Search

வருமான வரி சாதகங்களை ஒப்பிட இ - கால்குலேட்டர் மத்திய அரசு அறிமுகம் ( புதிய மற்றும் பழைய நடைமுறை )

Thursday 6 February 2020

மத்திய அரசு சமீபத்திய பட்ஜெட்டில் வருமான வரி வரம்பில் மாற்றங்கள் கொண்டு வந்தது . மக்கள் புதிய வரி முறையை பின்பற்றலாம் அல்லது முந்தைய வரி முறையிலேயே தொடரலாம் என்று அறிவித்தது.

 இந்நிலையில் புதிய மற்றும் முந்தைய வரி முறையில் கிடைக்கக்கூடிய அனு கூலங்களை தெரிந்து கொள்ளும் வகையில் இ - கால்குலேட்டர் வசதியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது . அதன்படி , சம்பளதாரர்கள் அவர்களுக்கு பலனளிக்கக்கூடிய வரி முறைகளை இந்த இ - கால் குலேட்டர் மூலம் தெரிந்து கொள்ள லாம் . புதிய வரி வரம்பின்படி அவர்கள் செலுத்த வேண்டியவரித் தொகையையும் , முந்தைய வரி வரம்பின்படி அவர்கள் செலுத்த வேண்டிய வரித் தொகையையும் இ - கால்குலேட்டரில் ஒப்பீடு செய்து கொள்ளலாம் . வரி சலுகைகள் ரத்து புதிய வரி முறையை தேர்வு செய்பவர்கள் 80 - சி - யின் கீழ் வழங்கப்படும் வரிச் சலுகைகள் எதையும் பெற முடியாது .

இதனால் மக்களிடையே எந்த வரி முறையை தேர்வு செய்வது என்பது குறித்து குழப்பம் ஏற்பட்டுள்ளது . இந்நிலையில் அவர்களுக்கு எந்த வரி முறையில் அனுகூலம் என்பதை தெரிந்து கொள்வதற்கு இந்த இ - கால்குலேட்டர் வசதி அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது . www . incometaxindiaefiling . gov . in என்ற தளத்தில் இ - கால்குலேட்டர் வசதியை பயன்படுத்திக் கொள்ள லாம். 
Read More »

கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் பொருட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சில விவரங்கள் தெரிவிக்க கோருதல்

Read More »

How to download QR code videos in Diksha portal

Use this link in Google chrome

https://diksha.gov.in/explore


Read More »

300 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 3 நேரம் உணவு கொடுத்து அசத்தும் புதுக்கோட்டை கிராமம்


புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே ஏம்பல் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு படித்த முன்னாள் மாணவர்கள் பலரும் டாக்டர், வக்கீல், இன்ஜினீயர் எனப் பல்வேறு பொறுப்புகளில் பணிபுரிந்து வருகின்றனர்.



ஏம்பல் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பள்ளிக்கு மட்டுமல்லாது கிராம வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர். பொதுத் தேர்வு நெருங்கிக்கொண்டிருப்பதால், ஆசிரியர்கள் மாணவர்களின் தேர்ச்சியை அதிகரிக்கச் சிறப்பு வகுப்புகளைத் தொடங்கிவிட்டனர். மாலை நேர வகுப்புகள் நடப்பது பற்றி அறிந்த முன்னாள் மாணவர் ஒருவர், மாலை நேர வகுப்பின் போது மாணவர்கள் சோர்வடையாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத் தன் சொந்தச் செலவில் மாலை நேரச் சிற்றுண்டி கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்.

அது தொடரவே, இன்று கிராம மக்களால், 3 நேரமும் சத்தான உணவு வழங்கும் திட்டமாக மாறி பொதுத் தேர்வு மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்பின்போது உணவு வழங்கப்பட்டு வருகிறது.

தேர்ச்சியை அதிகரிக்க ஒரு முயற்சி



இதுபற்றி முன்னாள் மாணவர்கள் கூறும்போது, ``பொதுத் தேர்வு நெருங்கும் நேரத்தில் எல்லாப் பள்ளியிலும் 1 மணி நேரமாவது மாலையில் ஆசிரியர்கள் சிறப்பு வகுப்புகள் எடுப்பாங்க. நீண்ட நேரம் பள்ளியில் இருக்காங்க. குறிப்பாக, மாலை நேர வகுப்பின் போது மாணவர்கள் பெரும்பாலும், சோர்வடைந்து போயிடுவாங்க. அவர்களின் சோர்வைப் போக்குவதற்கு டீ, காபி, ஸ்நாக்ஸ் ஏதாவது சாப்பிடும் போது கொஞ்சம் புத்துணர்ச்சியாக முடியும். நல்லா சாப்பிட்டு, உடம்பு ஆரோக்கியமா இருந்தால் தானே படிப்பிலயும் ஆர்வம் காட்ட முடியும். எங்களுக்கு எல்லாம் அந்தக் காலத்துல இதுமாதிரி எல்லாம் கிடைக்கல. முன்னாள் மாணவர்கள் சேர்ந்து இந்தப் பொதுத்தேர்வு மாணவர்களுக்குச் சிற்றுண்டி கொடுக்கலாம்னு நெனச்சு ஆரம்பிச்சோம். பாசிப்பயிறு, கொண்டக்கடலை, பிஸ்கட் உள்ளிட்டவற்றைக் கொடுத்தோம்.



