Search

U DISE- FILLED MODEL COPY

Wednesday 26 February 2020

School grand 25000/50000 பதிவிடும்போது *school Grant under samagra siksha என்பதில் பதிவிடவும்.
ஒவ்வொரு பகுதியாக சேவ் செய்யவும் *Data's saved successfully* என வலது பக்க மூலையில் வந்தால் அந்தப் பக்கம் நல்ல முறையில் சேமிக்கப்பட்டது எனப் பொருள் .
அதில் *விவரங்கள் மீண்டும் திரும்பி காட்டாது* .
ஆனால் உங்களுடைய பள்ளிக்கான விவரங்களை பதிவு செய்யப்பட்டு விடும். எனவே மீண்டும் ஒரு முறை பார்க்க முடியவில்லை என்ற காரணத்திற்காக *அந்த விவரங்கள் பதிவாகவில்லை என நினைக்க வேண்டாம்*
ஒரு முறை பதிவு செய்யும் பொழுது வலது பக்க மூலையில் Data saved என வந்தால் போதும்.
ஒரு சில பகுதிகள் *This field is required* என வந்தால் அந்த பகுதியை *save செய்ய இயலாது*. அது சரி ஆகும்வரை மற்ற பகுதிகளை பதிவேற்றம் செய்யவும்.



பதிவிடாத பகுதிகள் உங்கள் பள்ளி பெயரில் வெளி வரும் அப்போது ஏதேனும் விடுதல் இருந்தால் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
*School visit* தற்போது save ஆகவில்லை என தகவல். *விரைவில் அவை சரி செய்யப்படும்*.
எந்த பகுதி உங்கள் பள்ளிக்கு save ஆகவில்லை என குறித்து வைத்துக்கொண்டு பிற பகுதிகளை பதிவேற்றவும். 
EMIS UPDATE
‘Field required’ error in inspection details fixed. Please refresh once and

try again

For land area, please enter the Data in acres. The data will be converted 

into to sq.ft automatically. You can then save it.

SMC SMDC is visible for all govt and aided schools. It is not shown to private schools. This is not based on school middle school / high school

This issue has now been fixed. Refresh and try again. ( use ctrl+shift+R)
*UDISE+*
EMISல் UDISE PLUS DCF mobile phoneல் ஆங்கிலம் மற்றும் தமிழில் மாற்றி பதிவு செய்வது எப்படி?
UDISE Plus Page link:

1) Download DCF:

2) Basic Info : https://emis.tnschools.gov.in/basic_school_form
3) School Details: https://emis.tnschools.gov.in/school_details



4) Training Details: https://emis.tnschools.gov.in/training-details
5) Committee Details: https://emis.tnschools.gov.in/schoolcommittee



6) Land Details: https://emis.tnschools.gov.in/school-land
7) School Inventory:https://emis.tnschools.gov.in/school-inventory
8) Funds: https://emis.tnschools.gov.in/funds
*மேற்கண்ட Link ஒவ்வொன்றாக Click செய்து Udise+ பணியினை நிறைவு செய்யலாம்.*
*UDISE + சில தகவல்கள்*
Read More »

"மகிழ்ச்சி வகுப்புகள்" மாணவர்களுக்கு ஊக்கமளிக்கின்றன


Read More »

DEE proceedings_ தொடக்கக்கல்வி_ அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு பராமரிப்பு மானியம் (2018-2019, 2019-2020) செலவிடப்பட்ட அறிக்கை கோருதல் சார்ந்து இயக்குநர் செயல்முறை நாள்:21.02.2020








Read More »

பொதுத்தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்!

Read More »

மார்ச் 4 ( புதன்கிழமை ) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் செயல்முறைக்கியாங்க தைப்பூச உற்சவம் மற்றும் திருக்குடமுழுக்கு விழா , மருதமலை அருள்மிகு சுப்ரமணியசுவாமி , அருள்மிகு சங்கமேஸ்வரர் அருள்மிகு கோணியம்மன் திருக்கோயில்களில் தேர்திருவிழா நடைபெறுவதையொட்டி 04.03.2020 கோவை மாநகர பள்ளிகளுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அனுமதித்து ஆணை வழங்கப்படுகிறது . இந்தநாளுக்கான பள்ளி வேலை நாளினை பிரிதொரு நாளில் ஈடுகட்ட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Read More »

EMISல் UDISE PLUS DCF mobile phoneல் தமிழில் மாற்றி பதிவு செய்வது எப்படி?


