Tnpsc-Tet study materials - ஆறாம் வகுப்பு அறிவியல் -உயிரினங்களின் பல்வகை தன்மை

ஆறாம் வகுப்பு- அறிவியல்- உயிரினங்களின் பல்வகை தன்மை.
# உயிரினங்களின் தோற்றம் என்ற புத்தகத்தை எழுதியவர்- சார்லஸ் டார்வின் (1859).
# நுண்ணோக்கியால் மட்டுமே காணக்கூடிய உயிரினங்கள்- நுண்ணுயிர்கள்
# நுண்ணுயிரிகளை பற்றி படிக்கும் படிப்பு- நுண்ணுயிரியல்
# வைரஸ்களை பற்றிய அறிவியல் பிரிவு- வைராலஜி
# எலக்ட்ரான் நுண்ணோக்கி கண்டறிந்தவர்- ஏர்னஸ்ட் ரஸ்கா ,மாக்ஸ் நூல் (1931)
# எய்ட்சை உண்டாக்கும் எச்ஐவி வைரஸை கண்டுபிடித்தவர்- இராபர்ட் கேலோ (1984)
# சளியை உண்டாக்கும் வைரஸ்- ரைனோ  வைரஸ்
# இளம்பிள்ளை வாதத்தை ஏற்படுத்தும் வைரஸ் -போலியோ வைரஸ்
# சின்னம்மை ஏற்படுத்தும் வைரஸ்- ஹெர்ப்ஸ் வைரஸ்
# புகையிலை பல்வண்ண நோயை ஏற்படுத்தும் வைரஸ் புகையிலை -மொசைக் வைரஸ்
# எய்ட்ஸ் உண்டாக்கும் வைரஸ் - ஹெச் ஐ வி
# பாக்டீரியாவைக் கண்டறிந்தவர் ஆண்டன் வான் லூவன்ஹாக் (1675)
# பாக்டீரியா பற்றிய அறிவியல் பிரிவு பாக்டீரியாலஜி.
# ஒரு செல் தாவரங்களும் விலங்குகளும் இவ்வகையை சார்ந்தது -ப்ரோடீஸ்டா
# மனித உடலில் வாழும் நுண்ணுயிரிகளின் வகைகள்- 17,000
# பென்சிலின் மருந்தை கண்டுபிடித்தவர்- அலெக்சாண்டர் பிளெமிங் 1928
# நகரும் ஒரு செல் தாவரத்திற்கு எடுத்துக்காட்டு- கிளாமிடோமொனாஸ்
# மெல்லுடலிகளுக்கு  எடுத்துகாட்டு -நத்தை
# மீன்கள் எதன் மூலம் சுவாசிக்கின்றன- செவுள்கள்
# நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு -முதலை
# எதன்  நாக்கு தன் உடலின் நீளத்தை போல் இரு மடங்காக இருக்கும் -பச்சோந்தி
# உலகின் மிகப்பெரிய நச்சுப்பாம்பு வகை- ராஜநாகம்
# ராஜநாகத்தின் ஒரு துளி நஞ்சு எத்தனை மனிதர்களை கொள்ளும் தன்மை உடையது -முப்பது
#பறவை இனத்தில் மிகப்பெரிய முட்டை இடும் பறவை -நெருப்புக் கோழி
# உயிரினங்களில் மிகப் பெரிய உயிரினம்- நீலத் திமிங்கலம்
# விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல்  விலங்கு  -நாய் (லைக்கா)
# பசுவிற்கு அதன் வியர்வை சுரப்பி எந்த உறுப்பில் உள்ளது- மூக்கு.