அதுக்கப்புறம், எங்க ஊர் கிராம மக்கள், தன்னார்வலர்கள் கிட்டயும் சொன்னோம் பலரும் மாணவர்களுக்கு உணவு வழங்க முன்வந்தனர். அதே நேரத்தில் காலை நேரத்திலயும் மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்பு எடுக்கலாம்னு ஆசிரியர்கள் சொன்னாங்க. `தாராளமாக வகுப்பு எடுங்க. முன்னாள் மாணவர்கள் கிராம மக்கள் சேர்ந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்குக் காலை உணவு கொடுக்கிறோம்'னு சொன்னோம். அதுபடி செஞ்சிக்கிட்டு வர்றோம். ஆசிரியர்களும் மாணவர்கள் மேல அக்கறையாக இருக்காங்க.

தேர்ச்சியை அதிகரிக்க ஒரு முயற்சி


ஆசிரியர்களும் ரொம்ப நல்லாவே சப்போர்ட் பண்றாங்க. முன்னாள் மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், தன்னார்வலர்கள், என கிராமத்தைச் சேர்ந்த பலராலும் இன்று தினமும் மாணவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு வழங்கப்படும் சாப்பாடு என்பதால், எந்தவிதக் கோளாறு இல்லாமல், பார்த்துப் பார்த்துச் சமைக்கிறோம். தொடர்ந்து, இது நடக்கணும். மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க இதுவும் ஒரு முயற்சி என்றுதான் நாங்கள் பார்க்கிறோம். இதேபோல, ஒவ்வொரு ஊரிலும் இளைஞர்கள், முன்னாள் மாணவர்கள் முயற்சி எடுக்கணும்" என்றனர்
Read More »

கல்வித்தரத்தை உயர்த்த வேண்டியது ஆசிரியரின் வேலை, "நோட்ஸ் ஆப் லெசன்" எழுதுவது இல்லை.அரசுப் பள்ளி ஆசிரியர்களிடம் கேள்வி எழுப்பிய முதல்வர்(புதுவை)

அரசுப் பள்ளியில் தரம் இருந்தால் ஏன் தனியார் பள்ளிக்கு மாணவர்கள் செல்கின்றனர்? சொந்தப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதைப் போல் ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்ககம் மற்றும் இந்தியத் தொழில் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த நவீன கால கற்பித்தலின் பரிணாமம், சவால்கள் மற்றும் வாய்ப்புகள் என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தியல் கூட்டம் இன்று புதுச்சேரியில் நடந்தது.
அரசுப் பள்ளி ஆசிரியர்கள், துறை அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.


இதன் தொடக்க நிகழ்ச்சியில் முதல்வர் நாராயணசாமி பங்கேற்றுப் பேசுகையில், ''பட்ஜெட்டில் 8 சதவீத நிதி கல்விக்கு ஒதுக்கப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இல்லை. அதேசமயம் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எங்கே உள்ளனர்? இதை யார் சரி செய்ய வேண்டும். அரசுப் பள்ளியில் தரம் இருந்தால் ஏன் தனியார் பள்ளிக்கு மாணவர்கள் செல்கின்றனர். யாரையும் குறை கூறவில்லை. அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை தரமான கல்வி தர வேண்டும். புத்தகத்துக்கு மாற்றாக ஐபேடைப் பயன்படுத்தும் நிலைக்கு உலகமே மாறி வருகிறது. சிங்கப்பூர், அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளில் ஐபேடைத்தான் மாணவர்கள் பயன்படுத்துகின்றனர். புதுச்சேரி மாணவர்களுக்கும் ஐபேட் தரத் தயாராக உள்ளோம்.



கல்வித்தரத்தை உயர்த்த வேண்டியது ஆசிரியரின் வேலை, "நோட்ஸ் ஆப் லெசன்" எழுதுவது இல்லை. சொந்தப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதைப் போல் சொல்லிக் கொடுக்க வேண்டும். ஆசிரியர்கள் கற்பித்தல் திறனை உயர்த்திக்கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்ததால்தான் எம்.பி.ஆன பின்னர் எம்.எல். பட்டம் நான் பெற்றுள்ளேன். ஊக்குவித்தால் மாணவர்கள் படிப்பார்கள்" என்று குறிப்பிட்டார்.
அமைச்சர் கமலக்கண்ணன் பேசுகையில், "பொறியியல் உள்பட பல உயர் படிப்புகள் படித்து மதிப்பெண் பெற்றாலும் திறன் போதிய அளவு இல்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறது. பாடத்திட்டத்தைத் தாண்டி சிந்திக்க வைக்கும் பொறுப்பு ஆசிரியருக்கும், பெற்றோருக்கும் உண்டு. தொலைக்காட்சி, செல்போன் ஆகியவற்றால் கவனச் சிதறல் வீடுகளில் அதிகம் ஏற்படுகிறது. இதற்கு பெற்றோரே முக்கியக் காரணம். கல்வியுடன் மனத் துணிவு குழந்தைகளுக்கு அவசியம். காலத்துக்கு ஏற்ற தகுதியுடன் குழந்தைகளை உருவாக்குவது அவசியம்" என்று குறிப்பிட்டார்.



