Search

9 மற்றும் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான நாட்டமறி தேர்வு ( Aptitude Test at School Level ) தேர்வு தேதிகள் அறிவிப்பு

Thursday 6 February 2020

திட்ட ஏற்பளிப்புக் குழுக் கூட்ட நடவடிக்கை ஒப்புதலின்படி Quality Intervention ( Secondary ) என்ற தலைப்பின் கீழ் அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நாட்டமறி தேர்வு Aptitude Test at School Level நடத்த திட்டமிடப்பட்டது . இக்கல்வி ஆண்டில் திட்ட ஏற்பளிப்புக் குழு ஒப்புதல் அளித்துள்ள 8 , 51 , 999 மாணவர்களுக்கு நாட்டமறி தேர்வு நடத்தப்பட உள்ளது . அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இறுதி தேர்விற்கு முன்பாக ( Pilot Test ) முன் மாதிரி நாட்டமறித் தேர்வு 8 மண்டலங்களில் ( திருவள்ளூர் , ஈரோடு , கடலூர் , சிவகங்கை , கிருஷ்ணகிரி , நாகை , திண்டுக்கல் , திருநெல்வேலி ) ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட பள்ளிகளில் மட்டும் 08 . 01 . 2020 நடத்தப்பட்டது .

இதன் தொடர்ச்சியாக மாணவர்களின் பயிற்சிக்காக TNTP / EMIS இணையதளத்தில் மாதிரி வினாத்தாட்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது . ATSL 2020 முதன்மைத் தேர்வு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 30 , 31 பிப்ரவரி 1 , 3 மற்றும் 4 ஆகிய நாட்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது . இதனைத்தொடர்ந்து ATSL 2020 முதன்மைத் தேர்வு உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 7 , 8 மற்றும் 10 ந் தேதி ஆகிய மூன்று நாட்களிலும் , மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 20 , 21 , 22 மற்றும் 24 ஆகிய நான்கு நாட்களிலும் நடத்தப்படவுள்ளது .

தேர்வு நேரம்

Session 1 : காலை 9 . 00 மணி முதல் 1 . 00 மணி வரை

Session II : பிற்பகல் 2 . 00 மணி முதல் 6 . 00 மணி வரை

இத்தேர்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்து குழுக்கள் அமைத்து செயல்பட ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது . மாணவர்கள் பள்ளியிலேயே தேர்வு எழுதுவதற்கு ஏற்ற வகையில் சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் இணையதள வசதியுடன் கணினி வளங்களைத் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் அவ்வப்போது இதுகுறித்து வழங்கப்படும் அறிவுரைகளைக் கவனத்தில் கொண்டு தேர்வை நல்ல முறையில் நடத்தி முடிக்கத் தேவையான நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் .

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One