Search

1 - 5 வகுப்புஆசிாியா்கள் பராமாிக்க வேண்டிய பதிவேடுகள்!!

Friday 17 January 2020

Read More »

பள்ளியில் ஆசிரியர் பணிநிரவலின் போதும் / புதிய பணியிடம் உருவாக்கும் போதும் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி இயக்குநரிடம் பெற்ற RTI-ல் தகவல்

Read More »

பள்ளிப் பார்வையின் போது வட்டாரக்கல்வி அலுவலர்கள் (BEO’S) , ஆசிரியர் பயிற்றுநர்கள் (BRTE’S) மாதிரி வகுப்புகள் எடுக்க வேண்டும் - RTI

Read More »

மருத்துவ விடுப்பு குறைந்தது எத்தனை நாட்கள் எடுக்கலாம்? - RTI LETTER REPLY

Read More »

வீட்டுக் கடன் பெற்றவர்கள் வீட்டு வாடகைப் படியும் சேர்த்து கழித்துக்கொள்ளலாமா?


வீட்டுக் கடன் பெற்றவர்கள் வீட்டு வாடகைப் படியும் சேர்த்து கழித்துக்கொள்ளலாம்
வீட்டு கடன் மீதான அசலும் வட்டியும் மற்றும் வீட்டு வாடகைப்படியும் கழித்துக் கொள்ளலாமா என சென்னை வருமான வரித்துறை ஆணையர் அவர்களிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி தகவல் கோரப்பட்டது. வீட்டு கடன் மீதான அசலும் வட்டியும் மற்றும் வீட்டு வாடகைப்படியும் வருமான வரிச்சட்டம் பிரிவு 24 ம் மற்றும் பிரிவு 10(13A)ன் படி கழித்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Read More »

HBA : அரசு ஊழியர்களுக்கு வீடுகட்டும் முன்பணம் ஆசிரியர்கள் அனைவருக்கும் கிடைக்குமா? விரிவான விளக்கம்


வட்டி வீதம்:


கடன் தொகையில்


முதல் 50,000 ரூபாய் வரை : 5.5 %
50,001 முதல் 1,50,000 வரை : 7%
1,50,001 முதல் 5,00,000 வரை: 9%
5,00,000க்கு மேல் : 10%


இது இன்றைய தேதியில் உள்ள வட்டி வீதம். இது ஒரு சதம் குறைந்ததும் உண்டு; கூடியதும் உண்டு. என்றாலும் நாம் கடன் பெறும்போது என்ன வட்டி வீதமோ அதன்படிதான் கடன் முடிவில் வட்டிக் கணக்கீடு இருக்கும். மேலும் மாத இறுதியில் நிலுவையாயுள்ள கடனுக்கு மட்டுமே தனி வட்டி.
கடன் வரம்பு:

அரசுப் பணியாளரின் அடிப்படை ஊதியம், தர ஊதியம், தனி ஊதியம், சிறப்பு ஊதியம், அகவிலைப்படி ஆகியவற்றின் எழுபத்தைந்து மாத ஊதியத்தின் கூடுதல் தொகையே கடன் வரம்பு. இதற்கான உச்சவரம்பு ரூ. 25,00,000. கணவன் - மனைவி இருவருமே அரசுப் பணியாளர் எனில், இருவரது எழுபத்தைந்து மாத ஊதியத்தின் கூடுதல் தொகையைக் கடனாகப் பெறலாம். அப்போதும் உச்சவரம்பு ரூ. 25,00,000/-க்கு உட்பட்டே இருக்கும். கடன் தொகை யாரேனும் ஒருவர் பெயரில் வழங்கப்படும். ஒருவரிடமே கடன் பிடித்தமும் செய்யக்கூடும்.


யாரெல்லாம் கடன் பெறலாம்?:


சம்பள ஏற்ற முறையில் ( Scale of Pay) முறையான அரசுப் பணியில் ஆறு ஆண்டு காலம் நிறைவுசெய்த அரசுப் பணியாளர், ஆசிரியர், கல்லூரி விரிவுரையாளர் என அனைவரும் விண்ணப்பிக்கலாம்.


கடனின் பல்வேறு பிரிவுகள்:

1) தனது பெயரில் வீட்டு மனை உள்ள பணியாளர் வீடு கட்டுவதற்குக் கடன் கோரலாம். கூரை மட்டம்வரை முதல் தவணையும், அதற்கு மேல் வீட்டைக் கட்டி முடிக்க இரண்டாவது தவணையும் கிடைக்கும்.