கல்வித்துறை செயலர் அன்பரசு பேசுகையில், "அரசுப் பள்ளிகளில் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் உயர்ந்துள்ளது. கடின உழைப்பே இதற்குக் காரணம். கல்வி தரச்சான்று சதவீதமும் கடந்த ஆண்டை விட உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஆயிரத்துக்கு 687 புள்ளிகள் இருந்தோம். தற்போது வந்த சான்றில் ஆயிரத்துக்கு 785 பெற்றுள்ளோம். மதிப்பெண்களை மட்டும் வைத்துக் கல்வியை கணக்கிட முடியாது. குழந்தைகளை முழுமையானவர்களாக உருவாக்குவதே கல்வி. வாழ்வின் சவால்களை எதிர்கொள்ள வரும் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் புது முயற்சி எடுக்க உள்ளோம். மாதிரிப் பள்ளிகளை உருவாக்க உள்ளோம்" என்றார்
Read More »

கலகலவகுப்பறை- இந்த ஆசிராயரின் வகுப்பறை ஏன் பேச்சும், விவாதமுமாக கலகலன்னு இருக்கிறது!!




கலகலவகுப்பறை

வகுப்பறை ஏன் கலகல ன்னு இருக்கணும். நான் படிக்கும்போது வகுப்பறையில் அமைதியா இருன்னு தானே, சொல்லி சொல்லி உட்கார வைக்கப்பட்டேன்.
இந்த ஆசிராயரின் வகுப்பறை ஏன் பேச்சும், விவாதமுமாக கலகலன்னு இருக்கிறது!!
ஒன்றாக மேலெழுந்து கீழிறங்கி இரையும் உண்டியலின் குலுங்கல் சத்தம் மட்டும் நமக்கு இனிக்கவே இனிக்கிறது.ஏன்?
மாணவர் வகுப்பறையில் பேச வேண்டியதற்கு பேசி, ஆசிரியருடன் பாடியும், பாடலுக்கு இசையையும் எழுப்பும்போது அது கலகல வகுப்பறையாகிறது
அட என்ன இது?வகுப்பறை என்பதன் விதிமுறைகள் எல்லாம் தகர்ந்து போயிருக்கிறதே என மேலும் வாசித்தால்,



நான் படிக்கும்போது எனக்கு ஆசிரியர் எவ்வாறு இருக்க வேண்டும் என்று விரும்பினேனோ அப்படி ஒரு ஆசிரியராய் நான் இருக்க விரும்பினேன் என்கிறார் நூல் ஆசிரியர், நாள்தோறும் நிகழ்ந்த வகுப்பறையின் சுவாரசிய நிகழ்ச்சிகளை பதிவுசெய்திருப்பதே கலகல வகுப்பறை புத்தகம். இப்போது ஆசிரியர்களின் முன்னோடியாய், ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி ஒரு ஆசிரியராய் நம்முன் கைக்கட்டிச் சிரிக்கிறார் சிவா அவர்கள்.
ஆமாம், வகுப்பறையின் அனைத்து சட்டங்களும் தகர்க்கப்பட்டிருக்கிறது அவருடைய வகுப்பறையில். அதில்தான் நாடகம் ஒன்றில் நரியாக நடித்த ஆசிரியரை நினைவில் நிறுத்தி ,தன் ஆசிரியரை ஏய் நரி பயமா? என்று கேட்குமளவு நட்பாக முடிந்திருக்கிறது.



நாட்குறிப்பு எவ்வளவு முக்கியமான பயிற்சி. என் பணியை எப்படி செய்திருக்கிறேன் என்று என்னை எப்படி நான் மதிப்பீடு செய்துகொள்வது.
ஒவ்வொரு ஆசிரியரும் மீண்டும் தன் பணிநாட்களை திரும்பிப்பார்க்க தன் நிறையை படித்து ஊக்கம்பெற, தன் குறைகளை, வகுப்பறையில் நிகழ்த்தமுடியாமல் போன செயல்பாடுகளின் ஏக்கத்தினை நினைவில் நிறுத்திக்கொள்ள நாட்குறிப்புதானே உதவும்.
கலகல வகுப்பறை தமிழில் வெளிவந்துள்ள ஒருஆசிரியரின் முதல் நாட்குறிப்பு தொகுப்பு என நினைக்கிறேன்.
இந்த நாட்குறிப்புகள் நாட்களின் மணித்துளிகளை மாணவருக்கும் ஆசிரியருக்குமான உறவை ஈரத்துடன் உறைய வைக்கின்றன.
ஆசிரியர் என்றால் விரைப்புடன் ஒரு மேல்பார்வை பார்க்க வேண்டும் என்ற தோற்றப்பிழையை நீக்கி, அடிப்பது போல பாவனை காட்டும்போதும், காமெடி பீசு என ஆறாம் வகுப்பு மாணவனை சொல்லவைக்கிறது.



