Search

போராட்டத்தில் ஈடுபட்ட 7000 ஆசிரியர்கள் மீதான நடவடிக்கை ரத்தாகுமா? பேரவையில் இன்று பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை

Wednesday 11 March 2020

Read More »

School Morning Prayer Activities -12.03.2020

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 12.03.20

திருக்குறள்

அதிகாரம்:கல்லாமை

திருக்குறள்:404

கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார்.

விளக்கம்:

கல்வி கற்காதவனுக்கு இயற்கையாகவே அறிவு இருந்தாலும்கூட, அவனைக் கல்வியில் சிறந்தோன் என்று அறிவுடையோர் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

பழமொழி

After a dinner rest a while.

உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டு.

இரண்டொழுக்க பண்புகள்

1. வெற்றி என்பது தற்காலிகம் எனவே எனது வெற்றியில் பெருமை கொள்ள மாட்டேன்.

2. தோல்வி எனக்கு பாடம் எனவே அதிலிருந்து நான் கற்றுக் கொள்வேன்.

பொன்மொழி

எல்லோரையும் அன்புடன் அரவணைக்கும் ஒருவரால் எந்த நிலையையும் கடந்து முன்னேற முடியும் .

_____ அன்னை தெரசா

பொது அறிவு

மார்ச் 12 - உலக சிறுநீரக தினம்

1.மனித உடலின் தொட்டி என அழைக்கப்படுவது எது ?

 சிறுநீரகம்

2. டயாலிஸிஸ் இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் யார்?

 வில்ஹெல்ம் கோல்ஃப்

English words & meanings

Oars - a long pole with flat end helps in rowing a boat, துடுப்பு

Ores - rock from which metals can be taken. உலகோங்கள் எடுக்கும் பாறைத் தாது.

ஆரோக்ய வாழ்வு

மாதவிலக்குக் காலங்களில் சில பெண்களுக்கு வயிற்றில் வலி தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும் .இப்பிரச்சனை தீர உலர்திராட்சையானது சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

Some important  abbreviations for students

QVGA - Quarter Video Graphics Array

VIT - Vellore Institute of Technology

நீதிக்கதை

பஞ்சதந்திரக் கதைகள்

ஒட்டகத்தைக் கொன்ற காகம்

ஒரு மிகச் சிறிய காட்டில் மதோற்கடன் என்ற பெயரை உடைய சிங்கராஜா தனக்கு மந்திரிகளாக நரி, புலி, காகம் ஆகிய மூன்றையும் வைத்துக்கொண்டு அரசாட்சி நடத்தி வந்தார்.

ஒரு நாள் அந்தக் காட்டு வழியாக வழி தவறி ஓர் ஒட்டகம் வந்தது. காகம் ஒட்டகத்தைப் பார்த்து அதிகாரமாக யார் நீ என்று கேட்டது. ஒட்டகம் பயந்து போய் வழி தவறி இந்த காட்டுக்குள் வந்து விட்டேன் தயவு செய்து என்னைக் காப்பாற்றுங்கள் என்று காகத்திடம் கேட்டது.

உடனே காகம் ஒட்டகத்தை சிங்கராஜாவிடம் அழைத்துச் சென்றது. சிங்கராஜா! ஒட்டகத்திடம் இனி நீ இந்த காட்டில் வசிக்கலாம் என்றும், உன்னை என் மந்திரிகளுள் ஒருவராக நான் சேர்த்துக் கொள்கிறேன் என்றும், இனிமேல் உன்னுடைய பெயர் மந்தானகன் என்றும் பெயர் வைத்தது.

ஒரு நாள் சிங்கராஜாவுக்கு உடல் நலம் சரியில்லை. இன்று நீங்கள் நால்வரும் சென்று வேட்டையாடி எனக்கு உணவு கொண்டு வாருங்கள். நான் உண்ட பின்னர் மீதமுள்ள உணவினை நீங்கள் உண்ணுங்கள் என்று கட்டளையிட்டது. நான்கும் ராஜாவுக்கு உணவு தேடி காட்டுக்குள் அலையோ அலை என்று அலைந்தன. ஆனால் ஓர் இரையும் அகப்படவில்லை.

உடனே, காகம் ஒரு திட்டம் போட்டது. இந்த ஒட்டகம் சைவம். நாம் ஏன் இந்த ஒட்டகத்தையே இன்றைய இரையாக வைத்துக் கொள்ளக்கூடாது? என்று யோசித்தது. பின் ஒட்டகத்தை மட்டும் ஒரு வேலை கொடுத்து தனியே அனுப்பி விட்டு காகம், நரியிடமும் புலியிடமும் தன் திட்டத்தைக் கூறியது. ஒட்டகம் திரும்பி வருவதற்குள் காகமும் நரியும் புலியும் சிங்கராஜாவிடம் சென்றன. ராஜா! இன்று இந்தக் காட்டுக்குள் எங்கு தேடியும் எந்த இரையும் கிடைக்கவில்லை என்றது காகம்.