Read More »

LKG, UKG வகுப்புகளுக்கு ரூ 70,000 மதிப்பில் தளவாட சாமான்கள், கல்வி உபகரணங்கள் மற்றும் விளையாட்டுப் பொருள்கள் வாங்க நிதி ஒதுக்கீடு




Read More »

பதவி உயர்வுக்குத் தகுதியான ஆசிரியர்களின் தேர்ந்தோர் பட்டியலை 01.01.2020 அன்றைய நிலவரப்படி தயார்செய்ய இயக்குநர் உத்தரவு

தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவரும் அனைத்து வகை ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக தகுதியான ஆசிரியர்களின் பதவி வாரியான தேர்ந்தோர் பட்டியலை ( Panel List ) 01 . 01 . 2020 அன்றைய நிலவரப்படி பார்வையில் தெரிவித்துள்ள விதிகள் , சட்டம் , அரசாணை மற்றும் கீழ்க்கண்ட விவரங்களின்படி தயார் செய்திட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது .

1 ) அவ்வாறு பதவி உயர்வுக்குத் தகுதியான ஆசிரியர்களின் தேர்ந்தோர் பட்டியலை கீழ்க்கண்டவாறு எளிய முறையில் , குறியீடு செய்து தயாரிக்க அறிவுறுத்தப்படுகிறது.
Read More »

பள்ளி ஆண்டு விழா கலைநிகழ்ச்சியில் அதிக ஒளி மின் விளக்குகளுக்கு தடை

அரசு மற்றும் தனியார் பள்ளி ஆண்டு விழாவின் போது மாணவ , மாண விகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சியில் அதிக ஒளி கொண்டமின் விளக்குகள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது .

தமிழகத்தில் அரசு தொடக்க மற்றும் நடுநி லைப்பள்ளிகள் , தனியார் நர்சரி , மெட்ரிக் பள்ளிக ளில் மாணவர்களின் தனித்திறமைகளை மேம்ப டுத்தும் வகையில் ஆண்டு விழாக்கள் நடத்தப்பட்டு பல் வேறு கலை நிகழ்ச்சி கள் மற்றும் விளையாட்டு போட்டிகள் , கலாச்சார விழாக்கள் நடத்தப்படு கிறது . அப்போது , நடன போட்டிக்கான மேடைக ளில் அதிக ஒளி கொண்ட மின் விளக்குகள் பயன்ப டுத்து வதால் மாணவ , மாணவிகளுக்கு கண்கள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது . இந்த நிலையில் ,

பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது : இந்தாண்டிற்கான கல்வி ஆண்டு இன்னும் ஓரிரு மாதங்களில் முடிய உள்ளதால் தற்போதே பள்ளிகளில் ஆண்டு விழா தொடங்கி உள்ளது . சில ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டு விழாவில் அதி கபடியான மின் வெளிச் சத்தால் மாணவர்களின் கண்கள் பார்வை பாதிக் கப்பட்டது . இதனால் எதிர்காலத்தில் பள்ளிக ளில் இதுபோன்ற பாதிப் புகள் ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது . இதன்படி அரசு மற் றும் தனியார் பள்ளிகளில் ஆண்டு விழா மற்றும் அனுமதிக்கப்பட்ட இதர விழாக் கள் நடைபெறும் போது , அதிக ஒளி கொண்ட அலங்கார மின் விளக்கு கள் பயன்படுத்தக்கூடாது . பரிந்துரைக்கப்பட்ட மின் சாதன அமைப்புகள் மட் டுமே அமைத்திட வேண் டும் . இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வேண்டும் .

