Search

பொது முடக்கத்தில் கல்வி பயிற்றுவிக்க மாற்று வழி: ஆன்லைன் வகுப்புகளுக்கு மத்திய அரசு ஆதரவு

Thursday, 25 June 2020


பொது முடக்கத்தால் மாணவா்களின் கல்வி தடைபடக் கூடாது . அந்த அடிப்படையில், வளா்ந்து வரும் கல்வி பயிற்றுவிக்கும் முறையாக ஆன்லைன் வகுப்புகள் திகழ்ந்து வருவதாக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் புத்தகரம் பகுதியைச் சோந்த சரண்யா என்பவா் தாக்கல் செய்த மனுவில், கரோனா நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் திறக்க தடை விதிக்கப்பட்டது. இதனால், நடப்புக் கல்வியாண்டுக்கான பாடங்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகின்றன.ஆன் லைன் மூலம் வகுப்புகளில் கலந்து கொள்ள மாணவ, மாணவியா் முயற்சிக்கும் போது ஆபாச இணைய தளங்களால் அவா்களுக்குக் கவனம் சிதறல் ஏற்படுகிறது. எனவே அந்த இணையதளங்களை மாணவ, மாணவியா் அணுக இயலாத வகையில் விதிகளை வகுக்க வேண்டும். அதுவரை ஆன் லைன் மூலம் வகுப்புகள் நடத்தத் தடை விதிக்க வேண்டும்.

தமிழகத்தில் 8 சதவீத வீடுகளில் மட்டுமே இணையதள இணைப்புடன் கூடிய கணினி வசதி உள்ளது. ஆன்லைன் முறையில் பாடம் நடத்துவதால் நகா்ப்புற, கிராமப்புற மற்றும் ஏழை பணக்கார மாணவா்களுக்கு இடையே சமநிலையற்ற நிலை உருவாகி இருக்கிறது. மேலும் முறையான ஆன்லைன் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், மாணவா்களும், ஆசிரியா்களும் சவால்களையும், இடையூறுகளையும் சந்திக்கின்றனா்.

எனவே மாணவ, மாணவிகள் ஆபாச இணையதளங்களை பாா்ப்பதைத் தடுக்கும் வகையில், முறையான விதிகளை வகுக்கும் வரை ஆன் லைன் வகுப்புகளை நடத்தத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா். இந்த வழக்கை நீதிபதிகள் ஆா்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோா் காணொலிக் காட்சி மூலம் விசாரித்தனா். அப்போது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் சைபா் சட்டப்பிரிவு சாா்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், உலகம் தற்போது எதிா்கொண்டுள்ள அசாதாரண சூழலில் ஆன்லைன் வகுப்புகள், கல்வி பயிற்றுவிக்கும் தொழில்நுட்ப முறையிலான ஒரு மாற்று வழியாக மாறி வருகிறது. மேலும் தற்போதுள்ள சூழலில் பள்ளிகளைத் திறக்க முடியாது என்பதால், மாணவா்கள் தடையில்லாமல் தொடா்ந்து கல்வி கற்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. மேலும் மனுதாரா் கோரியுள்ள விவரங்களை மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை ஏற்கெனவே உருவாக்கி விட்டது.

இந்தியன் கணினி அவசர சேவை குழு ஆன்லைன் வகுப்புகளின் போது தேவையற்ற விடியோ அல்லது இணையதள இணைப்புகள் தொடா்பாக அவ்வப்போது எச்சரிக்கை தகவல்கள் வழங்கிக் கொண்டே இருக்கும். இந்த சேவை குழு 2020-ஆம் ஆண்டில் மட்டும், 39 அறிவுரை தகவல்களை அனுப்பியுள்ளன. மாணவா்களுக்கு இந்த குழுவின் அறிவுரைகளின்படி, மத்திய, மாநில அரசுகள் ஆன்-லைன் வகுப்புகளை மிகவும் பாதுகாப்பாக நடத்த வழிவகை செய்கிறது. மேலும் இவற்றை மீறி தேவையற்ற விடியோக்கள் ஆன்லைன் வகுப்பின்போது வந்தால், அது தொடா்பாக மனுதாரா் உள்ளூா் போலீசில் புகாா் செய்ய முழு உரிமை உள்ளது. மேலும் மத்திய அரசை பொருத்தவரை பொதுமுடக்கத்தால் மாணவா்களின் கல்வி தடைப்படக்கூடாது என்ற கொள்கையுடன் செயல்படுகிறது.