மேலும் கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு யாராவது நெய் தேடுவார்களா? என்றது காகம். அந்த வெண்ணெய் வேறு யாருமில்லை நமது புதிய மந்திரியான ஒட்டகம்தான் அது! என்றது காகம். ஆ! அது எப்படி முடியும்? அது என்னுடைய அடைக்கலப் பொருள் என்றது சிங்கம்.

அதற்கு காகம், ராஜா! ஒரு குடும்பத்தைக் காப்பாற்ற அந்தக் குடும்பத்தில் உள்ள ஒரு நபரை இழக்கலாம். ஒரு கிராமத்தைக் காப்பாற்ற அந்தக் கிராமத்திலுள்ள ஒரு குடும்பத்தை இழக்கலாம். ஒரு நாட்டைக் காப்பாற்ற அந்த நாட்டிலுள்ள ஒரு கிராமத்தை இழக்கலாம். ஆதலால், இது தவறில்லை என்று அதே சாஸ்திரங்கள்தான் சொல்லியுள்ளன! என்றது காகம்.
அப்போதும்
சிங்கராஜா ஒட்டகத்தைக் கொல்ல சம்மதிக்கவில்லை. ராஜா அவர்களே! அந்த ஒட்டகமே தங்களிடம் வந்து, என்னைக் கொல்லுங்கள் என்று கூறினால், தாங்கள் அதனைக் கொல்லச் சம்மதிப்பீர்கள் தானே! என்றது காகம்.

ஆமாம் என்றார் சிங்கராஜா. அப்போது, இவர்களைத் தேடி அந்த ஒட்டகம் வந்தது. ஒட்டகம் அருகில் வந்ததும் காகம் தந்திரமாக, ராஜா! இன்று உங்களுக்கு எங்குமே இரை கிடைக்கவில்லை. தாங்கள் இன்று பசியுடன் இருப்பதை என்னால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமுடியாது. ஆதலால், தாங்கள் என்னைக் கொன்று தங்களின் பசியினைப் போக்கிக் கொள்ளுங்கள் என்று காகம் கூற
நீ எனக்கு ஒருவாய் உணவாக அல்லவா அமைந்து விடுவாய் என்றது சிங்கராஜா. உடனே, நரி, ராஜா அப்படியானால் தாங்கள் என்னைக் கொல்லுங்கள் என்று போலிப் பணிவு காட்டியது. மிகவும் சிறியவன். என் பசிக்கு நீ பயனற்றவன் என்று அதையும் மறுத்தது சிங்கராஜா. உடனே புலி, அப்படியானால் ராஜா, தாங்கள் என்னைக் கொல்லலாமே! என்று நடித்தது. நீ பருத்தவனாக இல்லை. ஆதலால், நீயும் என் பசிக்கு ஏற்றவனில்லை என்றது சிங்கராஜா.

மூவரும் ராஜாவுக்காக போட்டி போட்டுக்கொண்டு தங்கள் உயிரைத் தர முன் வந்ததில் மனம் நெகிழ்ந்து போன ஒட்டகம், ராஜா! இந்தக் காட்டில் நான்தான் உயரமானவன். பருத்தவன். நான் உங்களின் பசிக்கு ஏற்றவன். தாங்கள் தான் இந்தக் காட்டில் எனக்கு அடைக்கலம் கொடுத்தீர்கள். தங்களின் பசியைப் போக்கும் நல்ல காரியத்தை, நான் என் உயிரைக் கொடுத்தாவது செய்வேன். ஆதலால், தாங்கள் என்னைக் கொல்லுங்கள் என்றது. உடனே நரியும் புலியும் ஒட்டகத்தின்மீது பாய்ந்து அதனைக் கொன்றன.

நீதி :
தீயவர்களின் கைகளில் அகப்பட்டுக் கிடப்பதைக் காட்டிலும் அதனோடு சண்டையிட்டு மடிவதே சிறந்தது

இன்றைய செய்திகள்

12.03.20

◆தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் 28 தனியார் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முழுவதுமாக நிறுத்தப்பட உள்ளது. 122 பொறியியல்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைஇடங்கள் பாதியாக குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

◆மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டையை விரைந்து வழங்க தமிழகம் முழுவதும் 100 மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

◆கரோனாவில் இருந்து சிறுவர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து காமிக்ஸ் புத்தகத்தை வெளியிட்டு மத்திய அரசு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

◆கோவிட்-19 (கரோனா வைரஸ்) காய்ச்சல் அச்சுறுத் தலைப் பயன்படுத்தி கார்ப்பரேட் நிறுவனங்களை குறிவைத்து கணினி வைரஸ் தாக்குதல் நடத்தப் படுவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

◆ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் சூப்பா் ஓவரில் வெற்றிபெற்றது அயா்லாந்து.