2) வீட்டு மனை இல்லாதோர் மனை வாங்கவும், வாங்கிய மனையில் வீடு கட்டவுமாக இரண்டுக்கும் ஒருசேர கடன் கேட்டு விண்ணப்பிக்கலாம். மனைக்கு 20%முதல் தவணை; பின்னர் வீட்டைக் கட்டி முடிக்க இரு தவணை என மொத்தம் மூன்று தவணைகளில் கடன் விடுவிக்கப்படும்.


3) தனிநபர், தனியார் நிறுவனங்கள் கட்டித்தரும் ஆயத்த வீட்டை வாங்க ஒரே தவணையில் கடன் பெறலாம். பொதுப்பணித்துறையின் செயற்பொறியாளர் தரும் சான்றின் அடிப்படையில் வீட்டின் மதிப்பு கணக்கிடப்பட்டு, வரம்புக்கு உட்பட்டு கடன் தரப்படும்.


4) தனியார் விற்பனை செய்யும் அடுக்ககம் வாங்கவும் கடன் உண்டு. தவணை மொத்தம் மூன்று.


5) தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் கட்டி விற்பனை செய்யும் வீடு வாங்கவும், ஒரே தவணையில் கடன் பெறலாம்.


6) தற்போது சொந்தமாக உள்ள வீட்டை விரிவுபடுத்தவும், சீரமைக்கவும் கடன் உண்டு.


7) தன் பெயரிலான மனையில், தனது சொந்த சேமிப்பைக் கொண்டு வீட்டைக் கட்ட ஆரம்பித்த ஒரு பணியாளர், ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் வீடு கட்ட பணவசதி இல்லாத நேர்வில், எஞ்சியுள்ள வேலைக்கான மதிப்பீட்டின்படி கடன் பெறலாம்.


8) தனது பெயரில் மனை இல்லாத பணியாளர், மனைவி பெயரிலான மனை மீது வீடு கட்டக் கடன் விண்ணப்பிக்கலாம். மனைவியிடமிருந்து ஒரு இருபது ரூபாய் முத்திரைத் தாளில் இசைவுக் கடிதம் பெற்று சமர்ப் பித்தால் போதும். இதற்குத் தனியே துறைத் தலைமை அனுமதி பெறவேண்டியதில்லை.


9) வீட்டுக் கடனுக்கு விண்ணப்பித்த ஒருவர் அது ஏற்கப்படாத நிலையில், அவசரம் கருதி தனிநபரிடம்/வங்கி மூலம் கடன் பெற்று வீட்டு வேலையத் தொடங்கலாம்; தக்க உறுதிமொழியைத் தந்து, அரசுக் கடன் வரப்பெற்றதும் மேற்படி கடனை அடைக்கலாம்.


10) கூட்டுக்குடும்ப வீட்டில் பாத்தியதை உள்ள பணியாளர் தனக்கென வீடு கட்டிக்கொள்ளக் கடன்கோரி விண்ணப்பிக்கலாம்.



விண்ணப்பம்:

வீட்டு மனை எந்த மாவட்டத்தில் உள்ளதோ, அந்த மாவட்ட ஆட்சி யருக்குத்தான் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். வீடுமனை பத்திரம், மனை ஆகியன மனைவி பெயரில் இருப்பின் இசைவுக் கடிதம், வில்லங்கச் சான்று இவற்றுடன் கீழ்க்காணும் ஆவணங்களையும் இரட்டைப் பிரதிகளில் இணைத்துச் சமர்ப்பிக்கவேண்டும்.


* மனை வரைபடம்


* வீட்டு வரைபடம் ( உள்ளாட்சி அனுமதியுடன் )


* கட்டுமானச் செலவு பற்றிய விரிவான மதிப்பீடு மற்றும் சுருக்க மதிப்பீடு


* மனை உரிமையைக் காட்டும் சிட்டா/ அடங்கல் உள்ளிட்ட கிராம நிர்வாக அலுவலர்/வட்டாட்சியர் சான்று


* அரசு வழக்கறிஞரின் சட்ட ஒப்புதல் (Legal opinion )


* அலுவலகத்திலிருந்து பெற்ற சம்பளச் சான்று


* உத்தேசப் பணிக்கொடை கணக்கீட்டுப் படிவம்


கடன் ஏற்பளிப்பு:


மேற்கண்ட ஆவணங்களுடன் கூடிய விண்ணப்பம் சரியாக இருப்பின் நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றதும் முன்னுரிமை வரிசைப்படி கடன் ஏற்பளிப்பு ஆணை வழங்கப்படும். படிவம் 5-ல் ஒப்பந்தப் பத்திரம் எழுதித்தந்த பின் முதல் தவணை வழங்கப்படும்.


