பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு மாவட்ட சிறப்பு நீதிமன்றங்களில் வேலை சம்பளம்: மாதம் ரூ.16,600 - 52,400பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு மாவட்ட சிறப்பு நீதிமன்றங்களில் வேலை சம்பளம்: மாதம் ரூ.16,600 - 52,400


சென்னை போதைப்பொருள் மற்றும் மனநிலை பாதிக்கும் பொருட்களுக்கான முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில், தமிழ்நாடு அடிப்படை பணி மற்றும் குறிப்பிட்ட பதவிகளுக்கான விதிகளின் (Adhoc Rules) கீழான பதவிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 26க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: ஒளி நகல் எடுப்பநவர் (Xerox Operator)  - 02

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஜெராக்ஸ் மெசின் இயக்குவதில் 6 மாத பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.16,600 - 52,400

வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் அனைத்து பிரிவையும் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் 35 வயதுக்குள் இருக்க  வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை

நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

www.districts.ecourtsgov.in/chennai என்ற வலைத்தள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களில் சுய சான்றொப்பம் செய்து கீழ்வரும் வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி*
முதன்மை சிறப்பு நீதிபதி, போதைப்பொருள் மற்றும் மனநிலை பாதிக்கும் பொருட்களுக்கான முதன்மை சிறப்பு நீதிமன்றம், மாநகர உரிமையியல் நீதிமன்ற கட்டடம், உயர்நீதிமன்ற வளாகம், சென்னை - 104

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 26.09.2018