Search

குரூப் தேர்விற்காக அறிவியலில் சில முக்கிய குறிப்புகள்

Wednesday, 19 September 2018

குரூப் தேர்விற்காக அறிவியலில் சில முக்கிய குறிப்புகள் 🔰1 கிராம் கார்போஹைட்ரேட்டில் உருவாகும் கலோரிகளின் அளவு?. (4.1கலோரி)

🔰விலங்குகளின் கல்லீரல் தசைகளில் அமைந்துள்ள கூட்டுச் சர்க்கரை எது? (கிளைக்கோஜன்)

🔰சூரிய ஒளி வைட்டமின் எது? ( வைட்டமின் D)

🔰இரத்தம் உறைதலில் ஈடுபடும் வைட்டமின் எது? ( வைட்டமின் K)

🔰வைட்டமின் (A) குறைவால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்? (ரிக்கெட்ஸ்)

🔰ஆக்ஸிஜன் கடத்தலில் ஈடுபடும் நுண் தனிமம் எது? (இரும்பு)

🔰இரத்தம் உறைதலில் ஈடுபடும் தனிமம் எது? (கால்சியம்)

🔰பெரியவர்களில் இயல்பான BMI ன் அளவு? (19-25)

🔰உமிழ் நீரில் உள்ள நொதி எது? (டயலின் அல்லது அமிலேஸ்)

🔰Hcl ஐ சுரக்கும் செல் எது? ஆக்ஸின்டிக் செல்கள் (அ) சுவர் செல்கள்

🔰குடல் புண் உருவாக காரணமான பாக்டீரியா எது? ஹெலிக்கோபேக்டர் பைலோரி

🔰தசை சுருங்கும் போது (ATP) மூலக்கூறுகள் இணையும் இடம் எது? (ஆக்டின்)

🔰தசைகளின் சுருக்கத்திற்குத் தேவையான கால்சியம் அயனிகளை வெளியிடுவது எது?(சார்கோ பிளாஸ்மிக்வலை)

🔰காசநோயை உருவாக்கும் பாக்டீரியா எது? மைக்கோபாக்டீரியம் டீயுபர்குலோசிஸ்

🔰மிட்ரல் வால்வின் வேறுபெயர் என்ன? (ஈரிதழ் வால்வு)

🔰இதய இரத்தக் குழல் அடைப்பு நோயிலிருந்து பெண்களுக்கு இயற்கையாகப் பாதுகாப்பு அளிப்பது எது?( ஈஸ்ட்ரோஜன்)

🔰இதயத்தின் பேஸ்மேக்கர் என அழைக்கப்படுவது எது? (சைனுஏட்ரிய கணு (அ) எஸ்.ஏ கணு

🔰மனிதனின் இயல்பான இரத்த அழுத்தம் 120/ 80 mmHg

🔰கோரோனரி துரோம்போசிஸ்-ன் விளைவு யாது ? (மாரடைப்பு)

🔰மூளைக்குச் செல்லும் தமனியில் ஏற்படும் இரத்தக் கட்டியால் ஏற்படும் விளைவு யாது?(பக்கவாதம் அல்லது ஸ்ட்ரோக்)

🔰பல் வேர்க்குழல் சிகிச்சையின் போது பல்குழியினுள் நிரப்பப்படும் பசை (கட்டாபெர்சாரெசின்)

🔰பித்த கற்களை உருவாக்குவது எது? (கொலஸ்ட்ரால்)

🔰எலும்பு முறிவுப் பகுதியைச் சுற்றி உருவாகும் திசுத்தொகுதி எது? (காலஸ்)

🔰சினாவியல் படலத்தில் ஏற்படும் பாதிப்பின் பெயர் என்ன? (ருமாட்டிக் மூட்டுவலி)

🔰ரிகர் மார்டிசின் போது தசைகளில் உள்ள புரதத்தை அழிக்கும் பொருள் (லைசோசைம் நொதிகள்)

