Search

இம்மாத இறுதியில் நடைபெறவிருந்த, சி.ஏ., தேர்வுகள் ரத்து !

Monday 13 July 2020

இம்மாத இறுதியில் நடைபெறவிருந்த, சி.ஏ., தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், நவம்பர் மாத தேர்வுடன் சேர்த்து, இந்த தேர்வுகள் நடத்தப்படும் என்றும், ஐ.சி.ஏ.ஐ., எனப்படும், இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சி.ஏ., எனப்படும் பட்டய கணக்காளர்களுக்கான தேர்வு, ஆண்டுதோறும் மே மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான மே மாத தேர்வு, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, ஒத்தி வைக்கப்பட்டு, ஜூலை, 29 முதல், ஆகஸ்டு, 16ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதை எதிர்த்து, பெற்றோர் சங்கத்தினர், உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு, நீதிபதிகள் கான்வில்கர், சஞ்சிவ் கண்ணா அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, பட்டய கணக்காளர் நிறுவன தரப்பு வழக்கறிஞர் கூறியதாவது:கொரோனா வைரஸ் பரவலால், ஜூலை, 29 முதல், ஆகஸ்டு, 16ம் தேதி வரை நடத்த திட்டமிட்டிருந்த, சி.ஏ., தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன. மே மாத பருவத் தேர்வு, நவம்பர் மாத தேர்வுடன் சேர்த்து நடத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்

Read More »

EMPLOYMENT NEWS -NCERT – மத்திய அரசு வேலை – 266 பேராசிரியர்கள் தேவை!

Assistant Professor – 144
Associate Professor – 83
Professor – 39

வயது வரம்பு

வயது வரம்பு 65 வயதிற்குள் இருக்க வேண்டும் . மேலும் வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ள பிரிவினர் பற்றி அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண்க .

கடைசிநாள்:
30/08/2020.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்

http : // recruitment .ncert.gov.in /

என்ற இணையதளம் வழியாக 03.08.2020 என்ற தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் . சம்பளம் ரூ . 37,400 – 67,000

தேர்வு நடைமுறை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம் விவரங்கள் பொது / ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் – ரூ .1000 மற்றும் மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும்
( எஸ்.டி. / எஸ்.சி. / பி.டபிள்யு.டி ) விண்ணப்ப கட்டணம் இல்லை .

Read More »

தமிழகம் முழுவதும் ஜூலை 31ம் தேதி வரை தனியார் மற்றும் பொது போக்குவரத்துக்கான தடை நீட்டிப்பு.

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக , பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் , 24.3.2020 முதல் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து கொரோனா தொற்றின் நிலைமையை கருத்தில் கொண்டும் , மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் , சில தளர்வுகளுடன் 31.7.2020 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது . கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுக்க மாண்புமிகு அம்மாவின் அரசு , தொடர்ந்து தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வரும் நிலையில் , கொரோனா நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் , மாநிலத்தில் தனியார் மற்றும் அரசு பொது பேருந்து போக்குவரத்து சேவை 1.7.2020 முதல் 15.7.2020 வரை நிறுத்தப்பட்டது. தற்போது , தமிழ்நாட்டில் , கொரோனா நோய்த் தொற்றை தொடர்ந்து கட்டுப்படுத்தும் நோக்குடன் 31.7.2020 முடிய தனியார் மற்றும் அரசு பொது பேருந்து போக்குவரத்து சேவை இயக்கப்படாது.

தமிழ்நாடு அரசின் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
IMG-20200713-WA0013
Read More »

சுழற்சி முறையில் 50% அலுவலகப் பணியாளர்கள் பணிக்கு வருதல் சார்நது பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

Read More »

Breaking News : தமிழகத்தில் இன்று ( ஜூலை 13 ) மேலும் 4,328 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் ( 13.07.2020 ) இன்று 4,328 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  1,42,798 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,140   பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

மதுரை - 464

செங்கல்பட்டு - 219

திருவள்ளூர் - 337

மாவட்ட வாரியான பாதிப்பு.( 13.07.2020 )


மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 3,035

இன்றைய உயிரிழப்பு : 66
Read More »

10 &12 ஆம் வகுப்பு பயிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பாடநூல் மற்றும் video lessons பதிவிறக்கம் செய்தல் தொடர்பாக பள்ளிக்கல்வி துறை இயக்குநரின் செயல்முறைகள்!


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடநூல்கள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வழங்கப்பட உள்ளது. அதற்காக மேற்கண்ட வகுப்புகள் கற்பிக்கும் ஆசிரியர்கள் 13.07.2020 மற்றும் 14.07.2020 தேதிகளில் பள்ளிக்கு வருகை புரிந்து உரிய ஆயத்தப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களுடன் HiTech Lab மூலம் Video Lesson கள் 15.07.2020 முதல் பதிவிறக்கம் செய்து தரப்பட உள்ளது . இதற்காக மாணவர்கள் தங்களுடைய மடிக்கணினியை பள்ளிக்கு வருகை புரியும் போது கொண்டு வரவேண்டும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது . இதுபோன்றே அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் Video Lesson கள் பதிவிறக்கம் செய்து தரவேண்டும் என்பதால் அப்பள்ளியில் பணியாற்றும் முதகலைபாட / கணினி ஆசிரியர் Laptop அல்லது Pendrive எடுத்துக் கொண்டு அருகாமையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று HiTech Lab மூலம் Video Lesson களை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் அவர்கள் தங்களுடைய பள்ளிக்குச் சென்று அவர்களுடைய கணினி ஆய்வகத்தில் உள்ள கணினிகளில் பதிவேற்றம் செய்துகொள்ள வேண்டும்.

அதனைத் தொடர்ந்து பள்ளிக்கு வருகை புரியம் மாணவர்களுக்கு அவர்களுடைய மடிக்கணினியில் பதிவிறக்கம் செய்து தரவேண்டும். எனவே அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும். இப்பணி மிகவும் இன்றியமையாதது என்பதால் எவ்வித சுணக்கமுமின்றி பணிகளை மேற்கொண்டு மாணவர்களுக்கு பதிவிறக்கம் செய்து தரவேண்டும். உரிய மேற்கண்ட அறிவுரைகளை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்குத் தெரிவித்து நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Read More »

ஆகஸ்டு 3 - வது வாரம் பள்ளிகளை திறக்கலாம் ஆசிரியர் சங்கம் தீர்மானம்!

Read More »

CBSE - Class 12 Public Exam Result Published ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு.

IMG_20200713_133239

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள  மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல் வெளியிட்டுள்ளார்.

சிபிஎஸ்இ-இன் அதிகாரப்பூர்வ இணையதளமான

http://cbseresults.nic.in

என்ற தளத்தில் மாணவர்கள் முடிவுகளைக் காணலாம்.

முன்னதாக, நடப்பு கல்வியாண்டில் சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு நடத்தப்படாமல் உள்ள தோ்வுகள் கரோனா பொதுமுடக்கம் காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது
Read More »

Flash News : கொரோனா தடுப்புப் பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்த தடை கோரிய வழக்கு தள்ளுபடி


பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

பேரிடர் காலத்தில் ஆசிரியர்களின் சேவையை நீதிமன்றம் எதிர்பார்ப்பதாக நீதிபதிகள் கருத்து.

மற்றவர்களுக்கு முன் உதாரணமாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும் - நீதிபதிகள்.

ஆசிரியர்களுக்கு போதிய பாதுகாப்பை அரசு உறுதி செய்ய உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்.
Read More »
 

Most Reading

Tags

Sidebar One