மாணவர்களிடம் பாடத்துடன் வாசிப்பின் முக்கியத்துவத்தை உணரவைக்க, ஆசிரியருடனே பயணம் செய்யும் கதைப்பெட்டியைக் கேட்டால் அது இன்னுமொரு நீண்ட கதையைச் சொல்லும் என நினைக்கிறேன்.
தன்னைப்போலவே நாட்குறிப்பு எழுதும் வழக்கத்தை மாணவருக்கும் ஏற்படுத்தி அதன்மூலம் தனக்குள் ஒரு ஒழுங்கும், தன்னை ஆராயும் திறனையும் வளர்ப்பது ஆசிரியல்களும் பின்பற்ற வேண்டிய ஒன்றாகும்.
கலகல வகுப்பறை வாசிப்பிற்கு பிறகு எனக்கும் வகுப்பறையின் செயல்பாடுகளில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து யோசனைகள் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன.



அனைவருமே குழந்தைகளின் சுதந்திரத்தை நோக்கியும், அவர்களின் புன்னகையில் ஒளியைக் காணவுமே முயற்சிக்கிறோம். அதை முன்கூட்டியே செய்திருக்கும் நூலாசிரியருக்கு குழந்தைகள் சமுதாயம் என்றென்றும் தன் புன்னகையால் சாமரம் வீசட்டும்.
அதுதான் இந்த நூலைப் படித்தபின்பான மாற்றமாக இருக்க வேண்டும்.

பதிப்பகம்: வாசல்
ஆசிரியர் : கலகல வகுப்பறை சிவா
விலை: 100ரூ.
பக்கம்: 112
Read More »

4 மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் தொடக்கக்கல்வி இயக்குனர் இன்று ஆலோசனை

வேலூரில் இன்று 4 மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் தொடக்கக்கல்வி இயக்குனர் ஆலோசனை மேற்கொள்கிறார்.வேலூரில் உள்ள தனியார் பள்ளியில் வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களை மாவட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் வட்டார கல்வி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் இன்று நடக்கிறது. இந்த கூட்டத்திற்கு தொடக்கக்கல்வி இயக்குனர் முத்துபழனிச்சாமி கலந்து கொள்ள உள்ளார்.


இக்கூட்டத்தில், தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்களின் கற்றல் திறன், பள்ளிகளின் கட்டமைப்பு வசதி, வட்டார கல்வி அலுவலர் பள்ளிகளில் மேற்கொண்ட ஆய்வு விவரம், பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள், கூடுதல் கட்டிடம் உள்ளிட்டவை குறித்து தொடக்கக்கல்வி இயக்குனர் ஆலோசனை நடத்த உள்ளார் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Read More »

PG Current Vacancy List As On 24.01.2020 ( Subject Wise)

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுகலை ஆசிரியர் தற்போதைய ( 24.01.2020) நிலவரப்படி காலியாக உள்ள பணியிடங்கள் விவரம் பாட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது.
PG VACANCY list TIRUPPUR DISTRICT
PG Current Vacancy List After Transfer Counseling - Download here
Read More »

பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் செய்ய ரேஷன் கார்டு குறைதீர் முகாம்: 17 இடங்களில் நாளை நடக்கிறது

சென்னை: குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றுவதற்கான சிறப்பு முகாம் நாளை சென்னையில் 17 இடங்களில் நடக்கிறது.இதுகுறித்து


தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:குடும்ப அட்டையில் மாற்றங்கள் செய்தல் மற்றும் பொது விநியோக திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து தமிழகம் முழுவதும் வட்டங்கள் வாரியாக மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் தமிழக அரசு நடத்தி வருகிறது. அதன்படி, மக்களின் குறைகளை கேட்டு தீர்வு காணும் பொருட்டு பிப்ரவரி மாதத்திற்கான ரேஷனர் கார்டு குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 17 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் நாளை (சனி) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் செல்போன்


எண் பதிவு செய்தல் போன்ற மாற்றங்களையும், பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தரம் குறித்த புகார்கள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இந்த முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.சென்னையில் உள்ள 17 மண்டல அலுவலக பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Read More »

தமிழகத்தில் 9,10 வகுப்புகளில் இடைநிற்றல் விகிதம் 100% உயர்வு!' - அதிரவைக்கும் புள்ளிவிவரம்

தமிழகத்தில், பள்ளி இடைநிற்றல் சதவிகிதம் 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் கடந்த மூன்றாண்டுகளில் 100 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை தெரிவித்திருக்கிறது.
பள்ளிகளில் இடைநிற்கும் மாணவர்கள்குறித்து நாடாளுமன்ற மக்களவையில், மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த பா.ஜ.க எம்.பி-க்களான சுதாகர் துக்காராம் ஷ்ரங்கரே மற்றும் பி.பி.சௌத்திரி ஆகியோர் கேள்வி எழுப்பினர். எம்.பி-க்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், ``வறுமை, பொருளாதாரமின்மை, குழந்தைகளின் மோசமான உடல்நிலை, மாற்றுத்திறன் மற்றும் பெற்றோர்கள் கல்வியை அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதாதது போன்ற காரணங்களால், அவர்களால் படிப்பைத் தொடர முடிவதில்லை" என்று கூறியுள்ளார்.