🔰தசை சுருக்கத்தை தூண்டும் வேதிப்பொருள்எது? (அசிட்டைல் கோலைன்)

🔰உணவு விழுங்குதலை கட்டுபடுத்தும் மூளையின் பகுதி எது? (முகுளம்)

🔰இரத்த சிவப்பணுக்களை முதிர்ச்சியடைய செய்யும் வைட்டமின் எது? (வைட்டமின் B12)

🔰இரத்தம் உறைதலை தடைசெய்யும் பொருள் எது? (ஹிப்பாரின்)

🔰மனிதனில் முதலில் இதயமாற்று அறுவை சிகிச்சை செய்தவர் யார்? (பேரா. கிறிஸ்டியான் பெர்னார்டு)

🔰வைரஸ்க்கும் பாக்டீரியாவிற்கும் இடைப்பட்ட உயிரினம் எது? (மைக்கோபிளாஸ்மா)

🔰இதய இரத்தக் குழாய் அடைப்புக்குக் காரணமான எண்ணெயும் கொழுப்பும் பொருள் எது? (ஆத்ரோமா)

🔰நமது உடலின் மொத்த தோலின் மேல்பரப்பு -----1.1 - 2.2மீ2

🔰சீபம் என்ற எண்ணெய் பொருளைச் சுரப்பது -- செபேசியஸ் (அ) எண்ணெய்ச் சுரப்பி

🔰ரக்வீட் தாவரத்தின் ஒவ்வாமை ஏற்படுத்தும் விளைவு---தொடர்பு தோல்வியாதி

🔰இரத்தத்தில் யூரியாவின் அளவு--- 0.04 கிராம்/100 மி.லி.யூரியாவை உருவாக்கும் இடம் எது? _____கல்லீரல்

🔰அம்மோனியாவை யூரியாவாக மாற்றத் தேவைப்படும் ATP மூலக்கூறுகளின் எண்ணிக்கை ----- மூன்று

🔰குளாமருலஸ் வடிக்கட்டுதலின் போது மால்பிஜியன் உறுப்பின் செயல்பாடு ----- உயிர்வடிகட்டி

🔰குளாமருலசில் காணப்படும் மொத்த வடிக்கட்டும் விசையின் அளவு---------25mmHg

🔰சிறுநீரக நுண்குழல்களில் திரும்ப உறிஞ்சப்படும் யூரியாவின் அளவு----------28கிராம்

🔰நீர், குளுக்கோஸ், சோடியம், பாஸ்பேட் மற்றும் பைகார்பனேட் உறிஞ்சப்படும் இடம்------- அண்மைச் சுருண்டகுழல்

🔰குளாமருலார் வடி திரவத்தில் காணப்படும் நீரின் அளவு ---170-180 லிட்டர்

🔰தற்சமயம் இன்சுலின் எதிர்ப்பு நீரிழிவு நோய் அதிகமாகக் காணப்படும் வயது வரம்பு------10-15-வருடம்

🔰வைரஸ் தொற்றினால் ஏற்படக்கூடிய நீரிழிவு நோய் இவ்வகையைச் சார்ந்தது ---இன்சுலின் சார்ந்த நீரிழிவு

🔰எது செயற்கையான சிறுநீரகம் என்று அழைக்கப்படுகிறது---டயலைசர்.

🔰தீவிர மூளைக் குறைப்பாட்டு நோய் எனப்படுவது-----அல்ஸிமியர் நோய் (40-50) வயதில் பாதிப்பு
Read More »

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - மொகலாயர் வருகை முக்கிய குறிப்புகள்

