எனவே, அனைத்து பள்ளியில் படிக்கும், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர்களின் வருகை பதிவேட்டை, மாவட்ட கல்வி அலுவலரிடம் ஒப்படைக்கும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. திருப்பூர் கல்வி மாவட்டத்துக்குட்பட்ட பள்ளிகளுக்கு, மாவட்ட கல்வி அலுவலர் பழனிசாமி தலைமையில் நேற்று ஆய்வு நடந்தது. அவர் கூறுகையில், ''பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச் 16 வரையில், 187 நாட்களும், பிளஸ் 1 மாணவர்களுக்கு, பிப்., 29 வரையில், 176 நாட்களும் வருகைப்பதிவு நாட்கள் கணக்கிடப்பட்டன,'' என்றார்.
10ம் வகுப்பு வருகை பதிவேடு: கல்வித்துறை அதிகாரி ஆய்வு
Friday, 12 June 2020
திருப்பூர்:திருப்பூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான வருகைப்பதிவேடுகள் பிஷப் உபகாரசாமி மேல்நிலைப்பள்ளியில், நேற்று பள்ளி வாரியாக சரிபார்க்கப்பட்டது.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் மதிப்பெண் மதிப்பீடு அவர்களின் காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்களின் அடிப்படையில், 80 சதவீதமும், வருகை பதிவின் அடிப்படையில், 20 சதவீதமும் வழங்கப்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.
Tags:
educationalnews,
KALVISEITHI
மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு மதிப்பெண், விடைத்தாள்களையும் தயார் நிலையில் வைக்க வேண்டும் - பள்ளி கல்வித்துறை உத்தரவு
மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு மதிப்பெண், விடைத்தாள்களையும் தயார் நிலையில் வைக்க வேண்டும் - பள்ளி கல்வித்துறை உத்தரவு
Tags:
educationalnews,
KALVISEITHI
6 கட்டங்களாக நடக்கும் பள்ளிகள் திறப்பு - மாணவர்களுக்கான வழிமுறைகள் என்ன?

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பள்ளிகள் திறப்பது தள்ளிப் போயுள்ள நிலையில் எப்போது திறக்கலாம் என்ற அறிக்கை வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியா முழுவதும் பள்ளித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் பள்ளிகள் திறப்பும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மீண்டும் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்ற கேள்வி மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.இது சம்மந்தமாக தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மத்திய அரசிடம் சமர்ப்பித்த அறிக்கையில் 6 கட்டங்களாக பள்ளிகள் திறக்கலாம் என பரிந்துரைத்துள்ளது.
முதல் வாரம் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கும், இரண்டாவது வாரம் 9, 10-ம் வகுப்புகளுக்கும், 4ஆவது வாரம் 6 முதல் 8-ம் வகுப்புகளுக்கும், 7ஆவது வாரம் 3 முதல் 5-ம் வகுப்புகளுக்கும் திறக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன் பின்னர் ஒரு மாதம் கழித்து 1 முதல் 3 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், அதன் பின்னர் ஐந்து வாரங்கள் கழித்து நர்சரி பள்ளிகளும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வகுப்பில் 35 மாணவர்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்றும், மாணவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படவேண்டும் என்றும் மாணவர்கள் ஒருநாளில் அமர்ந்த இருக்கையிலேயே தினமும் அமர வைக்கப்படவேஎண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Tags:
educationalnews
பாடத்திட்ட குறைப்பு தொடர்பான கருத்துகளை ஆசிரியர்கள், கல்வியாளர்கள் தெரிவிக்கலாம் மத்திய அமைச்சர் தகவல்
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், ஆகஸ்ட் மாத இறுதியில் பள்ளிகளை திறக்கவும், புதிய கல்வி ஆண்டு தாமதத்தை சரிக்கட்ட பாடத்திட்டத்தை குறைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர்ரமேஷ் பொக்கிரியால் தனது ட்விட்டர் பக்கத் தில் வெளியிட்ட பதிவில், “தற்போதைய சூழ்நிலைகளைக் கருத்தில்கொண்டும், பெற்றோர், ஆசிரியர்கள் வைத்த கோரிக் கைகள் அடிப்படையிலும் புதிய கல்வி ஆண்டில் பாடத்திட்டங்கள் மற்றும் பாடவேளை நேரங்களை குறைக்க அரசு பரிசீலனை செய்துவருகிறது.