முதல் தவணை பணத்தைக் கொண்டு கூரை மட்டம் வரை வீட்டை கட்டியபின் பொறியாளரிடமிருந்து பெற்ற பயன்பாட்டு (Utilization Certificate) சான்றுடன், படிவம் 3-ல் பெற்ற கடனுக்கு வீட்டை அரசுக்கு அடமானம் எழுதித்தர வேண்டும்.


இந்த அடமானப் பத்திரத்தை சார் பதிவகத்தில் பதிவுசெய்துவிட்டு வந்து ஒப்படைத்த பின் மாவட்ட ஆட்சியர்/ நேர்முக உதவியாளர் / கோட்ட ஆட்சியர் வீட்டை ஆய்வு செய்வார். வரைபடத்தின்படி வீடு கட்டப்பட்டுள்ளதை உறுதிசெய்து சான்றளித்த பின் இரண்டாவது தவணை கிடைக்கும்.


ஆயத்த வீடு வாங்குவோருக்குக் கடனை திருப்பிச் செலுத்த ஒப்பந்தப் பத்திரம் எழுதித் தந்ததும் ஒரே தவணையில் கடன் தரப்படும். இரண்டு மாதத்தில் வீட்டை வாங்கிப் பத்திரப் பதிவு செய்ய வேண்டும். ஆறு மாத காலத்துக்குள் வாங்கிய வீட்டை அரசுக்கு அடமானம் எழுதிப் பதிவு செய்ய வேண்டும்.


கடன் பிடித்தம்:

ஆயத்த வீட்டுக்குக் கடன் பெற்றவர் களுக்குக் கடன் வழங்கப்பட்ட மறு மாதமே பிடித்தம் தொடங்கும், புதிய வீடு கட்ட/வீட்டை விரிவுபடுத்த கடன் பெற்றவர்களுக்குப் புதிய வீட்டில் குடியேறிய மாதம் அல்லது முதல் தவணை பெற்ற தேதியிலிருந்து பதினெட்டாவது மாதத்தில் கடன் தவணை பிடித்தம் செய்யப்படும். இதற்கு அதிகபட்சம் 180 மாதத் தவணைகள்; பின்னர் வட்டி, இதற்கான அதிகபட்ச தவணை 60 மாதங்கள். ஆக, இருபது ஆண்டுகளுக்கு மிகாமல் கடனும் வட்டியும் பிடித்தம் செய்யப்படும்.


இருபது ஆண்டுகளுக்குக் குறை வாகப் பணிக்காலம் உள்ள அரசுப் பணியாளரும் விண்ணப்பிக்கலாம். எஞ்சியுள்ள பணிக்காலத்துக்கு ஏற்றாற்போல் கடன் தொகையும், தவணைக் காலமும் நிர்ணயிக்கப்பட்டு கடன் வழங்கப்படும். சில நேர்வுகளில் வட்டித்தொகையைப் பணிக்கொடையில் பிடித்தம் செய்யவும் கூடும்.


காப்பீடு:

வீட்டைக் கட்டி முடித்ததும் கடன் தொகை மற்றும் வட்டித் தொகை ஆகியவற்றின் கூடுதல் மதிப்புக்கு வீட்டைக் காப்பீடு செய்து காப்பீட்டை கடன் முடியும் வரை புதுப்பித்தல் வேண்டும். காப்பீடு செய்யத் தகுதியான ஐந்து நிறுவனங்கள் அரசுப் பட்டியலில் உள்ளன. அவற்றில் மட்டுமே காப்பீடு செய்ய வேண்டும். கடனும் வட்டியும் பிடித்தம் செய்யப்படும்வரை ஆவணங்கள் அனைத்தும் மாவட்ட ஆட்சியரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருக்கும். கடன் தொகையை வட்டியுடன் கட்டி முடித்தபின் அடமானப் பத்திரத்தை ரத்து செய்துவிட்டு வந்து ஆவணங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.


சிறப்பு குடும்ப நலத்திட்டம்:


வீடு கட்டும் கடன் பெற்றோருக்கெனக் குடும்ப பாதுகாப்புத் திட்டம் செயல்பட்டு வருகிறது. இதன்படி, தவணைத் தொகையில் ஒரு சதவீதத் தொகையை மாதச் சந்தாவாகச் செலுத்திவர வேண்டும். கடன்பெற்ற பணியாளர் இறக்கும் பட்சத்தில் கடனும் வட்டியும் இத்திட்டத்தின் மூலம் தள்ளுபடி செய்யப்படும்.