கல்வி

மனிதவள மேம்பாட்டுதுறை வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, தமிழகத்தில் உயர்நிலை பள்ளிப் படிப்பைப் படிக்கும் மாணவர்களின் இடைநிற்றல், 2015-2016-ம் கல்வி ஆண்டில் 8.1% ஆக இருந்தது. 2016-2017 -ம் கல்வி ஆண்டில் இந்த விகிதம் 10% ஆக உயர்ந்தது. 2017-2018-ம் கல்வி ஆண்டில் 16.2% ஆக அதிகரித்தது. 2015-2016-ம் கல்வி ஆண்டை ஒப்பிடுகையில் இது 100 சதவிகிதம் அதிகம் ஆகும். தமிழகத்தில், தொடக்கநிலை அளவில் மாணவர்கள் இடைநிற்றல் 2017-2018 -ம் கல்வி ஆண்டில் 5.9% ஆக உள்ளது.
ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மாணவர்களின் இடைநிற்றல் விகிதத்தைக் குறைத்துவரும் நிலையில், கல்வியில் முன்னோடியாகத் திகழும் மாநிலங்களில் ஒன்றான தமிழகத்தில், 9 மற்றும் 10-ம் வகுப்பு அளவில் படிக்கும் மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Read More »

School Morning Prayer Activities - 07.02.2020

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 07.02.20

திருக்குறள்

அதிகாரம்:ஊழ்

திருக்குறள்:374

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.

விளக்கம்:

உலகின் இயற்கை நிலை இரு வேறுபட்டதாகும். ஒருவர் செல்வமுடையவராகவும், ஒருவர் அறிவுடையவராகவும் இருப்பதே அந்த வேறுபாடாகும்.

பழமொழி

Chew your food well and live a long life

  நொறுங்கத் தின்றால் நூறு வயது.

இரண்டொழுக்க பண்புகள்

1. தேசத் தந்தை மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர் மற்றும் காமராஜர் போன்ற தன்னலமற்ற பெருந்தலைவர்கள் போல ஆக முயற்சிப்பேன்.

2. அதையே என் வாழ்நாளின் இலட்சியமாக கொள்வேன்.

பொன்மொழி

அடிக்கடி மாற்றம் உண்டானால் மாறுவது கடிகார முற்கள் மட்டுமே... நிலையான மாற்றம் பெற நெடுநாள் திட்டமும் பயிற்சியும் தேவை.

பொது அறிவு

1.இரத்தம் உறையாமல் இருக்க இரத்த வங்கிகளில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் எது?

 சோடியம் சிட்ரேட்

2."இந்தியாவின் சர்க்கரைக் கிண்ணம்" என்றழைக்கபடும் மாநிலம் எது?

 உத்திரப்பிரதேசம்.

English words & meanings

Koniology – study of atmospheric pollutants and dust. வளிமண்டலத்தில் உள்ள தூசு மற்றும் அவற்றால் உயிரிகள் மீது ஏற்படும் பாதிப்பு.

Knotty - with knots. முடிச்சுகள் வாய்ந்த

ஆரோக்ய வாழ்வு

நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு  சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும்.

Some important  abbreviations for students

etc. - and so on.

p. - page

நீதிக்கதை

சிங்கத்தை காப்பாற்றிய எலி

குறள் :
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.

விளக்கம் :
அணிந்திருக்கும் உடை உடலைவிட்டு நழுவும்போது எப்படிக் கைகள் உடனடியாகச் செயல்பட்டு அதனைச் சரிசெய்ய உதவுகின்றனவோ அதைப்போல நண்பனுக்கு வரும் துன்பத்தைப் போக்கத் துடித்து செல்வதே நட்புக்கு இலக்கணமாகும்.

கதை :
முன் ஒரு காலத்தில் சிங்கம் ஒன்று காட்டில் வசித்து வந்தது. ஒரு நாள் பலமான மதிய உணவினை முடித்து விட்டு ஒரு மரத்தின் அடியில் உறங்கிக் கொண்டிருந்தது.

சிறிது நேரத்திற்கு பின், அங்கு வந்த ஒரு எலி சிங்கத்தின் மீது விளையாட தொடங்கியது.

திடீரென்று சிங்கம் கோபத்துடன் எழுந்து அதன் நல்ல தூக்கத்தினை தொந்தரவு செய்தது யார் எனப் பார்க்கும்போது, ஒரு சிறிய எலி நடுநடுங்கி நின்று கொண்டிருந்தது.

அதை பார்த்த சிங்கமானது எலியினை கொல்ல வேண்டும் என முடிவெடுத்தது.

பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த எலி தன்னை மன்னிக்குமாறு சிங்கத்திடம் வேண்டியது. சிங்கம் எலியிடம் மனதுருகி அதனை விட்டுவிட்டது. பின் எலி வேகமாக அவ்விடத்தை விட்டு ஓடியது.

மற்றொரு நாள், சிங்கம் ஒரு வேடனின் வலையில் சிக்கி கொண்டதைப் பார்த்த எலி அங்கு வந்து வலையினை வெட்டி சிங்கத்தை காப்பாற்றியது. இதனால் சிங்கம் தப்பித்துக் கொண்டது. பின், எலி மற்றும் சிங்கம் நண்பர்களாயினர். அதன் பின்னர் அவர்கள் காட்டில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர்.

