor எனப்படும் மாலுமி பணிக்கான SSR ஆகஸ்ட் - 2020 பயிற்சி சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள திருமணமாகாத ஆண்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிகள்: மாலுமி
1. ஆர்டிபிஸர் அப்ரண்டிஸ் (Artificer Apprentice) (AA)
2. சீனியர் செகண்டரி ரெக்ரூட் (Senior Secondary Recruit) (SSR)




காலிப்பணியிடங்கள்:
1. ஆர்டிபிஸர் அப்ரண்டிஸ் - 500
2. சீனியர் செகண்டரி ரெக்ரூட் - 2,200
மொத்தம் = 2,700 காலியிடங்கள்

முக்கிய தேதிகள்:
ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 08.11.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.11.2019



வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்புவோர் 01.08.2000 மற்றும் 31.07.2003 என்ற தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்திற்குள் பிறந்தவர்களாக இருத்தல்
வேண்டும்.

தேர்வுக்கட்டணம்: ரூ.215
குறிப்பு:
1. எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு தேர்வுக்கட்டணம் கிடையாது.
2. ஆன்லைனில் மட்டுமே தேர்வுக்கட்டணம் செலுத்த முடியும்.

கல்வித்தகுதி:
1. ஆர்டிபிஸர் அப்ரண்டிஸ்: 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் கணிதம் & இயற்பியல் பாடங்களை பயின்று குறைந்தபட்சமாக 60% மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
2. சீனியர் செகண்டரி ரெக்ரூட்: 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் கணிதம் & இயற்பியல் பாடங்களை பயின்று குறைந்தபட்சமாக 60% மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், https://www.joinindiannavy.gov.in/ (அல்லது) https://www.joinindiannavy.gov.in/en/account/login- என்ற இணையதள முகவரியில் சென்றுவிண்ணப்பிக்கலாம்.



தேர்வு செய்யப்படும் முறை:
1. கணினி வழித்தேர்வு
2. உடற்தகுதி தேர்வு
3. மருத்துவ தகுதி தேர்வு

பயிற்சிக் காலம்:
1. ஆர்டிபிஸர் அப்ரண்டிஸ் - 9 வாரங்கள்
2. சீனியர் செகண்டரி ரெக்ரூட் - 22 வாரங்கள்

ஊக்கத்தொகை:
தொடக்கக்கால பயிற்சியின் போது ரூ.14,600 மாத ஊக்கத்தொகை வழங்கப்படும்.



பயிற்சி முடிவுக்கு பின் பல்வேறு சலுகைகளும், திறமைக்கேற்ற பணியும் வழங்கப்படும்.

மேலும், இது குறித்த முழுத்தகவல்களை பெற, https://www.joinindiannavy.gov.in/files/event_attachments/AASSR0820_Eng.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
Read More »

பொதுத்துறை வங்கிகளில் சிறப்பு அதிகாரி பணிகள் - விண்ணப்பிக்க தயாரா?

பொதுத்துறை வங்கிகளில், ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர்ஸ் என்ற பிரிவின் கீழ் பல்வேறு பணிகளுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பை ஐ.பி.பி.எஸ் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிகள் & காலிப்பணியிடங்கள்:
ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர்ஸ்


1. ஐ.டி ஆபீசர் - IT Officer
2. அக்ரிகல்சர் ஃபீல்டு ஆபீசர் - Agricultural Field Officer
3. ராஜ்பாஷா அதிகாரி - Rajbhasha Adikari
4. சட்ட அதிகாரி - Law Officer
5. ஹெச்.ஆர் / பெர்சனல் ஆபீசர் - HR / Personnel Officer
6. மார்க்கெடிங் ஆபீசர் - Marketing Officer

மொத்தம் = 1,163 காலிப்பணியிடங்கள்



முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பம் தொடங்கும் தேதி: 06.11.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.11.2019
ஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி தேதி: 26.11.2019
முதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதி: 28.12.2019 & 29.12.2019
முதன்மைத் தேர்வு நடைபெறும் தேதி: 25.01.2020

வயது வரம்பு:
01.11.2019 அன்றுக்குள், குறைந்தபட்சமாக 20 முதல் அதிகபட்சமாக 30 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.

குறிப்பு:
பணிகளை பொருத்து வயது வரம்பில் மாற்றங்கள் உண்டு.