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - தலைப்பு- மொகலாயர்கள் வருகை.
# பாபர் பிறந்த ஆண்டு -கிபி 1483.
# பாபரின் தந்தை-உமர்  ஷேக் மிர்ஷா ( ஆசியாவில் உள்ள பர்கானா  பகுதியை ஆண்டவர்)
# பாபர் பர்கானா வின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் போது அவருக்கு வயது- 11 .
# முதல் பானிபட் போர்- கிபி1526 .
# முதலாம் பானிபட் போரில் தோற்கடிக்கப்பட்ட மன்னர்- இப்ராகிம் லோடி .
# முகலாயப் பேரரசின் அடித்தளத்தை இந்தியாவில் உருவாக்கியவர்- பாபர் .
# பாபர் ராணா சங்கவை போர்க்களத்தில் தோற்கடித்த ஆண்டு -1527 (கான்வா போர்க்களம் )
# பாபரின் சுயசரிதை எழுதப்பட்ட மொழி -துருக்கி.
# பாபாவின் சுயசரிதை  பாபரின் நினைவுகள் அல்லது துசிக்-கி- பாபரி.
# அக்பர் பிறந்த ஆண்டு மற்றும்  இடம்- கிபி 1542- அமரக்கோட்டை.
# உமாயூன் என்றால் பொருள் -அதிர்ஷ்டசாலி.
# அக்பரின் பாதுகாவலனாக விளங்கியவர்- பைராம்கான் .
# ஷெர்ஷா சூரி பிறந்த ஆண்டு- கி. பி1472-ஃபரித் .
# ஷெர்ஷா சூரி நிறுவப்பட்ட வம்சம்-சூர்  வம்சம்.
# ஷெர்ஷா சூரி நிர்வாக அமைச்சரவையில் 4 முக்கிய அமைச்சர்கள்
1 . திவானி -இ -விசாரத் ( வரவு மற்றும் செலவு பொறுப்பாளர்) .
2 . திவானி -இ -ஆரிஷ் ( இராணுவ பொறுப்பாளர்).
3. திவானி-இ -ரசலாத் ( வெளியுறவு மற்றும் தூதரக பொறுப்பாளர்)
4. திவானி-இ -இன்ஹா ( அரசு ஆணைகள் மற்றும் கடிதப் போக்குவரத்து பொறுப்பாளர்) .
# மொகலாயர் ஆட்சி காலத்தில் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தவர் -ஷெர்ஷா
# முகலாயர் காலத்தில் நில உரிமை (பட்டா) விவசாயிகளுக்கு வழங்கியவர்- ஷெர்ஷா.
# நவீன நாணய முறையின் தந்தை என அழைக்கப்பட்டவர்- ஷெர்ஷா.
# டெல்லியில் புகழ்பெற்ற 'புராணா கில"  கட்டடத்தை உருவாக்கியவர்- ஷெர்ஷா.
# இரண்டாம் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு கி-பி 1556.
# ஜிஸியா மற்றும் புனித பயணம் ரத்து செய்தவர் -அக்பர் 
# பாகவத புராணத்தை பாரசீக மொழியில் மொழி பெயர்த்தவர்- ராஜா தோடர்மால்
# அக்பரின் அவையை அலங்கரித்த இசைஞானி- தான்சேன்.
# அக்பரின் புகழ்  பெற்ற வரலாற்று நூல்கள்- அயினி அக்பரி மற்றும் அக்பர் நாமா.
# அக்பரின் சமயக் கொள்கை- தீன் இலாஹி.
# அக்பர்" இபாதத் கானா " தொழுகை இல்லத்தை கட்டி ஆண்டு கி.பி  1575.
# தவறுபடா  ஆணையை  பிரகடனப்படுத்தியவர்- அக்பர் .
# அக்பர் தீன் இலாஹி அல்லது தெய்வீக மதத்தினை  வெளியிட்ட ஆண்டு- 1582 .
# மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தியவர்- அக்பர் .
# குஜராத் வெற்றியின் நினைவாக அக்பர் கட்டிய கட்டடக் கலை -பதேபூர் சிக்ரி
# புலந்தார்வாசா  என்னும் நுழைவு  வாயில் முறையில் கட்டப்பட்ட அரசர் காலம்- அக்பர் காலம் .
# உலகினை வென்றவர் எனப் போற்றப்படுபவர் -ஜஹாங்கீர்.
#ஜஹாங்கீரின் சுயசரிதை- தூசுக் -இ -ஜஹாங்கிரி .
#நீதி சங்கிலி மணி யார் அரசன் காலத்தில் கட்டப்பட்டிருந்தது -ஜஹாங்கீர்.
# நீதி சங்கிலி மணி கட்டப்பட்ட  அரண்மனையின்  பெயர் -ஹாபர்ஜி .
# ஜஹான்கீரை  மணந்தவர் நூர்ஜகான் கி பி 1611.
# மெஹருன்னிஷா  சிறப்புப் பெயர் - நூர் மஹால் (அரண்மனை ஒளி).
# உலகின் ஒளி என்ற சிறப்புப் பெயரைப் பெற்றவர்- நூர்ஜஹான்.
#ஜஹாங்கிரின் மகன்- ஷாஜகான் கிபி 1592.
# உலகில் அரசன் என்று போற்றப்படுபவர்- ஷாஜஹான் 
# யாருடைய ஆட்சிக்காலத்தில் முகலாயர்களின் பொற்காலம் என்று அழைக்கப்பட்டது -ஷாஜஹான்
# கட்டடக் கலையின் இளவரசர் மற்றும் பொறியாளர் பேரரசன் என்று அழைக்கப்பட்டவர் -ஷாஜகான்.
# வெள்ளை பளிங்கு கற்களால் ஆன ஜும்மா மசூதியைக் கட்டியவர்- ஷாஜஹான்
# தாஜ்மகாலை கட்டிய சசிற்பியின்  பெயர் உஸ்தாத் இஷா (22ஆண்டுகள் )
# மயில் ஆசனத்தை உருவாக்கி அதில் கோகினூர் வைரத்தை பதித்தவர் ஷாஜகான் .
Read More »