நீதி :
ஒருவர் ஆபத்து காலத்தில் உள்ள போது அவர்களுக்கு உதவ வேண்டும்.

இன்றைய செய்திகள்

07.02.20

🍀தமிழகத்தில் 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் இடைநிற்றல் 100 விழுக்காடு அதிகரித்திருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

🍀இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் போன்ற அரசியலமைப்புச் சட்டத்தின் முக்கிய அம்சங்களை மாணவர்களுக்கு எடுத்துரைத்து ஆசிரியர்கள் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் என்று ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி விமலா அறிவுறுத்தியுள்ளார்.

🍀அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை கிறிஸ்டினா கோச், அதிக நாட்கள் விண்வெளியில் தங்கிய பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

🍀கோவையில் நேற்று நடைபெற்ற `ஹீரோ ஐ லீக்` கால்பந்துப் போட்டித் தொடரில், இந்தியன் ஏரோஸ் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது சென்னை சிட்டி எஃப்.சி. அணி.

🍀மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் புதன்கிழமை நடைபெற்ற தேசிய சீனியா் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் 64 கிலோ பிரிவில் பங்கேற்று தங்கம் வென்றாா் வீராங்கனை ராக்கி ஹால்டா்.

Today's Headlines

🌸In Tamil Nadu the drop out percentage increased 100% in 9th and 10th standard says Central Human Resource Development Commission minister Mr. Ramesh Pokrial.

🌸 Important acts Like Free and Compulsory Education has to be discussed among students to bring awareness among them - Retired High Court Judge Vimala.

🌸 The American Woman Astronaut Christina Coach declared as a Astronaut who stayed in the Space for a longer period.

🌸 In yesterday's 'Hero I League' foot ball match held at Covai Chennai City FC won against Indian Aeros by 1-0.

🌸Rocky Haltad won the gold medal in the 64kg category at the National senior weightlifting Championships held in Kolkata, West Bengal on Wednesday.

Prepared by
Covai women ICT_போதிமரம்
Read More »

FLASH NEWS :- பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் அதிரடி மாற்றம்!! புதிய செயலாளராக தீரஜ் குமார் நியமனம்

FLASH NEWS :- பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் அதிரடி மாற்றம்!! புதிய செயலாளராக தீரஜ் குமார் நியமனம்

இளைஞர் நலத் துறை செயலாளராக இருந்த தீரஸ் குமார் பள்ளிக்கல்வித்துறை புதிய செயலாளராக நியமனம்.

* மாற்றம் செய்யப்பட்ட பிரதீப் யாதவ் கைத்தறி மற்றும் காதி துறைச் செயலாளராக நியமனம்.
Read More »

பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை அரசு கவனிக்குமா?.

ஊதிய குறை தீர்க்கும் கமிட்டி கூட்டம் பகுதிநேர ஆசிரியர்கள் பங்கேற்பு.
5.2.2020ல் அழைப்பின் பேரில் பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்கள் ராஜாத்தி, சத்தியராஜ் என மூன்று நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 
இதில் கடந்த 9 ஆண்டுகளாக ரூ.7700 குறைந்த தொகுப்பூதியத்தில் குடும்பங்களை கவனிக்க முடியாமல் மிகுந்த சிரமப்படுவதை வேதனையுடன் தெரிவித்து உள்ளார்கள். ஊதிய உயர்வுக்கு வழி வகுக்கும் வகையில் பணிநியமன அரசாணை 177ன்படி ஒரு பகுதிநேர ஆசிரியரே 4 பள்ளிகளில் பணிபுரிந்து அதற்குரிய சம்பளத்தை அந்தந்த பள்ளிகளிலே பெற்று கொள்ளலாம் என்றுள்ளதை அரசு அமுல்செய்தால் ஒவ்வொருவரும் ரூ. 30ஆயிரம் பெற முடியும். எனவே அரசுக்கு இதனை பரிந்துரை செய்யுங்கள் என வலியுறுத்தி உள்ளனர்.



மேலும் 110ன்கீழ் தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு செய்தபடி ஒரு ஆண்டின் அனைத்து மாதங்களுக்கும் சம்பளம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்ய கேட்டு கொண்டனர். இதில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் சம்பளம் தராமல் இந்த 9 ஆண்டுகளுக்கும் ரூ.53400 ஒவ்வொரு பகுதிநேர ஆசிரியருக்கும் இழப்பு ஏற்பட்டுள்ளதை சுட்டிகாட்டி உள்ளனர்.மேலும் அரசின் பண சலுகைகளை கிடைக்க செய்வதில்லை என்பதையும் சொல்லி உள்ளனர். உதாரணமாக போனஸ் கூட இத்தனை ஆண்டுகளில் ஒருமுறை கூட தரப்பட்டதில்லை, ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதிய உயர்வு தருவதில்லை என்பதையும் எடுத்து சொல்லி உள்ளனர்.