1) தனது பெயரில் வீட்டு மனை உள்ள பணியாளர் வீடு கட்டுவதற்குக் கடன் கோரலாம். கூரை மட்டம்வரை முதல் தவணையும், அதற்கு மேல் வீட்டைக் கட்டி முடிக்க இரண்டாவது தவணையும் கிடைக்கும். 2) வீட்டு மனை இல்லாதோர் மனை வாங்கவும், வாங்கிய மனையில் வீடு கட்டவுமாக இரண்டுக்கும் ஒருசேர கடன் கேட்டு விண்ணப்பிக்கலாம். மனைக்கு 20%முதல் தவணை; பின்னர் வீட்டைக் கட்டி முடிக்க இரு தவணை என மொத்தம் மூன்று தவணைகளில் கடன் விடுவிக்கப்படும். 3) தனிநபர், தனியார் நிறுவனங்கள் கட்டித்தரும் ஆயத்த வீட்டை வாங்க ஒரே தவணையில் கடன் பெறலாம். பொதுப்பணித்துறையின் செயற்பொறியாளர் தரும் சான்றின் அடிப்படையில் வீட்டின் மதிப்பு கணக்கிடப்பட்டு, வரம்புக்கு உட்பட்டு கடன் தரப்படும்.
Read More »

1st Standard - Term 3 - QR Code Register

Read More »

2nd Standard - Term 3 - QR Code Register

Read More »

QR Code Record class 1 to 8

Read More »

வருமான வரி படிவம் தயார் செய்ய டிசம்பர் வரையிலான E payslip பதிவேற்றம்!



இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. வருமான வரி படிவம் தயார் செய்ய தங்களின் மார்ச் 19 முதல் டிசம்பர் 19 வரையிலான ஊதிய விவரங்களை கீழ் கண்ட link click செய்து அறிந்து கொள்ளவும்.

http://epayroll.tn.gov.in/epayslip/Login/EmployeeLogin.aspx
Read More »

Income Tax 2019 - 2020 செலுத்தும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

🛡 அரசின் நேரடி வரி வருவாயில் உறுதியான பெரும் பங்கை அளிப்பவர்கள் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களுமே!


🛡 பொதுப் புத்தியில் அரசின் நிதிச் சுமைக்குக் காரணமானவர்களெனத் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ள அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தான் நாட்டின் வரி வருவாயில் உறுதியான நேரடி வரியாக வருமான வரி, கல்வி வரி & தொழில் வரியினை ஆண்டுதோறும் மார்ச் 31-ம் தேதிக்குள்ளாக 100% செலுத்தி வருகின்றனர்.


🛡 சராசரியாக மாதம் ரூ.42,000/-ற்கு மேல் நிகர ஊதியம் பெறுவோர், 2019-20-ம் நிதியாண்டில் பெற்ற ஊதியத்திலிருந்து 2020-21-ம் ஆண்டிற்கான வருமான வரியாக தங்களது ஒரு மாத ஊதியத்தினைச் செலுத்தியாக வேண்டும்.


🛡 இவ்வாறாக, ஆண்டின் 12 மாதங்களுக்கு 11 மாத ஊதியத்தினை மட்டுமே பெறும் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் நேரடி வரி வருவாயோடே கூடுதலாக, சக குடிமகன்கள் போன்றே தாங்கள் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து நுகர்வுப் பொருள்கள் மீதான மறைமுக வரியினையும் செலுத்தி வருகின்றனர்.


🛡 தங்களது பொருளாதார நடவடிக்கைகள் அனைத்திலும் வரி செலுத்தி வரும் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் வருமானவரி கழிவிற்காக மேற்கொள்ளும் முதலீடுகளும் 99% அரசின் வருவாய் சார்ந்ததாகவே இருக்கின்றன.

அவ்வகையில், தனி நபர் வருமான வரிப் படிவம் தயாரிப்பில் கவனத்தில் கொள்ள வேண்டியவை :


🛡 ரூ.50,000/- நிலையான கழிவு அனைவருக்கும் உண்டு.


🛡 வீட்டுக்கடன் வட்டி ரூ.2,00,000/- வரை கழிக்கலாம்.


🛡 80C-ல் நல நிதியைப் பொறுத்தவரை GPF, PPF, SPF, FBF உள்ளிட்ட நல நிதிகளே அடங்கும்.


🛡 CPS பிடித்தத்தினை 80CCD-ல் தான் கழிக்க வேண்டும்.


🛡 GPF சந்தாதாரர்களுக்கு 80C-ல் வரும் ரூ.1,50,000/- மட்டுமே கழிக்க இயலும்.