ட்விட்டர், பேஸ்புக்கில் பதிவிடலாம்
எனவே, இதுகுறித்த தங்களின் கருத்துகளை ஆசிரியர்கள், கல்வியா ளர்கள் எனது ட்விட்டர் மற்றும் பேஸ்புக் வலைதளங்களில் பதிவிடலாம். அவை பரிசீலனை செய்யப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Tags:
educationalnews,
KALVISEITHI
ஆசிரியர்களுக்கு - Applications of Mathematics in difference domains என்ற தலைப்பில் 10 நாட்கள் பயிற்சி சார்ந்து -இயக்குநரின் செயல்முறைகள்
பள்ளிக் கல்வி - அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து முதுகலை கணித ஆசிரியர்களுக்கு - Applications of Mathematics in difference domains ( பல்வேறு துறைகளில் கணிதத்தின் பயன்பாடுகள் ) என்ற தலைப்பில் பத்து நாட்கள் பயிற்சி அளித்தல் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநரின் செயல்முறைகள்.
Breaking News : தமிழகத்தில் இன்று ( ஜூன் 12 ) மேலும் 1,982 பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் ( 12.06.2020 ) இன்று 1,982 பேருக்கு கொரோனா பாதிப்பு.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 40,698 ஆக அதிகரிப்பு.
சென்னையில் இன்று ஒரே நாளில் ,1479 பேருக்கு கொரோனா தொற்று.
மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:
செங்கல்பட்டு - 128
திருவள்ளூர் - 92
மாவட்ட வாரியான பாதிப்பு.( 12.06.2020 )
மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 1,342
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 40,698 ஆக அதிகரிப்பு.
சென்னையில் இன்று ஒரே நாளில் ,1479 பேருக்கு கொரோனா தொற்று.
மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:
செங்கல்பட்டு - 128
திருவள்ளூர் - 92
மாவட்ட வாரியான பாதிப்பு.( 12.06.2020 )
மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 1,342
2020 - 2021 சவால்களுடன் பயணிக்க உள்ள கல்வியாண்டு
2020 - 2021 சவால்களுடன் பயணிக்க உள்ள கல்வியாண்டு :
கரோனா வைரசை எதிர்கொள்ள NCERT ன் பரிந்துரைகள் ....
1. வாரத்தின் மூன்று நாட்கள் ஒற்றை இலக்க பதிவெண் கொண்ட மாணவரும் , அடுத்த மூன்று நாட்கள் இரட்டை இலக்க பதிவெண் கொண்ட மாணவரும் பள்ளிக்கு வர வேண்டும்.
2. திறந்த வெளி வகுப்புகள் கூடுதல் பாதுகாப்பு தரும்.
3. அதிக பட்சம் ஒரு வகுப்பில் 30 மாணவர்கள் மட்டுமே அனுமதி .
4. மாணவரிடையே 6 அடி இடைவெளியுடன் இருக்கை தர வேண்டும். தமக்கு தரப்பட்ட இருக்கைகள் எப்போதும் மாற்ற கூடாது.
5. தினமும் உடல் வெப்ப பரிசோதனைக்கு பின்னரே ஆசிரியர் , மாணவர் பள்ளிக்குள் அனுமதி . வெப்ப மாறுபாடு இருப்பின் தகுந்த மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவர்.
6. பெற்றோர் - ஆசிரியர் கூட்டம் நடைபெற கூடாது. மாற்றாக தொலைபேசியில் உரையாடலாம்.
7. பள்ளி இடைவேளைகளின் போதும், விளையாட்டு பாட வேளையிலும் மாணவர்கள் உடலால் தனித்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
8. எழுதுபொருள் ,உணவு, தண்ணீர் பாட்டில் என எவற்றையும் பிள்ளைகள் பரிமாறி கொள்ளக் கூடாது.
9. முக கவசம் அணிவது கட்டாயம். கைகளை ஒவ்வொரு இடைவேளையிலும் கழுவுதல் வேண்டும்.
10. ஆறு கட்டங்களாக 3 மாதங்கள் இடைவெளியில் மேல் வகுப்பு முதல் மழலையர் வகுப்பு வரை படிபடியாக திறக்கப்படும்.
எதிர்வரும் கல்வியாண்டு சவால் நிறைந்த பயணம் . அன்பு பிள்ளைகளின் பாதுகாப்பை முதன்மையாக கொண்டு பயணிக்க சித்தமாவோம்.
கரோனா வைரசை எதிர்கொள்ள NCERT ன் பரிந்துரைகள் ....
1. வாரத்தின் மூன்று நாட்கள் ஒற்றை இலக்க பதிவெண் கொண்ட மாணவரும் , அடுத்த மூன்று நாட்கள் இரட்டை இலக்க பதிவெண் கொண்ட மாணவரும் பள்ளிக்கு வர வேண்டும்.