தேர்வுக்கட்டணம்:
1. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் / முன்னாள் ராணுவத்தினர் - ரூ.100
2. பொது / EWS / OBC பிரிவினர் - ரூ.700

குறிப்பு:
1. செலுத்திய தேர்வுக்கட்டணத்தை எக்காரணம் கொண்டும் திரும்ப பெற இயலாது.
2. ஆன்லைனில் மட்டுமே தேர்வுக்கட்டணத்தை செலுத்த முடியும்.

கல்வித்தகுதி: (26.11.2019 அன்றுக்குள்)
1. ஐ.டி ஆபீசர் - குறைந்தபட்சமாக, 4 வருட இளங்கலை பட்டப்படிப்பான பி.இ / பி.டெக் ( கம்யூட்டர் சயின்ஸ், ஐ.டி, எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் & டெலிகம்யூனிகேஷன்ஸ், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் & இன்ஸ்ட்ரூமெண்டேசன்) போன்ற ஏதேனும் ஒரு பிரிவில் பயின்று தேர்ச்சி (அல்லது) அதிகப்பட்சமாக, முதுகலைப் பட்டப்படிப்பில் ( கம்யூட்டர் சயின்ஸ், ஐ.டி, எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் & டெலிகம்யூனிகேஷன்ஸ், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் & இன்ஸ்ட்ரூமெண்டேசன்) போன்ற ஏதேனும் ஒரு பிரிவில் பயின்று தேர்ச்சி அவசியம்.

2. அக்ரிகல்சர் ஃபீல்டு ஆபீசர் - 4 வருட வேளாண் துறை சார்ந்த இளங்கலை பட்டப்படிப்புகளில் ஏதேனும் ஒரு துறையில் பயின்று தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம்.



3. ராஜ்பாஷா அதிகாரி - முதுகலைப் பட்டப்படிப்பில் இந்தியுடன் ஆங்கிலத்தை ஒரு பாடமாகவோ அல்லது சமஸ்கிருதத்துடன் ஆங்கிலம் மற்றும் இந்தியை பாடங்களாகவோ பயின்றிருத்தல் வேண்டும்.

4. சட்ட அதிகாரி - இளங்கலைப் பட்டப்படிப்பில் சட்டம் (Law - LLB) பயின்று அத்துடன் பார் கவுன்சிலில் பதிவு பெற்றிருத்தல் வேண்டும்.

5. ஹெச்.ஆர் / பெர்சனல் ஆபீசர் - ஏதேனும் ஒரு இளங்கலை பட்டத்தில் தேர்ச்சி அத்துடன் 2 வருட (Full time) முதுகலை படிப்பில் தேர்ச்சி அவசியம்.

6. மார்க்கெடிங் ஆபீசர் - ஏதேனும் ஒரு இளங்கலை பட்டத்தில் தேர்ச்சி. அத்துடன் 2 வருட (Full time) MMS (Marketing) அல்லது MBA (Marketing) தேர்ச்சி.

தேர்வு செய்யும் முறை:
1. முதல்நிலைத் தேர்வு
2. முதன்மைத் தேர்வு
3. நேர்முகத்தேர்வு





விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் மட்டுமே இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.
ஆன்லைனில், https://www.ibps.in/common-written-exam-cwe/ - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.

மேலும், இது குறித்த முழு தகவல்களைப் பெற, https://www.ibps.in/wp-content/uploads/CRP_SPL_IX_ADVT.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்துகொள்ளலாம்.
Read More »

ESIC காப்பீட்டு நிறுவனத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்

மத்திய அரசு நிறுவனமான அரசு ஊழியர் காப்பீட்டு நிறுவனத்தில் (இஎஸ்ஐசி) காலியாக உள்ள உதவி பொறியாளர் மற்றும் இளநிலை பொறியாளர் பணியிடங்களை ஓப்பந்தகால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான ஓய்வுபெற்றவர்களிடம் இருந்து வரும் 22 ஆம் தேதிக்குள் ஆஃப்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பணியிடம்: தமிழ்நாடு முழுவதும்

நிறுவனம்: அரசு ஊழியர் காப்பீட்டு நிறுவனம் (ESIC)

பணி: Assistant Engineer

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டம், பட்டயம் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.




சம்பளம்: மாதம் ரூ. 45,000

பணி: Junior Engineer

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டம், பட்டயம் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

சம்பளம்: மாதம் ரூ.33,630

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதுவரம்பாக 64க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றி பெறும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.esic.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.




பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Additional Commissioner and Regional Director, ESI Corporation, Regional Office, 143, Sterling Road, Nungambakkam, Chennai - 34

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.esic.nic.in/attachments/recruitmentfile/ce28d0948724efaaf1a6323864209fd7.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.11.2019

Read More »

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சி துறையில் காலியாக உள்ள 189க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலா், ஓட்டுநர், காவலர், ஆவண எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து நேரிலோ, அஞ்சல் மூலமோ விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறன்றன.

மொத்த காலியிடங்கள்: 189க்கும் மேற்பட்ட பணியிடங்கள்

நிறுவனம்: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

பணி: Panchayat Secretary, Driver, Watchman, Record Clerk & Office Assistant

மாவட்டங்கள் வாரியான காலியிடங்கள் எண்ணிக்கை:




1. அரியலூர் - 11 விவரங்கள் அறிந்துகொள்ள கிளிக் செய்க.

2. ஈரோடு - 17 விவரங்கள் அறிந்துகொள்ள கிளிக் செய்க.

3. கரூர் - 14 விவரங்கள் அறிந்துகொள்ள கிளிக் செய்க.

4. கிருஷ்ணகிரி - 15 விவரங்கள் அறிந்துகொள்ள கிளிக் செய்க.

5. நாமக்கல் - 19 விவரங்கள் அறிந்துகொள்ள கிளிக் செய்க.

6. திருவாரூர் - 12 விவரங்கள் அறிந்துகொள்ள கிளிக் செய்க.

7. நாகப்பட்டினம் - 20 விவரங்கள் அறிந்துகொள்ள கிளிக் செய்க.




8. தூத்துக்குடி - 17 விவரங்கள் அறிந்துகொள்ள கிளிக் செய்க.

9. காஞ்சிபுரம் - 49 விவரங்கள் அறிந்துகொள்ள கிளிக் செய்க.

10. ராமநாதபுரம் - 15 விவரங்கள் அறிந்துகொள்ள கிளிக் செய்க.

தகுதி: 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பதாரர்களுக்கு தமிழ் மொழி படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.7.2019 அன்று 18 வயது பூா்த்தியடைந்திருக்க வேண்டும். பொதுப்பிரிவினராக இருந்தால், 30 வயதிற்கு மேற்படாதவராகவும், பிற்பட்ட வகுப்பினா், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் 35 வயதிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரா்களுக்கு மட்டுமே, நோமுகத் தோவுக்கான அழைப்பாணை கடிதம் கிராம ஊராட்சிகளின் தனி அலுவலா்களால் அனுப்பி வைக்கப்பட்டு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.




விண்ணப்பிக்கும் முறை: வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள மாவட்டத்தின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து அந்தந்த ஒன்றித்தில் உள்ள ஊராட்சியின் தனி அலுவலா்களான வட்டார வளா்ச்சி அலுவலா்கள்(கிராம ஊராட்சிகள்) அஞ்சல் முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ அனுப்ப வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnrd.gov.in என்ற இணையதளத்திலோ அல்லது அந்தந்த மாவட்ட இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பையோ பார்த்து தெரிந்துகொள்ளவும்.




பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.11.2019

Read More »

10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு இஸ்ரோவில் வேலை... ரூ.69 ஆயிரம் வரை சம்பளம்!

அனைவராலும் இஸ்ரோ என அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள் : 90

பணி விவரங்கள்: கார்பென்டர் - 1

கெமிக்கல் : 10

எலக்ட்ரீசியன் - 10

எலக்ட்ரானிக் மெக்கானிக் : 2

பம்ப் ஆப்ரேட்டர் மற்றும் மெக்கானிக் : 6

ரெஃப்ரிஜிரேஷன் மற்றும் ஏர் கண்டிஷனிங் - 05




கெமிக்கல் : 1

ஃபிட்டர் :2

பாய்லர் அட்டெனன்ட் - 02

எலக்ட்ரானிக் மெக்கானிக் - 01

மெக்கானிக்கல் : 02

கல்வித்தகுதி: 10 -ம் வகுப்பு மற்றும் அதற்கு நிகரான கல்வித்தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறைகளில் 5 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.



சம்பளம் : ரூ.21,700 முதல் ரூ.69,100

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

எழுத்துத் தேர்வுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் isro.gov.in என்ற இணையதளத்தில் நவம்பர் 29-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
Read More »
 

Most Reading

Tags

Sidebar One