Tnpsc-Tet சமூக அறிவியல் வரலாறு பேரரசுகளின் தோற்றம்

ஆறாம் வகுப்பு சமூக அறிவியல்- வரலாறு- பேரரசுகளின் தோற்றம்.
# மகாஜனபதங்கள் என்ற சொல் தோன்றிய மொழி -சமஸ்கிருதம்.
# புத்தர் வாழ்ந்த காலத்தில் வட இந்தியாவில் மேலோங்கியிருந்த மகாஜனபதங்களில் எண்ணிக்கை -16
# இன்றைய பீகார் மாநிலத்தின் பாட்னாவை சுற்றியிருந்த பகுதிகள் என்று அழைக்கப்பட்டது- மகதம்.
# மகதத்தின் தலைநகரங்கள
1. சிராவஸ்தி நகரம்
2. ராஜகிருஹம் 3.பாடலிபுத்திரம்
# மகாஜனபதங்கள் 1.அரங்கம் ,2.மகதம், 3.கோசலம்,4. காசி,5.வஜ்ஜி ,6.மல்லம், 7. கேதி,8.வத்சம்,9. குரு  10.பாஞ்சாலம்,11.மத்ஸ்யம்,12.சூரசேனம்,13.அஸ்மகம் 14.அவந்தி,15. காந்தாரம் ,16. காம்போஜம்.
# பாடலிபுத்திரத்தில் பெரியகோட்டை அமைத்தவர் -அஜாத சத்ரு.
# கிரேக்க நாட்டை சேர்ந்த மாசிடோனியாவின் மன்னன்- அலெக்சாண்டர்.
# செலூகஸ் நிகோடரின்  தூதுவர்- மெகஸ்தனிஸ்.
# மெகஸ்தனிஸ் எழுதிய நூல் இண்டிகா( இந்தியாவைப் பற்றி).
# சந்திரகுப்த மவுரியர் தவமிருந்து உயிர் நீத்த இடம்- சிரவணபெலகொலா.
# சந்திரகுப்த மவுரியருக்கு இந்திய அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு- 2001.
# அசோகர் மக்களிடம் தர்மத்தை வளர்க்க  மேற்கொண்டது- தர்ம  விஜயம்.
# இந்தியாவில் முதன்முதலில் மக்கள் நல அரசை(welfare state) உருவாக்கிய அரசர்- அசோகர்.
# அசோகர் தழுவிய மதம் -பௌத்தம்.
# பாடலிபுத்திரத்தில் மூன்றாவது பௌத்த  மாநாட்டை கூட்டியவர்- அசோகர் .
# போரை விட தர்மத்தை பின்பற்றுவதே சிறந்தது என்று கூறியவர்- அசோகர்.
# எல்லைப்பகுதி பாதுகாப்பை கண்காணித்து வந்தவர்கள் எவ்வாறு  அழைக்கப்பட்டனர்-அந்த மகாமாத்திரர் .
# மௌரிய வம்சத்தின் கடைசி மன்னர் பிருகத்திருதன் .
# அசோகர் அரியணை ஏறிய ஆண்டு -கி.மு 273 .
# பாடலிபுத்திரத்தை எத்தனை பேர் கொண்ட
நிர்வாக  குழு ஆட்சி செய்தது- 30 பேர் .

தமிழக அரசில் பட்டதாரிகளுக்கு வேலை: TNPSC அறிவிப்பு சம்பளம்: மாதம் ரூ.37,700 - 1,19,500

தமிழ்நாடு நகரம் மற்றும் திட்டமிடல் துறையில் காலியாக உள்ள கட்டிடக்கலை உதவியாளர், திட்டமிடல் உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


இதற்கு கட்டிட கலையியல் துறையைச் சேர்ந்த பட்டதாரிகளிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: Architectural Assistant/ Planning Assistant
காலியிடங்கள்: 13
சம்பளம்: மாதம் ரூ.37,700 - 1,19,500
வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: நகர திட்டமிடல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது சிவில் என்ஜினியரிங் துறையில் பட்டம் அல்லது கட்டிடக்கலை துறையில் பட்டம் அல்லது இன்ஸ்டிடியூட் ஆப் என்ஜினியர்ஸில் சிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு இரு தாள்கள் கொண்டது.


எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி: 22.12.2018
எழுத்துத்தேர்வு நடைபெறும் மையங்கள்: சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர்
விண்ணப்பக் கட்டணம்: ரூ.150. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.10.2018

பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு மாவட்ட சிறப்பு நீதிமன்றங்களில் வேலை சம்பளம்: மாதம் ரூ.16,600 - 52,400பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு மாவட்ட சிறப்பு நீதிமன்றங்களில் வேலை சம்பளம்: மாதம் ரூ.16,600 - 52,400


சென்னை போதைப்பொருள் மற்றும் மனநிலை பாதிக்கும் பொருட்களுக்கான முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில், தமிழ்நாடு அடிப்படை பணி மற்றும் குறிப்பிட்ட பதவிகளுக்கான விதிகளின் (Adhoc Rules) கீழான பதவிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 26க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: ஒளி நகல் எடுப்பநவர் (Xerox Operator)  - 02

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஜெராக்ஸ் மெசின் இயக்குவதில் 6 மாத பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.16,600 - 52,400

வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் அனைத்து பிரிவையும் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் 35 வயதுக்குள் இருக்க  வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை

நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

www.districts.ecourtsgov.in/chennai என்ற வலைத்தள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களில் சுய சான்றொப்பம் செய்து கீழ்வரும் வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி*
முதன்மை சிறப்பு நீதிபதி, போதைப்பொருள் மற்றும் மனநிலை பாதிக்கும் பொருட்களுக்கான முதன்மை சிறப்பு நீதிமன்றம், மாநகர உரிமையியல் நீதிமன்ற கட்டடம், உயர்நீதிமன்ற வளாகம், சென்னை - 104

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 26.09.2018