2. திறந்த வெளி வகுப்புகள் கூடுதல் பாதுகாப்பு தரும்.
3. அதிக பட்சம் ஒரு வகுப்பில் 30 மாணவர்கள் மட்டுமே அனுமதி .
4. மாணவரிடையே 6 அடி இடைவெளியுடன் இருக்கை தர வேண்டும். தமக்கு தரப்பட்ட இருக்கைகள் எப்போதும் மாற்ற கூடாது.
5. தினமும் உடல் வெப்ப பரிசோதனைக்கு பின்னரே ஆசிரியர் , மாணவர் பள்ளிக்குள் அனுமதி . வெப்ப மாறுபாடு இருப்பின் தகுந்த மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவர்.
7. பள்ளி இடைவேளைகளின் போதும், விளையாட்டு பாட வேளையிலும் மாணவர்கள் உடலால் தனித்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
8. எழுதுபொருள் ,உணவு, தண்ணீர் பாட்டில் என எவற்றையும் பிள்ளைகள் பரிமாறி கொள்ளக் கூடாது.
9. முக கவசம் அணிவது கட்டாயம். கைகளை ஒவ்வொரு இடைவேளையிலும் கழுவுதல் வேண்டும்.
10. ஆறு கட்டங்களாக 3 மாதங்கள் இடைவெளியில் மேல் வகுப்பு முதல் மழலையர் வகுப்பு வரை படிபடியாக திறக்கப்படும்.
எதிர்வரும் கல்வியாண்டு சவால் நிறைந்த பயணம் . அன்பு பிள்ளைகளின் பாதுகாப்பை முதன்மையாக கொண்டு பயணிக்க சித்தமாவோம்.
Tags:
educationalnews,
KALVISEITHI
குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் (World Day Against Child Labour)
- உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் (ஐ.எல்.ஓ) அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2002ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது. ஐ.எல்.ஓ.வின் உடன்படிக்கைகளின் ஏற்பினால் இந்த நாள் உருவாக்கப்பட்டது
இதன் அடிப்படையில் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்றப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்த இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது
2006 அக்டோபர் 10-ம்
தேதி முதல் வீடு, சாலையோரக் கடைகள், ஓட்டல்கள் போன்ற இடங்களில் வயதிற்கு உட்பட்ட சிறுவர், சிறுமியரை வேலைக்கு அமர்த்த மத்திய அரசு தடைவிதித்துள்ளது
குழந்தைகள் உலகின் எதிர்கால சந்ததியினர். அவர்களுக்கு கல்வி அளிக்காமல் பணிபுரிய செய்தது மிகப்பெரிய கொடுமையாகும். அவர்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது
Tags:
GENERAL NEWS
தொடக்கக்கல்வி இயக்குநருக்கு கூடுதல் பொறுப்பு - முதன்மைச் செயலர் ஆணை!
சுருக்கம்
தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - முனைவர் மு.பழனிச்சாமி , தொடக்கக் கல்வி இயக்குநர் , சென்னை -6 -
அரசு தேர்வுகள் இயக்குநர் பணியிடத்திற்கு முழு கூடுதல் பொறுப்பு வழங்குதல் - ஆணை- வெளியிடப்படுகிறது .
பள்ளிக் கல்வித்பக 101 துறை அரசாணை ( வாலாயம் ) எண் : 57
நாள் 11.06.2020 . திருவள்ளுவர் ஆண்டு 2051 சார்வரி , வைகாசி 29 .
ஆணை : அரசு தேர்வுகள் இயக்குநராகப் பணிபுரியும் திருமதி . சி.உஷாராணி அவர்கள் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் 09.06.2020 முதல் 07.07.2020 வரை மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார் . எனவே அரசு தேர்வுகள் இயக்ககத்தின் பணிகளை கவனிக்கும் பொருட்டு நிர்வாக நலன் கருதி , தற்போது தொடக்கக் கல்வி இயக்குநராகப் பணிபுரியும் முனைவர்
மு . பழனிச்சாமி அவர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்குநர் பணியிடத்தினை நிர்வகிக்கும் பொறுப்பை முழு கூடுதல் பொறுப்பாக வழங்கி அரசு ஆணையிடுகிறது .
( ஆளுநரின் ஆணைப்படி )
தீரஜ் குமார்
அரசு முதன்மைச் செயலாளர் .
தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - முனைவர் மு.பழனிச்சாமி , தொடக்கக் கல்வி இயக்குநர் , சென்னை -6 -
அரசு தேர்வுகள் இயக்குநர் பணியிடத்திற்கு முழு கூடுதல் பொறுப்பு வழங்குதல் - ஆணை- வெளியிடப்படுகிறது .
பள்ளிக் கல்வித்பக 101 துறை அரசாணை ( வாலாயம் ) எண் : 57
நாள் 11.06.2020 . திருவள்ளுவர் ஆண்டு 2051 சார்வரி , வைகாசி 29 .
ஆணை : அரசு தேர்வுகள் இயக்குநராகப் பணிபுரியும் திருமதி . சி.உஷாராணி அவர்கள் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் 09.06.2020 முதல் 07.07.2020 வரை மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார் . எனவே அரசு தேர்வுகள் இயக்ககத்தின் பணிகளை கவனிக்கும் பொருட்டு நிர்வாக நலன் கருதி , தற்போது தொடக்கக் கல்வி இயக்குநராகப் பணிபுரியும் முனைவர்
மு . பழனிச்சாமி அவர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்குநர் பணியிடத்தினை நிர்வகிக்கும் பொறுப்பை முழு கூடுதல் பொறுப்பாக வழங்கி அரசு ஆணையிடுகிறது .
( ஆளுநரின் ஆணைப்படி )
தீரஜ் குமார்
அரசு முதன்மைச் செயலாளர் .

10ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு 37 மதிப்பெண்கள் தேவை - கணக்கீடு செய்வது எப்படி? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.
பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்கு மதிப்பெண்கள் கணக்கிடும் போது காலாண்டுத் தேர்வு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளின் மதிப்பெண்ணும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஒரு மாணவன் 100 சதவீதம் பள்ளிக்கு வருகை புரிந்திருந்தாலும் , ஒரு பாடத்தில் காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் கூடுதல் , குறைந்த பட்சம் 37 மதிப்பெண்கள் இருக்க வேண்டும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று பரவுவதை அடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு , பிளஸ் 1 வகுப்புகளுக்கான தேர்வுகள் முற்றிலும் ரத்து செய்து அரசு உத்தரவிட்டது.
மேற்கண்ட இரண்டு தேர்வுகளிலும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் போது பற்ற அந்த மாணவர்கள் அரையாண்டுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் 80 , வருகைப்பதிவுக்கு 20 என்று கணக்கிட்டு மொத்தம் 100 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு பிறகு , தனியார் பள்ளி மாணவர்களுக்கான மதிப்பெண் , தனித் தேர்வர்களுக்கான மதிப்பெண்களை கணக்கிடுவதில் எப்படி தேர்வுத்துறை கையாளும் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
இதையடுத்து தனித் தேர்வர்களுக்கான மதிப்பீடு பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்வுத்துறை தெரிவித்து விட்டது. ஆனால் தனியார் பள்ளி மாணவர்களுக்கு எப்படி கணக்கிடுவார்கள் என்று இது வரை விளக்கம் அளிக்கவில்லை.இது ஒருபுறம் இருக்க , பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் நேற்று காலை ஈரோடு மாவட்டத்தில் பேட்டி அளிக்கும் போது காலாண்டுத் தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று அரசு அறிவித்த அறிவிப்பில் இல்லாத புதிய தகவலை தெரிவித்துள்ளார்.
இது மாணவர்கள் , ஆசிரியர்கள் இடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் எப்படி கணக்கிடப்படும் என்ற விவரங்கள் அடங்கிய பட்டியல்களை தேர்வுத்துறை தயாரித்துள்ளது.
மாணவன் பள்ளிக்கு 100 சதவீதம் வருகை புரிந்திருந்தாலும் , ஒரு அந்த மாணவன் ஒரு பாடத்தில் காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் கூடுதல் , குறைந்தபட்சம் 37 மதிப்பெண்களாவது இருக்க வேண்டும்.
