Search

ராணுவ ஆராய்ச்சி நிறுவனத்தில் டெக்னீசியன் வேலை

Thursday 30 May 2019

ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (டிஆர்டிஓ) செப்டம் (CEPTAM) எனும் தகுதித் தேர்வின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 351 டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 351

பணி: டெக்னீசியன்

வயது வரம்பு: 26.06.2019 தேதியின்படி 18 - 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், குறிப்பிட்ட பிரிவுகளில் ஐடிஐ படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

கட்டணம்: ரூ.100. அனைத்துப் பிரிவு பெண் விண்ணப்பதாரர்கள் எஸ்சி, எஸ்டி பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: கணினித் தேர்வு மற்றும் திறன் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

 விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.drdo.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பவும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.drdo.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.06.2019 முதல் 26.06.2019
Read More »

பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலையில் 992 பயிற்சிப் பணிகள்

தமிழகத்தில் சென்னையில் உள்ள பெரம்பூரில் ரயில்பெட்டி தொழிற்சாலையில் அளிக்கப்பட உள்ள 992 பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மொத்த காலியிடங்கள்: 992

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. கார்பெண்டர் - 80
2. எலக்ட்ரீசியன் - 200
3. பிட்டர் பிரிவில் - 260
4. மெஷினிஸ்ட் - 80
5. பெயிண்டர் - 80
6. வெல்டர் - 290
7. பி.ஏ.எஸ்.ஏ.ஏ. - 02

வயது வரம்பு: 01.10.2019 தேதியின்படி 15 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள், சமீபத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை:

 உடல்திறன் தேர்வு மற்றும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.icf.indianrailways.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.icf.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.06.2019
Read More »

எஸ்பிஐ வங்கியில் 641 சிறப்பு அதிகாரி வேலை

முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கியில் தற்போது 'ரிலேசன்ஷிப் மேனேஜர்,' மருத்துவ அதிகாரி மற்றும் அனலிஸ்ட் என 641 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. Head (Product, Investment & Research) - 01
2. Central Research Team (Fixed Income Research Analyst) - 01
3. Relationship Manager
4. Relationship Manager (e-Wealth)
5. Relationship Manager (NRI)
காலியிடங்கள்: 486

6. Relationship Manager (Team Lead) - 20
7. Customer Relationship Executive - 66
8. Zonal Head Sales (Retail) (Eastern Zone) - 01
9. Central Operation Team Support - 03
10. Risk & Compliance Officer - 01
11. Bank Medical Officer (BMO-II) MMGS-II - 56
12. Manager Analyst MMGS-III - 06
13. Advisor for Fraud Management - 03

வயது வரம்பு: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக வயது வரம்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது

ரிலேசன்ஷிப்' அதிகாரி பணிக்கு 23 முதல் 35 வயதிற்குள்ளும், மற்ற பணியிடங்களுக்கு 50 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று குறிப்பிட்ட பணி அனுபவம் உள்ளவர்களுக்கு ரிலேசன்ஷிப் அதிகாரி உள்பட பல பிரிவு பணியிடங்களுக்கும், எம்.பி.ஏ. மற்றும் முதுகலை முடித்தவர்களுக்கு இன்வெஸ்ட்மென்ட் அண்ட் ரிசர்ச் ஹெட் பணியிலும், சென்ட்ரல் ரிசர்ச் டீம் பணியிடங்களுக்கும், எம்.பி.பி.எஸ். படித்தவர்கள் மருத்துவ அதிகாரி பணிக்கும், சி.ஏ., எம்.பி.ஏ., படித்தவர்கள் அனலிஸ்ட் பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். முழுமையான விவரங்களுக்கு இணையதள அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

கட்டணம்: பொது, ஓபிசி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ரூ.750. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.125 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.sbi.co.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.


தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.sbi.co.in/webfiles/uploads/files/careers/20052019_ADVT%20CRPD-SCO-2019-20--07%20BMO%20&%20%20Others.pdf மற்றும் https://www.sbi.co.in/webfiles/uploads/files/careers/20052019_ADVT%20CRPD-SCO-2019-20--07%20BMO%20&%20%20Others.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.06.2019
Read More »

ஆயுத தொழிற்சாலையில் சார்ஜ்மேன் வேலை

இந்திய ராணுவத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆயுதத்தொழிற்சாலையில் நிரப்பப்பட உள்ள 1704 சார்ஜ்மேன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 1704

பணி: Chargeman(Non-Gazetted Group 'B' )
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
www.i-register.org

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ் போன்ற பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கெமிக்கல், மெட்டாலார்ஜி, குளோதிங் டெக்னாலாஜி, லெதர் டெக்னாலாஜி போன்ற பிரிவில் பொது வேதியலை ஒரு பாடமாகக் கொண்டு பி.எஸ்சி பட்டம் அல்லது 3 ஆண்டு டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இன்பர் மேஷன் துறையில் கணின் அறிவியல் பிரிவில் 'ஏ' லெவல் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

டெக்னிக்கல் அல்லாத துறையில் பொறியியல், டெக்னிக்கல், அறிவியல், வணிகவியல், சட்டம் போன்ற பிரிவுகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: சென்னை, திருச்சி, அரவங்காடு(ஊட்டி)

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை RRINCIOAL DIRECTOR, RECRUITMENT FUND OFRB, AMBAJHARI-NAGOUR என்ற பெயரில் செலான் எடுத்து செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.i-register.org என்ற இணையதள மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அந்த படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து அத்துடன் விண்ணப்பக் கட்டண ரசீது மற்றும் சுய சான்று செய்யப்பட்ட தேவையான சான்றிதழ் நகல்களையும் இணைத்து கீழ் வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Principal Director, Recruitment Fund Ordnance Factory Board, Ambajhari-Nagpur.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.i-register.org என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.06.2019
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 16.06.2019
Read More »

தேசிய உரத்தொழிற்சாலையில் மேலாண்மை பயிற்சி பணி

தேசிய உரத் தொழிற்சாலையில் நிரப்பப்பட உள்ள மேலாண்மை பயிற்சி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 44

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Management Trainee(HR)

காலியிடங்கள்: 19

தகுதி: Personnel Management, Industrial Relations, Human Resource Management, HR போன்ற துறைகளில் 60 சதவீத மதிப்பெண்களுடன் எம்பிஏ அல்லது முதுகலை டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Management Trainee (Marketing)

காலியிடங்கள்: 25

சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000

வயதுவரம்பு: 20 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: விவசாயத்துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பிஎஸ்சி அல்லது எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும் அல்லது விவசாயத்துறையில் பி.எஸ்சி பட்டம் முடித்து சந்தையியல், விவசாய சந்தையியல், உலக சந்தையியல், கிராமப்புற மேலாண்மை பாடப்பிரிவில் எம்பிஏ அல்லது பிஜிடிபிஎம் முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் ஆன்லைன் எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.700. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.nationalfertilizers.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.06.2019
Read More »

சென்னை மெட்ரோவில் 40 ஆயிரம் சம்பளத்தில் வேலை !

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில், பொறியியல் பட்டதாரிகளுக்கு ஊக்கதொகையுடன் கூடிய சென்னை ஐஐடியில் ஒரு வருட சான்றிதழ் படிப்பும் அத்துடன் அந்நிறுவனத்தில் 5 வருடம் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் இன்ஜினியரிங் முடித்த பட்டதாரிகள், நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
சான்றிதழ் படிப்பு:
PG Diploma Course - Metro Rail Technology and Management

காலியிடங்கள்:
சிவில் - 16
மெக்கானிக்கல் - 1
எலக்ட்ரிக்கல் - 5
எலக்ட்ரானிக்ஸ் - 3

மொத்தம்= 25 காலியிடங்கள்

முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 30.05.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.06.2019
சான்றிதழ் படிப்பு தொடங்கும் காலம்: ஜூலை - 2019

வயது வரம்பு:
29.05.2019 அன்றுக்குள், அதிகபட்சமாக 28 வயது டையவராக இருத்தல் வேண்டும்

விண்ணப்பக் கட்டணம்:
பொது / ஓபிசி பிரிவினர் - ரூ.500
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் - ரூ.100

குறிப்பு:
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பக் கட்டணம் செலுத்த முடியும்.