19 வங்கிகளில் 7,275 கிளார்க் பணியிடங்கள் - ஐபிபிஎஸ் தேர்வு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

ஐபிபிஎஸ் கிளார்க் நிலை தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். 19 வங்கிகளில் 7,275 கிளார்க் நிலை பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்ய ஐபிபிஎஸ் (இன்ஸ்டிட்யூட் ஆப் பாங்கிங் பர்சனல் செலக்ஷன்) இன்று முதல் விண்ணப்பங்களை பெறுகிறது. அக்டோபர் 10 வரை விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் முறையில் தேர்வு நடத்தப்படுகிறது. டிசம்பர் மாதம் 8, 9, 15, 16 தேதிகளில் தொடக்க நிலை தேர்வும், ஜனவரி மாதம் 20ம் தேதி மெயின் தேர்வும் நாடு முழுவதும் அனைத்து பகுதிகளில் அமைக்கப்படுகின்ற தேர்வு மையங்களில் நடத்தப்படுகிறது.
பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். பொது பிரிவினரு

க்கான வயது வரம்பு 20 முதல் 28  வரை. விண்ணப்ப கட்டணம் ₹600, பட்டியல் இனத்தவர், முன்னாள் படைவீரர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு ₹100 கட்டணம்.19 வங்கிகளில் அடுத்த ஆண்டுக்கான கிளார்க் நியமனங்கள் இந்த தேர்வு வழியாகவே நடைபெற உள்ளது. தொடக்க நிலையில் ஐபிபிஎஸ் நிர்ணயம் செய்கின்ற கட் ஆப் மதிப்பெண் பெறுகின்றவர்களுக்கு பிரதான தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும். 190 கேள்விகள் உள்ள மெயின் தேர்வுக்கான நேரம் 160 நிமிடங்கள் ஆகும். தொடக்க நிலை தேர்வில் பிரிவு வாரியாக நேர அட்டவணை வகுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு 25 நிமிடம் அதிகமாக பிரதான தேர்வுக்கு வழங்கப்பட்டுள்ளது.
Read More »

குரூப்-2 தேர்வுக்காக பொதுத்தமிழில் முக்கிய குறிப்புகள்

பொதுத் தமிழில் முக்கிய குறிப்புகள்
பொதுத்தமிழ் குறிப்புகள்.....