அதே நேரத்தில் இதே வேலையை செய்து வரும் ஆந்திர மாநில பகுதிநேர ஆசிரியர்களுக்கு ரூ.14203 தரப்படுவதையும் சுட்டிக்காட்டி கேட்டு உள்ளனர். நியமனம் செய்யப்பட்ட 
16549 பகுதிநேர ஆசிரியர்களில் மரணம், பணி ஓய்வு,பணி ராஜினாமா உள்ளிட்ட காரணங்களால் ஏற்பட்ட 5000 காலியிடங்களின் நிதியை தற்போது பணிபுரியும் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வாக பகிர்ந்து அளித்தால் அரசுக்கு நிதி செலவு ஏற்படாது என்பதையும் குறிப்பிட்டு வலியுறுத்தி உள்ளனர். தற்காலிக பணியாளர்களுக்கு 9 மாதம் மகப்பேறு விடுப்பு என்பதை பகுதிநேர பெண் ஆசிரியர்களுக்கும் உறுதி செய்திட ஊதிய குறை தீர்க்கும் கமிட்டியிடம் முறையிட்டு உள்ளனர்.



இதனை கோரிக்கை புத்தகமாகவும் கொடுத்துள்ளனர். அனைத்தையும் கவனமாக கேட்ட நீதியரசர் முருகேசன் தலைமையிலான கமிட்டி தமிழக அரசுக்கு பரிந்துரை செய்வதாக சொல்லி இருக்கின்றனர். 10வது கல்வியாண்டு தொடங்க உள்ள நிலையில் மாணவர்கள் கல்வி நலனுக்காக இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி நியமிக்கப்பட்ட இந்த பகுதிநேர ஆசிரியர்களுக்கு விடிவு காலம் பிறக்குமா என வரவுள்ள தமிழக அரசின் பட்ஜெட்டை எதிர்பார்த்து வருகின்றனர். அரசு கவனிக்குமா? இவர்களின் கனிவான கருணை மனு கோரிக்கையை!!!!.



தொடர்புக்கு 
செந்தில்குமார் 
மாநில ஒருங்கிணைப்பாளர் 
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு 
செல் 9487257203.
Read More »

பொதுத்தேர்வுகள் நெருங்குவதால் மார்ச் மாதம் வரை விடுப்பு எடுக்க வேண்டாம் - ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

Read More »

9 மற்றும் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான நாட்டமறி தேர்வு ( Aptitude Test at School Level ) தேர்வு தேதிகள் அறிவிப்பு

திட்ட ஏற்பளிப்புக் குழுக் கூட்ட நடவடிக்கை ஒப்புதலின்படி Quality Intervention ( Secondary ) என்ற தலைப்பின் கீழ் அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நாட்டமறி தேர்வு Aptitude Test at School Level நடத்த திட்டமிடப்பட்டது . இக்கல்வி ஆண்டில் திட்ட ஏற்பளிப்புக் குழு ஒப்புதல் அளித்துள்ள 8 , 51 , 999 மாணவர்களுக்கு நாட்டமறி தேர்வு நடத்தப்பட உள்ளது . அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இறுதி தேர்விற்கு முன்பாக ( Pilot Test ) முன் மாதிரி நாட்டமறித் தேர்வு 8 மண்டலங்களில் ( திருவள்ளூர் , ஈரோடு , கடலூர் , சிவகங்கை , கிருஷ்ணகிரி , நாகை , திண்டுக்கல் , திருநெல்வேலி ) ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட பள்ளிகளில் மட்டும் 08 . 01 . 2020 நடத்தப்பட்டது .

இதன் தொடர்ச்சியாக மாணவர்களின் பயிற்சிக்காக TNTP / EMIS இணையதளத்தில் மாதிரி வினாத்தாட்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது . ATSL 2020 முதன்மைத் தேர்வு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 30 , 31 பிப்ரவரி 1 , 3 மற்றும் 4 ஆகிய நாட்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது . இதனைத்தொடர்ந்து ATSL 2020 முதன்மைத் தேர்வு உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 7 , 8 மற்றும் 10 ந் தேதி ஆகிய மூன்று நாட்களிலும் , மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 20 , 21 , 22 மற்றும் 24 ஆகிய நான்கு நாட்களிலும் நடத்தப்படவுள்ளது .

தேர்வு நேரம்

Session 1 : காலை 9 . 00 மணி முதல் 1 . 00 மணி வரை

Session II : பிற்பகல் 2 . 00 மணி முதல் 6 . 00 மணி வரை

இத்தேர்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்து குழுக்கள் அமைத்து செயல்பட ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது . மாணவர்கள் பள்ளியிலேயே தேர்வு எழுதுவதற்கு ஏற்ற வகையில் சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் இணையதள வசதியுடன் கணினி வளங்களைத் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் அவ்வப்போது இதுகுறித்து வழங்கப்படும் அறிவுரைகளைக் கவனத்தில் கொண்டு தேர்வை நல்ல முறையில் நடத்தி முடிக்கத் தேவையான நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் .
Read More »

Fit India School - 3,5 Star Rating பெற அனைத்து பள்ளிகளும் விண்ணப்பிக்க இயக்குநர் உத்தரவு


மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களால் Fit India Movement சார்பாக www . fitindia . gov . in எனும் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது . பார்வை 2 இல் காணும் பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளின்படி , மேற்காண் இணையதளத்தில் சென்று மாநிலத்திலுள்ள அனைத்து வகைப்பள்ளிகளும் பதிவு செய்து Fit India School Certificate ( சான்றிதழ் ) பெறவேண்டும் என்றும் இதன் தொடர்ச்சியாக , இதே இணையதளத்தில் Fit India சார்ந்த வினாக்களுக்கு பதிலளித்தல் மூலம் Fit India Flag . 3 Star Rating அல்லது 5 Star Rating போன்றவற்றிற்கும் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது .

இப்பொருள் சார்ந்து அனைத்து மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்களும் தத்தம் மாவட்டத்திலுள்ள அனைத்து வகைப் பள்ளிகளிலும் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் இப்பணியை அவர்தம் பள்ளிகளில் உடனே முடிக்குமாறும் அப்பள்ளியின் தொடர் செயல்பாடுகளைத் தொடர்ந்து இவ்விணையதளத்தில் பதிவேற்றி வருமாறும் அறிவுறுத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . மேலும் , அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்கள் இப்பணியை தொடர் கண்காணிப்பு செய்வதற்கு அறிவுறுத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

பதிவேற்றம் செய்யப்பட்ட பள்ளிகளின் விவரங்களை மாவட்ட அளவில் தொகுத்து kInvelanic . in என்ற மின்ன ஞ்சல் முகவரிக்கு 10 . 02 . 2020 அன்று மாலை 5 மணிக்குள் அனுப்பி வைத்திடுமாறு அனைத்து மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
Read More »

இனி பயோமெட்ரிக் வருகைப்பதிவு கணக்கீட்டின் படிதான் இனி சம்பளம்!

தமிழகம் முழுவதும் மாநகராட்சி , நக ராட்சிகளில் விரை வில் பயோமெட் ரிக் வருகைப்பதிவு கணக்கீட்டின் படி தான் இனி மாதச் சம்பளம் வழங் கப்படும் .

காகித வருகைப்பதிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் பட உள்ளது என்று மாநக ராட்சிகளின் உயர் அதிகா ரிகள் தெரிவித்தனர் . தமிழகத்தில் 15 மாநக ராட்சிகள் , 121 நகராட் சிகள் இயங்கி வருகிறது . இதில் ஆணையர்கள் , உதவி ஆணையர்கள் , பொறியாளர்கள் , உதவிபொறியாளர்கள் , நகர்நல அலுவலர்கள் , சுகாதார அலுவலர்கள் , சுகாதார ஆய்வாளர்கள் உட்பட மொத்தம் சுமார் 10 ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வரு கின்ற னர் . இவர்கள் அனைவருக் கும் வருகைப்பதிவேட்டின் படி சம்பளம் வழங் கப்பட்டு வருகிறது . இதில் பல்வேறு குள று படிகள் மேற்கொள் ளப்படுவதாக புகார்கள் எழுந்தது . இதனை தடுக் கும் விதமாக தமிழகம் முழுவதும் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு , அனைத்து மாநகராட்சி , நகராட் சிகளில் பயோமெட்ரிக் கருவி வைக்கப்பட்டுள் ளது . இந்த பயோ மெட் ரிக் கருவியினை ஒருங் கிணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகி றது .

இந்த பணிகள் முடிவடைந்த பின்னர் , விரைவில் , அனைத்து மாநகராட்சி , நகராட்சி அதிகாரிகள் , ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் , பயோமெட்ரிக் வருகை பதிவினைக்கொண்டு , எத் தனை நாட்கள் பணிக்கு வந்துள்ளனர் . எத்தனை நாட்கள் விடு முறை , எத்தனை நாட்கள் அனுமதி பெற்று விடுமு றையில் சென்றுள்ள னர் . பிஎப் எண் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் ஆன் லைன் மூலமாக கணக்கி டப்பட்டு , மாதச்சம்பளம் வழங்கப்படும் . இதில் எந் தவிதமான முறைகேடுக ளும் மேற்கொள்ள முடி யாது . அத்தோடு காகித வரு கைப்பதிவேட்டிற்கும் முற் றுப்புள்ளி வைக்கப்படும் என்று மாநகராட்சி உயர் அதிகாரிகள் தெரிவித்த னர் .
Read More »

Flash News : School Education Students Calendar 2019 - 20

பள்ளிக் கல்வித் துறை நாட்காட்டி வெளியீடு

பள்ளி வேலை நாட்கள் - 213

உள்ளூர் விடுமுறை நாட்கள் - 03

மொத்த வேலை நாட்கள் - 210.

மாணவர்களுக்கு கடைசி வேலை நாள் - 20.04.2020 ஆசிரியர்களுக்கு கடைசி வேலை நாள் - 30.04.2020 மே மாதம் இறுதி வாரம் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரிந்து பள்ளி வகுப்பறை, வளாகம் தூய்மையாக உள்ளதா என உறுதி செய்ய வேண்டும்!

School Education Students Calendar 2019 - 20 | Download here...
Read More »
 

Most Reading

Tags

Sidebar One