கல்வித்தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில், பொறியியல் பட்டப்படிப்பில் சிவில் / மெக்கானிக்கல் / எலக்ட்ரிக்கல் / எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் / எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேசன் இன்ஜினியரிங் போன்ற ஏதேனும் ஒரு துறையில் பயின்று முதல் வகுப்பில் தேர்ச்சி அதாவதுகுறைந்தபட்சமாக 70% மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

முக்கிய குறிப்புகள்:
1. விண்ணப்பதாரர்கள் கேட் (GATE) தேர்வில் தகுந்த மதிப்பெண்கள் பெற்றிருத்தல் அவசியம்.
2. கடைசி வருடம் பொறியியல் பயிலும் மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், https://chennaimetrorail.org/ - என்ற இணையதள முகவரியில் சென்றும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை:
1. கேட் (GATE) தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.
2. மருத்துவத் தகுதி தேர்வு

சான்றிதழ் படிப்பிற்கான காலம்: ஒரு வருடம்

சலுகைகள்:
1. தேர்வு செய்யப்படுவோர்க்கு, மாத ஊக்கத்தொகையாக ரூ.20,000, நல்கையுடன்கூடிய
கல்விக்கட்டணமும் வழங்கப்படும்.

2. சான்றிதழ் படிப்பில் சேர வருவதற்கான பயணக்கட்டணமும் வழங்கப்படும்.

3. வெற்றிகரமாக சான்றிதழ் படிப்பு முடித்த தேர்வர்கள், குறைந்தபட்சம் 85% அல்லது அதற்கு மேல் பெற்று தேர்ச்சி பெற வேண்டும். அவ்வாறு தேர்ச்சி பெற்றவர்களுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியுடன் ரூ.40,000 மாதச் சம்பளமும் வழங்கப்படும்.

மேலும், இது குறித்த முழுத் தகவல்களைப் பெற, https://chennaimetrorail.org/wp-content/uploads/2015/11/CMRL-HR-03-2019.pdf - என்ற இணையதள முகவரியில்
சென்று அறிந்து கொள்ளலாம்
Read More »

தென்னக ரயில்வேயில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

 தென்னக ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 142 ஜூனியர் பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட்டப்பட்டுள்ளது


இதற்கு பொறியியல் துறையில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 142

பணி: இளநிலை பொறியாளர்/பி.வே
காலியிடங்கள்: 84
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ அல்லது பி.எஸ்சி (சிவில்) பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

பணி: இளநிலை பொறியாளர்/ டிஎம்ஓ
காலியிடங்கள்: 58
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், உற்பத்தி, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமெண்டேஷன் மற்றும் கண்ட்ரோல் போன்ற ஏதாவதொரு பிரிவில் டிப்ளமோ அல்லது பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி எஸ்சி, எஸ்டி பிரிவினர் 47க்குள்ளும், ஓபிசி பிரிவினர் 45க்குள்ளும், பொது பிரிவினர் - 42 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://rrcmas.in/downloads/gdce-je-tmo-pway-for-sr-application.pdf என்ற லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: முகவரி: " The Chairman, Railway Recruitment Cell, No.5, Dr.P.V.Cherian Cresent Road, Behind Ethiraj College, Egmore, Chennai - 600 008."

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://rrcmas.in/downloads/gdce-je-tmo-pway-for-sr-notification.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 06.06.2019

Read More »
 

Most Reading

Tags

Sidebar One