1. விப்ரநாராயணர் என்ற இயற்பெயர் உடையவர் தொண்டரடிப்பொடி ஆழ்வார்

2. ஆதி உலா என்று அழைக்கப்படுவது திருக்கைலாய ஞான உலா

3. தமிழ் மூவாயிரம் என்று சொல்லப்படுவது திருமந்திரம்

4. மூவர் பாடிய தேவாரம் இப்படியும் அழைக்கப்படும் அடங்கன்முறை

5. பதினோராந் திருமுறையில் பத்து நூல்களைப் பாடியோர் நக்கீரர்,நம்பியாண்டார் நம்பி

6. மருள்நீக்கியார் என்னும் இயற்பெயர் உடையவர் திருநாவுக்கரசர்

7. திருமாலுக்குத் திருப்பள்ளியழுச்சி பாடியவர் தொண்டரடிப் பொடி ஆழ்வார்

8  திருவாய்மொழியின் ஆசிரியர் நம்மாழ்வார்

9.  நாவுக்கரசரை 'அப்பரே' என்று, முதலில் அழைத்தவ திருஞான சம்பந்தர்

10. வாதவூர் அடிகள் என்றழைக்கப்படுபவர் மாணிக்கவாசகர்

11. "கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ;திருப்பவளச் செவ்வாய் தான் தித்தித்திருக்குமோ" என்று, ஆண்டாள் பாடியது

    எந்த நூலில்?.....நாச்சியார் திருமொழியில்

12. "சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்! கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்" எனச் சொன்னவர் நாவுக்கரசர்

13. "மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து என்னைக் கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி நான்"........பாடியவர் ஆண்டாள்

14. "ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுதொட்டில்;மாணிக்கக் குறளனே தாலேலோ என்று இறைவனுக்குத் தாலாட்டு பாடியவர்

    பெரியாழ்வார்

15. சமணர்கள் நாவுக்கரசருக்குச் சூட்டிய பெயர் தருமசேனர்

16. திருஈங்கோய்மலை எழுபது நூலைத் தந்தவர் நக்கீரதேவ நாயனார்

17. "மாசில் வீணையும் மாலை மதியமும்;வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்" எனும் பாடலைப் பாடியவர் திருநாவுக்கரசர்

18 "ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை.....புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே" என்ற பாடல் எந்த நூலின் கடவுள் வாழ்த்தாக

    அமைந்துள்ளது?................திருமந்திரம்

19. "அன்பே சிவமானது ஆரும் அறிகிலார்"..........இடம் பெறும் நூல் திருமந்திரம்

20. "பாவை பாடிய வாயால் கோவை பாடுக" என்று,சிவபெருமானால் கேட்கப்பட்டவர் மாணிக்கவாசகர்

21. வள்ளலாரின் பாக்களைத் தொகுத்துத் திருமுறைகளாக வகுத்தவர் தொழுவூர் வேலாயுத முதலியார்

22. முருகப்பெருமானை வழிபடுவோர் எச்சமயம்?....... கௌமாரம்

23. தாண்டகப் பாடல்கள் பாடிய ஆழ்வார் திருமங்கையாழ்வார்
Read More »