◆ஃபிடே மகளிா் செஸ் கிராண்ட்ப்ரீ போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டா் டி. ஹரிகாவை 7-ஆவது சுற்றில் டிரா செய்தாா் கஜகஸ்தானின் ஸன்ஸயா.

Today's Headlines

🌸It has been informed that in 28 private engineering  colleges of Tamilnadu, students' admission are going to be stopped completely and in 122 engineering colleges, number of admission  seats will be reduced to the half in the coming academic year.

🌸100 doctors have been appointed all over Tamilnadu to speed up the process of issuing the national identity card for  the differently abled.

🌸Central Government has released  a comics book with a view of creating awareness among  the children about how  to defend themselves against corona virus.

🌸The World Health Organization warns the corporate companies about the attack of virus in computers due to the impact of the threat of Covid-19.

🌸Ireland wins against Afghanistan in the super over of the third T-20 tournament.

🌸In FIDE women chess grandfree tournament, the game ends in draw between Indian grandmaster T. Harika and Kazhakasthan's chess player Sansaya in the seventh round.

Prepared by
Covai women ICT_போதிமரம்
Read More »

பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மீது இன்று விவாதம்- கல்வியாளர்கள் ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

தமிழக சட்டப்பேரவையில் பள் ளிக் கல்வித்துறை மீதான விவாதம் வியாழக்கிழமை நடைபெறவுள்ள நிலை யில் , அந்தத் துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகளை கல் வியாளர்கள் , ஆசிரியர்கள் எதிர்நோக்கியுள்ளனர் . தமிழ்நாடு சட்டப்பேர வையில் பள்ளிக் கல்வி , உயர்கல்வி , இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் வியாழக் கிழமை நடைபெறவுள் ளது .

இந்த நிலையில் , கல்வித்துறை மானியக் கோரிக் கையில் எதிர்பார்க்கக்கூ டிய அம்சங்கள் குறித்து கல்வியாளர்கள் , ஆசிரியர் கள் என பல்வேறு தரப்பி னர் கருத்து தெரிவித்துள் ளனர் . பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப் பின் பொதுச் செயலர் பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆசிரியர் பணியிடங்களு டன் , ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் நிரப்பப் பட வேண்டும் . அரசு மற் றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் , உள்ளாட்சிப் பள்ளிகளை ஒரு எல்லை வரையறை செய்து , அருக மைப் பள்ளிகளாக அரசு அறிவிக்க வேண்டும் . உயர் கல்வித் துறையில் கல்லூரி களில் உள்ள காலிப்பணி யிடங்கள் அனைத்தையும் நிரப்பி முழுமையான உயர் கல்வி கிடைப்பதற்கு நடவ டிக்கை எடுக்க வேண்டும் .

தமிழ்நாடு அரசு ஊழியர் கள் ஆசிரியர்கள் நலகூட்ட மைப்பின் தலைவர் சா . அ ருணன் : தனியார் பள்ளி களில் 25 சதவீத இட ஒதுக் கீட்டின் கீழ் ஏழை மாண வர்களுக்கு சேர்க்கை வழங் குவதற்கு பதிலாக அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண் டும் . இதனால் , அனைத்துத் தரப்பு பெற்றோர்களும் தங் கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க முன்வ ருவார்கள் என்றார் .

மேலும் , கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தில் பங்கேற்ற 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர் கள் , ஆசிரியர்கள் மீது பதி யப்பட்ட வழக்குகள் , மேற் கொள்ளப்பட்ட நடவ டிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வலியுறுத் தியுள்ள து . இதே போல , வரும் கல்வி யாண்டில் பகுதி நேர ஆசிரி யர்களுக்கு ஊதிய உயர்வு , கால முறை ஊதியம் ஆகி யவற்றை பெறுவதற்கான அறிவிப்பை அரசு வெளியி டும் என எதிர்பார்க்கிறோம் எனபகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் தலைவர் செந்தில் தெரிவித்தார் .
Read More »

ஷூ - சாக்ஸ்' வழங்க மாணவர்களின் பெயர், வகுப்பு ஆகிய விபரத்துடன் பட்டியல் தர இயக்குநர் உத்தரவு.