🛡 CPS சந்தாதாரர்களைப் பொறுத்தவரை, 80C & 80CCD-ல் ரூ.1,50,000/-மும் 80CCD(1B)-ல் கூடுதலாக ரூ.50,000/-மும் கழித்துக் கொள்ளலாம்.


🛡 80D-ல் NHIS பிடித்தத்தைக் கழிப்பதோடு, குடும்ப உறுப்பினர்களுக்கான மருத்துவக் காப்பீடுகளையும் கழித்துக் கொள்ளலாம். மேலும், காப்பீடு செய்துகொள்ளாத 60 வயதிற்கு மேற்பட்ட பெற்றோரின் மருத்துவச் செலவுகளையும் கழிக்கலாம். 80D-ல் மொத்தமாக ரூ.1,00,000/- வரை கழிக்கலாம்.


🛡 80DD-ல் மாற்றுத்திறனாளியைக் குடும்ப உறுப்பினராகக் கொண்டோர் அவர்களுக்கான காப்பீடு & மருத்துவச் செலவாக, இயலாமை % 40-79 எனில் ரூ.75,000/-ம் 80%-ற்கு மேல் எனில் ரூ.1,25,000/- வரையும் கழிக்கலாம்.


🛡 80U-ல் மாற்றுத்திறனாளிக்கான சிறப்புக் கழிவாக, இயலாமை % 40-79 எனில் ரூ.75,000/-மும் 80%-ற்கு மேல் எனில் ரூ.1,25,000/- வரையும் கழிக்கலாம். இப்பிரிவில் குடும்ப உறுப்பினர்களுக்கு கழிக்கக் கூடாது.


🛡 80DDB-ல் நரம்பியல், முடக்குவாதம், புற்றுநோய், எய்ட்ஸ், சிறுநீரகச் செயலிழப்பு, இரத்த ஒழுக்கு, இரத்த சோகை உள்ளிட்ட நோய்களுக்கான சிகிச்சைச் செலவுகளை ரூ.40,000/- அல்லது ரூ.1,00,000/- வரை கழிக்கலாம்.


🛡 80E-ல் குடும்பத்தாரின் 8-வருடங்களுக்குட்பட்ட உயர்கல்விக் கடனுக்கான வட்டியை முழுமையாகக் கழிக்கலாம்


🛡 80EEB-ல் மின்சாரத்தில் இயங்கும் போக்குவரத்துச் சாதனங்களை (ஏப்ரல் 2019 - மார்ச் 2023) கடனில் வாங்கியதற்கான வட்டியைக் கழிக்கலாம்.


🛡 80G-ல் தனியார் தொண்டு நிறுவனங்களுக்கான நன்கொடையில் 50%-மும் அரசு நிவாரண உதவிகளுக்கான நன்கொடையில் 100%-மும் கழிக்கலாம்.


🛡 80GGA-ல் அறிவியல் ஆராய்ச்சி / கிராமப்புற வளர்ச்சிக்கான நன்கொடையில் 100% கழிக்கலாம்.


🛡 80GGC-ல் அரசியல் கட்சிகளுக்கான நன்கொடையில் 100% கழிக்கலாம். (ஊதியத்தில் 10% வரை நன்கொடையாக வழங்கலாம்)


🛡 மேற்கண்ட அனைத்துக் கழிவுகளும் போக வரிக்கான நிகர வருமானம் ரூ.5,00,000/- வரை வருவோருக்கு, வருமான வரியில் சிறப்புக் கழிவாக ரூ.12,500/- அனுமதித்துள்ளதால் வரிக்கான நிகர வருமானம் ரூ.5,00,000/- வரை உள்ளோருக்கு வருமான வரி வராது.


🛡 வரிக்கான நிகர வருமானம் ரூ.5,00,000/-க்கும் மேல் வருவோருக்கு,*
*2,50,001 - 5,00,000.  = 5%

*5,00,001 - 10,00,000 = 20%

*10,00,001-ற்கு மேல் = 30%
*வருமான வரி செலுத்த வேண்டும்.
Read More »

TERM 3 - FA(B) Questions - 1 to 5 All subjects

Read More »

TERM 3 - 5th Std - SALM TRAY CARDS

Read More »

TERM 3 - 4th Std - SALM TRAY CARDS

Read More »

5th - Term 3 - Mindmaps - All Subjects

Read More »

INCOME-TAX-NEW CIRCULAR-FINANCIAL YEAR 2019-20

Read More »

4th std Mind Maps All subjects T/M and E/M

Read More »
 

Most Reading

Tags

Sidebar One