தற்போது ஆன்லைன் வகுப்புகள் வளா்ந்து வரும் ஒரு கல்வி பயிற்றுவிக்கும் முறையாக மாறி உள்ளது. மேலும் மனுதாரா் இந்த வழக்கில் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தை எதிா்மனுதாரராக சோக்கவில்லை. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆன்லைன் வகுப்புகளால் மாணவா்களின் விழித்திரை பாதிக்கப்படுமா? என்பது தொடா்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதா? எனக் கேள்வி எழுப்பினா். அப்போது அரசுத் தரப்பில், அரசு கண் மருத்துவமனை தலைவா் அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஆன்லைன் வகுப்புகள் தொடா்பான அனைத்து வழக்குகளையும் வரும் ஜூலை 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.
Read More »

ஸ்மார்ட் போன் வாங்கும் வசதி இல்லாத மாணவர்கள் : ஒலிபெருக்கி மூலம் பாடம் நடத்திய ஆசிரியர்

images%252B%2525281%252529

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தும்கா மாவட்டத்தில் பங்கதி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் சுமார் 246 மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களில் 200-க்கும் மேற்பட்டோருக்கு ஸ்மார்ட் போன் வாங்கும் வசதி இல்லை. இதனால் மாணவர்களுக்கு எப்படி பாடம் நடத்தலாம் என்று யோசித்தார். 
அப்போது ஒலிபெருக்கி அவருக்கு ஞாபகம் வந்தது. அந்த கிராமத்தில் அதிகமான மாணவர்கள் இருக்கும் இடங்களில் அமைந்திருக்கும் பெரிய மரத்தில் இந்த ஒலிபெருக்கியை கட்டினார். 
அதேபோல் மின்கம்பத்திலும் கட்டினார்.
பின்னர் பள்ளிக்கூட வகுப்பறையில் இருந்து ஆசிரியர்களை மைக் மூலம் பாடம் எடுக்கச் சொல்ல, மாணவர்கள் மரத்தின் அடியில் இருந்து பாடங்களை கற்பிக்க ஆரம்பித்தனர். கடந்த ஏப்ரல் மாதம் 16-ந்தேதியில் இருந்து தினந்தோறும் இரண்டு மணி நேரம் இப்படி பாடம் கற்பிக்கப்பட்டு வருவதாக அந்த தலைமையாசிரியர் ஷியாம் கிஷோர் சிங் காந்தி தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து ஷியாம் கிஷோர் சிங் காந்தி கூறுகையில் ”மாணவர்கள் அதிகமான இடங்களில் ஒலிபெருக்கிகளை கட்டி வைத்துள்ளோம். ஏழு ஆசிரியர்கள் வகுப்பறையில் இருந்து மைக் மூலம் பாடம் எடுப்பார்கள். எங்கள் பள்ளில் 246 மாணவர்கள் உள்ளனர். இதில் 204 மாணவர்களிடம் போன் கிடையாது. 
தினந்தோறும் காலை 10 மணிக்கு வகுப்பு தொடங்கும். மாணவர்களுக்கு ஏதாவது சந்தேகம் அல்லது ஏதாவது கேட்க விரும்பினால், அவர்களுடைய கோரிக்கையை யாராவது ஒருவர் செல்போனில் இருந்து எனக்கு அனுப்புவார்கள். அடுத்த நாள் அதற்கான விளக்கம் அளிக்கப்படும்” என்றார். 
இந்த பள்ளிக்கூடத்தின் திறமையை பார்த்து அந்த மாவட்டத்தின் அனைத்து பள்ளிகளிலும் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கல்லிவித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
Read More »

பாடநூல்கள் விநியோகத்தில் விதிமீறல்: பள்ளிக் கல்வித்துறை புதிய உத்தரவு


மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலகப் பணியாளா்கள் மற்றும் பள்ளியில் உள்ள அமைச்சு பணியாளா்கள் மூலமாகவே பள்ளிகளுக்கு பாடநூல்கள் முறையாக விநியோகிக்கப்பட வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக 3 கோடி பாடப்புத்தகங்கள் அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவற்றை பள்ளிகளுக்கு அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் கொண்டு சோக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.தற்குமாறாக பெரும்பாலான பகுதிகளில் தலைமையாசிரியா்கள் முறையான பாதுகாப்பின்றி புத்தகங்களை எடுத்துச் செல்வதாக கல்வித்துறைக்கு புகாா்கள் வந்தன. இதுதொடா்பாக, பள்ளிக்கல்வி இயக்ககம் சாா்பில், அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், 'மாவட்ட, வட்டாரக்கல்வி அலுவலக பணியாளா்கள் மற்றும் பள்ளியில் உள்ள அமைச்சு பணியாளா்கள் மூலமாகவே பள்ளிகளுக்கு பாடநூல்கள் முறையாக விநியோகிக்கப்பட வேண்டும். புத்தகங்களை வாகனங்கள் மூலமாக மட்டுமே எடுத்துச்செல்ல வேண்டும்'என்று கூறப்பட்டுள்ளது.
Read More »

PG Vacancy List - School Wise As On 01.06.2020

Click Here To Download - PG Vacancy List - School Wise As On 01.06.2020 - Pdf

Read More »

NEET , JEE Main தேர்வுகளை ஒத்திவைக்க முடிவு!

கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் CBSE 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மத்திய அரசு தள்ளி ரத்து செய்துள்ள நிலையில் , NEET , JEE Main தேர்வுகளை ஒத்திவைக்க மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது .

நஜூலையில் நடைபெறவிருந்த NEET , JEE Main தேர்வுகளை ஒத்திவைக்க முடிவு ஆகஸ்ட் மாத இறுதி அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் தேர்வுகளை நடத்த முடிவு  தேர்வுகளை ஒத்திவைக்க மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது
Read More »

மதிப்பெண்ணுக்கு பதிலாக கிரேடு முறையில் தேர்ச்சி - கல்வி துறை ஆலோசனை


கொரோனா நோய்த் தொற்று காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டு இருக்கின்றன. நோயின் தாக்கம் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டும், மாணவர்கள் நலனை கருதியும் ஒத்திவைக்கப்பட்டு இருந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகளையும், பிளஸ்-1 தேர்வின் இறுதிநாள் பொதுத்தேர்வையும் தமிழக அரசு ரத்து செய்தது .

மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் 80 சதவீதமும், வருகைப்பதிவு அடிப்படையில் 20 சதவீதமும் என மதிப்பெண் வழங்க முடிவு செய்து இருப்பதாகவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதற்கான பணிகளில் கல்வித்துறை கடந்த சில நாட்களாக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் காலாண்டு, அரையாண்டு தேர்வு அடிப்படையில் மதிப்பெண் வழங்குவதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அரசு கேட்கும் விடைத்தாள்கள் இல்லாதது

 , இந்த 2 தேர்வுகளிலும் மாணவர்கள் குறைவான மதிப்பெண் பெற்றது உள்பட பல்வேறு கருத்துகள் அதில் மேலோங்கி இருக்கிறது. இதன் காரணத்தால் மதிப்பெண் வழங்குவதில் நடைமுறை சிக்கல்கள் நீடிக்கிறது.

இதனை கருத்தில்கொண்டு, எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு மதிப்பெண்ணுக்கு பதிலாக ஏ, பி, சி என்ற ‘கிரேடு’ முறையில் தேர்ச்சி வழங்கலாமா? என்பது குறித்து அடுத்தக்கட்டமாக கல்வித்துறை அதிகாரிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். இந்த கிரேடு முறைக்கு கல்வியாளர்கள், ஆசிரியர் சங்கங்களும் ஏற்கனவே ஆதரவு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

 அதிகாரிகள் ஆலோசனையை முடித்து ஒரு தீர்வுக்கு வந்த பிறகு, பள்ளிக்கல்வி துறை அமைச்சரிடம் இதுதொடர்பாக தெரிவிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

அதன்பின்னர், முதல்-அமைச்சருடன், அமைச்சர் கலந்து ஆலோசித்த பிறகு கிரேடு முறையிலான தேர்ச்சியை நடைமுறைப்படுத்துவது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read More »

கொரோனா கணக்கெடுப்பு பணி ஆசிரியர்கள் " ஸ்ட்ரீட் வாரியர் " என்று அழைக்கப்படுவர்!


சென்னையில் கொரோனா கணக்கெடுப்பு பணிக்கு வராத மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரித்துள்ளார்.
சென்னையில் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆயிரம் ஆசிரியர்கள் கொரோனா கணக்கெடுப்பு பணியில் ஈடுபட மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.


அதன்படி, ஆசிரியர்கள் நேரடியாக கொரோனா பாதித்த இடங்களுக்கு சென்று கணக்கெடுப்பு நடத்தி, தகவல்களை பதிய வேண்டும் என்றும் இந்த பணியில் ஈடுபடுவோர் ஸ்ட்ரீட் வாரியர் என அழைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், அதிர்ச்சியடைந்துள்ள மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் தங்களை கட்டாயப்படுத்தி கொரோனா களப்பணியில் ஈடுபட வைப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர்.