அரசு பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை படிக்கும், மாணவ - மாணவியருக்கு, 'ஷூ - சாக்ஸ்' வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில் செயல்படும், அரசு மற்றும் அரசு உதவி பள்ளி மாணவ - மாணவியருக்கு, 14 வகை இலவச நலத் திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன. இலவச நோட்டு புத்தகம், பாட புத்தகம், காலணி, புத்தகப்பை, சைக்கிள், 'லேப்டாப்' உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், வரும் கல்வி ஆண்டு முதல், 6ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, காலணிகள் வழங்குவதற்கு பதில், 'ஷூ - சாக்ஸ்' வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாணவர்களின் பெயர், வகுப்பு ஆகிய விபரத்துடன், அவர்களின் கால் பாதத்தை அளவிட்டு, பட்டியல் தர உத்தரவிடப்பட்டு உள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வழியே, தொடக்க கல்வி இயக்குனர், பழனிச்சாமி அனுப்பிய சுற்றறிக்கையில், இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More »

அரசு ஊழியர்களுக்கு முன் ஊதிய உயர்வு ரத்து - தமிழக அரசு அதிரடி அரசாணை வெளியீடு!


அரசு ஊழியர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த முன் ஊதிய உயர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது .

தமிழக அரசு ஊழியர்கள் , ஒரு துறையில் பணியாற்றும்போது அந்த துறைக்கு தேவையான கல்வி தகுதியை விட கூடுதல் கல்வி தகுதி இருந்தால் இரண்டு முதல் மூன்று முன் ஊதிய உயர் வுகள் வழங்கப்பட்டு வந்தது . இதன்மூலம் , சிலர் அரசு துறையில் பணியில் சேர்ந்த பிறகு கூட உயர் படிப்புகளை படித்து கூடுதல் சம்பள உயர்வை பெற்று வந்தனர் . இந்நி லையில் , தமிழக அரசு இதுவரை வழங்கிவந்த கூடுதல் முன் ஊதிய உயர்வை ரத்து செய்வ தாக நேற்று அதிரடியாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர் சண்முகம் நேற்று வெளி யிட்டுள்ள அரசாணை யில் , " தமிழக அரசில் அனைத்து துறைகளிலும் அரசு ஊழியர்கள் உயர் கல்வி கற்றவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த முன் ஊதிய உயர்வு உடனடி யாக ரத்து செய்யப்படுகிறது ” என்று கூறியுள்ளார்.

 இதன்மூலம் அரசு பணியில் உள்ளவர் கள் கூடுதல் படிப்பை காரணம் காட்டி இனி கூடுதல் சம்பளம் பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ADVANCE INCREMENT GO - Download here

Read More »

அரசுப்பள்ளிகளில் புகார் பெட்டி - கல்வித்துறை உத்தரவு.

தமிழக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 2019-2020ம் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பு, தனிக் கவனம், ஆகியவை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 556 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், 89 ஆயிரத்து 140 அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இதைத் தொடர்ந்து பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும். மாணவர்களின் தன்னம்பிக்கையை மேம்படுத்தும் நோக்கத்துடன், இணையப் பாதுகாப்பு, உடல் மற்றும் மனநலப் பாதுகாப்பு, பாலினிப் பாகுபாடு, வளரிளம் பருவக் கல்வி, சுயவிழிப்புணர்வு,பிறர் மனநிலை அறிந்து செயல்படுதல், மன அழுத்தம் மற்றும் மன எழுச்சிகளை கையாளும் திறன் போன்றவை குறித்தும் மாணவர்களுக்கு வழிகாட்டுதல், ஆலோசனைகள் வழங்க வேண்டும். உடல் நலம் மற்றும் சுகாதாரம் தொடர்பாக பயிற்சி அளிக்க வேண்டும்.ேதர்வு பயத்தால் மாணவர்கள் இடையே ஏற்படும் தற்கொலை எண்ணங்களை நீக்கும் வகையில் தன்னம்பிக்கை வளர்க்க வேண்டும்.
மேனிலைக் கல்வி முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பாகவும், வேல வாய்ப்புகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

சமுதாயத்தில் ஏமாற்றுபவர்களிடமிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது, தவறாக வழி நடத்தும் நபர்களை எப்படி இனம் கண்டு கொள்வது என்பது பற்றியும், சரியான தொடுதல், தவறான தொடுதல் என்பது பற்றியும் அறிவுறுத்த வேண்டும்.இயற்கை இடர்பாடுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்தும் வழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவர்கள் தங்கள் புகார்களை தெரிவிக்கும் வகையில் அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் புகார் பெட்டிகள் வைக்க வேண்டும். குறிப்பிட்ட கால அளவில் அந்த புகார்களை ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவற்றை செயல்படுத்த போதிய நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
Read More »

RTI - தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்கள் எத்தனை பதிவேடுகள் பராமரிக்க வேண்டும்?

தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்கள் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் சார்பாக RTI தகவல்..

# தொடக்கக் கல்வித்துறையில் 1,2,3 ஆம் வகுப்பு ஆசிரியர்கள் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்!!

Read More »

உடல் நலம் பாதித்தால் பள்ளிக்கு வர வேண்டாம்' - பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, உடல் நலக்குறைவு ஏற்பட்ட மாணவர்கள், பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும்' என, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வி இயக்குனர், கண்ணப்பன்அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

கொரோனா வைரஸ் தொற்று, தமிழகத்தில் பரவாமல் தடுக்க, உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது. இருமலுடன் கூடிய காய்ச்சல், தொண்டை கரகரப்பு, சளி பிரச்னை, உடல் சோர்வு, மூச்சு திணறல் போன்றவை, இந்த நோயின் அறிகுறிகள். எச்சில் வழியாக, இந்த வைரஸ் பரவும்; கைகள் மற்றும் பயன்படுத்தும் பொருட்கள் வழியாகவும் பரவும் வாய்ப்புள்ளது.

எனவே, கொரோனா பரவல் தடுப்பு முறைகளை, பள்ளி மாணவர்களும், பெற்றோரும் கையாள வேண்டும். இருமல், தும்மல் உள்ள மாணவர்கள், கைக்குட்டை பயன்படுத்த வேண்டும். உடல் நலக்குறைவு ஏற்பட்டால், பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும். கைகளை, சோப்பால் அடிக்கடி கழுவி சுத்தம் செய்ய வேண்டும். கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்தால், அரசு மருத்துவமனைகளை அணுக வேண்டும்.


நோய் அறிகுறி உள்ள நபரிடம் இருந்து, ஒரு மீட்டர் இடைவெளி விட்டு நிற்க வேண்டும். பொது இடங்களுக்கு செல்வதையும், வெளியூர் பயணம் மேற்கொள்வதையும் தவிர்க்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
Read More »

உதவி தலைமை ஆசிரியர் பதவி எவ்வாறு வழங்க வேண்டும்??

Read More »

2020 - 2021 கல்வி ஆண்டில் பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்கான வயது வரம்பு

2020 - 2021 கல்வி ஆண்டில் பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்கான வயது வரம்புRead More »

மாணவர்களுக்கு சோப் வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்!

மாணவர்களுக்கு சோப் வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்!

Read More »

ஆசிரியர்களுக்கு விடுமுறை நாள்களில் பயிற்சி - அமைச்சர் செங்கோட்டையன்

பல்வேறு கணக்கெடுப்புகள் மற்றும் சிறப்புப் பயிற்சி போன்ற பணிகளில் ஆசிரியர் ஈடுபடுவதன் காரணமாக பள்ளிகளில் வகுப்பு கள் எடுக்க முடிவதில்லை என்ற தகவல் உண்மையல்ல .

ஆசிரியர்களுக்கு விடுமுறை நாள்களில்தான் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு வருகிறது . விடு முறை நாட்களில் தங்களது குழந் தைகளை வெளியில் அழைத்துச் செல்ல திட்டமிட்டிருப்பார்கள் . ஆகையால் , அட்டவணை தயார் செய்து கொடுத்து அதன்படி , ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளோம் . மேலும் , கணக்கெ டுப்பு பணிகள் விடுமுறை நாள் களில் தான் நடைபெறுகின்றன என்றார் அவர்.
Read More »

Flash News : குறைந்தபட்ச இருப்புத்தொகை அவசியமில்லை SBI அறிவிப்பு

எஸ்.பி.ஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கான குறைந்தபட்ச இருப்புத்தொகை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என அறிவித்துள்ளது.

பெருநகரங்களில் 5000 ரூபாய்,  மற்ற பகுதியில் 3000 ரூபாய் வாடிக்கையாளர்கள் இருப்பு வைத்திருக்க வேண்டியது இருந்தது. 

Read More »

Flash News : தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தேதி அறிவிப்பு


தமிழ்நாட்டில் ஜூன் 16 முதல் ஜூலை 30 வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது

அனைத்து மதத்தினரிடமும் கேட்கப்படும் கேள்விகள்தான்; அது குறித்து சிறுபான்மை மக்கள் அச்சப்பட தேவையில்லை - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதில்
Read More »
 

Most Reading

Tags

Sidebar One