வருகை சதவீதத்தில் ஒவ்வொரு மதிப்பெண் குறையும் போதும் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் கூடுதல் 2 ல் இருந்து 3 மதிப்பெண்கள் வரை அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் மீத்திறன் குறைந்த மாணவர்களை தேர்ச்சி பெற வைக்க முடியும் , வருகைப் பதிவில் இருந்து கணக்கீடு ( இறங்கு முகம் ) : காலாண்டு , அரையாண்டுத் தேர்வு மதிப்பெண் கணக்கீடு ( ஏறுமுகம் ) ;
பிளஸ் 1 வகுப்பு தேர்ச்சி குறித்து இன்னும் தேர்வுத் துறை முடிவு எடுக்காத நிலையில் பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணி ஒரு புறம் நடந்து கொண்டு இருக்கிறது. 10 நாட்களில் விடைத்தாள் திருத்தும் பணியை முடிக்க வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவித் துள்ளதால் , விரைவாக திருத்தி முடித்து அதில் இருந்து மதிப்பெண்களை வைத்து தேர்ச்சியை அறிவிக்கவும் வாய்ப்புள்ளதாக தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Tags:
educationalnews
பள்ளிகளை எவ்வாறு திறக்க வேண்டும்.? மத்திய அரசுக்கு புதிய அறிவுரை

பள்ளிகளை திறந்து மாணவர்களை எந்த வகையில் பள்ளிக்கு வரவைக்க வேண்டும் என NCERT (National Council of Educational Research and Training) மத்திய அரசுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகள் இன்னும் திறக்கப்படாமல் இருந்து வருகிறது. இதனால், கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளி கல்லூரிகள் இன்னும் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்படாமல் இருந்து வருகிறது.
பள்ளி, கல்லூரி தேர்வுகளும் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் ரத்து செய்யப்பட்டு வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படுமோ என மாணவர்களும், பெற்றோர்களும் காத்திருக்கின்றனர்.இந்நிலையை, பள்ளிகளை திறந்து மாணவர்களை எவ்வாறு பள்ளிக்கு வரவைக்க வேண்டும் என NCERT (National Council of Educational Research and Training) மத்திய அரசுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
அதன்படி, பள்ளிகள் திறக்கப்பட்டால், முதலில் 11,12-ஆம் வகுப்புகளுக்கு மட்டும் திறக்கப்பட வேண்டும். அடுத்த வாரம் 9 மற்றும் 10, அதற்கடுத்த 2வது வாரம், 6 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கும், 3வது வாரம் 3 முதல் 5 வகுப்பு மாணவர்களையும், ஒருமாதம் கழித்து 1 மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் 6 வாரங்களுக்கு பிறகே மழலையர் பள்ளிகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு NCERT அறிவுறுத்தியுள்ளது.
10 மற்றும் 11 ம் வகுப்பு மாணவர்களின் வருகைப் பதிவேடு சமர்ப்பிக்கும் பொழுதுகீழ்க்கண்ட விபரங்கள் சரியாக உள்ளதா?என சரிபார்க்கவும்.
1. வருகைப்பதிவெட்டின் (1-3) பக்கத்தில் உள்ள படிவத்தில்- மாணவர் பற்றி கேட்கப்பட்ட விவரங்கள். Admission no./DOB/Exam Reg.no/CWSN-மாணவரா/இப்பள்ளியில் சேர்ந்த தேதி/address/Scholarshipபெற்றுள்ளாரா/அங்காமச்ச அடையாளங்கள் முதலானவை.
2.10 /11ஆம் வகுப்பு
வருகைப் பதிவேடுகள் *ஒவ்வொரு மாதமும்* மாணவர்களின் வருகையை கூட்டி கூடுதல் (Total number of working days)பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
3.ஒவ்வொரு மாதமும் *வகுப்பாசிரியர் கையொப்பம், தலைமை யாசிரியர்/முதல்வர்* கையொப்பம் இடப்பட்டிருக்க வேண்டும்.
4. ஜீன் மாதம் முதல் மார்ச் மாதம் வரை அனைத்து மாதங்களும் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
Tags:
educationalnews,
KALVISEITHI
ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை - மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு.
கொரானா நோய் கிருமி பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்க காலத்தில் , பள்ளி மாணவர்களிடம் , 2015-2010ஆம் கல்வியாண்டிற்கான நிலுவைக் கட்டணம் மற்றும் 2001 ஆம் கல்வியாண்டிற்கான கல்விக் கட்டணம் ஆகியவற்றை செலுத்த பெற்றோர்களை நிர்பந்தம் செய்யக்கூடாது என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் , ஒரு சில மெட்ரிகுலேசன் பள்ளிகளில் இணைய வழி வகுப்புகள் நடத்த கல்விக் கட்டணம் செலுத்த பெற்றோர்களை நிர்பந்தப்படுத்துவதாக புகார் பெறப்பட்டுள்ளது.
அரசாணையினை மீறி கல்விக் கட்டணம் செலுத்த வற்புறுத்தும் தனியார் பள்ளிகள் மீது விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கத் தெரிவிக்கலாகிறது.
- மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர்
Tags:
Online classes
Subscribe to:
Posts (Atom)