 இந்த நடைமுறைகளை பின் பற்றாமல் விழா நடத்தி , பாதிப்புகள் ஏதாவது ஏற்பட்டால் அதற்கு அந்த பள்ளி தலைமை ஆசிரியரும் பள்ளி நிர் வாகமுமே முழு பொறுப் பேற்க நேரிடும் . எனவே அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் , வட்டா ரக்கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் முழு கவனத் துடன் விழாக்களை நடத்த வேண்டும் . இவ்வாறு அவர்கள் கூறினர் .
Read More »

பள்ளி பொதுத்தேர்வு பணியில் ஊனமுற்ற , உடல்நலம் குன்றிய ஆசிரியர்களுக்கு விலக்கு..! அரசு ஊழியர், ஆசிரியர் நல கூட்டமைப்பு வேண்டுகோள்!



மார்ச் 2ம் தேதி முதல் தொடங்கும் பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு பணிகளில் உடல்நலம் பாதித்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், மகப்பேறு ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை தேர்வு பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தேர்வுத்துறை இயக்குநர் ஆகியோருக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக இந்த கூட்டமைப்பின் நிறுவன தலைவர் ச.அருணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் வருகின்ற மார்ச் 2ம் தேதி முதல் பனிரெண்டாம் வகுப்பு பதினோராம் வகுப்பு பத்தாம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு தொடர்ந்து நடக்க உள்ளது, பனிரெண்டு மற்றும் பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு பணியில் உயர்நிலைப் பள்ளி மேனிலைப்பள்ளிகளில் பணியாற்றும் முதுகலை ஆசிரியர்கள் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசியர்களை தேர்வு  அறை கண்காணிப்பாளராகவும், பறக்கும்படையிலும், துறை அலுவலர்களாகவும் தலைமையாசிரியர்களை தேர்வு நடத்தும் முதன்மை அலுவலர்களாகவும் மற்றும் பள்ளி அலுவலக பணியாளர்களை அலுவலக பணிக்கு ஈடுபடுத்துவார்கள்.

அதேபோன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசியர்களை தேர்வு பணிகளில் ஈடுப்படுத்துவார்கள்.

இந்த ஆண்டு ஏமிஸ் ( EMIS )என்ற டேட்டா என்ட்ரி மூலம் அனைத்து வகை ஆசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் பெயர் பட்டியலை எடுத்து தேர்வு பணிக்கு பயன்படுத்த அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் பணிபுரிபவர்கள் இன்று விடுவிப்பு செய்து தேர்வுப்பணி கூட்டத்திற்கு அனுப்பிவைக்க முதன்மைக் கல்வி அலுவலர் சார்பில் அந்தந்த பள்ளி இணைய முகவரிக்கு சுற்றரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு எழுத 3 மணி 15 நிமிடம் அதாவது 3 மணி நேரம் தேர்வு எழுதவும், 15 நிமிடம் வினாத் தாளை படித்து பார்க்க நிர்ணயக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள், பணியாளர்கள் காலை 8.00 மணிக்கே தேர்வு மையத்திற்கு வரவேண்டிய சூழ்நிலையில், தொடர்ந்து 4 மணி முதல் 5 மணிவரை நின்று பணியாற்ற வேண்டிருக்கும். இந்த சூழ்நிலையில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் உடல்நலம் சரியில்லாதவர்கள் அதாவது புற்றுநோய், இருதய பிரச்சனை காச நோயளிகள் பெருமளவில் அறுவைசிகிச்சை செய்துக் கொண்டவர்கள், கர்ப்பமுற்றவர்கள் நீண்டநேரம் நின்று பணி செய்யமுடியாது.

அவர்களை தேர்வுப் பணியில் இருந்து விடுவிக்க பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தேர்வுத்துறை இயக்குநரை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் சா. அருணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Read More »

2019 - 2020ஆம் கல்வி ஆண்டில் மொத்த பள்ளி வேலை நாட்கள் எத்தனை? CM CELL Reply!


மனுதாரரின் கோரிக்கை ஏற்கப்பட்டது . 2019 - 2020ஆம் கல்வி ஆண்டில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மொத்த வேலைநாட்கள் 213 என்ற தகவல் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது . ப . க . இ . ஓ . மு . எண் 36414 / பிடி1 / இ1 / 2019 நாள் 05 . 08 . 2019 

Read More »
 

Most Reading

Tags

Sidebar One