களப்பணியின் போது கொரோனா பாதித்தவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினால் போதும் என்ற நிலையில், இந்த பணியை வீட்டில் இருந்தே செய்ய முடியும் என்றும் இதனை மாநகராட்சி நிர்வாகம் ஏற்க மறுப்பதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.
Read More »

பள்ளிக் கல்வி - கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு 3 ஆண்டுகள் தொடர் பணி நீட்டிப்பு ஆணை வழங்கி அரசாணை வெளியீடு.


GO NO : 85 , DATE : 25.06.2020

பள்ளிக்கல்வி - மேல்நிலை பள்ளிகள் - கணினி பயிற்றுநர் - 1880 தற்காலிக பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது தற்போது பணிபுரிந்து வரும் 1463 பணியிடங்களுக்கு ( கணினி பயிற்றுநர் நிலை- II ) - 01.01.2020 முதல் 31.12.2022 வரை மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.

Computer Instructor Pay Continuation Order - Download here... ( 3 pages ) 
Read More »

ஜூன் 2020 சம்பள தேதி என்ன?- நீங்களே தெரிந்து கொள்ளலாம் - Direct Link

தமிழக அரசின் உத்தரவின் பேரில் அனைத்து கருவூலத்திலும் சம்பள பட்டியல் குறித்த நேரத்தில் பட்டியலிடபட்டது.
எனவே இம்மாத சம்பளம் குறித்த நேரத்தில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிகிறது. உங்கள் இம்மாத ஊதியம் எப்போது கிடைக்கப்பெறும் என்பதை நீங்களே நேரிடையாக அறிந்து கொள்ளலாம்

Read More »

Breaking News : தமிழகத்தில் இன்று ( ஜூன் 25 ) மேலும் 3,509 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் ( 25.06.2020 ) இன்று 3,509 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 70,977 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,834   பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்: 2,236

மதுரை - 204

வேலூர் - 168

செங்கல்பட்டு - 191

திருவள்ளூர் - 170

மாவட்ட வாரியான பாதிப்பு.( 25.06.2020 )

Read More »

வாகனங்கள் வெளிவிடும் புகையை எதற்காகச் சோதிக்கிறார்கள்?

வாகனத்தின் என்ஜினில் எரிபொருள் எரிந்து புகை வெளிப்படுகிறது. இதில் கரித்துகள், கார்பன் மோனாக்சைடு.
கார்பன்-டை- ஆக்சைடு, நீராவி, சல்பர்-டை-ஆக்ஸைடு, காரியம் முதலியவை கலந்திருக்கும். இவற்றுள் கார்பன் மோனாக்சைடு, காரீயம் தீங்கு விளைவிக்கக் கூடியன. இவை நச்சுத்தன்மை வாய்ந்தவை

வாகனங்கள் வெளியிடும் புகையில், கார்பன் மோனாக்ஸைடின் அளவை கண்டுபிடிப்பதற்காகச் சோதனையிடுகிறார்கள். இதன் மதிப்பு 4.5 ppm அளவுக்கு குறைவாக இருந்தால் என்ஜினை இயக்கலாம் இல்லையென்றால் பழுது பார்க்கப்பட வேண்டும் என எச்சரிப்பார்களாள்.

காரியத்தைத் தவிர்ப்பதற்காக வாகனத்தில் காரியம் கலக்காத எரிபொருளைப் பயன்படுத்த வேண்டும். அதற்கு என்ஜினில் சில மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கும்
Read More »

பதவியும் ஊதியக்குழுக்களின் ஊதிய நிர்ணயமும்! அறிவோம் !!

https://lh3.googleusercontent.com/-lKZvd8DZsfY/WfH2BpJDDrI/AAAAAAAAZhY/w8r-UCDMGdo71E2ZU6jatiA9odrVJCiUQCHMYCw/s400/IMG-20171026-WA1226.jpg

Read More »

FLASH NEWS - CTET ஆசிரியர் தகுதித் தேர்வு ஒத்திவைப்பு!

IMG-20200625-WA0014

ஜூலை 5ம் தேதியன்று நடத்தப்பட இருந்த மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (CTET) கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்க முடிவு!

முன்னர் அறிவித்தபடி, 05/07/2020 அன்று நடைபெற திட்டமிடப்பட்ட மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சி.டி.இ.டி) - ஜூலை 2020 இன் 14 வது பதிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  பரீட்சைகளை நடத்துவதற்கு நிலைமை மிகவும் உகந்ததாக இருக்கும்போது அடுத்த தேதி தேர்வு தெரிவிக்கப்படும்.  CTET ஜூலை 2020 க்கு பதிவுசெய்யப்பட்ட அனைத்து வேட்பாளர்களும் எந்தவொரு புதுப்பித்தலுக்கும் அவர்கள் CTET வலைத்தளமான www.ctet.nic.in ஐ தவறாமல் பார்வையிடலாம் என்று இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது.

- மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்
Read More »

பாட திட்டத்தில் உள்ள பாடங்களை குறைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு!


கடந்த ஆண்டு பாட திட்டத்தில் உள்ள பாடங்களை குறைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோபிச்செட்டிப்பாளையத்தில் 150 புகைப்பட கலைஞர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய அமைச்சர் செங்கோட்டையன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். 1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய பாட புத்தகங்கள், வரும் 30 ம் தேதிக்குள் அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பப்படும் என கூறினார்.

கொரோனா வைரஸ் காரணமாக பள்ளி வேலை நாட்கள் குறைந்துள்ளதால், கடந்த ஆண்டு பாட திட்டத்தில் உள்ள பாடங்களை குறைக்க அமைக்கப்பட்டுள்ள 18 பேர் கொண்ட குழுவின் அறிக்கையை பெற்று, அதன் அடிப்படையில், பாடதிட்டங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
Read More »

உடல் எடை அதிகரிப்பு மற்றும் சர்க்கரை நோயிலிருந்து விடுபட இதனை பின்பற்றவும்

அவுரிநெல்லிகளின் ஆரோக்கிய குணங்களில் ஒன்று மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும் திறன் ஆகும். இது ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியுள்ளன. அவை மூளையை இலவச தீவிர சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன மற்றும் ஆரோக்கியமான மூளை வயதை வலுவாக்குகின்றன. ஒரு ஆய்வின்படி, ஒவ்வொரு நாளும் 12 வாரங்களுக்கு புளுபெர்ரி சாறு குடிப்பது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும்.அவுரிநெல்லிகளில் நார், பொட்டாசியம், ஃபோலேட், வைட்டமின் சி, வைட்டமின் பி 6 மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்ஸ் அடங்கியுள்ளன . இந்த ஊட்டச்சத்துக்கள் இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கின்றன. நார்ச்சத்து உள்ளடக்கம் ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரோலை குறைக்கவும், இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. அவுரிநெல்லிகளில் உள்ள முதன்மை ஆக்ஸிஜனேற்றியான அந்தோசயினின்கள் இளம் மற்றும் நடுத்தர வயது பெண்களில் மாரடைப்பு அபாயத்தை 32 சதவீதம் குறைக்கக்கூடும் என்று ஒரு ஆய்வு சொல்கிறது.
Read More »

Flash News: CBSE Class 10 & 12 Exams Cancelled!

Read More »

ஆசிரியர்கள் மீதான 17B நடவடிக்கையினை கல்வித்துறை எப்போது வாபஸ் பெறும்?


ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறையினர் மீதான நடவடிக்கைகள் வாபஸ் பெறப்பட்டு வரும் நிலையில் ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைகளை யும் வாபஸ் பெற கல்வித்துறை முன்வர வேண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் கூட்டமைப்பு ( ஜாக்டோ ஜியோ ) சார்பில் என 2019 ஜன . , 22 முதல் 30 வரை போராட்டம் நடந்தது . இதில் பணிக்கு வராதோர் மீது ஒழுங்கு நடவடிக்கை ( 17 பி குற்றக் குறிப்பாணை ) எடுக்கப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

பேச்சுவார்த்தைக்கு பின் பிப் . , 14 ல் பணிக்கு திரும்பினர் . அவர்கள் மீதானநடவடிக்கைவாபஸ் பெறப்படவில்லை. இதனால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதவி உயர்வு , ஓய்வூதிய பலன் பெற முடியவில்லை. கொரோனா தடுப்பு பணிக்காக தேனி மாவட்டத்தில் வருவாய்த் துறையினர் 13 பேர் மீதான நடவடிக்கையை கலெக்டர் பல்லவி பல்தேவ் திரும்ப பெற உத்தரவிட்டார்.

இது போல் வேறு சில மாவட்டங்களில் கலெக்டர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஜாக்டோஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பி.சுரேஷ் கூறியதாவது: கலெக்டர்கள் நடவடிக்கையை வரவேற்கிறோம். ஒரே பல கோரிக்கைக்காக அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் போராடினோம். தேனி உட்பட பல மாவட்டங்களில் அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கையை வருவாய்த்துறை வாபஸ் பெற்றுள்ளது.

அதுபோல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைகளை வாபஸ் பெற கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் நியாயமான பதவி உயர்வு , ஓய்வூதிய பலன்கள் கிடைக்க வழி ஏற்படும் , என்றார்.
Read More »
 

Most Reading

Tags

Sidebar One