குரூப்-2 தேர்வுக்காக பொதுத் தமிழ் ஆசிரியர்களும் அவர்களின் சிறப்பு பெயர்களும்

 பொதுத் தமிழ் ஆசிரியர்களும் அவர்களின் சிறப்பு பெயர்களும்

 1.கவியரசர் -கண்ணதாசன்
 2.கவிப்பேரரசு-வைரமுத்து
3.கவிராட்சசர்-ஒட்டக்கூத்தர்
4.கூலவாணிகன்-சீத்தலைச் சாத்தனார்
5.மதுரகவி-பாஸ்கரதாஸ்
 6.பாவலரேறு-பெருஞ்சித்திரனார்
7.பண்டிதமணி-கதிரேசஞ் செட்டியார்
8.பன்மொழிப் புலவர்-கா.அப்பாத்துரையார்
9.அழுது அடியடைந்த அன்பர்-மாணிக்கவாசகர்
10.தமிழ் தாத்தா-உ.வே.சாமிநாத அய்யர்
11.கவிச்சக்கரவர்த்தி-கம்பர்
12.தேசிய கவிஞர்-பாரதியார்
 13.கவியோகி-சுத்தானந்த பாரதியார்
14.உவமை கவிஞர்-சுரதா
15.பாவேந்தர்-பாரதிதாசன்
16.மக்கள் கவிஞர்-பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
17.கவிமணி-தேசிக விநாயகம் பிள்ளை
18.காந்தியக் கவிஞர்-இராமலிங்க பிள்ளை
 19.திராவிட சாஸ்திரி-பரிதிமாற் கலைஞர்
20.சொல்லின் செல்வர்-ரா.பி.சேதுப்பிள்ளை
21.மகாவித்துவான்-மீனாட்சி சுந்தரம் பிள்ளை
22.புதுநெறி கண்ட புலவர்-இராமலிங்க வள்ளலார்
23.தமிழக வேர்ட்ஸ்வொர்த்-வாணிதாசன்
24.திரை கவித்திலகம்-மருதகாசி
25.பகுத்தறிவு கவிராயர்-உடுமலை நாராயணகவி
26.நாடக உலகின் இமயமலை-சங்கரதாஸ் சுவாமி
27.தமிழ் நாடக பேராசிரியர்-பரிதிமாற் கலைஞர்
28.தனித்தமிழ் இயக்கத் தந்தை-மறைமலை அடிகள்
29.பெருந்தலைவர்- காமராசர்
30.தமிழ் நாடக தந்தை-பம்மல் சம்பந்த முதலியார்
31.தமிழ் நாடக மறுமலர்ச்சி தந்தை-கந்தசாமி
32.அந்தகக் கவி-வீரராகவர்
33.தமிழக அன்னிபெசன்ட்-மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
34.வைக்கம் வீரர்-தந்தை பெரியார்
35.தேசியம் காத்த செம்மல்-பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
36.இக்கால ஔவையார்-அசலாம்பிகை அம்மையார்
37.தென்னாட்டு ஜான்சி ராணி-அஞ்சலை அம்மாள்
38.கிறிஸ்தவ கம்பர்-எச்.ஏ.கிருட்டிணன் பிள்ளை
39.செந்தமிழ் ஞாயிறு-தேவநேய பாவாணர்
40.சூடிக் கொடுத்த சுடர்க்கொடி-ஆண்டாள்
41.சிறுகதை வேந்தர்-புதுமைப்பித்தன்
42.தென்னாட்டு பெர்னாட்ஷா-அறிஞர் அண்ணா
43.புதுக் கவிதையின் பிதாமகன்-ந.பிச்சமூர்த்தி
44.சிறுகதை தந்தை-வ.வே.சு.ஐயர்
45.திவ்ய கவி - பிள்ளை பெருமாள் ஐயங்கார்
46.இலக்கிய செல்வர்-குமரி அனந்தன்
47.ஆளுடைய நம்பி-சுந்தரர்
48.ஆளுடைய பிள்ளை-திருஞானசம்பந்தர்
49.வாதவூர் அடிகள்-மாணிக்கவாசகர்
50.திரையிசை திலகம்-கே.வி.மகாதேவன்
51.ஔவை-டி.கே.சண்முகம்
52.ரசிகமணி-டி.கே.சிதம்பர நாதன்
53.சிலம்பு செல்வர்-ம.பொ.சிவஞானம்
54.முத்தமிழ் காவலர்-கி.ஆ.பெ.விஸ்வநாதன்
 55.திராவிட சிசு-திருஞானசம்பந்தர்
56.தம்பிரான் தோழர்-சுந்தரர்
57.பிரபந்த வேந்தர்- குமரகுருபரர்
Read More »
 

Most Reading

Tags

Sidebar One